ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஆண்மைக் குறைவு, தாது விருந்தி!! அரும்மருந்து!!---மருத்துவ டிப்ஸ்,


ஆண்மைக் குறைவு: 

* மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும். 

* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். 

* அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். 

* அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். 

* படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும். தாது விருந்தி: 

* முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். 

* நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

* கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம். 

* அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். 

* வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

வெள்ளி, 17 அக்டோபர், 2014

சிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்!

நமது அடிவயிற்றின் உட்பகுதியிலுள்ள சிறுநீர்ப்பையில்தான் இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் வடியும் சிறுநீர், தேங்க ஆரம்பிக்கிறது. சிறுநீரைத் தேக்கி வைக்கும் இந்த சிறுநீர்ப்பை, அடிவயிற்றினுள் தொப்புளுக்குக் கீழ், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் என்கிற சுரப்பியின் மேல்பகுதியில் அமைந்திருக்கிறது.
இதே போல் பெண்களுக்கு கர்ப்பப் பைக்கு கீழே அமைந்திருக்கிறது. அடி வயிற்றில் கர்ப்பப்பை கொஞ்சம் இடத்தை அடைத்துக் கொள்வதால், பெண்களுக்கு சிறுநீர்ப்பை சற்று சிறிதாக இருக்கும். சிறிய குழந்தைகளுக்கு, சிறுநீர்ப்பை வயிற்றில் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கும்.
அவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பியும், கர்ப்பப்பையும் அந்த வயதில் வளராததே இதற்குக் காரணம். சிறுநீரை, சிறுநீர்ப் பையிலிருந்து வெளியே அனுப்புவதற்கு பெயர்தான் `சிறுநீர் கழித்தல்’ என்று நாம் சொல்வதுண்டு. இதை உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு மொழிகளில், பலவிதமாக அழைப்பதுண்டு.
அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆரோக்கியமாக இருக்கும் ஒரு ஆணுக்கு, சிறுநீர் கழித்தல் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தக் கட்டுப்பாடு கூட ஒரு அளவுக்குத்தான். அளவை மீறிவிட்டால், அப்புறம் கட்டுப்பாட்டையும் மீறிவிடும். அப்புறம் அந்த இடம் அசிங்கம்தான். இதைத்தான் கிராமங்களில், “சிந்தனையை அடக்கலாம் ஆனால் சிறுநீரை அடக்கமுடியாது” என்பார்கள்.
பிறந்த குழந்தைகள், மிகவும் வயதானவர்கள், விபத்துகளில் நரம்பு பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கெல்லாம் சிறுநீர் கழித்தல் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்காது. அதனால்தான் சிறிய குழந்தைகள், அடக்க முடியாமல், அடக்கத் தெரியாமல் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சிறுநீர் கழித்து விடுகிறார்கள்.
சிறுநீர் கழித்தல் என்பது மிகச் சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயமாக நாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படியல்ல. இது ஒரு சாதாரண விஷயமுமல்ல. ஒரு விளையாட்டான விஷயமுமல்ல. பெருமூளையிலுள்ள நரம்பு மண்டலப் பகுதிகளின் செயல்பாட்டில் தான் சிறுநீர் கழித்தலே நடைபெறுகிறது. நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைவூட்டுவதே இந்த மூளையிலிருந்து வரும் சமிக்கைகள்தான்.
மூளைதான் இதை கண்ட்ரோல் பண்ணுகிறது. மிகச்சிறிய குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் சிறுநீர் கழிக்கலாம், இந்த நேரத்தில் சிறுநீர் கழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு வருவதற்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று வயது வரை ஆகும். ஏனென்றால், அந்த வயதில்தான் மத்திய நரம்பு மண்டலத்தில், சிறுநீரை கட்டுப்பாட்டில் வைப்பதற்குண்டான பகுதி வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது.
எனவே மிகச்சிறிய குழந்தைகளை திட்டுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. வயது வந்த ஆண் மற்றும் பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் சிறுநீர் கொள்ளும் அளவு சுமார் 600 மில்லி லிட்டர் வரை பிடிக்கும். இந்த கொள்ளளவு ஆளுக்கு ஆள், கொஞ்சம் வேறுபடும். சிறுநீர்ப்பை நீளத்தில் ஐந்து அங்குலமும், அகலத்தில் மூன்று அங்குலமும் விரிந்து கொடுக்கும் தன்மை உடையது.
மேலிருந்து சிறுநீர் வடிய, வடிய, சிறுநீர்ப்பைகளின் தளச்சுவர்கள் மெல்லியதாகி, கொஞ்சம், கொஞ்சமாக விரிந்து கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் சுமார் 150 முதல் 200மில்லி லிட்டர் சிறுநீர் நிரம்பிவிட்டாலே, சிறுநீர் கழித்தாக வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்துவிடும்.
சுமார் 600 லிட்டர் வரை அடக்கும் சக்தி இருந்தாலும், சுமார் 200 மில்லி லிட்டர் சிறுநீர் சேர்ந்துவிட்டாலே நரம்பு மண்டலத்தின் மூலமாக மூளைக்கு செய்தி போய், மூளையிலிருந்து சிக்னல் கிடைத்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிடும். ஒரு பையில் தண்ணீர் அதிகமாக இருந்தால், அழுத்தமும் அதிகமாக இருக்கும் என்று நாம் நினைப்போம்.
சிறுநீர்பையில் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வடிந்து சேர ஆரம்பிக்கும்போது, எல்லோரும் நினைப்பது போல் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகமாக இருக்காது. மாறாக அழுத்தம் குறைவாகவே இருக்கும். சிலருக்கு சிறுநீர் கழிப்பது என்பதே ஒரு மிகப்பெரிய சந்தோஷம். வயிறு முழுவதும் காலியானது போல் தோன்றும்.
மிகப்பெரிய விடுதலை கிடைத்ததுபோல் மனதில் தோன்றும். இது இயற்கையே. சிறுநீர் கழிக்காமல், அப்படியே அடக்கி வைத்துக்கொண்டிருந்தால், டென்ஷன் அதிகமாகும். எதிலும் ஈடுபாடு இருக்காது. இதற்கு இடங்கொடுக்காமல் உடனே சிறுநீர் கழித்து விடுவது நல்லது.
எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அவ்வளவும் சிறுநீராக வெளியே வந்துவிடும் என்று சிலர் நினைப்பதுண்டு. இது சரியல்ல. ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு சுமார் நான்கு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். இது இயற்கை. சர்க்கரை வியாதிக்காரர்கள் நான்கு முறைக்கு மேல், அடிக்கடி பாத்ரூம் போய் வந்து கொண்டிருப்பார்கள்.
இது நோயினால் ஏற்படும் மாற்றம்.   ஒரு நாளைக்கு சுமார். 1.2 லிட்டரிலிருந்து 1.8 லிட்டர் வரை, சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் வடிந்து, சிறுநீர்ப்பை மூலமாக வெளியேறுகிறது. மழைக்காலங்களில் அதிக தடவை சிறுநீர் கழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. ஆண், பெண் இருவருமே தண்ணீர் நிறைய குடித்தால், அடிக்கடி சிறுநீர் போகவேண்டும் என்பதற்கு பயந்து, அதிக தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.
இது தவறு. எனக்குத் தெரிந்த ஒருவர், சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போதும் ஒரு மடக்கு தண்ணீர் கூட குடிக்கமாட்டார், “முதலில் தண்ணீர் குடித்து விட்டால், அதிகமாக சாப்பிட முடியாதாம். அதனால் சாப்பிட்டு முடித்த பின்பு தான் தண்ணீர் குடிப்பேன்” என்றார். இவர் செய்வதும் விநோதமே.
அதிகமாக சாப்பிட முடியாது என்பதால், தண்ணீர் குடிக்க பயப்படுகிறார். எது எப்படியோ, ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக சுமார் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. ஒருவருக்கு தண்ணீரின் தேவை அவரது உடல் எடையில் 4 சதவீதம் ஆகும். உதாரணத்திற்கு (70 கிலோ ல 4 % = 2.80 லிட்டர்) அதாவது 70 கிலோ எடையுள்ள அவர் சுமார் 2.8 லிட்டர் தண்ணீர் குடித்தாக வேண்டும்.

புதன், 15 அக்டோபர், 2014

குடற்புழுக்கள் .....

                        இயற்கை  மனிதனுக்கு எந்த அளவு ஆரோக்கியம் தரும் பொருட்களை கொடுத்துள்ளதோ, அதை சீராக பயன்படுத்தி நலம் பெற நினைக்காத மனிதன்  அதை தீமையாக்கி தன் ஆரோக்கியத்தைக் கெடுத்து வாழ்கிறான்.

உணவு, பாதுகாப்பற்ற குடிநீர், மாசடைந்த காற்று இவற்றால் மனிதனுக்கு பலவிதமான நோய்கள் உண்டாகின்றன.  ஒரு நாட்டின் பொருளாதார நிலை, மக்களின் தனிப்பட்ட வாழ்வாதார சூழ்நிலை இவைகளைப் பொறுத்தே உடல்நிலை அமைகிறது.

மனிதனின் முறையற்ற உணவுப் பழக்கத் தாலும், உணவாலும், உடல் நோய்க்கு ஆளாக நேரிடுகிறது.  இந்த வகையில் உணவின் மூலம் உடலுக்கு சென்று பல்கிப் பெருகி உடலை பாழ்படுத்தும் சிறுகுடற் புழுக்களும் உண்டு.  இவை உணவின் மூலம் உடலுக்குச் செல்வதோடு, சில சமயங்களில் சருமத்தின் மூலமும், நீரின் மூலமும் செல்கிறது.  இவ்வாறு உடலுக்குச் சென்று உடலில் குடித்தனம் நடத்தும் புழுக்கள் நாற்பது வகைகள் உள்ளன.  அவற்றில் ஒன்றுதான் சிறுகுடற் புழு.
Ascaris lumbri coides என்னும் சிறுகுடற்புழு எல்லா நாட்டு மக்களின் உடலிலும் காணப்படுகிறது.  குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், சீனா போன்ற நாடுகளிலும், பசிபிக் தீவு, பகுதிகளில் வாழும் மக்களிடம் அதிகம் காணப்படுகிறது.

அசுத்தமான பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவ தாலும், சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவதாலும், அசுத்தம் நிறைந்த பகுதிகளில் குடியிருப்பதாலும், அசுத்தகாற்றை சுவாசிப்பதாலும், இவை மனித உடலுக்குள் செல்கின்றன.

சுகாதாரமற்ற எண்ணெய் பொருள்கள் ஒரு தடவை சமைத்த எண்ணெயை திரும்ப சமைப்பது, சுகாதாரமற்ற தண்ணீர் அருந்துவது, பல நாட்களுக்கு முன்பு சமைத்த பொருட்களை மீண்டும் மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது போன்ற சுகாதாரக் கேடுகளால்  வயிறு  செரிமான சக்தி இழந்துகாணப்படும்.  இச்சமயத்தில் சிறுகுடல்புழு முட்டையானது  வயிற்றுக்குள் சென்று வளர ஏதுவாகிறது.

சிறு குடற்புழு உடலிலே வளர்ச்சியடைந்து விடுகிறது.  இந்த வகை சிறுகுடற்புழுக்களை விருந்தாளியாக ஏற்றுக்கொள்வது மனிதன் மட்டும் தான்.

மனிதனின் உணவுக் குழாய் வழியாகச் செல்லும் இந்தப் புழு முட்டையானது வயிற்றுப் பகுதிக்கு சென்றவுடன் அங்குள்ள செரிமான திரவத்தால்  முட்டைகள் பொரிக்கப்பட்டு சிறு புழுக்களாக வெளியேறி சிறு குடலின் மேற்பகுதிக்குச் செல்கின்றன.

இத்தகைய சிறு புழுவானது (Larvae) சிறுகுடலின் மெல்லிய சவ்வுகளைத் துளைத்துக்கொண்டு, கல்லீரலுக்குச் செல்கிறது.  இது இரத்த நாளங்கள் வழியாக நடைபெறுகிறது.  கல்லீரலில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் விருந்தாளியாகத் தங்கவிட்டு அதே இரத்தக்குழாய் வழியாக இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து நுரையீரலை அடைகிறது.  பிறகு நுரையீரலிலிருந்து மூச்சுக்குழல் வழியாக முன்பக்கம் உந்தித் தள்ளி உணவுக் குழலுக்குள் சென்று இரைப்பையைத் தாண்டி, பழையபடி சிறுகுடலின் மேற்பகுதிக்குச் சென்றுவிடுகிறது.  இந்த சிறிய புழு பெரிய புழுவாக மாற ஆறு வாரங்கள் முதல் பத்து வாரங்கள் ஆகும்.

நன்கு வளர்ச்சியடைந்த புழு, மண் புழுவைப் போன்று உருவத்தைப் பெற்று நீண்ட உருண்டை வடிவமாக காணப்படும்.  இதன் இரு முனைப் பகுதிகளும் குவிந்து காணப்படும்.

சிறுகுடற் புழுக்களால் உண்டாகும் நோய்கள்

சிறு குடல் புழுக்கள் அதிகத் தொல்லை கொடுப்பவை.  இதனால் சளி, மேல்மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும்.  உடலெங்கும் நமைச்சல் உண்டாகும்.  இதனால் ஈசனோபீலியா என்னும் கிருமி ரத்தத்தில் பரவு காரணமாகிறது.

நன்கு வளர்ந்த புழுவினால் டைபாய்டு போன்ற காய்ச்சல், உடல் நமைச்சல், முக வீக்கம், கண் நோய் போன்றவை உண்டாகும்.  மேலும் இந்தப் புழுக்களால் குடல்வாத நோய், கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு.

சிறு குழந்தைகளுக்கு நெஞ்சுப் பகுதி சதைப்பற்று இன்றி கூடுபோல காணப்படும். 

குழந்தைகள் தூங்கும்போது பல் கடிக்கும்.  அரைக்கண் கொண்டு தூங்கும்.  எந்நேரமும் உதட்டைக் கடித்துக் கொண்டே இருக்கும்

குழந்தைகள் உணங்கிப்போய் காணப்படும். முகத்தில் இலேசான வெள்ளைத் தழும்புகள் தோன்றும். 

பள்ளி செல்லும் குழந்தைகளின் கால் மூட்டுகளில் வலி உண்டாகும். 

உடல்கூறுகளுக்குத் தகுந்தவாறு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும், காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காமல்  மாலையில்  மட்டுமே மலம் கழிக்கும். 

குழந்தைகள் காலை எழுந்தவுடன் மலம் கழிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும்.   ஒருசில குழந்தைகள் காலை உணவுக்குப்பின் மலம் கழிக்கும்.  அல்லது பள்ளிக்குச் சென்றபின் மலம்கழிக்கும்.  இதற்கு சிறுகுடற்புழுக்கள்தான் முக்கிய காரணம்.

ஒரு சில குழந்தைகளுக்கு மலத்துவாரத்தில் அரிப்பு ஏற்படும்.  குழந்தைகள் சொல்லத் தெரியாமல் அழுதுகொண்டே இருக்கும்.

சிறுகுழந்தைகளுக்கு சிறுகுடற்புழுக்களால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவை கண்களைத் தாக்கி கண்களுக்கு கண்ணாடி போடும் சூழ்நிலை உருவாகும்.  கல்லீரல் பாதித்தால் கண்பார்வைக் கெடும்.  இந்த சிறு குடற்புழுக்கள் பற்றி அதிகம் கண்டறிய முடியாது. இதனால் வரும் நோய்களை குணப் படுத்தினாலும், மீண்டும் மற்றொரு நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.  இந்த புழுக்களை முழுவதுமாக அழிப்பதுதான் சிறந்த வழியாகும்.

சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்  சூப் கொடுப்பது நல்லது.

சின்ன வெங்காயம்        -2

நல்ல மிளகு                      - 2

சீரகம்                                     - 1/2 ஸ்பூன்

இஞ்சி                                    - சிறிய துண்டு

தேவையான அளவு     -  கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)

பூண்டு                                   - 1 பல் 

சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.

வெள்ளி, 10 அக்டோபர், 2014

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? 

அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…? வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக் கூட தூக்கமே வராது. 

ஆனா இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிஞ்சிக்கலாம்

செர்ரி பழங்கள்:
நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.


இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள். 

அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்:
இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு. 


அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTPஅப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்:
நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.



மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.


ஓட் மீல்:
ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட் மீல் சொல்லுவாங்க. 
FILE

அதாவது மேலே சொன்ன டோஸ்‌ட் மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டும். மூளை ரசாயனங்கள் சுரந்து கடைசியா… “உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே… அப்படீன்னு நாம தூங்கிடலாம்”

கதகதப்பான பால்:
உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான்.

மருத்துவ டிப்ஸ்

மருத்துவ டிப்ஸ்
கை-கால் வீக்கம்: ஆவாரம்பட்டை, சுக்கு, ஆகியவற்றை சம அளவு எடுத்து 400மி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

வெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப்பழத்து உள்தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணிரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் கைகால் வீக்கம், உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.
 
பொன்மேனி தரும் குப்பைமேனி: குப்பை மேனி இலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்து வர குணமாகும்.
 
தேள்கடியை விரட்டும் குடியோட்டிப்பூண்டு: பிரம்ம தண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். வயிற்றுவலி போக்கும் நறுவி நறுவிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப்பால் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
 
காற்று சுத்திகரிப்பான் சர்க்கரை: சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக் காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
 
தலைபாரம் நீக்கும் கிராம்பு: கிராம்பை நீர்விட்டு மை போல் அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம், நீரேற்றம் குணமாகும்.
 
காயத்துக்கு காட்டாமணக்கு: காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமணக்கு பாலைப்பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
 
உப்பலுக்கு உப்பிலாங்கொடி: மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணப்பட்டால், உப்பிலாங்கொடியை அரைஞானில் கட்டத் தீரும்.
 
மயக்கத்துக்கு ஏலம்: ஏலக்காய் 1 பங்கு, யக்கம் நீங்கும். பனைவெல்லம் 1/2 பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
 
படர் தாமரைக்கு: அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச நோய் தீரும்.
 
பல் ஈறு, வீக்கம் வக்கு: கிராம்பு, கற்பூரம், ஒமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து கிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
 
மலச்சிக்கலுக்கு: பிஞ்சுகடுக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், எடுத்து தட்டி 1 டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும் பொழுது குடித்துவிட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

சனி, 4 அக்டோபர், 2014

கை, கால் மூட்டு வலி குறைய




லண்டன்: "கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும்' என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, லண்டனில் வெளியாகும், "டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது: "அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு விரிவடைந்து எதிர்
ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன' என்பது பற்றி, மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். எலி ஒன்றின் உடலில், அடிபட்ட இடத்தில், உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து, உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால், வீக்கம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின. உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு, சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன. இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட, இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். கை, கால் மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால், வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது, வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது. உப்பு நீரில் ஊற வைத்த துணியால், பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல், போன்ற எல்லா முறைகளும் வலி, வீக்கத்தைக் குறைக்கின்றன.

கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர், இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று, குளித்து நிவாரணம் பெறுவதை, பல ஆண்டுகளாக, நாம் கண்டு வருகிறோம். உண்மையில், வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது. மருத்துவத்தில் பயன்படும், "ஹைபோடோனிக்' கரைசலில், மிகவும் குறைந்தளவு உப்பே உள்ளது. இக்கரைசலை அடிபட்ட இடத்தில் பயன்படுத்தும் போது, கடுமையான எரிச்சல் ஏற்படுவதைக் கண்டறிந்தோம். அதே சமயம், அடர்த்தியான உப்பைக் கொண்ட, "ஹைபர்டோனிக்' கரைசல், எரிச்சல் ஏற்படாமல் மட்டுப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. கடுமையான மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இதே கரைசலை பயன்படுத்தலாம். இவ்வாறு ஆய்வு முடிவுகள், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, ஆறுதல் அளிக்கும் தீர்வை வெளிப்படுத்தி இருக்கின்றன.

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..



இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.