ஞாயிறு, 12 ஜூலை, 2015

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில வகை உணவுகள்:

kuruvi40

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களின் இறப்பிற்கு இதய நோய்கள் தான் காரணமாக அமைகின்றன. இரத்த அழுத்தம் காரணமாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன, அதிகமான வேலைப்பளு காரணமாக டென்ஷன் ஆகி இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்து இறுதியில் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆகவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில வகை உணவுகளை ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

வாழைப்பழம்

இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.

ஏனெனில் வாழைப்பழத்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை சிறுநீரகத்தில் இரத்தத்தை சுத்திகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள சோடியத்தை வடிகட்டிவிடும் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக செல்ல உதவும்.

தர்பூசணி

கோடையில் கிடைக்கும் தர்பூசணி புத்துணர்ச்சி கொடுப்பது மட்டுமின்றி, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ஏனெனில் தர்பூசணியில் நார்ச்சத்து, லைகோபைன்(Lycopene), வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்திற்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸோ குடித்து வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகமாகவும் உள்ளது. இவை அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சீராக பராமரிக்கவும் உதவும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பொட்டாசியம் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை இரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கும்.

திராட்சை ஜூஸ்

தினமும் 2 டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால்ஸ்(Polyphenols) இரத்த நாளங்களை தளரச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். மேலும் இதில் கலோரிகள் இல்லாததால், இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.

கேரட்

ஆண்கள் கண்டிப்பாக தினம் ஒரு கேரட்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.