சனி, 30 மே, 2015

இரத்ததில் சர்க்கரையின் அளவு

Glucose-and-Insulin-Flow-in-the-Body

இரத்ததில் சர்க்கரையின் அளவு

நமது உணவில் உள்ள சர்க்கரையானது வளர்சிதை மாற்றத்தின் (metabolism) வாயிலாக குளுகோசாக மாற்றம் பெற்று இரத்தத்தோடு கலக்கிறது. இதனை அளப்பதற்குப் பொதுவாக நொதிகள் (enzymes) எனப்படும் வேதியியல் பொருள்கள் (chemicals) பயன்படுத்தப் படுகின்றன. குளுகோஸ் ஆக்சிடேஸ் மற்றும் குளுகோஸ் பெராக்சைட் எனப்படும் நொதிகள் குளுகோசை குளுகோனிக் அமிலமாகவும் ஹைட்ரஜன் பெராக்சைட் ஆகவும் மாற்றுகின்றன; இதன் விளைவாக சிகப்பு வண்ணப் பொருள் ஒன்று உற்பத்தி செய்யப்படுவதோடு, இவ்வண்ணத்தின் அடர்த்தியும் கருவி ஒன்றினால் அளக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு குறிப்பிட்ட அடர்த்தியுள்ள குளுகோஸ் மாதிரியும் (sample) செலுத்தப்படுகிறது. இந்த இரண்டு மாதிரிகளின் அளவைக் கொண்டு இரத்ததில் உள்ள குளுகோசின் அளவு கணக்கிடப்படுகிறது. சாதாரணமாக இரத்ததில் குளுகோசின் அளவு 60-100 mg% இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.