வாழ்க்கை முறை, உணவு இவைகளில் மாற்றம் தேவை. சில நாட்கள் பழங்கள் மட்டுமே உணவாக கொள்ள வேண்டும் என்று சில வைத்தியர்கள் கூறுகின்றனர். மசாலா உணவுகள், கேக், வெள்ளை ரொட்டி, சர்க்கரை, டீ, காபி, ஆல்கஹால் முதலியவற்றை தவிர்க்கவும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
குடும்ப வேலைகளைப் பற்றியோ, அலுவலகத்தை பற்றியோ அலட்டிக் கொள்ளக் கூடாது.
தூக்கமின்மையை போக்கிக் கொள்ளவும். நன்றாக தூங்க வேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழிக்கக் கூடாது.
மிதமான உடலுறவு போதும்.
குளிக்கும் போது முதலில் சூடான நீரை ஊற்றிக் கொண்டு பிறகு குளிர்ந்த நீரை கொட்டிக் கொள்ளக் கூடாது. நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு விடும்.
மனதின் சக்தியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் மனமிருந்தால் எதையும் சாதிக்கலாம்.
கோபதாபங்களுக்கு இடமளிக்க கூடாது.
பாத் - டப் (ஙிணீtலீ tuதீ) வசதியுள்ளவர்கள், பாத் டப் சுடுநீருடன் 1 கிலோ எப்சம் உப்பை சேர்த்து, இந்த நீரில் 10 -- 20 நிமிடம் அமிழ்ந்து இருக்கவும். சோப்பை உபயோகிக்க வேண்டாம். எப்சம் உப்பின் பலன்களை சோப் அழித்து விடும்.
உடற்பயிற்சி, யோகாசனங்கள் நல்ல பயன்களை தரும்.
நரம்புக் கோளாறுகளுக்கு பழச்சாறு நல்லது. குறிப்பாக திராட்சை ஜுஸ் மிகவும் நல்லது.
பேரீச்சம் பழம் நரம்புகளை வலிமைப்படுத்தும். தினமும் பாலுடன் எடுத்துக் கொள்ளவும்.
உடலின் ரத்த ஒட்டம் சீராக நடைப்பயிற்சி, நீச்சல், தோட்ட வேலை செய்தல் ஏதாவது ஒரு விளையாட்டு - இவற்றில் ஈடுபடவும்.
ஆயுர்வேதம் பரிந்துரைப்பது -- அஸ்வகந்தா சூரணம், சந்திரோதய லேகியம் கீரைக் கற்கண்டு, பசும்பால், தேன் கலந்து செய்யப்படும் லேஹியம் முதலியன. உணவில் பசும்பால், திராட்சை, தக்காளி, மணத்தக்காளி கீரை, வேர்க்கடலை, பட்டாணி, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, ஆரஞ்சுப் பழம், மலை வாழைப்பழம் முதலியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.