திங்கள், 22 செப்டம்பர், 2014

திடீர் மயக்கங்கள் எப்போதும் ஆபத்தானவையா?

ஆபீசில் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் திடீரென தலையைச் சுற்றிக் கொண்டு வருகிறது என்று மேசையிலேயே படுத்துவி்ட்டார்.
சக ஊழியர்கள் அவரை அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பொது மருத்துவ நிபுணர், காது மூக்கு தொண்டை நிபுணர் என பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பார்த்தார்கள்.
செய்யாத மருத்துவ ஆய்வு கூட பரிசோதனைகள் மிச்சமில்லை. MRI உட்பட மூளையைப் படமெடுத்துப் பார்த்துவி்டார்கள். எதுவும் பிடிபடவில்லையாம்.
மயக்கம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
  • வயதானவர்களும் பிரஷர் குறைவாக உள்ளவர்களும் உட்கார்ந்த அல்லது படுக்கை நிலையிலிருந்து திடீரென எழுந்து நின்றால் மயக்கம் வருவதுண்டு.
  • திடீரென ஏற்படும் கடும் வலிகள் கூட அவ்வாறு ஏற்படுத்தலாம். 
  • காரணம் எது என நீங்கள் நினைத்தாலும் ஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து காரணத்தைக் கண்டறிய முயல வேண்டும்.
சில தருணங்களில் மருத்துவர்களால் கூட ஒருவருக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது என்பதைத் துல்லியமாக கணடறிய முடியாதிருக்கலாம்.
கீழ் கண்டவை மயக்கத்தைத் தூண்டுவதற்கான முக்கய காரணிகளாக இருக்கக் கூடும் என அமெரிக்க குடும்ப மருத்துவ சங்கம் சொல்கிறது.
  • சடுதியாக எழுந்து நிற்பது.
  • கடுமையான வெப்பம் உள்ள சூழலில் தீவிரமான உடற பயிற்சி செய்தல் அல்லது கடுமையாக வேலை செய்தல்.
  • மிக வேகமாகச் சுவாசித்தல். இந்த hyperventilating என்பது நோய்களின் போதும் ஏற்படலாம், மன உளைச்சலாலும் நிகழலாம்.
  • மிகக் கடுமையான மனத் தாக்கம் அல்லது துயரம் உடலை மட்டுமின்றி ஒருவரது இரத்த அழுத்தத்தையும் பாதிக்கும்போது அவ்வாறு மயக்கம் ஏற்படுவதுண்டு.
  • சில பிரஷர் மருந்துகளை உட்கொள்ளும்போது திடீரென எழும்போது இரத்த அழுத்தம் குறைவதுண்டு. இது திடீர மயக்கத்திற்குக் காரணமாகலாம்.
காரணம் என்பதைக் கண்டறிந்து மீண்டும் நிகழ்வதைத் தடுங்கள்.
இல்லையேல் ஆபத்தில் மாட்டிக் கொள்ள நேர்வதுடன், தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகள், பணச் செலவு மற்றும் மன உளைச்சலைத் தவிர்துக் கொள்ளலாம்.

திடீர் மயக்கங்கள் சில ஆபத்தான நிலையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.


  • குறுகிய கால நேரத்திற்குள் பல தடவைகள் ஏற்படுதல்.
  • வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீரென ஏற்படல் (களைப்பு, வாந்தி, காய்ச்சல், நித்திரைக் குறைவு போன்றவை சில உதாரணங்கள்)
  • குருதிப் பெருக்கு
  • மூச்செடுப்பதில் சிரமம்
  • நெஞ்நு வலி
  • இருதயம் வேகமாகத் துடித்தல்
  • முகம் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் மரப்பது போன்ற உணர்ச்சி
மேற் கூறிய அற்குறிகள் இருந்தால் மயக்கத்திற்கு அடிப்படையான வேறு ஏதோ ஆபத்தான காரணம் இருப்பதாகக் கொள்ளலாம்.

திங்கள், 15 செப்டம்பர், 2014

12 முக்கிய உறுப்புகளில் தேவைக்கு குறைவாகவோ , அதிகமாகவோ சக்தி பெறப்பட்டால் உடலில் தோன்றும் நோயின் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

இருதயம் ( Heart) 

படபடப்பு, கைகால்களில் தளர்ச்சி, சூடான உள்ளங்கைகள் , மூக்கில் வீக்கம், தூக்கமின்மை, அதிக வியர்வை, சிவந்த தோற்றம்.

சிறுகுடல் ( Small Intestine)

தலைவலி, கால்களில் ரத்தஓட்ட குறைவு, வயிறு பெருத்தல், மலச்சிக்கல், அஜீரணம், காதில் இரைச்சல், எப்போதும் குளிர்வது போன்று இருத்தல்.
இதயஉறை (Pericardium)
படபடப்பு, குளிர்ந்த வியர்வை மிக்க கைகள், ஞாபகமறதி, உயரமாக இருப்பவற்றை 
பார்த்து பயம், அடிக்கடி கனவு காணுதல், தூக்கமின்மை, இதயவலி. 

மூவெப்பமண்டலம் (Triple warmer)

காதில் இரைச்சல், காது மந்தம், மயக்கம், செரிமானமின்மை, மூச்சு கோளாறு, 
சிறுநீர் தொல்லைகள், எப்போதும் முன் எச்சரிகையாக செயல்படுவது போன்று 
எண்ணம். 

மண்ணீரல் (Spleen)

வயிற்றுப்போக்கு, மாதவிடாய் 
குறைபாடுகள், நீர்க்கோவை, அதிக எடை, இனிப்பின் மீது ஆர்வம், பாதங்களில் 
குளிர்ச்சி, அஜீரண கோளாறு,தொடர்ந்து மயக்க உணர்வு.

இரைப்பை (Stomach)

வாயில் கெட்ட நீர் ஊறுதல், உதடுகளின் வறட்சி, மார்பக அழற்சி, உணவின்மீது 
அதிக நாட்டம் (அ) உணவு உண்ண இயலாமை, கைகால் வீக்கம், அடிவயறு உப்பசம், 
மஞ்சளான தோற்றம்,

நுரையீரல் (Lungs) 

தோள்பட்டைவலி, மூச்சுவாங்குதல், சளி, இருமல், கைகால் சில்லிடுதல், தோலில் வறட்சி, சக்தியின்மை, நடுக்கம், அசதி, சூடான உள்ளங்கைகள். 

பெருங்குடல் (Large Intestine)

தோள்பட்டை சரிவு, மலசிக்கல், வயிற்றுப்போக்கு, நமைச்சல், தலைவலி, பல்வலி, தொண்டைபுண், சீதளம், அடிக்கடி சளி பிடித்தல்.

சிறுநீரகங்கள் (Kidney)

மூச்சுத்தொல்லைகள், தொண்டைவீக்கம், மூட்டுவலிகள், பாலியல் தொல்லைகள், அசதி, களைப்பு, தளர்ச்சி, மனக்கவலை, இரவில் வியர்த்தல். 

சிறுநீர்ப்பை (Urinary Bladder)

தலைவலி, கழுத்து விரைப்பு, முதுகுவலி, நடுக்கம், கவலை, ஆவல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், கொட்டாவி, கை நடுக்கம், 

கல்லீரல் (Lever)

பசியின்மை, எரிச்சல், கோபம், கண்புரை, கால்கள் வீக்கம், கெட்ட 
நாற்றத்துடன் சிறுநீர் போதல், வயிறு உப்பசம், கல்லீரல் அமைந்துள்ள வலது 
வயிறு பாகத்தில் வலி.

பித்தப்பை (Gall Bladder)

தலைவலி, 
கோபம், ஒவ்வாமை (அலர்ஜி ), கண்குறைபாடுகள், உணவு ஏற்காமை, வயிற்றுபோக்கு (அ
) மலச்சிக்கல், லேசாக அடிபட்டால் கூட சிவந்து போதல்.

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

கொழுப்புசத்து பற்றி தெரிந்துகொள்வோம்

“உணவே மருந்து, மருந்தே உணவு’. உண்ணும் உணவு சீராக அமைந்தால், அந்த உணவே நோயைப் போக்கும் மருந்தாகவும் அமையும். உயிரை வளர்க்கும் உணவுதான், அளவுக்கு மீறினால் நம் உயிரையும் பறிக்கின்றது.
நம் உடலுக்கு சக்தியைக் கொடுக்கும் உணவுகளை இரண்டாகப் பிரிக்கலாம்.
1. கண்களுக்குப் புலனாகும் உணவு வகைகள் -& Macro Nutrients
2. கண்களுக்குப் புலனாகாத நுண்ணிய உணவு வகைகள் & Micro Nutritients்
கண்களுக்கும் புலனாகும் உணவு வகைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை
1. மாவுச்சத்து (Carbohydrates)
2. புரதச் சத்து (Proteins)
3. கொழுப்புச் சத்து (Fat)
கண்களுக்குப் புலனாகாத நுண்ணிய உணவு வகைகள் இரண்டு வகைப்படும்.
1. வைட்டமின்கள் (Vitamins)
2. தாதுப் பொருட்கள் (Minerals)
கண்களுக்குப் புலனாகும் உணவு வகைகளின் ஒன்றான கொழுப்புசத்து பற்றி தெரிந்துகொள்வோம்.
இந்த கொழுப்புச் சத்து மூன்று வகைப்படும்.
1. பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid -SFA)
2. அபூரிதக் கொழுப்பு
(Unsaturated fatty acid -UFA)
3. டிரான்ஸ் கொழுப்பு (Trans fatty acid -TFA)
இந்த கொழுப்புச் சத்துக்கள் ரத்தத்தில் மிருதுவாகவும், மெழுகுத் தன்மையுடனும் நகர்ந்து கொண்டிருக்கக்கூடியது. சீரான கொழுப்பின் அளவு, நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது. இவை மிகவும் சக்தி வாய்ந்த எரிபொருளாகவும் செயல் படுகிறது.
நம் உடலுக்குத் தேவையான மொத்த சக்தியில் 25% மட்டுமே கொழுப்பு உணவிலிருந்து கிடைக்க வேண்டும். மீதமுள்ள 75% ல் 60% மாவு உணவிலிருந்தும், 15% புரத உணவிலிருந்தும் பெறப்பட வேண்டும்.
ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் சக்தியின் அளவு 2000 kcal. இதில்  500 kcal மட்டுமே கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கலாம். 1 கிராம் கொழுப்பு உணவு 9 kcalசக்தியைத் தருகிறது. அப்படியென்றால், 50 கிராம் கொழுப்பு உணவு நமக்கு கிட்டத்தட்ட 500 kcal சக்தியைக் கொடுக்கும். இந்த 50 கிராம் கொழுப்பு உணவை மட்டுமே ஒரு நாளைக்கு ஒருவர் சாப்பிடலாம். ஆனால் நோயாளிகள் குறைத்து சாப்பிட வேண்டும். இதய நோயாளிகள் 5% மட்டுமே கொழுப்பு உணவு சாப்பிடலாம்.
கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol
80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

கொலஸ்ட்ராலின் தன்மைகள்
கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.
கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.
நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.

எது நல்ல கொலஸ்ட்ரால்?
LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் ஏஈஃ என்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த LDL  – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு  Atherosclerosis  என்று பெயர். ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)
கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.
Total Cholesterol <—>200 mgm%
மொத்த கொலஸ்ட்டிரால்
LDL Cholesterol <—>100 mgm%
குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
VLDLCholesterol <—>30 mgm%
மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
Triglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள்
HDLP Cholesterol <50 mgm % மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்
மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 ட்ஞ்ட்% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.
குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு எனப்படும் குtணூணிடுஞு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் கூஎஃ ன் அளவு
150 mgm்% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35ட்ஞ்ட்% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 ட்ஞ்ட்% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.
கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்
பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)
எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.
ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.
இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து
100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.
கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.
பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.
அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.
ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.
இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.
ஒமேகா 3 உள்ள உணவுகள்
மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்
ஒமேகா 6 உள்ள உணவுகள்
சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.
எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?
நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.
கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்.
· சீரான உடற்பயிற்சி
· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
· மது அருந்துவதைத் தவிர்ப்பது
· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .
· யோகாசன பயிற்சி செய்வது,
· தியானப் பயிற்சி செய்வது .

வாழையின் மகத்துவம்

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம்.
வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.
வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.
அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு `பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

உயிர் அணுவைப் பெருக்கும் மெனு!


மாதுளை வெல்கம் ட்ரிங்க், முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளைச் சம்பா சோற்றுடன் முருங்கைக் காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய்ப் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு… முடிவில் தாம்பூலம்… இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.
நாட்டுக்கோழியும் சிவப்பு இறைச்சிகளும் காமம் பெருக்கும் காம்போ உணவுகள்.
  உயிர் அணு உற்பத்தியில் துத்தநாகச் சத்தின் (zinc) பங்கு அதிகம். துத்தநாகச் சத்தை விலை உயர்ந்த பாதாம் மூலம்தான் பெற வேண்டும் என்பது இல்லை. திணையும் கம்பும் நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசியைவிட, துத்தநாகச் சத்து அதிகம் உள்ள தானியங்கள்.
மாப்பிள்ளைச் சம்பா சிவப்பு அரிசி அவல், முளைகட்டிய பாசிப் பயறு, நாட்டு வெல்லம், தேங்காய்த் துருவல் கலந்த காலை உணவுடன் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிடலாம்.
சித்த மருத்துவம் ‘காமம் பெருக்கிக் கீரைகள்’ எனப் பட்டியலிட்டுச் சொன்ன முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை, பருப்பும் தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது விந்து அணுக்களின் எண்ணிக்கையை நிச்சயம் உயர்த்தும்.
5-6 முருங்கைப் பூக்களுடன், பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து சாப்பிடுவது, உயிர் அணுக்கள் உற்பத்தியையும் இயக்கத்தையும் சேர்த்துப் பெருக்கும்.
‘மரத்தில் காய்க்கும் வயாகரா’ எனச் சீனர்கள் மாதுளையையும், ஐரோப்பியர்கள் ஸ்ட்ராபெர்ரியையும், நம்மவர்கள் வாழைப்பழத்தையும் நெடுங்காலமாகச் சொல்லிவந்துள்ளனர். பிற்காலத்தில் சோதித்ததில், செரடோனின் சுரக்கும் வாழைப்பழம், ஃபோலிக் அமிலம்கொண்ட ஸ்ட்ராபெர்ரி, ஃபீனால்கள்  நிறைந்த மாதுளைகள் காமம் கக்கும் கனிகள் என்பது புரிந்தது!
கவனம்!
  நீச்சல் பயிற்சி, ஆண்மையைப் பெருக்கும் உடற்பயிற்சி.
‘குடி, குடியைக் கெடுக்கும்; குழந்தை யின்மையைக் கொடுக்கும்’ என ஷேக்ஸ்பியர் முதல் மாத்ருபூதம் வரை சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
உடல் எடை அதிகரிப்பில் புதைந்துபோகும் ஆண் உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக்குறைவும் (Erectile Dysfunction) சமீபத்தில் ஆண்களுக்கான பெரும் நோய்ச் சிக்கல்கள். இரண்டுமே முறையான சிகிச்சையால் சரிசெய்யலாம்.
நல்லெண்ணெய்க் குளியல், பித்தத்தைச் சீராக்கி விந்து அணுக்களைப் பெருக்கும் பாரம்பர்ய உத்தி!

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்

ஆதிகாலம் தொட்டே மனிதன் சாப்பிட்டு பழக்கப்பட்ட பழம் அத்தி. இது எல்லா பருவத்திலும் கிடைப்பது இல்லை. ஆனால் உலர் பழமாக எல்லா பருவத்திலும் கிடைக்கிறது. பழங்கால கிரேக்க இலக்கியத்தில் அத்திப்பழத்தை குழந்தைப் பேறுக்கும், காதலுக்கும் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக அத்திப்பழம் குழந்தைப்பேறுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
சத்துக்கள்  பலன்கள்: வெறும் மூன்று உலர் அத்தியில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நாள் தேவையில் 20 சதவிகிதம். அத்திப்பழம் ஒரு மிகச்சிறந்த மலமிளக்கியாகவும், செரிமானப் பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறது. இதில் கலோரியின் அளவு மிகமிகக் குறைவு. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த சிற்றுண்டியாக இது இருக்கிறது. இதில் துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் மக்னீசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்த உதவுகின்றன.

p95
உணவில் அதிக அளவில் உப்பு சேர்ப்பவர்களுக்கு நல்ல செய்தி. உடலில் சோடியம் அதிகரிக்கும்போது அது சோடியம்  பொட்டாசியம் சம நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். அப்படி அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் அத்திக்கு உண்டு. உயர் ரத்த அழுத்தப் பாதிப்பில் இருந்து  காக்கிறது.
ரத்த குழாய்களைப் பாதிக்கும் ஃப்ரீ ராடிக்கிள்ஸை வெளியேற்றும் திறன் உலர் அத்திக்கு உண்டு. இதனால் ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் காக்கப்படுவதால் இதய நோய்களுக்கான வாய்ப்பு குறைகிறது. மேலும் டிரைகிளசரைட் என்ற கொழுப்பு வகை குறையவும் இது உதவுகிறது.
டி.என்.ஏ பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதில் ஓரளவுக்கு கால்சியம் உள்ளதால், எலும்பின் அடர்த்தியைப் பாதுகாத்து உறுதிப்படுத்துகிறது.
தேவை: தினமும் 3 அத்திப்பழம்  சாப்பிடலாம். இதில், நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இருப்பினும் இதில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால்,  சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துக்கொள்வதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்ற பிறகே முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.

தயிர்

தயிர்… உயிர் காக்கும் ஆரோக்கியக் கூறுகள் அடங்கிய உணவுப்பொருள். புரோபயாடிக் நிறைந்த தயிரில் துத்தநாகம், வைட்டமின் இ, பாஸ்பரஸ் ஆகியவை இருக்கின்றன.
உள்ளே…
கெட்டித் தயிரைச் சாப்பிட்டால் ஆயுள்  கெட்டிதான். எப்படி என்கிறீர்களா?
 சீக்கிரம் செரிமானம் ஆகும்.
 நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். 
 ஊட்டச்சத்துக்களை உடல் கிரகிக்க உதவும்.
 ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாக்கும்.
 எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கவும் உதவும்.
வெளியே…
தயிருடன் மஞ்சள், சந்தனம், வெந்தயத்தூள் கலந்து சருமத்தில் பூசும்போது…
 முகத்தில் படிந்த கருமை போயே போச்சு!
 தழும்புகள், முகப்பருக்களுக்கு டாட்டா! 
 எப்போதும் முகத்தில் எண்ணெய்  வழிகிறது என்று வருத்தப்படுபவர்கள் தயிருடன் பூசு மஞ்சள்தூளையும் சந்தனத்தையும் கலந்து பூசி மென்மையாக மசாஜ் செய்துவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள். அப்புறம் ‘அட, எண்ணெயெல்லாம் எங்கே போச்சு’ என்று ஆச்சர்யப்படுவீர்கள்.்.
தயிரைத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால்…
 பொடுகு நீங்கும். 
 முடியில் பளபளப்பு கூடும். 
 மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், நான்கு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி பஞ்சு மாதிரி மென்மையடையும்.
 அரை கப் தயிருடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பாதாம் எண்ணெய், இரண்டு முட்டையை நன்கு அடித்துச் சேர்த்துத் தலையில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் முடி பொலிவாக இருக்கும்.
 முடி உதிர்வதுதான் உங்களுக்கு முக்கியப் பிரச்னையா? கவலையை விடுங்க பாஸ்! ஒரு கப் தயிருடன், சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்துத் தலையில் பூசி, 45 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிங்க. இனி உங்க முடி ‘நம்பிக் கட்டுற கம்பி’ மாதிரி செம ஸ்ட்ராங்கா இருக்கும்.