வெள்ளி, 23 மே, 2014

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை :மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே!
நமது ரத்தத்தில் பிலிருபின் என்ற நிறமி பொருள் அதிகரிப்பதே மஞ்சள் காமாலை ஆகும் . ஜுரம் எப்படி ஒரு பொதுபடையான அறிகுறியோ அதுபோலவே ம.கா வும் ஒரு அறிகுறியே தவிர வியாதி அதுவல்ல . (Latin bīlis, bile + ruber, red )



ரத்த சிவப்பு அணுக்கள்





முன்னுரை : நமது உடலில் கோடிகணக்கான ரத்த சிவப்பு அணுக்கள் உள்ளன . இவற்றின் வாழ் நாள் தோரயமாக 120 நாட்கள் .


வயதான அணுக்கள் மண் ஈரலில் போய் இறந்துவிடுகின்றன . RBC யின் உள்ளே ஹீமோக்ளோபின் என்ற வஸ்து பொருள் உள்ளது . இது HEME மற்றும் GLOBIN என்று இருபகுதியாக உடைக்க படுகிறது .






HEME என்ற பகுதி சில பல வேதி வினை மாற்றங்களுக்கு உட்பட்டு BILIRUBIN என்ற மஞ்சள் நிறமியாக மாறுகிறது .



பிளிருபின் ரத்தத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் . இதனை கல் ஈரல் ரத்தத்தில் இருந்து பிரித்து பித்தநீரோடு சேர்த்து நீரில் கரையும் பொருளாக மாற்றுகிறது .

பின் இது பித்த பை வழியாக குடலை அடைந்து இரு வேறு பொருள்களாக மாறுகிறது .

STERCOBILIN அண்ட் UROBILINOGEN





STERCOBILIN - மலத்தின் மூலம் வெளியேறும் . மலத்தின் நிறத்திற்கு (BROWNISH YELLOW ) இதுவே காரணம் .


UROBILIN - இது நிறம் அற்றது , சிறுநீரில் வெளியேறும் . டெஸ்ட் செய்து பார்த்தால் தான் இது தெரியும் .


மேலே சொன்ன அனைத்தும் சாதாரணமாக தினமும் நடக்கும் செயல்கள் . இதில் ஏதேனும் ஒரு இடத்தில தவறு நேர்ந்தாலும் மஞ்சள் காமாலை அறிகுறி தெரியலாம் .


எங்கே நடக்கலாம் தவறு ?


I . அதிகபடியான RBC அணுக்கள் உருவாதல் மற்றும் அதிகபடியான RBC சிதைவு அடைதல் ( HEMOLYTIC JAUNDICE )

II .கல்லீரல் செயல் இழப்பது (HEPATIC JAUNDICE )


III . கல்லீரலில் இருந்து வெளியேறும் பிளிருபின் குடலை அடையமுடியாமல் ஏற்படும் அடைப்பினால் வரும் மஞ்சள் காமாலை (OBSTRUCTIVE JAUNDICE )



பொதுவாக CBD எனப்படும் COMMON BILE DUCT எனப்படும் இடத்தில அடைப்பு ஏற்படும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.