வெள்ளி, 9 மே, 2014

மனிதச் செவியின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்


மனிதக் காது புறக்காது, நடுக்காது, உட்காது என்ற மூன்று பகுதிகளாலானது. புறக்காது செவிச்சோணை, புறக்காதுக் கால்வாய் செவிப்பறை மென்சவ்வு என்ற பாகங்களை கொண்டது. செவிச்சோணை மீள்சக்திதிக்கசியிழையம் தோலினால் போர்க்கப்பட்டு உருவானது. செவிச்சோணைகள் தலையினது பக்கப்புறமானவை.


செவிச்சோணையினடியிலிருந்து நடுக்காதினாரம்பம் வரையிலான சிறிய வளைந்த கால்வாய் புறக்காதுக் கால்வாயாகும். இது தோலினால் போர்க்கப்பட்டது. சேய்மையான பகுதியில் மெழுகுச் சுரப்பிகளை கொண்டது. இவை வியர்வைச் சுரப்பிகளின் திரிபாலுண்டானவை. மெழுகைச் சுரப்பவை. புறக்காது கால்வாயின் ஆரம்பப்பகுதியில் மயிர்கள் காணப்படும். கால்வாயின் வளைந்த தன்மை, மெழுகு, மயிர்கள் காணப்படுகின்றமை போன்றவற்றால் நுண்ணங்கிகள் பூச்சிகள் பிறபொருள்கள் போன்றவற்றினின்று காது பாதுகாக்கப்படுகின்றது.

நடுக்காது கடைநுதலென்பிற் காணப்படுகின்றது. ஒழுங்கற்ற காற்று நிரம்பிய அறையினுள் மூன்று நடுக்காதுச் சிற்றென்புகள் ஒன்றுடனொன்று மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இவை வெளியிலிருந்து உள்ளாக சம்மட்டியுரு பட்டையுரு ஏந்தியுரு என்பனவாகும். நடுக்காது தொண்டையின் மூக்குத் தொண்டைப் பாகத்துடன் ஊத்தேக்கியாவின் குழாயின் மூலம்தொடர்புற்றிருக்கும். இதன் மூலம் செவிப்பறை மென்சவ்வின் இரு புறங்களிலும் ஒரே அமுக்கத்தினை பேணக் கூடியதாயிருப்பதுடன் பாரிய அதிர்வுகளினால் ஏற்படக் கூடிய தகைப்பையும், தவிர்த்துகொள்ளக் கூடியதாகவிருக்கின்றது.




உட்காது கடைநுதலென்பின்பில் அமைந்திருப்பது. இதிற் காணப்படும் குழி என்புச் சிக்கல் வழி எனப்படும். இதனுள் மென்சவ்வுச் சிக்கல்வழி காணப்படும். என்புச் சிக்கல் வழிக்கும், மென் சவ்வுச் சிக்கல் வழிக்கும் இடையே சுற்றுநிணநீரும் மென்சவ்வுச்சிக்கல்வழியுள் அகநிணநீரும் காணப்படும்

உட்காதுஅல்லது அகச் செவி தலைவாயில் உபகரணம் அரைவட்டக்கால்வாய்கள் , நத்தைச் சுருள் மூன்று கூறுகளைக் கொண்டது. தலைவாயில் உபகரணம் தோற்பை, சிறுபை என்ற பாகங்களாலானது. தோற்பையில் நடுக்காதுடன் தொடர்புறும் நீள்வட்டப் பலகணி எனப்படும் இரண்டு மென்சவ்வுகள் காணப்படும். நீள்வட்டப் பலகணி நடுக்காதில் ஏந்தியவுருவுடன் தொடர்பாக அமைந்திருக்கும்.

அரைவட்டக் கால்வாய்கள் தலைவாயில் உபகரணத்துக்கு பின்னாகவும் மேற்புறமாகவும் மூன்று ஒன்றுக் கொன்று செங்குத்தான வெவ்வேறு தளங்களில் அமைந்திருப்பவை. ஒன்றுக்கொன்று செங்குத்தானவை. இவற்றினடியில் காணப்படும் குடுவையுருக்கள் அல்லது விரிமுனைகள் எனப்படும் சிறிய புடைத்த குமிழுருவான பகுதியில் இவை ஆரம்பிக்கும்

நத்தைச் சுருள் ஒள்றிற்குள் இன்னொன்று செலுத்தப்பட்டதுபோன்ற இரு குழாயுருவான கட்டமைப்புக்களை சுருட்டிப் பெற்றது போன்ற கட்டமைப்பாகும். இதன் குறுக்கு வெட்டு முகத் தோற்றத்தில் மூன்று கால்வாய்களை அவதானிக்கலாம். மேற்புறமாகத் தலைவாயிலேணிக் கால்வாய் கீழ்ப் புறமாகச் செவிப்பறை வாயிலேணிக் கால்வாய் இவை இரண்டிற்குமிடையே இடைவாயிலேணிக் கால்வாய் (இடைக் கால்வாய் நத்தைச் சுருள் கால்வாய்) என இக்கால்வாய்கள் அமைந்திருக்கும் தலைவாயிலேணிக் கால்வாயையும், இடைவாயிலேனிக் கால்வாயையம் பிரித்து இரசுனரின் மென்சவ்வு , இடைவாயிலேணிக் கால்வாயையும், செவிப்பறை வாயிலேணிக் கால்வாயையம் பிரித்து அடிமென்சவ்வ என்பன காணப்படும். தலைவாயிலேணிக் கால்வாய், நீள்வட்டப் பலகணியுடன் தொடர்பானது. செவிப்பறை வாயிலேனிக் கால்வாய் வட்டப் பலகணியடன் தொடர்பானது.

அடிமென்சவ்வின் மீது ஆங்காங்கே கோட்டியின் அங்கங்கள் அமைந்திருக்கும். இவை ஒலியுணர் கலங்களாலானவை. ஒலியுணர்க் கலத்தில் உணர்மயிர்கள் அல்லத மயிர்க்கலங்கள் காணப்படும். இவற்றின் மீதாக மூடுமென்சவ்வு காணப்படம். இம்மென்சவ்வினின்றும் எழும் நரம்பு நார்கள் செவி நரம்பினையாக்கம். அரைவட்டக் கால்வாய்கள் , தோற்பை, சிறுபை போன்றவை அகநிணநீரால் நிரம்பியவை

கேட்டற் தொழிற்பாடு
மனிதக் காது 20-40 – 2000 வரையிலான அதிர்வெண்களுக்கு உணர்திறனுடையது. ஒலியலைகள் புறக்காதுக் கால்வாயை அடைவதனைத் தொடர்ந்து அவற்றினாற் செவிப்பறை மென்சவ்வு அதிர்விக்கப்படும். நடுக்காதுச் சிற்றென்புகளினால் இவ் அதிர்வுகள் கடத்தப்பட்டு நீள்வட்டப் பலகணியை அடையும். அங்கிருந்து தலைவாயிலேணிக் கால்வாயினுட் காணப்படும் சுற்று நிணநீரினூடாக அசையும். அதிர்வுகள் அகநிணநீருக்குட் கடத்தப்படும்

இடைவாயிலேணிக் கால்வாயிலுள்ள அகநிணநீரின் அதிர்வினால் அங்கு காணப்படும் கோட்டியின் அங்கங்கள் தூண்டப்படும். இவற்றில் உணர்கலங்களின் உணர் மயிர்களுக்கும், மூடுமென்சவ்விற்குமிடையிலுள்ள தொடர்பில் உருவாகம் பாதிப்பு தூண்டலாகக் கணத்தாக்கம் உருவாவதற்குக் காரணமாகும். இது செவி நரம்பினூடாக கடத்தப்படும். தகவல் மூளையமேற்படையின் கேட்டல் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஒலி கேட்கப்படும். இறுதியாக அதிர்வுகள் வட்டப்பலகணியினூடாக நடுக்காதிற்குச் செலுத்தப்படும். ஒலியினுடைய சுருதியை நத்தைச்சுருள் கால்வாயின் வௌ;வேறு இடங்களில் காணப்படும் கோட்டியின் அங்கங்கள் தூண்டப்படுவதன் மூலம் வேறுபடுத்தி கொள்ளக் கூடியதாயுள்ளது. ஒலிச் செறிவினை அறிந்து கொள்வது கோடடியினக்கத்தின் வௌ;வேறு அதிர்வெண் கொண்ட கலங்கள் தூண்டப்படுகின்றதன் மூலமாகும். பண்பும் சுருதியைப் போல அடையாளப்படுத்தப்படும்.

காதினுடைய சமநிலையுடன் தொடர்பான தொழில்
தலைவாயில் உபகரணமும், அரைவட்டக் கால்வாய்களும் கோணஆர்முடுகலை அறிந்து கொள்வதுடனும் உடற்சமநிலையைப் பேணுவதுடனும் தொடர்பானவை. புவியீர்ப்பு சார்பாக உடலின் நமிர்நிலையையும் தலையின் அமைவையும் பேணுவதில் தோற்பை, சிறுபை பாகங்களிலுள்ள பொட்டுக்கள் எனப்படும். உணர்கலக்கூட்டங்கள் பங்கு கொள்கின்றன. புவியீர்ப்ப மாறுபாட்டக்கிணங்க இவை துண்டாக்கப்படுவதன் விளைவாக தலையும் தலை சார்பாக உடலின் நிலையும் சீராக்கிக் கொள்ளப்படும். விரைவான அசைவுகளின் போது உடலின் நிமிர்நிலையும் தலையினமைவையும் பேணுவதில் அரைவட்டக் கால்வாய்களின் பங்கு கொள்கின்றன.

தலை சுழற்றப்படும் போது அரை வட்டக் கால்வாய்களுள் காணப்படும் அகநிணநீர் அசைவதனால் அவற்றினடியிலுள்ள தொட்டியுருக்களின் உணர்கலங்களினின்று உருவாகும் கணத்தாக்கங்களால் மூளிக்கு தகவல் எடுத்து வரப்பட்ட தலையினசைவு உணரப்படும். அங்கிருந்து சீராக்கற் செயற்பாடகள் மேற்கொள்ளப்படும். இவை மட்டுமன்றி தலை. உடல் என்பனவற்றின் சமநிலையைப் பேணிக் கொள்வதிற் கண்கள், உடற்தசைகளில் காணப்படும் தசைப்புலன்,சிரைப்புலன், பொறிமுறை வாங்கிகளினின்றும் மூளிக்க எடுத்து வரப்படும் தகவல்களும் பங்கு கொள்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.