திங்கள், 7 ஏப்ரல், 2014

பெரிய வியாதிகளுக்கு மூலாதாரம் விஷமாக மாறும் வெள்ளைச்சீனி............


இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தன இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியிலிருந்து இரவு படுக்க செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடு பொருளாக நமக்குள் செல்கிறது. பலகாரகங்களில் என்றில்லை. சீனியை அப்படியே அள்ளி சாப்பிடுகிறோம். அந்த அளவு நமக்கு இனிபூட்டும் இந்த வெள்ளை சீனியை எப்படி தயார் செய்கிறார்கள் என்ற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் இனி அதை தொடக்கூட மாட்டீர்கள். இந்த அளவுக்கு பயமுறுத்தும் வெள்ளை சீனியை தயார் செய்ய என்னென்ன ரசாயன பொருட்கள் பயன்படுத்த படுகின்றன என பார்போம்.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிலீசிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயிட் செய்து பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். பிழிந்த சாறு 60 
செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரேட் பாஸ்போரிக் ஆசிட்
 லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. 
இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்த படுகிறது.
இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து 
சல்பர் டை ஆக்சைட் வாயுவை சேர்கிறார்கள்.
102 செண்டி கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை 

இழந்து செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்கிறது.
அடுத்து பாலி எலெக்ட்ரோ லைட்டை சேர்த்து தெளிகலனில் மண், 

uசக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு
 கிடைகிறது.
சுடுகலனில் காஷ்டிக் சோடா , வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த 
ஜூஸ் தயாரிக்கப்படுகிறது.
மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேடும் சேர்க்க

 படிக நிலையில் சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில்
 கலந்து விடுகிறது. இப்படி தயாரான சீனியில் எஞ்சி நிற்பது கார்பன் எனும்
 கரியே.
தயாரான நிலையிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை

 சாப்பிடக்கூடாது.
காரணம் அதில் உள்ள சல்பர் டை ஆக்சைட் எனும் ரசாயனம் மஞ்சள் நிறமாக

 மாறி வீரியமுள்ள நஞ்சாக மாறி விடுகிறது. உங்கள் சட்டை கலரில் உள்ள 
அழுக்கு எந்த சோப்பை கொண்டு தேய்த்தாலும் போக மாறுகிறதா? கவலை
 படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்து பாருங்கள். போயே போய் விடும்.
ஆக சட்டையின் அழுக்கை போக்க கூடிய ஒரு ரசாயன பொருளைத்தான்
 நாம் அள்ளி அள்ளி சாப்பிடுகிறோம். இந்த சீனியை சாப்பிட்டால் நம் குடல் 
என்ன பாடுபடும்? குடலில் மட்டும் அல்ல பல் வலி, பல் சொத்தை , குடல் புண் , 
சளி தொல்லை , உடல் பருமன் ,இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் , 
ரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான
 காரணியாக அமைகிறது.

ஆலைகளில் தயாரான வெள்ளைசீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வெள்ளம்

 பனங்கட்டி, நாட்டுச்சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
 இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ இதய நோயோ சர்க்கரை வியாதியோ
 வராது.

பிரசவத்தின் போது ஏற்படும் உடல் உபாதைகள்



பிரசவத்தின் போது, தைரியமாக இருக்க அனைத்து பெண்களும் தயாராக வேண்டும். அதிலும் முதல் பிரசவம் தான் ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம்.
ஆகவே பிரசவத்தின் போது பயப்படாமல், தைரியாமக இருப்பதற்கு நிறைய விஷயங்களை பலர் சொல்லி, தைரியம் கூறுவார்கள். பிரசவத்தின் இறுதி மாதத்தில் எவ்வாறெல்லாம் நடக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. அதை பின்பற்றி பலன் பெறுங்கள்…
பிரசவத்தின் போது நடைபெறும் ஒரு செயல்களில் ஒன்று தான் கழிவுகள் வெளிவருதல். ஏனெனில் குழந்தை பிறக்கும் நேரம் அதிகப்படியான அழுத்தம் வயிற்றில் கொடுப்பதால், அப்போது சில பெண்களுக்கு உடலில் உள்ள கழிவுகளும் வெளிவரும்.
ஆகவே தான் மருத்துவர்கள் பிரசவ வலி ஏற்படுவதற்கு ஒரு மாதத்தில் இருந்தே அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகவே இந்த நேரத்தில் திடமான உணவுகளை அதிகம் சாப்பிடாமல், தண்ணீரையும், பானங்களையும் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் பிரசவத்தின் போது கழிவுகள் வெளியேறுவதை தவிர்க்கலாம்.
சிலருக்கு பிரசவத்தின் போது வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் பிரசவம் ஆகிய மூன்று ஒரே நேரத்தில் நடைபெறும். ஏனெனில் பிரசவத்தின் போது வயிறு மிகுந்த உப்புசத்துடன் இருப்பதால், அது இறுதியில் வாந்தியை வரவழைப்பதோடு, அத்துடன் இயற்கையாக நடைபெறும் வயிற்றுப்போக்கும் நடைபெறும். ஆனால் இந்த மாதிரியான விஷயத்தை யாரும் சொல்லவே மாட்டார்கள்.
பிரசவத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் மிகவும் கொடியது இரத்த அழுத்தமானது அதிகரிப்பது தான். ஏனெனில் குழந்தை வெளிவருவதற்கு தொடர்ச்சியாக கொடுக்கும் அழுத்தத்தினால், இரத்த அழுத்தமானது அதிகரிக்கும். இந்த பிரச்சனை சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரலாம் அல்லது சிலருக்கு சில நாட்களில் குணமாகலாம்.
பிரசவ வலி பிரசவத்தின் போது மட்டும் வரும் என்று நினைக்க வேண்டாம். அந்த வலியானது பிரசவம் முடிந்த பின்னர் சில நாட்களோ அல்லது வாரமோ இருக்கும். எனவே இந்த வலியை தவிர்க்க சரியான ஓய்வு மிகவும் அவசியமானது.
இவையே பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பின்னரும் நடைபெறும் விஷயங்கள். ஆகவே 9 ஆவது மாதம் வந்துவிட்டால், மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

காய்ச்சல் ஏன்? என்ன செய்வது?


புயலுக்கு அடுத்தபடியாக புதிய புதிய பெயர்களில் தினம் ஒன்றாக அறிமுகமாவது காய்ச்சலாகத்தான் இருக்கும். உடல் வெப்பநி லையை எகிறச் செய்கிற இந்தக் காய்ச்சல், சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடும்.
பல நேரங்களில் உயிரைப் பறிக்கிற அளவுக்கு கோர முகத்தையும் காட்டும். அதனாலேயே குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றாலே பல அம்மாக்களுக்கும் பீதி தலைக்கேறும்.
காய்ச்சல் என்பது பயந்து நடுங்க வைக்கிற விஷயமில்லை என்கிறார் பொது மருத்துவர் ரிபப்ளிகா. காய்ச்சல் ஏன் வருகிறது, அது என்ன செய்யும், எப்போது எச்சரிக்கையாக வேண்டும், தடுப்பு நடவடிக்கைகள் என அத்தனை தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார் அவர்.
உடலின் சராசரி வெப்பநிலையானது 98.6 டிகிரி ஃபாரன்ஹீட். சிலருக்கு இதைவிட சற்று கூடவோ, குறைவாகவோ இருக்கலாம். வெப்பநிலையானது 100 டிகிரி வரை இருப்பது பிரச்னையில்லை. அதைத் தாண்டினால்தான் கவலைப்பட வேண்டும்.
காய்ச்சல் என்பது என்ன?
உடலின் எதிர்ப்பு சக்தி இயக்கத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் போது காய்ச்சல் வரும். காய்ச்சல் என்பது ஒரு வியாதியல்ல. அது ஒரு அறிகுறி. பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது, இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும். அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல். சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் காய்ச்சல் வரும் போது அலட்சியம் கூடாது.
பொதுவாக குழந்தைகளுக்கு 5 – 6 வயதுக்கு மேல்தான் எதிர்ப்பு சக்தியில் முன்னேற்றம் தெரியும். எனவே, அவர்களுக்குக் காய்ச்சல் வரும் போது, கூடவே வலிப்பும் வரலாம். இதற்கு ‘ஃபெப்ரைல் ஃபிட்ஸ்’ என்று பெயர். இந்த மாதிரிக் குழந்தைகளுக்கு அடுத்த முறை காய்ச்சல் வரும் போது அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சலுக்கான காரணங்கள்?
வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகளின் காரணமாகவோ, கொசு, ஈ போன்றவை சுமந்து வந்து நம் உடலில் இறக்கும் கிருமி களின் பாதிப்பினாலோ காய்ச்சல் வரலாம்.
நம் உடலிலுள்ள சில மென் மையான கொலாஜன் திசுக்கள், உடலிலேயே சில நச்சுப் பொருட்களால் அழிக்கப்படும் போதும் காய்ச் சல் வரலாம். இள வயதினருக்கு ‘ருமாட்டிக் காய்ச்சல்’ என ஒன்று வரும். இதற்குக் காரணமான பாக்டீரியாவானது முதலில் தொண் டையைப் பாதிக்கும். அதன் மூலம் இதய வால்வைத் தொற்றும். அப்படியே அலட்சியமாக விட்டால், இதய வால்வில் பிரச்னைகள் வளர்ந்து, ஒரு கட்டத்தில் இதயத்தின் செயல்பாட்டிலேயே பிரச்னைகளை ஏற்படுத்தும் அளவுக்குக் கொண்டு போகும்.
ஹெச்.ஐ.வி பாதித்தோருக்கு ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் அவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வரலாம். பெண்களுக்கு சிறுநீரகத் தொற்றின் காரணமாக காய்ச்சல் வரும். அது முதலில் முதுகுவலியாக வெளிப்பட்டு, பிறகு திடீரென காய்ச்சலாக உணரப்படும். காசநோய் இருந்தாலும் காய்ச்சல் வரலாம். பொதுவாக இருமல்தான் காசநோயின் அறிகுறியென்றும், காச நோயெல்லாம் அடித்தட்டு மக்களுக்கு மட்டும்தான் வருமென்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காய்ச்சல், களைப்பு போன்றவை அடிக்கடி வந்தாலும் காசநோய்க்கான சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
காற்றின் மூலம் பரவும் நோய் என்பதால், இது ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி யாரையும் தொற்றலாம். சில நேரங்களில் காய்ச் சல் என்பது புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகக் கூட இருக்கலாம். காய்ச்சல், நெறி கட்டுதல், மூட்டுகளில் வலி போன்ற அறிகுறி களை யாரும் புற்றுநோயுடன் தொடர்புப்படுத்திப் பார்க்க மாட்டார்கள்.
இதெல்லாம் அடிக்கடி தொடர்ந்தால் எச்சரிக்கை அவசியம்.இவை எல்லாம் போக ‘ட்ரக் ஃபீவர்’ என்றே ஒன்று உள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம் என ஏகப்பட்ட பிரச்னைகளுக்காக ஏகப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்வோருக்கு ஒரு கட்டத்தில் அவர்களது உடம்பு அந்த மருந்துகளை விரும்பாததன் விளைவாக காய்ச்சலாக வெளிப்படுத்தும்.முதியவர்களுக்கு இது சகஜம். மிதமான காய்ச் சல், படபடப்பான மனநிலை போன்றவை இதன்அறிகுறிகள்.
காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
லேசாக உடல் சூடானாலே போதும்… உடனே ஒரு பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துப் போடுகிற பழக்கம் பலருக்கும் இருக்கி றது. அது தேவையில்லை. இன்னும் சிலர் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் போது 3 மணி நேரத்துக்கொரு முறை பாராசிட்டமால் கொடுக்கிறார்கள். அதுவும் தவறு. 100 டிகிரியை தாண்டும் போது, சுத்தமான காட்டன் துணியை குளிர்ந்த தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, நெற்றி, அக்குள் பகுதிகளில் வைத்துத் துடைத்தாலே 80 சதவிகிதம் குணமடையும்.
தேவையில்லாமல் நாமாக மருந்துகள் எடுப்பதன் மூலம் தாமாக உற்பத்தியாகிற எதிர்ப்பு சக்தியை நாமாகவே கெடுக்கிறோம். 100 டிகி ரிக்கு அதிகமான காய்ச்சலும், அதீத களைப்பும் இருந்தால் அல்லது காய்ச்சலுடன் கூடவே உளறல், குளிர், ஜன்னி போன்றவை இ ருந்தாலோ மருத்துவரை நாடுவதே பாதுகாப்பானது. டி.பி, டைஃபாய்டு போன்ற காய்ச்சல்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும். டெங்கு, மலேரியா போன்றவை பரவாது. வீட்டில் ஒருவருக்குக் காய்ச்சல் வந்திருக்கும். மருத்துவரைப் பார்த்து மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பார்.
அடுத்த சில நாட்களில் இன்னொரு நபருக்கும் காய்ச்சல் வந்தால், அவருக்கும் அதே காய்ச்சலாகத்தான் இருக்கும், மருத்துவர் அதே மருந்தைத்தான் பரிந்துரைப்பார் என்கிற தவறான நம்பிக்கையில் தாமாகவே அந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருந்து கள் என்பவை ஒருவரது வயது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து வேறுபடும்.
காய்ச்சலுடன் கூடிய தொண்டைக் கரகரப்பு, மூக்கடைப்பு போன்றவற்றுக்குத் தாமாகவே மருந்துக் கடைகளை அணுகி, ஆன்டிபயாடிக் வாங்கி சாப்பிடுவ தும் தவறு. வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் எடுக்கக்கூடாது. என்ன மாதிரியான காய்ச்சல், அதன் தீவிரம் என்ன என்பதைப் பொறுத்து, ஒரு மருத்துவரால்தான் சரியான மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும்.
ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும் போது, பிரச்னை சரியானதும் பாதியோடு நிறுத்தவும் கூடாது. முழுக்க குணமானாலும், பரிந்து ரைக்கப்பட்ட மொத்த ஆன்டிபயாடிக்கையும் சாப்பிட்டு முடிக்க வேண்டியது முக்கியம்.
என்னென்ன பரிசோதனைகள்?
தேவைப்பட்டால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலம் பரிசோதனை, எக்ஸ்ரே போன்ற வற்றை எடுக்கலாம்.
தடுப்பு முறைகள்…
சிலவகை காய்ச்சல்களில் இருந்து தப்பிக்க தடுப்பு மருந்துகள் உள்ளன. உதாரணத்துக்கு டைஃபாய்டு, மலேரியா, ஹெபடைடிஸ், அம்மை போன்றவற்றுக்கு முன்கூட்டியே தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டால் அந்த நோய் வராது.
அப்படியே வந்தாலும் தீவிரம் குறைவாக இருக்கும். வைட்டமின் மற்றும் மினரல் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை தினசரி உணவில் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காய்கறி, பழங்கள், கீரை போன்றவற்றை நன்றாகக் கழுவியே உபயோகிக்க வேண்டும். என்னதான் உயர் ரக வாட்டர் ஃபில்டர் இருந் தாலும், கொதிக்க வைத்த தண்ணீர்தான் 100 சதவிகிதம் பாதுகாப்பானது.
ஃபாஸ்ட் ஃபுட் பழக்கத்தைக் குறைக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய் கறிகளை அவர்களுக்குப் பிடித்த ஏதே னும் ஒருவகையில் உணவில் சேர்த்துக் கட்டாயமாகக் கொடுத்துப் பழக்க வேண்டும்.

கிரீன் டீ


இதைப் பற்றிப் பேசாத மக்களே இருக்க மாட்டார்கள். எடைக் குறைப்பில் தொடங்கி, இளமையான தோற்றம் வரை சகலத்துக்கும் உதவுவதாக சொல்லப்படுகிற, நம்பப்படுகிற கிரீன் டீ உண்மையிலேயே நல்லதுதானா? வழக்கமான டீயில் இல்லாதது அப்படி என்னதான் இருக்கிறது இதில்?
ஆக்சிஜன் நல்லது என்பது நமக்கெல்லாம் தெரியும். அதே ஆக்சிஜன் இரும்பில் பட்டால் துருப்பிடிக்கிறதல்லவா? ஆக்சிடேஷன் எனப்படுகிற இதே விஷயம் மனித உடலிலும் நடக்கும். நமது உடலில் உள்ள செல்களிலும் ஆக்சிடேஷன் நடக்கும். நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும், வெயில், சுற்றுச்சூழல் மாசின் பாதிப்புகளாலும், புகை, குடிப்பழக்கம், துரித உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் உடலின் செல்களில் ஆக்சிடேஷன் அதிகமாகும். அதை ‘ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ என்கிறோம். அதன் விளைவாக ‘ரியாக்டிவ் ஆக்சிடேஷன் ஸ்பீசிஸ்’ என்கிற ஒரு ரசாயனம் சுரக்கும். அது மனிதர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
நீரிழிவையும் கொலஸ்ட்ராலையும் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்துவதுடன் சீக்கிரமே முதுமையையும் கொடுத்துவிடும். இவ்வளவு மோசமான விளைவு களைக் கொடுக்கக்கூடிய இந்தப் பிரச்னைக்கு ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் என்பவை அவசியம். பிலிருபின், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் டி, தாமிரம், செலினியம், துத்தநாகம், ஆல்ஃபா லினோலிக் அமிலம் போன்ற எல்லாம் நம் உடலுக்குள்ளேயே இருந்து, இந்த பாதிப்புகளில் இருந்து காக்கக்கூடியவை.
ஆனாலும், நீரிழிவு, கொலஸ்ட் ரால், சுற்றுச்சூழல் மாசுப் பிரச்னைகளுக்கு உள்ளானவர்களுக்கு இதன் அளவு குறைந்து, பாதிப்புகளின் தீவிரம் இன்னும் அதிகமாகும். ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் என்பவை பழங்கள், காய்கறிகள், தாவர எண்ணெய், காபி, டீ, சோயா, சாக்லெட், ஆலிவ் ஆயில், முட்டை போன்றவற்றிலிருந்தே நமக்கு அபரிமிதமாகக் கிடைக்கக்கூடியவைதான்.
ஆனால், இவற்றைப் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு, மருத்துவர்கள் சமீப காலமாக கிரீன் டீ சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். கிரீன் டீயில் உள்ள catechins என்கிற பொருளானது கொலஸ்ட்ராலை குறைத்து, எடைக் குறைப்புக்கு உதவுகிறது. ஃபாஸ்ட் ஃபுட் ப்ரியர்களுக்கு, அத்தகைய உணவுகளில் சேர்க்கப்படுகிற பலவிதமான செயற்கையான பொருட்களால் புற்றுநோய்க்குக் காரணமான செல்கள் உற்பத்தியாகிற அபாயம் ஆரம்பமாகும். கிரீன் டீ குடிப்பதன் மூலம், புற்றுநோய் செல்களின் சங்கிலிப் பிணைப்பு தடுக்கப்படுகிறது.
வாய் துர்நாற்றத்துக்குக் காரணமான மால்டோஸ் அதிகமாவதையும் கிரீன் டீ தடுக்கிறது. வாய்ப்புண் குணமாகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு புண்களால் உண்டாகிற ரணத்தை ஆற்றுகிறது. பாக்டீரியா தொற்றைத் தவிர்க்கிறது. பார்க்கின்சன் மற்றும் அல்சீமர் நோய்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. தொடர்ந்து கிரீன் டீ குடிப்பவர்களுக்கு கேட்டராக்ட் பிரச்னைகூட தவிர்க்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மிக முக்கியமாக இளமையைத் தக்க வைக்கிறது. கெட்ட செல்களை அழித்து, நல்ல செல்களின் உருவாக்கத்துக்கு உதவுகிறது. கலப்படமில்லாத, தரமான கிரீன் டீயில் இந்த அத்தனை நல்ல அம்சங்களும் இருக்கும்.
காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, சர்க்கரை சேர்க்காத கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்தின் தொடக்கமாக அமையும். கூடவே மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உண்மையிலேயே தேவை இருப்போர், கிரீன் டீ மாத்திரைகளை குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்’’ என்கிற மருத்துவரின் வார்த்தைகள், பலரையும் சாதாரண டீயிலிருந்து, கிரீன் டீ பழக்கத்துக்கு மாற்றப் போவது உறுதி!அரிசி, எண்ணெய் மாதிரியே குறிப்பிட்ட மக்களைக் குறி வைத்துக் களமிறங்கும் டீ வகைகள் சமீப காலமாகப் பிரபலமாக ஆரம்பித்திருக்கின்றன.நீரிழிவுக்காரர்களுக்கு, பருமனானவர்களுக்கு, சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு… இப்படி தேவைக்கேற்ப தனிப்பட்ட முறையில் பலன் தருவதாக உத்தரவாதம் அளிக்கிற தேயிலைகளுக்கு மேல் தட்டு மக்களிடம் மாபெரும் வரவேற்பு இருக்கிறது.

வெற்றிலையின் பலன்கள்..!

குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் இருக்கும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக பால் சுரக்கும்.

சிறு குழந்தைகளுக்குப் பால் மற்றும் பால் பொருட்களால் செரியாமை ஏற்படும். பத்து வெற்றிலைக் காம்பு, ஒரு வசம்பு, கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் ஓமம், இரண்டு பூண்டு பல், இரண்டு கிராம்பு ஆகியவற்றை மண் சட்டியில் கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாலாடை ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, செரியாமை நீங்கும்.

பத்து வெற்றிலைகளைச் சிறிதாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அரை டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி இரண்டு அல்லது மூன்று முறை குடித்துவர உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை நீங்கும்.

வெற்றிலையைத் தணலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சம அளவு இஞ்சிச் சாறு கலந்து தினமும் குடித்துவர நாள்பட்ட நுரையீரல் நோய்கள் குணமாகும்.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் ஐந்து வெற்றிலைகளைப் போட்டுக் கொதிக்கவிட்டு, வெற்றிலை நன்றாகச் சிவந்ததும் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி, சொரி, சிரங்கு, படைகளின் மீது தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.

இரவில் படுக்கப்போகும்போது வெற்றிலையில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் தடவி, தணலில் காட்டி கட்டிகளின்மீது வைத்துக் கட்டினால், கட்டி உடைந்து சீழ் வெளிவரும்.

வெற்றிலைச் சாறுடன் சிறிது தண்ணீர் மற்றும் பாலைச் சேர்த்து அருந்திவர, சிறுநீர் நன்றாகப் பிரியும்.

கம்மாறு வெற்றிலைச் சாறுடன் வெந்நீர் கலந்து கொடுக்க வயிறு உப்புசம், மந்தம், தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.

சிறிது வெற்றிலைச் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்திவர, நரம்புகள் பலப்படும்.



தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும்.
மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகின்றது.
கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் (எலும்புபோல்) காணப்படும்.
காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.
பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது. கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில் நெறி கட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.
கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:
வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.
இதுபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.
பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும்.
அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.
இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும். உடம்பில் உள்ள சர்க்கரையும் சேர்வதால் எலும்புபோல் உறுதியாகிறது.
பொதுவாக உடலில் சர்க்கரை இருக்கும். இந்த சர்க்கரையானது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் உப்பு கலப்பதால் அவை கட்டியாகிவிடுகின்றன. உதாரணமாக சுண்ணாம்பு, சர்க்கரை, உப்பு, சேர்ந்தால் கட்டியாக மாறும். அதுபோல்தான் இனிப்பு நீர், உப்பு நீர், சுண்ணாம்பு நீர் சேர்ந்து கணுக்காலில் தங்கி கட்டியாகவிடுகின்றது. இதனால் பாத வெடிப்பு ஏற்படுவதற்கும் காரணமாகின்றது.
இரவில் அதிகமான கார உணவு உண்பதாலும் காலை, மதிய உணவிலும் காரத்தை சேர்த்துக்கொள்வதாலும் குடல் அலர்ஜியால் பித்த நீர் மேல் எழும்பி தலையில் நீர் கோர்த்து தலைவலி வந்து பின் கணுக்காலில் கட்டியாகி விடுகின்றது.
மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந்த வலி உருவாகிறது.
பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும்.
உடல் எடை அதிகரித்தாலும் கணுக்கால் வலி உண்டாகும்.
மது, புகை போன்ற போதைப் பொருட்களாலும் உடலில் அலர்ஜி உருவாகி கணுக்கால் வலி உண்டாகும்.
முறையற்ற உணவு, நீண்ட பட்டினி போன்றவற்றாலும் உருவாகலாம்.
கணுக்கால் வலி வருமுன் காக்க:
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வாயுவை உண்டுபண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது.
நாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும். கார உணவை மதிய வேளையில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது.
கார உணவைப் பற்றி சித்தர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில்லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது.
மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமே ஒழிய அதிக நேரம் தூங்கக் கூடாது. நீண்ட தூக்கம் கொண்டால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். 
உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும்.  இதனால் இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் 1/2 மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்.
கணுக்காலின் மேல்புறத்தில் தைல வகைகளான காயத்திருமேனி தைலம், கற்பூராதித் தைலம், வாத நாராயணத் தைலம் போன்ற வலி நிவாரண தைலங்களைத் தடவி 1/2 மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும். காலையும், மாலையும் இவ்வாறு செய்வது நல்லது.
வசம்பு - 5 கிராம்
மஞ்சள் - 5 கிராம்
சுக்கு - 5 கிராம்
சித்தரத்தை - 5 கிராம்
எடுத்துப் பொடித்து முருங்கை இலை அல்லது வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.
எருக்கின் பழுத்த இலை - 5
வசம்பு - 5 கிராம்
இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீ­ரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குணமாகும்.

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

குறைந்த இரத்த அழுத்தம்

குறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும்.
இரத்த அழுத்த அளவீட்டில் இரண்டு எண்கள் என தோன்றுகிறது.முதல் இரண்டு உயர் சிஸ்டாலிக் அழுத்தம் ஒரு நடவடிக்கை அல்லது அதிகரிப்பதற்கும் இதயம் துடிக்கிறது மற்றும் இரத்த அவர்களை நிரப்பும் போது ஆகின்றன. இரண்டாம் எண் இதய விரிவியக்க அழுத்தம், அல்லது இதய துடிப்புகள் இடையே உள்ளது போது தமனிகள் அழுத்தங்களை அளவிடுகிறது.
சரியான இரத்த அழுத்தம் குறைவாக 120/80 (சிஸ்டாலிக் / விரிவியக்க) ஆகிறது. ஆரோக்கியமான மக்கள், எந்த அறிகுறிகள் இல்லாமல் குறைந்த இரத்த அழுத்தம் பொதுவாக ஒரு கவலை இல்லை மற்றும் சிகிச்சை தேவையில்லை. ஆனால் குறைந்த இரத்த அழுத்தம் ஒரு அடிப்படை பிரச்சனை ஒரு அடையாளமாக இருக்க முடியாது - அது இதயம், மூளை, மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு போதிய இரத்த ஓட்டம் ஏற்படுத்தும் அங்கு - குறிப்பாக வயதானவர்களுக்கு.
எந்த அறிகுறிகள் நாள்பட்ட குறைந்த இரத்த அழுத்தம் கிட்டத்தட்ட எப்போதும் மோசமாகவே உள்ளது. இரத்த அழுத்தம் திடீரென குறைகிறது மற்றும் மூளை போதுமான இரத்த வழங்கல் இழந்து போது சுகாதார பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த ஏற்படலாம்தலைச்சுற்று அல்லது இலேசான. இரத்த அழுத்தம் திடீர் சொட்டு பொதுவாக நின்று ஒரு பொய் அல்லது உட்கார்ந்து நிலையில் இருந்து உயர்ந்து யாராவது ஏற்படும். குறைந்த இரத்த அழுத்தம் இந்த வகையான தாழழுத்தம் அல்லது குற்றுநிலை அறியப்படுகிறது. யாரோ நேரம் ஒரு நீண்ட கால குறிக்கிறது போது குறைந்த இரத்த அழுத்தம் மற்றொரு வகை ஏற்படலாம். இந்த neurally மத்தியஸ்தம் உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.
தாழழுத்தம் இருதய அமைப்பு அல்லது திடீர் மாற்றங்கள் சரியான நடக்க நரம்பு மண்டலத்தின் ஒரு தோல்வி என்று கருதப்படுகிறது.பொதுவாக, நீங்கள் நிற்க போது, உங்கள் கீழ் முனைப்புள்ளிகள் சில இரத்த குளங்கள். திருத்தப்படாத, இந்த உங்கள் இரத்த அழுத்தம் வீழ்ச்சி ஏற்படும். ஆனால் உங்கள் உடல் பொதுவாக வேகமான மற்றும் உங்கள் இரத்த நாளங்கள் கட்டுப்படுத்த வெல்ல உங்கள் இதயம் செய்திகளை அனுப்புவதன் மூலம் ஈடு. இந்த இரத்த அழுத்தம் வீழ்ச்சி ஈடு. இந்த நடக்கும், அல்லது மிக மெதுவாக, தாழழுத்தம் முடிவுகளை நடக்கும் என்றால்.
குறைந்த மற்றும் ஆபத்து உயர் இரத்த அழுத்தம் பொதுவாக வயதான போது சாதாரண மாற்றங்கள் காரணமாக வயது அதிகரிக்கிறது.கூடுதலாக, இரத்த இதய தசை ஓட்டம் மற்றும் மூளையின் இரத்த நாளங்கள் தகடு கட்டமைப்பை விளைவாக, வயது நிராகரிக்கின்றன.வயது 65 பேர் ஒரு மதிப்பீட்டின்படி 10% முதல் 20% தாழழுத்தம் வேண்டும்.

என்ன குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுகிறது?

குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக எப்போதும் தெளிவாக இல்லை.இது பின்வரும் தொடர்புடைய:
  • கர்ப்பம்
  • அத்தகைய ஒரு underactive தைராய்டு (தைராய்டு), நீரிழிவு, அல்லது குறைந்த இரத்த சர்க்கரை (இரத்த சர்க்கரை குறைவு) போன்ற ஹார்மோன் பிரச்சினைகள்
  • சில மருந்துகள்
  • உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் அல்லது பார்கின்சன் நோய் போன்ற சில மருந்துகளுக்காக
  • இதய செயலிழப்பு
  • ஹார்ட் குருதி ஊட்டக்குறை (அசாதாரண இதய தாளங்களுக்கு)
  • அகலப்படுத்துதல் அல்லது நீட்டிப்பு, இரத்த நாளங்கள்
  • வெப்ப சோர்வு அல்லது வெப்ப அதிர்ச்சியால்
  • ஈரல் நோய்
என்ன இரத்த அழுத்தம் ஒரு திடீர் வீழ்ச்சி ஏற்படுகிறது?
இரத்த அழுத்தம் திடீர் சொட்டு உயிருக்கு ஆபத்தான இருக்க முடியும்.உயர் ரத்த அழுத்தம் இந்த வகை காரணங்கள் பின்வருமாறு:
  • இரத்தப்போக்கு இருந்து இரத்த இழப்பு
  • குறைந்த உடல் வெப்பநிலை
  • அதிக உடல் வெப்பநிலை
  • இதய தசை நோய் காரணமாக இதய செயலிழப்பு
  • சீழ்ப்பிடிப்பு, கடுமையான இரத்த தொற்று
  • வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் இருந்து கடுமையான உடல் நீர் வறட்சி
  • மருந்து அல்லது மது ஒரு எதிர்வினை
  • கடும் ஒவ்வாமை என்று ஒரு கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவு,