திங்கள், 27 அக்டோபர், 2014

பளிச்சென முகம் பிரகாசிக்க..

கல்யாணப் பொண்ணு… இப்படியா களையிழந்து இருக்கிறது?’ என்று கேட்கும் அளவுக்கு வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல், வேலைப்பளு, உணவுப் பழக்கங்கள் போன்றவை இன்றைய இளைய தலைமுறையினரைப் பாதிக்கிறது.
சருமத்தை சோர்வில்லாமல் எப்போதும் பொலிவுடன்வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று அழகுக் கலைஞர் சுமதி சக்தியும், சருமப் பராமரிப்புக்கான விஷயங்களை அரசு மருத்துவர் ஹேமானந்தும், இங்கே விரிவாகத் தருகின்றனர்.
உணவு
தினசரி மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதன் மூலமும் உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் தக்கவைக்கலாம். தினமும் மூன்று வெவ்வேறுவிதமான பழங்களை எடுத்துக்கொள்வது சருமத்துக்குத் தேவையான வைட்டமின், நீர்ச்சத்தைத் தந்து, தோலில் வறட்சியைப் போக்கிப் பளபளப்பாக்கும். உணவில் பொன்னாங்கண்ணி மற்றும் கேரட் தினசரி சேர்த்துக்கொண்டால், சோர்வு நீங்கி முகம் எப்போதும் பிரகாசிக்கும்்.
பாதாம் பருப்பை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது நல்லது. முகப்பருக்கள் வருவதற்கு அதிகக் கொழுப்பும் ஒரு காரணம். எண்ணெய்ப் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாலை நன்கு காய்ச்சி அதில் இரண்டு பேரீச்சம்பழங்களைப் போட்டு, மறுநாள் காலை அருந்தலாம். முகத்தின் பளபளப்புக்கு பேரீச்சம் பழம் கேரன்டி.
பியூட்டி பார்லர்
பிளீச்சிங் செய்துகொள்வதைக் காட்டிலும் ஃபேஷியல் செய்து கொள்வது நல்லது. கெமிக்கல் ஃபேஷியல் செய்துகொள்வதால் தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். முகத்தின் சருமமும் மிருதுத்தன்மையை இழந்து கரடுமுரடாக மாறலாம். ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், வாழைப்பழம் போன்ற  இயற்கை முறையில் செய்யப்படும் பழ ஃபேஷியல் எல்லா வகை சருமங்களுக்கும் ஏற்றது. பக்க விளைவுகள் இல்லாதது. சருமத்துக்கான சத்துக்களுடன், நீர்ச்சத்தும் சேர்ந்து பளபளப்பைக் கூட்டும். மேலும், அழகு நிலையத்தில் முகத்துக்கு அக்குபிரஷர் சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது. இதனால் முகம் மற்றும் உடலின் இயக்கங்கள் தூண்டப்பட்டு, தலைவலி, டென்ஷன் குறைந்து மனதும், உடலும் ரிலாக்ஸாகும். ரத்த ஓட்டம் சீராகும். இந்த நிம்மதியே, முகத்தில் புத்துணர்ச்சியையும் பொலிவையும் தரும். மேலும் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தாலும் வறண்டுபோனாலும் அதற்கும் பார்லரில் இயற்கை முறையில் தீர்வைத் தர முடியும்.
அசத்தலான அழகுக்கு!
தினமும் தண்ணீரில் வேப்பிலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். இது சருமத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் காக்கும்.  வாரம் இருமுறையாவது சோப்புக்குப் பதிலாக கடலைப் பருப்பு, பாசிப் பயிறு போன்றவற்றை அரைத்துக் குளிக்கலாம்.
வாரம் ஒரு முறை பப்பாளிப் பழத்தை நன்றாகப் பிசைந்து, அந்தக் கூழை முகத்தின் மீது பூசி 15 நிமிடங்கள் உலரவைத்து பின் குளிக்கலாம். இது சருமத்துக்கு மிருதுத்தன்மையைக் கொடுக்கும்.
இரு வாரங்களுக்கு ஒரு முறையேனும் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும். 
வாரம் ஒரு முறை பால், பாதாம் அல்லது பிஸ்தா பருப்புடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகத்தின் மீது 15 நிமிடங்கள் பூசிவிட்டுக் குளித்தால் மிகவும் நல்லது.
வெளியில் சென்றுவிட்டு வந்த பிறகு, கெட்டியான மோரில் ஒரு வெள்ளைத் துணியை நனைத்து முகத்தின் மீது அப்படியே 10 நிமிடங்கள் வைத்திருப்பது புத்துணர்ச்சியைத் தரும். 
மாதம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்வது, ஆவி பிடிப்பது, நீராவிக் குளியல்போடுவது மிகவும் நல்லது.
கிரீம்கள் மற்றும் பவுடர்கள் வியர்வை வெளியேறுவதைத் தடுப்பதால், தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
தினமும் அதிகாலையில் எழுந்திருப்பது, சூரிய ஒளிக்கதிர்கள் படுமாறு 20 நிமிடங்கள் ஆசனங்கள் செய்வது போன்றவை மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா?

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கான வாய்ப்பை எதிர்நோக்கும் பெண்கள் தவிர மற்ற எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்திற்கான சீசன்.
இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:
பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ’ குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.
கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம். அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.
சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.
பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.
பப்பாளியில் `பப்பைன்’ என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.
பப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. இவர்கள், பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பநிலை அதிகரித்து, ஆரம்ப நிலையில் உள்ள கரு கலைந்துவிடும் அல்லது கரு உருவாகுதல் தள்ளிப்போகும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அதேநேரம், மேற்படி பெண்கள் இந்த பழத்தில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஒருவேளை, அளவுக்கு அதிகமாக பப்பாளிப் பழத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால், அந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிப்பது உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.

வியாழன், 23 அக்டோபர், 2014

தக்காளி

மூலிகை கட்டுரை

பெண்கள் உட்கொள்வதற்கு ஏற்ற கனி மாதுளம்கனி. மாதவிலக்கின்போது ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டு அத்துடன் வலியும் கடுமையாக இருந்தால் மாதுளம்பழத்தோலை சுட்டு அதன் சாம்பலை தேனுடன் குழைத்து சாப்பிட வலி நீங்கும். அத்துடன் 
தக்காளி பழச்சாற்றையும் குடிக்கலாம்.
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்கும்பொழுது தோன்றும் வெப்பம் ரத்தத்தின் மூலமாக பரவலாக நமது தோல் முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது. தோலிலுள்ள வியர்வை சுரப்பிகள் மற்றும் நுண்ணிய துளைகள் மூலமாக இந்த வெப்பம் நீராவியாகவும், காற்றாகவும் வெளியேறிவிடுகின்றன. நமது உடலின் வெப்பம் சீராக வெளியேறாவிட்டால் உடல் உறுப்புகளின் செயல்பாடும் ஸ்தம்பித்து போய்விடும்.
ரத்தம் மற்றும் தோலில் தங்கியுள்ள நீர்ச்சத்தே உடலின் வெப்பத்தை சீராக வைக்க உதவுகிறது. ஆனால் நெருப்பு தாக்குதல், கத்தரி வெயில், அனல்காற்று போன்ற காரணங்களால் நமது உடலின் வெப்பம் திடீரென 100 டிகிரிக்கும் மேல் அதிகரிப்பதால் வெப்பத்தின் பாதிப்பு உடலை பல வகைகளில் பாதிக்கிறது. சோடா, மோர், பழச்சாறு, இளநீர், கரும்புச்சாறு, நெல்லிக்காய்ச்சாறு, கற்றாழை ஜுஸ், தண்ணீர் பழச்சாறு போன்ற பானங்கள் உடலின் வெப்பத்தை தணிப்பதுடன் நீர்ச்சத்தை நிலைநிறுத்துகின்றன. இதுபோன்ற பானங்களை உட்கொள்ளாவிடில் உப்பு மற்றும் நீர்ச்சத்து உடலில் குறைவதால் கடும் சோர்வு மற்றும் தசை இறுக்கம் உண்டாகிறது. வெயிலின் கொடுமையை தணிக்க காரம் அதிகமுள்ள உணவுகளை குறைப்பதுடன் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். குறைந்தது 3 முதல் 5 லிட்டர் நீர் அருந்தவேகுடும். வெயிலில் வேலை செய்யும்பொழுது அடிக்கடி நீர் அருந்தினால் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்கலாம். கோடையின் கொடுமையை தணிக்க விலை மலிவான, எளிதில் கிடைக்கக்கூடிய தக்காளிப்பழச்சாற்றை உட்கொள்ளலாம். சீனி அல்லது குளூக்கோஸ் கலக்கப்பட்ட தக்காளிச்சாறு உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்துவதுடன் உடலையும் குளிர்ச்சி செய்கிறது.
லைக்கோபெர்சின் எஸ்குலன்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சோலனேசியே குடும்பத்தைச் சார்ந்த நன்கு பழுத்த சீமைத் தக்காளிப்பழத்தில் லைக்கோபீன் வகை கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை வயிறு மற்றும் சிறுநீர்ப் பாதையில் தோன்றும் புற்றுநோய் செல்களை தடுக்கின்றன. தக்காளிப்பழச் சாற்றிலுள்ள அஸ்கார்பிக் அமிலம் செல் அழிவை தடுப்பதுடன் சுண்ணாம்பு சத்தை நிலைநிறுத்துகின்றன. தக்காளிப்பழச்சாற்றிலுள்ள வலி நிவாரணத் தன்மை உடல் வலியையும் குறைக்கிறது. குறைந்தளவில் நன்கு நீரில் கலக்கப்பட்ட, இனிப்பூட்டப் பட்ட தக்காளிச்சாற்றை தொடர்ந்து குடித்துவர கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்று மற்றும் நச்சுக்கிருமிகள் நீங்கும்.
தக்காளியைப் பிழிந்து, விதை மற்றும் தோலை நீக்கி, வடிகட்டி, வெறும் சாற்றுடன் கற்கண்டு அல்லது சீனி கலந்து சாப்பிடுவதாலும், நன்கு பழுத்த தக்காளிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சீனி கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதாலும் உடல் உஷ்ணம் தணியும். தக்காளியை சூடு செய்யாமல் வடிகட்டி அப்படியே சாப்பிடுவதால் சிறுநீர் கிருமித்தொற்று நீங்குகிறது. ஆனால் தக்காளியை தோல் மற்றும் விதையுடன் சேர்த்து உட்கொள்வதால் சிறுநீர்ப் பாதையில் சுண்ணாம்பு, யூரிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் சத்து சேகரிக்கப்பட்டு, கற்கள் உண்டாகிவிடுகின்றன. ஆகவே பச்சை தக்காளிச்சாறு உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு தொடர்ந்து வெப்பத்தாக்குதலை நீக்க தக்காளியை அடிக்கடி உட்கொள்ளலாம். தக்காளியை தொடர்ந்து உட்கொள்வதால் உணவுப்பாதை, சிறுநீர்ப்பாதை மற்றும் புராஸ்டேட் கிளான்டில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைய தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வருவதால் தோல் மென்மையடைவதுடன் குளிர்ச்சியும் உண்டாகும்.
தக்காளி
அசைவ உணவுகள் செரிமானமாக குறைந்தது 90 நிமிடங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் காய்கறிகள் மற்றும் பழச்சாறுகள் உட்கொண்ட 15-20 நிமிடங்களில் செரித்துவிடுகின்றன. ஆகவே அசைவ உணவைவிட சைவ உணவை நம் உடல் எளிதில் ஏற்றுக்கொள்கிறது. காரட், பீட்ரூட், புடலை, பீன்ஸ், வெள்ளரி, முட்டைகோஸ், வாழைத்தண்டு, திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை ஒன்றாக இடித்து சாறெடுத்து அத்துடன் இஞ்சி சாற்றின் தெளிநீரை கலந்து சாப்பிட உடல் குளிர்ச்சியடைவதுடன் உணவுப்பாதையின் செரிமான ஊக்குநீர்கள் நன்கு சுரக்கின்றன. இது அனைவருக்கும் ஏற்றது.

அசட்டையாக இருப்பவரா நீங்க?

இனி உஷார்
“சே, இவ்ளோ தானா… கண்டிப்பா இனி பாலோ பண்ணனும்…ன்னு நினைப்பீர்கள். ஆனால், அசட்டையாக இருந்து விடுவீர்கள், இனி அப்படி வேண்டாமே. கொழுப்பு எவ்ளோ: ஆண்களின் மொத்த எடையில், 12ல் இருந்து 18 சதவீதம் வரை கொழுப்பு இருக்கலாம்; அது போல பெண்களுக் குள்ள மொத்த எடையில் 19ல் இருந்து 26 வரை இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் கவனிக்க வேண்டும். ஒரு நாள் உணவில் 30 -40 கிராம் தான் கொழுப்பு நம் உடலில் சேரும் படி சாப்பிட வேண்டும். அதனால், தான் அதிக சதவீதம், கொழுப்புள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
லிபிட் ப்ரொபைல்: முன் பெல்லாம் கொலஸ்ட்ரால் என்றாலே என்னவென்றே தெரியாது. இப்போது இதய பாதிப்பு வருவதை சொல்ல, கொலஸ்ட்ரால் மட்டுமல்ல லிபிட் ப்ரொபைல் சோதனை முக்கியம். ரத்தப்பரிசோதனை செய்து கொண்டால், கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் எல்லாம் தெரிந்து விடும்.
ரத்தப்பரிசோதனையில், ட்ரைகிளிசரைட்ஸ் என்பது கொழுப்பு அளவை காட்டிக்கொடுக்கும். இது அதிகமாக இருந்தால் கொலஸ்ட் ரால் அதிகம் இருக்கிறது என்று பொருள்.
பி.எம்.ஐ., 30: பாடி மாஸ் இன் டெக்ஸ் என்று சொல்லப்படும் பி.எம்.ஐ., ஒருவரின் ஒபிசிட்டி, அதிக எடையை காட்டிக்கொடுக் கும். உடல் எடை எவ்வளவு கிலோ என்பதை பார்த்து, அதில் இருந்து உயரம் அளவை மீட்டரில் வகுக்க வேண்டும்.
பி.எம்.ஐ., 22.9ஐ தாண்டக் கூடாது. அதிக பட்சம் 30க்கு இப்படி, அப்படி என்று இருந்தால், டாக்டரிடம் காட்டி விடுவது தான் நல்லது. இதய பாதிப்பு, சர்க்கரை நோய் என்ற பலவற்றுக்கும் இது தான் அடித்தளம்.
ஐ.ஜி.ஐ., உணவு: பச்சைக்காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவு பொருட்கள் தான் ஆரோக்கியமான உணவு வகைகள்.”லோ கிளிசமிக் இன்டெக்ஸ்’ (ஐ.ஜி.ஐ.,) உணவுகள் தான் மிக நல்லது. பார்லி, சப்பாத்தி, சேமியா, மக்காச்சோளம், கோதுமை பிரட், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தக்காளி, பட்டாணி போன்ற தானியங்கள் ஆகியவை நல்லது.
“ஹை கிளிசமிக் இன்டெக்ஸ்’ (எச்.ஐ.ஜி.,) எனப்படும், பைனாப் பிள், உலர்ந்த திராட்சை, உருளை, பரங்கி, சக்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவை தவிர்க்க வேண்டும். ரீபைண்ட் ஆயிலை தவிர்க்க வேண் டும்; சனோலா ஓகே.
மொடாக்குடியரா: என்னவோ கற்பனை செய்யாதீங்க, காபியில் மொடாக் குடியரா? அதை குறைத்துக் கொள்ளுங்களேன். எல்.டி.எல்., கொழுப்பு அதிகமாகும்; கால்சியம் குறையும். மிதமான காபி குடியர்களுக்கு பிரச்னை இல்லை. ஆன்டி ஆக்சிடென்ட் கிடைக்கிறது. அது மிகவும் நல்லது.
காபி பற்றி நல்ல செய்தியே இல்லையா? இருக்கிறது; நரம்பு தளர்ச்சி பிரச்னை வராது; பர்கின்சன் நோய் எட்டிப்பார்க்காது. டயபடிக்ஸ் உள்ளவர்கள் கூட காபி குடிக்கலாம், டாக்டர் ஆலோசனைப்படி.
எவ்ளோ குடிக்கலாம்: உடலில் 60 சதவீதம் தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. உடலில் தண்ணீர் வற்றிப்போனால் ஆபத்து தான். ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. வியர்வை, மூச்சு வழியாக ஒரு லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் 20 சதவீதம் தண்ணீர் கிடைக்கிறது. பொதுவாக ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது, ஆண்கள் 13 கப், பெண்கள் ஒன்பது கப் குடிக்க வேண்டும்.
தூக்கம் வரலியா: பல விஷயங்களால் தூக்கம் வராமல் சிலர் தவிப்பர். அவர்கள் தூக்கம் வராமல் படுக்கையில் புரளக்கூடாது. வெளியில் வந்து, புத்தகம் படிக்கலாம். தானாக தூக்கம் வந்துவிடும். ஐந்து, பத்து நிமிடம், மூச்சுபயிற்சி செய்யலாம். இதிலும் தூக்கம் வராவிட்டால், சாதிக்காய் பவுடரை வெதுவெதுப்பான பாலில் போட்டு குடிக்கலாம்.
“ஏசி’யே கதியா: எப்போதும் “ஏசி’ அறையிலேயே முடங்கி இருப்பவரா? பகலில் நல்ல வெயிலில் கொஞ்சமாவது நடமாடினால் தான் இரவில் சூப்பர் தூக்கம் வரும். சூரிய வெளிச்சம் படும் போது தான் உடலில் வைட்டமின் “டி’ சேர்கிறது. இது தான் தூக்கம் தடைபடாமல் வருவதற்கு மிகவும் முக்கியம். இது போல, தூங்கப் போகும் முன் “டிவி’ பார்க்கக்கூடாது; தூக்கம் வரவில்லையெனில் ஏதாவது படிக் கலாம்; கண்டிப்பாக தூக்கம் வரும். படுக்கை அறையில் முடிந்தவரை காற்றோட்டம் இருப்பது நல்லது.
சின்ன சின்ன யோகா: சிறிய வயதில் ஆரம்பித்தால் தான் நல்லது; இல்லாவிட்டால், யோகா செய்து பலனில்லை என்று சிலர் நினைக் கின்றனர். ஆனால், அடிப்படை யோகா பயிற்சியை கற்றுக் கொண்டாலே போதும், உடலும், உள்ளமும் சுறுசுறு தான். எலும்புகள் வலுவடையும், தசைகள் இறுக்கம் குறையும். தலைவலிக்கு மாத்திரையை தேடவே மாட்டீர்கள்.முதுகு வலி, முழங்கால் வலி, தசை பிடிப்பு என்பதற்கு இடமே இருக்காது.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஆண்மைக் குறைவு, தாது விருந்தி!! அரும்மருந்து!!---மருத்துவ டிப்ஸ்,


ஆண்மைக் குறைவு: 

* மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும். 

* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். 

* அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். 

* அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். 

* படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும். தாது விருந்தி: 

* முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். 

* நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

* கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம். 

* அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். 

* வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

வெள்ளி, 17 அக்டோபர், 2014

சிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்!

நமது அடிவயிற்றின் உட்பகுதியிலுள்ள சிறுநீர்ப்பையில்தான் இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் வடியும் சிறுநீர், தேங்க ஆரம்பிக்கிறது. சிறுநீரைத் தேக்கி வைக்கும் இந்த சிறுநீர்ப்பை, அடிவயிற்றினுள் தொப்புளுக்குக் கீழ், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் என்கிற சுரப்பியின் மேல்பகுதியில் அமைந்திருக்கிறது.
இதே போல் பெண்களுக்கு கர்ப்பப் பைக்கு கீழே அமைந்திருக்கிறது. அடி வயிற்றில் கர்ப்பப்பை கொஞ்சம் இடத்தை அடைத்துக் கொள்வதால், பெண்களுக்கு சிறுநீர்ப்பை சற்று சிறிதாக இருக்கும். சிறிய குழந்தைகளுக்கு, சிறுநீர்ப்பை வயிற்றில் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கும்.
அவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பியும், கர்ப்பப்பையும் அந்த வயதில் வளராததே இதற்குக் காரணம். சிறுநீரை, சிறுநீர்ப் பையிலிருந்து வெளியே அனுப்புவதற்கு பெயர்தான் `சிறுநீர் கழித்தல்’ என்று நாம் சொல்வதுண்டு. இதை உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு மொழிகளில், பலவிதமாக அழைப்பதுண்டு.
அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆரோக்கியமாக இருக்கும் ஒரு ஆணுக்கு, சிறுநீர் கழித்தல் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தக் கட்டுப்பாடு கூட ஒரு அளவுக்குத்தான். அளவை மீறிவிட்டால், அப்புறம் கட்டுப்பாட்டையும் மீறிவிடும். அப்புறம் அந்த இடம் அசிங்கம்தான். இதைத்தான் கிராமங்களில், “சிந்தனையை அடக்கலாம் ஆனால் சிறுநீரை அடக்கமுடியாது” என்பார்கள்.
பிறந்த குழந்தைகள், மிகவும் வயதானவர்கள், விபத்துகளில் நரம்பு பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கெல்லாம் சிறுநீர் கழித்தல் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்காது. அதனால்தான் சிறிய குழந்தைகள், அடக்க முடியாமல், அடக்கத் தெரியாமல் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சிறுநீர் கழித்து விடுகிறார்கள்.
சிறுநீர் கழித்தல் என்பது மிகச் சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயமாக நாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படியல்ல. இது ஒரு சாதாரண விஷயமுமல்ல. ஒரு விளையாட்டான விஷயமுமல்ல. பெருமூளையிலுள்ள நரம்பு மண்டலப் பகுதிகளின் செயல்பாட்டில் தான் சிறுநீர் கழித்தலே நடைபெறுகிறது. நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைவூட்டுவதே இந்த மூளையிலிருந்து வரும் சமிக்கைகள்தான்.
மூளைதான் இதை கண்ட்ரோல் பண்ணுகிறது. மிகச்சிறிய குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் சிறுநீர் கழிக்கலாம், இந்த நேரத்தில் சிறுநீர் கழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு வருவதற்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று வயது வரை ஆகும். ஏனென்றால், அந்த வயதில்தான் மத்திய நரம்பு மண்டலத்தில், சிறுநீரை கட்டுப்பாட்டில் வைப்பதற்குண்டான பகுதி வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது.
எனவே மிகச்சிறிய குழந்தைகளை திட்டுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. வயது வந்த ஆண் மற்றும் பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் சிறுநீர் கொள்ளும் அளவு சுமார் 600 மில்லி லிட்டர் வரை பிடிக்கும். இந்த கொள்ளளவு ஆளுக்கு ஆள், கொஞ்சம் வேறுபடும். சிறுநீர்ப்பை நீளத்தில் ஐந்து அங்குலமும், அகலத்தில் மூன்று அங்குலமும் விரிந்து கொடுக்கும் தன்மை உடையது.
மேலிருந்து சிறுநீர் வடிய, வடிய, சிறுநீர்ப்பைகளின் தளச்சுவர்கள் மெல்லியதாகி, கொஞ்சம், கொஞ்சமாக விரிந்து கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் சுமார் 150 முதல் 200மில்லி லிட்டர் சிறுநீர் நிரம்பிவிட்டாலே, சிறுநீர் கழித்தாக வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்துவிடும்.
சுமார் 600 லிட்டர் வரை அடக்கும் சக்தி இருந்தாலும், சுமார் 200 மில்லி லிட்டர் சிறுநீர் சேர்ந்துவிட்டாலே நரம்பு மண்டலத்தின் மூலமாக மூளைக்கு செய்தி போய், மூளையிலிருந்து சிக்னல் கிடைத்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிடும். ஒரு பையில் தண்ணீர் அதிகமாக இருந்தால், அழுத்தமும் அதிகமாக இருக்கும் என்று நாம் நினைப்போம்.
சிறுநீர்பையில் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வடிந்து சேர ஆரம்பிக்கும்போது, எல்லோரும் நினைப்பது போல் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகமாக இருக்காது. மாறாக அழுத்தம் குறைவாகவே இருக்கும். சிலருக்கு சிறுநீர் கழிப்பது என்பதே ஒரு மிகப்பெரிய சந்தோஷம். வயிறு முழுவதும் காலியானது போல் தோன்றும்.
மிகப்பெரிய விடுதலை கிடைத்ததுபோல் மனதில் தோன்றும். இது இயற்கையே. சிறுநீர் கழிக்காமல், அப்படியே அடக்கி வைத்துக்கொண்டிருந்தால், டென்ஷன் அதிகமாகும். எதிலும் ஈடுபாடு இருக்காது. இதற்கு இடங்கொடுக்காமல் உடனே சிறுநீர் கழித்து விடுவது நல்லது.
எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அவ்வளவும் சிறுநீராக வெளியே வந்துவிடும் என்று சிலர் நினைப்பதுண்டு. இது சரியல்ல. ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு சுமார் நான்கு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். இது இயற்கை. சர்க்கரை வியாதிக்காரர்கள் நான்கு முறைக்கு மேல், அடிக்கடி பாத்ரூம் போய் வந்து கொண்டிருப்பார்கள்.
இது நோயினால் ஏற்படும் மாற்றம்.   ஒரு நாளைக்கு சுமார். 1.2 லிட்டரிலிருந்து 1.8 லிட்டர் வரை, சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் வடிந்து, சிறுநீர்ப்பை மூலமாக வெளியேறுகிறது. மழைக்காலங்களில் அதிக தடவை சிறுநீர் கழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. ஆண், பெண் இருவருமே தண்ணீர் நிறைய குடித்தால், அடிக்கடி சிறுநீர் போகவேண்டும் என்பதற்கு பயந்து, அதிக தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.
இது தவறு. எனக்குத் தெரிந்த ஒருவர், சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போதும் ஒரு மடக்கு தண்ணீர் கூட குடிக்கமாட்டார், “முதலில் தண்ணீர் குடித்து விட்டால், அதிகமாக சாப்பிட முடியாதாம். அதனால் சாப்பிட்டு முடித்த பின்பு தான் தண்ணீர் குடிப்பேன்” என்றார். இவர் செய்வதும் விநோதமே.
அதிகமாக சாப்பிட முடியாது என்பதால், தண்ணீர் குடிக்க பயப்படுகிறார். எது எப்படியோ, ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக சுமார் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. ஒருவருக்கு தண்ணீரின் தேவை அவரது உடல் எடையில் 4 சதவீதம் ஆகும். உதாரணத்திற்கு (70 கிலோ ல 4 % = 2.80 லிட்டர்) அதாவது 70 கிலோ எடையுள்ள அவர் சுமார் 2.8 லிட்டர் தண்ணீர் குடித்தாக வேண்டும்.

புதன், 15 அக்டோபர், 2014

குடற்புழுக்கள் .....

                        இயற்கை  மனிதனுக்கு எந்த அளவு ஆரோக்கியம் தரும் பொருட்களை கொடுத்துள்ளதோ, அதை சீராக பயன்படுத்தி நலம் பெற நினைக்காத மனிதன்  அதை தீமையாக்கி தன் ஆரோக்கியத்தைக் கெடுத்து வாழ்கிறான்.

உணவு, பாதுகாப்பற்ற குடிநீர், மாசடைந்த காற்று இவற்றால் மனிதனுக்கு பலவிதமான நோய்கள் உண்டாகின்றன.  ஒரு நாட்டின் பொருளாதார நிலை, மக்களின் தனிப்பட்ட வாழ்வாதார சூழ்நிலை இவைகளைப் பொறுத்தே உடல்நிலை அமைகிறது.

மனிதனின் முறையற்ற உணவுப் பழக்கத் தாலும், உணவாலும், உடல் நோய்க்கு ஆளாக நேரிடுகிறது.  இந்த வகையில் உணவின் மூலம் உடலுக்கு சென்று பல்கிப் பெருகி உடலை பாழ்படுத்தும் சிறுகுடற் புழுக்களும் உண்டு.  இவை உணவின் மூலம் உடலுக்குச் செல்வதோடு, சில சமயங்களில் சருமத்தின் மூலமும், நீரின் மூலமும் செல்கிறது.  இவ்வாறு உடலுக்குச் சென்று உடலில் குடித்தனம் நடத்தும் புழுக்கள் நாற்பது வகைகள் உள்ளன.  அவற்றில் ஒன்றுதான் சிறுகுடற் புழு.
Ascaris lumbri coides என்னும் சிறுகுடற்புழு எல்லா நாட்டு மக்களின் உடலிலும் காணப்படுகிறது.  குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், சீனா போன்ற நாடுகளிலும், பசிபிக் தீவு, பகுதிகளில் வாழும் மக்களிடம் அதிகம் காணப்படுகிறது.

அசுத்தமான பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவ தாலும், சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவதாலும், அசுத்தம் நிறைந்த பகுதிகளில் குடியிருப்பதாலும், அசுத்தகாற்றை சுவாசிப்பதாலும், இவை மனித உடலுக்குள் செல்கின்றன.

சுகாதாரமற்ற எண்ணெய் பொருள்கள் ஒரு தடவை சமைத்த எண்ணெயை திரும்ப சமைப்பது, சுகாதாரமற்ற தண்ணீர் அருந்துவது, பல நாட்களுக்கு முன்பு சமைத்த பொருட்களை மீண்டும் மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது போன்ற சுகாதாரக் கேடுகளால்  வயிறு  செரிமான சக்தி இழந்துகாணப்படும்.  இச்சமயத்தில் சிறுகுடல்புழு முட்டையானது  வயிற்றுக்குள் சென்று வளர ஏதுவாகிறது.

சிறு குடற்புழு உடலிலே வளர்ச்சியடைந்து விடுகிறது.  இந்த வகை சிறுகுடற்புழுக்களை விருந்தாளியாக ஏற்றுக்கொள்வது மனிதன் மட்டும் தான்.

மனிதனின் உணவுக் குழாய் வழியாகச் செல்லும் இந்தப் புழு முட்டையானது வயிற்றுப் பகுதிக்கு சென்றவுடன் அங்குள்ள செரிமான திரவத்தால்  முட்டைகள் பொரிக்கப்பட்டு சிறு புழுக்களாக வெளியேறி சிறு குடலின் மேற்பகுதிக்குச் செல்கின்றன.

இத்தகைய சிறு புழுவானது (Larvae) சிறுகுடலின் மெல்லிய சவ்வுகளைத் துளைத்துக்கொண்டு, கல்லீரலுக்குச் செல்கிறது.  இது இரத்த நாளங்கள் வழியாக நடைபெறுகிறது.  கல்லீரலில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் விருந்தாளியாகத் தங்கவிட்டு அதே இரத்தக்குழாய் வழியாக இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து நுரையீரலை அடைகிறது.  பிறகு நுரையீரலிலிருந்து மூச்சுக்குழல் வழியாக முன்பக்கம் உந்தித் தள்ளி உணவுக் குழலுக்குள் சென்று இரைப்பையைத் தாண்டி, பழையபடி சிறுகுடலின் மேற்பகுதிக்குச் சென்றுவிடுகிறது.  இந்த சிறிய புழு பெரிய புழுவாக மாற ஆறு வாரங்கள் முதல் பத்து வாரங்கள் ஆகும்.

நன்கு வளர்ச்சியடைந்த புழு, மண் புழுவைப் போன்று உருவத்தைப் பெற்று நீண்ட உருண்டை வடிவமாக காணப்படும்.  இதன் இரு முனைப் பகுதிகளும் குவிந்து காணப்படும்.

சிறுகுடற் புழுக்களால் உண்டாகும் நோய்கள்

சிறு குடல் புழுக்கள் அதிகத் தொல்லை கொடுப்பவை.  இதனால் சளி, மேல்மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும்.  உடலெங்கும் நமைச்சல் உண்டாகும்.  இதனால் ஈசனோபீலியா என்னும் கிருமி ரத்தத்தில் பரவு காரணமாகிறது.

நன்கு வளர்ந்த புழுவினால் டைபாய்டு போன்ற காய்ச்சல், உடல் நமைச்சல், முக வீக்கம், கண் நோய் போன்றவை உண்டாகும்.  மேலும் இந்தப் புழுக்களால் குடல்வாத நோய், கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு.

சிறு குழந்தைகளுக்கு நெஞ்சுப் பகுதி சதைப்பற்று இன்றி கூடுபோல காணப்படும். 

குழந்தைகள் தூங்கும்போது பல் கடிக்கும்.  அரைக்கண் கொண்டு தூங்கும்.  எந்நேரமும் உதட்டைக் கடித்துக் கொண்டே இருக்கும்

குழந்தைகள் உணங்கிப்போய் காணப்படும். முகத்தில் இலேசான வெள்ளைத் தழும்புகள் தோன்றும். 

பள்ளி செல்லும் குழந்தைகளின் கால் மூட்டுகளில் வலி உண்டாகும். 

உடல்கூறுகளுக்குத் தகுந்தவாறு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும், காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காமல்  மாலையில்  மட்டுமே மலம் கழிக்கும். 

குழந்தைகள் காலை எழுந்தவுடன் மலம் கழிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும்.   ஒருசில குழந்தைகள் காலை உணவுக்குப்பின் மலம் கழிக்கும்.  அல்லது பள்ளிக்குச் சென்றபின் மலம்கழிக்கும்.  இதற்கு சிறுகுடற்புழுக்கள்தான் முக்கிய காரணம்.

ஒரு சில குழந்தைகளுக்கு மலத்துவாரத்தில் அரிப்பு ஏற்படும்.  குழந்தைகள் சொல்லத் தெரியாமல் அழுதுகொண்டே இருக்கும்.

சிறுகுழந்தைகளுக்கு சிறுகுடற்புழுக்களால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவை கண்களைத் தாக்கி கண்களுக்கு கண்ணாடி போடும் சூழ்நிலை உருவாகும்.  கல்லீரல் பாதித்தால் கண்பார்வைக் கெடும்.  இந்த சிறு குடற்புழுக்கள் பற்றி அதிகம் கண்டறிய முடியாது. இதனால் வரும் நோய்களை குணப் படுத்தினாலும், மீண்டும் மற்றொரு நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.  இந்த புழுக்களை முழுவதுமாக அழிப்பதுதான் சிறந்த வழியாகும்.

சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்  சூப் கொடுப்பது நல்லது.

சின்ன வெங்காயம்        -2

நல்ல மிளகு                      - 2

சீரகம்                                     - 1/2 ஸ்பூன்

இஞ்சி                                    - சிறிய துண்டு

தேவையான அளவு     -  கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)

பூண்டு                                   - 1 பல் 

சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.