திங்கள், 6 ஏப்ரல், 2015

இதயத் துடிப்புக்கும், நாடித் துடிப்புக்கும் என்ன தொடர்பு?

‘இதயத் துடிப்பு’ என்பது இதய இயங்கும்போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும்போது பெருந்தமனியல் ரத்த ஓட்டம் ஏற்பட்டு ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்படுவதே நாடித் துடிப்பு. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும்.
இதயத் துடிப்பு எப்போது அதிகமாகும்?
இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால் அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் கரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.
உடற்பயிற்சி செய்யுப்போதும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைந்துவிடும்.
இதயத் துடிப்பு எப்போது குறையும்?
தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும்போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும்.
ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90&க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90&க்கும் மேல் இருந்தால் அதை ‘மிகை இதயத் துடிப்பு’ என்றும், 60&க்குக் குறைவாக இருந்தால் ‘குறை இதயத் துடிப்பு’ என்றும் சொல்வார்கள்.
உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத் துடிப்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் கோப்பை ஐந்து முறை வென்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜான் போர்க்குக்கு சாதாரணமாகவே இதயம் நிமிடத்துக்கு 38 முறைதான் துடிக்குமாம்.
மனிதன் மட்டுமல்ல விலங்களுக்கும் இது பொருந்தும். யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். அதுவே, கானாரி என்ற பறவைக்கும் இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000 முறை துடிக்குமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.