வியாழன், 18 ஜூன், 2015

புருவ முடி திருத்துதல் (த்ரெட்டிங்) (THREADING)


இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.எனக்குத் தெரிந்து ஸ்டிக்கர் பொட்டால் வரும் கேடுகள் பற்றி என்னதான் பெண்களிடம் எடுத்துச் சொன்னாலும் குங்குமம் அழிந்துவிடுகிறது, என்று கூறி   ஸ்டிக்கர் பொட்டை விட மறுக்கிறார்கள்.பெண்ணைப் பேதை எனச் சொன்னதற்காக,தன்னுயிரை தானே அழிக்கும் அளவு இவ்வளவு பேதமையாகவா இருப்பது????
இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு!!!!
புருவ முடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(THREADING)என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி விளக்க இருக்கிறேன்.புருவ முடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள்.இறப்பு நெருங்கி வரும்போது புருவ முடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும்.உடல் பிராணன் தீர்ந்து போய்விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய்விடுகின்றன.
இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது (த்ரெட்டிங்)(THREADING) ,கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம்,காமபூரி வர்மம்,திலர்த வர்மம் (பொட்டு வர்மம் அல்லது சுடரொளியின் காலம்) , மின் வெட்டி வர்மம் (முன் வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்),மந்திரக் காலம்,  அடக்க வர்மம், நேம வர்மம், பட்சி வர்மம்,கண்ணாடி வர்மம்(மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள  வர்மங்களில் ,   பாதிப்புக்கள் நேர்கின்றன.இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.
இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது.விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டுவிடுகின்றனர்.
இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன.பல ஆங்கில மருத்துவத்துக்கு பிராணன் எங்கே நிலை கொண்டிருக்கிறது. அதை சிதைத்தால் என்ன விளைவுகள் நேரும் என்பது தெரியாது. இதனால் பல ஆங்கில  மருத்துவர்கள் கத்திகளை வைக்கக் கூடாத இடத்தில் வைத்து பலரை பர லோகம் அனுப்பிவிடுகிறார்கள்.
வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின்காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது.மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.
மேலும் எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். இறைவன் உறையும் இடம் இதுவே!!!! இதை உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக்கெண்ணையை(டாபர் நிறுவனம் ஏரண்டத் தைலம் { DABUR ( ERAND THAIL ) என்ற பெயரில் சுத்தமான விளக்கெண்ணெயை சந்தைப்படுத்தி வருகிறார்கள்) கண் புருவங்களில் தீட்டுவதானாலும், கண்ணில் இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து , நீட்டித்து,நல்ல பிராணனும்,நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .
Filed under: மருத்துவம்,வர்ம மருத்துவம்,வர்மம்

நாடித் துடிப்பு

முன்னோர்கள் பயன்படுத்திய முறை



முன்கையில் மணிக்கட்டுக்கு கீழே இரத்தக் குழாயை நமது 3 விரல்களைக் கொண்டு ரத்த துடிப்பை வைத்து நாடியை அறிவது.

அல்லோபதியில் 'இருதய நாடி' மட்டுமே பார்க்கப் படுகிறது. சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இவற்றில் 'வாத, பித்த, கப நாடிகள்' ஆகிய மூன்று பார்க்கப்படுகிறது.

உடலின் உயிர் சக்தி எவ்வளவு என்று நாடியைக் கொண்டு கணிக்கலாம். சித்த வைத்தியத்தில் வாதம், பித்தம், கபம், என்பர். சீனர்கள் இதை சுன், குவான், சி என்பர். மணிக்கட்டை ஒட்டி ஆட்காட்டி விரலும், அதையடுத்த நடுவிரலும், அதையடுத்து மோதிர விரலும் வைக்க வேண்டும்.

ஆள்காட்டி விரல் (சுன்) = வாத நாடி

நடுவிரல் (குவான்) = பித்த நாடி

மோதிரவிரல் (சி) = சிலேத்தும் அல்லது கப நாடி.

கையினால் மெதுவாக நாடியைத் தொடும்போது நாடித்தன்மை வேகமாகத் துடித்தால் அது கபம் சம்மந்தப்பட்ட நோய் (சி-நோய்) என்பர்.

வயதுக்கு ஏற்ற நாடித்துடிப்பு

கருவில் உள்ள குழந்தைக்கு = 150-140
பிறந்த குழந்தைக்கு = 140-130
வருடத்துக்கு பத்து துடிப்பு குறையும்.
3 வருடக் குழந்தைக்கு = 108-90
14 முதல் 21 வயதுவரை = 88 -80
21 முதல் 60 வயதுவரை = 85-80
60 வயதுக்கு மேல் = 80-67

(உடலில் ஒரு டிகிரி வெப்பம் கூடினால் 10 துடிப்பு கூடும்).

செவ்வாய், 9 ஜூன், 2015

நுண்ணறிவு திறன் பாதிக்கின்ற நோய்கள்...

ஒரு மனிதனின் சிறந்த நுண்ணறிவுத் திறனுக்கு(IQ), அவரது கல்வியை விட, நல்ல ஆரோக்கியமே இன்றியமையாதது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்களின் குழு, அமெரிக்கா முழுவதும் பரவலாக, மக்களின் நுண்ணறிவுத் திறனை(IQ) சோதித்ததில், தொற்று நோய்கள், IQ திறன்களை பாதிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கின்றனர்.

மனிதர்கள், குறிப்பாக குழந்தைகள், தங்களின் மூளை இயங்குவதற்கு, அதிகளவிலான ஆற்றலை செலவழிக்கின்றனர். ஆனால், தொற்றுநோய் போன்ற வியாதிகள் தாக்கும்போது, இந்த ஆற்றல் பெருமளவில் உறிஞ்சப்பட்டு, நுண்ணறிவு மேம்பாடு தடைபெறுகிறது.

இந்த தொற்றுநோய்கள்தான், உலகின் பல்வேறு பகுதிகளில், மனிதனின் IQ வேறுபட்டிருப்பதற்கான காரணம். இது எங்கே அதிகமாக இருக்கிறதோ, அங்கே IQ குறைவாகவே இருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு மனிதன் தனது பூர்வீக இருப்பிடத்தை விட்டு, வாழ்வதற்காக வேறிடம் சென்று குடியேறும்போது, புதிய சூழலை பழகிக்கொள்வதற்காக மூளையானது சிறப்பாக தயாராகிறது. இதனால், அத்தகைய மனிதர்களின் IQ அதிகமாக உள்ளன என்று பழைய கருத்தாக்கங்கள் தெரிவித்தன.

ஆனால், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது, அந்தப் பழைய கருத்தாக்கத்தை பொய்யாக்கி விட்டது. ஏனெனில், அமெரிக்காவில் ஒரே நிலையிலுள்ள பல மாநிலங்களில் IQ விகிதங்கள் மாறுபட்டு இருந்தன. IQ விகிதங்கள் குறைந்திருந்த மாநிலங்களில், தொற்றுநோய் பிரச்சினைகள் இருந்தன. IQ விகிதம் அதிகமிருந்த மாநிலங்களில் அந்த பிரச்சினைகள் இல்லை. மற்றபடி, அந்த மக்களுக்கும், மாநிலங்களுக்கும் வித்தியாசங்கள் எதுவுமில்லை.

அதேசமயம், IQ சிக்கலானது, ஜீன் தொடர்புடையதாக இருந்தால், அதை மாற்றுவது கடினம் என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுங்கள்!



பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும் என்பது. பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு நலமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்பு காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், தேவையான நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும். அதைத் தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும்; தாய்ப்பால் சுரப்பும் குறைந்து விடும்.

மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் உண்டா? என்ற சந்தேகமும் ஏற்படலாம். உண்மையில் மார்பகத்தின் அளவிற்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சிறிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரப்பதும், பெரிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு குறைவான அளவில் தாய்ப்பால் சுரப்பதும் நடைமுறையில் நாம் காணும் ஒன்றுதான். மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்தே ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட அந்தப் பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடலாம்.

பிறந்த குழந்தைக்கு முதல் உணவாக டாக்டர்கள் பரிந்துரை செய்வது அதன் தாய்ப்பாலைத்தான். அதில் இல்லாத சத்துக்களே கிடையாது. தாயிடம் இருந்து முதன் முதலாக கிடைக்கும் பாலை சீம்பால் என்கிறார்கள். பிறந்த குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். சீம்பாலில் அந்த சக்தி அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலைக் குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால், எளிதில் அந்தக் குழந்தையை எந்த நோயும் தாக்காது.

நீண்ட நாட்களுக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று ஆராய்ச்சிகளே நிரூபித்துள்ளன. இதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பு பலப்படுகிறது. ஒரு தாயானவள், தனது குழந்தையை மார்போடு அணைத்து பால் ஊட்டும் போது, அந்த குழந்தைக்கு தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கிறது. இவை ஒரு குழந்தையின் நல்ல மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. இவை கிடைக்காத குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறி விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால், இன்றைய அவசர உலகில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவே நேரம் இல்லை. அதனால் விரைவிலேயே புட்டிப்பாலுக்கு தாவி விடுகிறார்கள். அத்துடன், தாய்ப்பால் சுரப்பும் அவர்களிடம் குறைந்து போய் விடுகிறது. அவர்கள், மனதை அமைதியாக வைத்திருந்தால் தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் சுரப்பில் பிரச்சினையே இருக்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தாய்ப்பால் சீராக சுரக்க வேண்டும் என்றால், அந்த தாய்க்கு முதலில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட வேண்டும். அதன்பின், குழந்தையானது மார்புக் காம்பை சுவைக்கும் போது புரோலாக்டின், ஆக்ஸிடோஸின் ஆகிய இரு ஹார்மோன்கள் அவர்களது உடலில் சுரக்கின்றன. புரோலாக்டின் பால் சுரக்க உதவுகிறது. இதே போல், ஆக்ஸிடோஸின் பால் சுரப்பித் திசுக்களில் இருந்து பாலை வெளியில் கொண்டு வருவதற்கு உதவுகிறது.

பிரசவத்திற்கு பிறகு முதல் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பில் வாய் வைத்து சுவைக்க தெரியாத காரணத்தால் அதிகம் பால் சுரப்பதில்லை. அதைத் தவறாக எண்ணக் கூடாது. குழந்தை நன்றாக சுவைக்க ஆரம்பித்தவுடன், தோண்டத் தோண்ட கிணற்றில் சுரக்கும் தண்ணீர் போல் தாய்ப்பாலும் சுரக்க ஆரம்பித்து விடும். வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற அவசரம் - பதட்டம், மன நெருக்கடி, கோபம் போன்றவற்றுக்கு ஒரு தாய் ஆளானால் அவரிடம் தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகும். அதனால் தாய்மார்களே... உங்கள் மனதை எப்போதும் ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள்.

மேலும், ஒவ்வொரு தாய்மார்களும் தாய்ப்பால் கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு சில டிப்ஸ்:

1. தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் முன் குழந்தையை மார்பகத்தோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

2. குழந்தையானது மார்பக காம்பை நன்றாக சப்பிப் பால் குடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பைத் தனது வாயால் சரியாகப் பற்றி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

3. குழந்தை விருப்பப்படும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு நேரம் விரும்பிப் பால் குடிக்கிறதோ, அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.

4. தாய்ப்பால் குடித்த குழந்தைக்குத் தண்ணீர் கொடுக்க முயற்சிக்கக் கூடாது.

5. குழந்தையைப் படுக்க வைக்கும் போது, அதை அரவணைத்தபடி தாயும் படுத்துக் கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 7 ஜூன், 2015

வெரிக்கோஸ் பிரச்னை ஆரஞ்சு தருகிறது தீர்வு

வெரிக்கோஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் கால்களை, பத்திரமாக பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வெரிக்கோஸ் பிரச்னையில், நாளப்புடைப்பு ஆபத்தை தரும். இந்த ஆபத்துக்கு தீர்வு தருவதாக அமைகிறது ஆரஞ்சு பழம். ரத்தக்குழாய்களுக்கு வலுவையும், அவற்றின் வால்வுகளுக்கு பலத்தையும் தருவதுடன், வீக்கத்தையும் ஒவ்வாமையையும் நீக்கி, ரத்த ஓட்டத்தையும் சீர் செய்கிறது ஆரஞ்சு பழம்.
சிட்ரஸ் சைனன்சிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட, ரூட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த பெருஞ்செடிகளின் பழங்கள் உணவாகவும், மருந்தாகவும், வழிபாட்டு மூலிகையாகவும் பயன்படுகின்றன. ஆரஞ்சில் காணப்படும் ஹெஸ்பெரிடின், ரூட்டின், நாரிஜெனின், வைட்டமின் ஏ, தையமின், பைரிடாக்சின், போலேட் போன்ற வைட்டமின் பி, வைட்டமின் சி, கரோட்டின்கள், சேந்தின்கள், பொட்டாசியம், கால்சியம் ஆகியன, சிறந்த பயோபிளேவனாய்டுகளாக செயல்பட்டு, நாள புடைப்புக்கும் அதனால் ஏற்பட்ட புண்களை ஆற்றவும் பெரிதும் உதவுகின்றன.
பயோபிளேவனாய்டுகள் நிறைந்த ஆரஞ்சு பழச்சாறை, தினமும், 60 முதல் 120 மிலி ஒரு வேளை இளஞ்சூடான நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால், நுண்ணிய குழாய்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆரஞ்சு பழச்சாற்றை கடுக்காய்த்தூளுடன் சேர்த்து பிசைந்து, இளந்தீயில் சூடாக்கி, மெழுகுபதம் வந்ததும் வெயிலில் காயவைத்து, பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
2 முதல் 4 கிராம் அளவு வரை இதன் பொடியை மாலையில், 100 மில்லி லிட்டர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், நுண்ணிய ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் ரத்தக்குழாய் அடைப்பு நீங்கும். ஆரஞ்சு பழத்தை சாலட், ஜுஸ், ஜாம், ஜெல்லி அல்லது டீ போன்ற, ஏதேனும் ஒரு வடிவத்தில் உட்கொள்வது நல்லது.
பழங்களில் உள்ள நார்ச்சத்து, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன. குறைந்த அல்லது பூஜ்ஜிய ஆற்றலுடைய நார்ச்சத்துகள், குளூக்கோஸ் கிரகித்தலை தாமதப்படுத்துவதுடன், இன்சுலின் தடையை நீக்கி, செல்களின் இன்சுலின் ஏற்கும் திறனை அதிகரிக்கின்றன.
பெர்ரி, ஆப்பிள், பேரீச்சை, நாவல் போன்றவற்றில் போதுமான அளவு நார்ச்சத்தும், மெக்னீசியமும் உள்ளதால், அன்றாடம் குறைந்தளவில் இதனை உட்கொள்ளலாம். மருந்துக்கடைகளில் கிடைக்கும் சிட்ரஸ் பிளேவனாய்டுகள் சேர்ந்த, சி.வி.பி. கேப்சூல் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், நாளப்புடைப்பு மற்றும் அதனால் தோன்றிய புண்கள் விரைவில் ஆறும்.

இளமை தரும் ஆயில் மசாஜ்!

திருமணம் வரை அழகை பரமரிக்கும் பெண்களால், அதன் பிறகு குழந்தை, குடும்பம் என இவற்றில் கவனம் செல்ல, சரும பாதுகாப்பு என்பது இல்லாமல் போய் விடுகிறது. சருமம் கடினமாக மாறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், இது முதுமையின் அடையாளம்.
இதற்கு, முக்கிய காரணம் உண்ணும் உணவு முறைகள் தான். இப்படி வாழ்க்கை ஒருபுறம் போக, மனதில் இளமையை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொண்டால், இளமையை பாதுகாக்கலாம். என்னென்ன எண்ணெய்களால் மசாஜ் செய்யலாம்?
திராட்சை எண்ணெய்:
இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளது. ஆகவே, சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். அது மட்டுமல்லாமல், திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால், சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால், நாளடைவில் மறைந்து விடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள், இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி, இளமை நிலைக்கும்.
அவகோடா எண்ணெய்: நமது உடலில் சருமம் தளர்ந்து காணப்படுவதற்கு காரணம், உடலில் இருக்கும் கொலாஜெனின் உற்பத்தி குறைவாக இருப்பதுதான். ஆனால் இந்த அவகோடா எண்ணெயில் இருக்கும், ஒமேகா 3 பேட்டி ஆசிட் அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து, தளர்ச்சியை குறைத்து விடும். ஆகவே இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், சருமம் இறுக்கமடைந்து முகத்தில் சருமத்துளைகள் அதிகம் காணப்பட்டாலும், அவற்றை விரைவில் போக்கி விடும்.
நல்லெண்ணெய்: மசாஜ்க்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ், பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால், எந்த ஒரு பிரச்னையும் வராது. இந்த எண்ணெய், சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும்.

ஆலிவ் எண்ணெய்
: எண்ணெய் வகைகளில் மிகச்சிறந்த எண்ணெய், ஆலிவ் எண்ணெய். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஓமேகா பேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக, இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது, எண்ணெயை எக்காரணம் கொண்டும் சூடேற்றக்கூடாது. அவ்வாறு சூடேற்றினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். ஆயில் மஜாஜ் செய்து, உங்கள் இளமையை தக்க வைத்துக்கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. முதுமைக்கு குட்பை சொல்ல, ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்.

மயக்கத்தில் எத்தனை வகை?

மனிதர்களின் வாழ்வில் பலவிதமான மயக்கங்கள் உண்டு. அவை வாழ்வை ரசனையாக்க உதவுகின்றன. அதேவேளையில், நாம் நன்றாக இருக்கும் போதே, திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு, மூளை வேலைநிறுத்தம் செய்ய, தடாலடியாகக் கீழே சாய்ந்து விழும் உடல் சார்ந்த மயக்கத்தை கண்டு அஞ்சுகிறோம்.
உடல் சார்ந்த மயக்கத்தில், ‘குறு மயக்கம், நெடு மயக்கம்’ என, இரு வகை உண்டு. பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களிலும் அலுவலகங்களிலும், திடீரென்று யாராவது மயக்கமடைந்து விழுந்தால், அது, குறு மயக்கம்.
மூளைக்குத் தேவையான ரத்தம் செல்லத் தடை ஏற்பட்டால், குறு மயக்கம் ஏற்படுகிறது. ஏதோ ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம், சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது.
மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. மயங்கித் தரையில் விழுந்ததும், ரத்த ஓட்டம் சரியாகிவிடுகிறது. இதனால் மயக்கமும் சரியாகிவிடுகிறது.
காலை உணவைச் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவது, முதல் காரணம். இதை, ‘பசி மயக்கம்’ என்று கூறுகிறோம். இரவுத் தூக்கம் தேவையான அளவுக்கு இல்லாதது, அடுத்த காரணம். ஒரே இடத்தில், அதிக நேரம் நிற்பது, மூன்றாவது காரணம். குறிப்பாக, வெயிலில் நீண்ட நேரம் நின்றால், மயக்கம் வரும். உடல் சோர்வு, இந்த மயக்கத்தை வரவழைக்கும்.
உணவு புரையேறுதல், தொண்டை அடைத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களும், இந்த வகை மயக்கத்தை ஏற்படுத்தும். மயக்கம் அடைந்தவரை அப்புறப்படுத்தி, உடனடியாக நல்ல காற்றோட்டமான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். ஆடைகளின் இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்திவிட்டு, ஆசுவாச படுத்திவிட்டு மருத்துவரை அணுகுங்கள்.