திங்கள், 1 டிசம்பர், 2014

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்


தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
——————————————————————————–
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
——————————————————————————–
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
——————————————————————————–
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
——————————————————————————–
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
——————————————————————————–
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
——————————————————————————–
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
——————————————————————————–
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
——————————————————————————–
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
——————————————————————————–
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
——————————————————————————–
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
——————————————————————————–
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
——————————————————————————–
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
——————————————————————————–
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
——————————————————————————–
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
——————————————————————————–
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
——————————————————————————–
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
——————————————————————————–
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
——————————————————————————–
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
——————————————————————————–
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை (Ambassador to prevent cancer)


தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.
தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.
தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.
தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.
பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.
தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.
ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.
தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.
தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.
இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.

வெள்ளி, 28 நவம்பர், 2014

மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள்


* மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639

* மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
* மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
* மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400

* மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33
* மனித மூளையின் எடை 1.4 கிலோ
* உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி பாரன்ஹிட்
* மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்
* உடலின் மெல்லிய சருமம் கண் இமை
* மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி
* ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
* மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.
* நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
* மனித நாக்கின் நீளம் 10 செ. மீ
* ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர் .
* மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.
* நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
* நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.
* நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
* நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
* நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.
* நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.
* நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
* 900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.
* க‌ண் தான‌த்‌தி‌ல் கண்களில் விழித்திரை விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.
* நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.
எலும்புகள்
* நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும்! நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன!
தோல்
* உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை
நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது..
ஈரல்
* நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும்சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும். ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
* புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.
* மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
* மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது
நா‌க்கு
* ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.
மூக்கு
* நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள். அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.

ஆயுர்வேதம் கற்றுத்தரும் பாடம்!


மனிதனிடம் தோன்றும் இயற்கையான உணர்வுகளை வேகம் என்று அழைக்கிறது ஆயுர்வேதம். இந்த வேகம் உடல் சம்மந்தமாகவோ அல்லது மனம் சம்மந்தமாகவோ இருக்கலாம்.


வேகத்தை தாரணீய வேகம் என்றும் அதாரணீய வேகம் என்றும் பிரிக்கிறார்கள். தாரணீய வேகம் என்றால் அடக்க வேண்டிய உணர்வுகள் என்றுபொருள். உதாரணமாக கோபம், போட்டி, பொறாமை, வஞ்சகம், காமம் போன்றவை அடக்கி நெறிமுறைப்படுத்த வேண்டியவை. அதாரணீய வேகம் என்றால் தடுக்கக்கூடாத உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்று பொருள். பசி, தும்மல், தண்ணீர் தாகம், அபான வாயு, மலம், சிறுநீர், இருமல், தூக்கம், மேல்மூச்சு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி, சுக்லம் ஆகியவையாகும்.

அபான வாயுவையும், மலத்தையும் அடக்கினால் வயிற்றுவலி, பசியின்மை, பார்வைக்குறைவு, இருதய நோய்கள், தலைவலி போன்றவை ஏற்படும். மலத்தை அடக்குவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். சிறுநீரை அடக்கினால் நீர்க்கடுப்பு, எரிச்சல், வலி, சக்தியின்மை போன்றவை ஏற்படும். அவ்வாறு அடக்க நேர்ந்தால் உடனடி பாதிப்பு தெரியாவிட்டாலும் நிறைய நோய்கள் வந்தடையும். ஏப்பம், தும்மல் அடக்கினால் தலைவலி, கழுத்துவலி போன்றவை ஏற்படும். தலைவலி, ஜலதோஷம், மூச்சு முட்டு, ஆசனக்கடுப்பு, நெஞ்சுவலி போன்றவை படையெடுக்கும்.

தண்ணீர் தாகத்தை அடக்க பழகிவிட்டால் நாவறட்சி ஏற்பட்டு ‘டீஹைட்ரேஷன்’ உண்டாகும். தலைசுற்றல், மயக்கம் வரும். தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்தின் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. தூக்கம் வரும்போது உடனே தூங்கிவிடுவது நல்லது. இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி விடியற்காலை குறிப்பிட்ட நேரத்தில் எழுந்தரிக்க பழகுவது சிறப்பானது. வேலைக்காக இரவில் விழித்திருப்பது பின்னாளில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
                          

இதைத்தான் தலாய்லாமா மனிதனின் விசித்திர பழக்கம் என்று குறிப்பிட்டார். இளமையில் இரவு பகல் பாராமல் உழைத்து பணத்தை சேர்க்கிறான். சரியான தூக்கம், ஓய்வு இல்லாததால் விரைவிலேயே உடல்நலத்தை கெடுத்துக்கொள்கிறான். பின் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவு செய்து தொலைந்த உடல்நலத்தை மீட்கிறான் என்றார். உண்மைதான். மனிதன் சரியான ஓய்வு, சரியான தூக்கம் போன்றவற்றை இளமையில் இருந்தே கடைபிடித்தால் பின்னாளில் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டியதில்லை. கூட்டிக்கழித்துபார்த்தால் உடலை கெடுத்து இளமையில் சம்பாதிக்கும் பணம் பின்னாளில் அந்த உடல் ஆரோக்கியத்திற்கு செலவாகிறது. அதனால் தேவையான அளவு உழைத்து ஆரோக்கியத்தை காப்போம் என்கிறது ஆயுர்வேதம்.

செவ்வாய், 25 நவம்பர், 2014

கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்


உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருபவர்கள் ஏராளம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன.
ஏனெனில் தினமும் உடலில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாக வாழலாம்.
மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, அதிக இரத்த அழுத்தம் எற்படாமல், இரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.
ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். அதை உண்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதை நன்றாக செரித்துவிடும். ஆகவே அதனை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.
மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள கேப்சைசின்(capsaicin) உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், 20 நிமிடங்களில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.
கறிவேப்பிலை: அதை தினமும் உண்பதால் எடையானது எளிதாக குறையும். ஏனெனில் இந்த இலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் டாக்ஸின் போன்றவற்றை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
பூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. இது கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.
கடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளது. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட்(fatty acid), இரூசிக் ஆசிட்(erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட்(linoleic acid) போன்றவை இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடன்ட், தேவையான வைட்டமின் மற்றும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றும், அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
முட்டைக்கோஸ்: அதனை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறு விதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும்.
தேன்: இது உடலைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க வேண்டும்.
மோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் பாலில் 8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரியும் உள்ளது. ஆனால் அத்தகைய பால் பொருளில் ஆன மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது.
ஆகவே அதனை உண்பதால் உடலுக்கு தேவையான அளவு ஊட்டசத்துக்கள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும். ஆகவே மேற்கூறிய இத்தகைய உணவுகளை உண்டாலே, உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலிலும் எடை கூடாமல் அழகாக இருக்கலாம்…

சனி, 22 நவம்பர், 2014

அக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்


மயக்கம் :

தவாஃப் செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ உங்களுக்கு மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :

உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள். வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம். 99 சதவீதத் தலைவலிகள் இம் முறையின்மூலம் குணமாகி விடும். இன்ஷா அல்லாஹ்!

வயிற்றுப் பிரச்னைகள் :

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும். கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும்.

அக்குபங்சர் சிகிச்சையும் சில எச்சரிக்கைகளும்

நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம்.

இயற்கைச் சக்திகள் இயைந்த ஒரு மருத்துவ முறைதான் அக்குபங்சர். ஓடுபாதைகள்,அக்குப்புள்ளிகள், ஊசிகள், அடைப்புகள்,தூண்டுதல்கள், நீடிலிங், பிரபஞ்ச உயிர்ச்சக்தி என, மற்ற மருத்துவ முறைகளில் இருந்து 'வித்தியாசப்படும்' இந்த மருத்துவம், உண்மையாகவே மக்களுக்குக் கிடைத்திருக்கும் 'அருட்கொடை' என்றுதான் சொல்ல வேண்டும்.

நம் ஊர் மருத்துவ முறைகள் பின்தங்கிப் போனதற்கு முக்கியமான காரணமாக நான் நினைப்பது, பரம்பரை மருத்துவம் என்று ஒவ்வொரு தாத்தாக்களும்தன் மகன்களிடமும், பேரன்களிடமும் மட்டும்தான் இந்த மருத்துவக்குறிப்புகளை ஒப்படைப்பேன் என்று வீம்பு பிடித்ததுதான். இப்படி வீம்பு பிடித்த தாத்தாக்களால் எத்தனையோ அறிய மருத்துவக் குறிப்புகள் ம(ற)றைந்து போயிற்று. ஆனால், அந்த காலத்து மருத்துவ முன்னோடிகளாக இருந்த எகிப்தியர்கள், எல்லாக் குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டதால் இன்றளவும் அது நமக்கு உதவுகிறது.

நல்லவேளையாக அக்குபஞ்சர் தப்பிப் பிழைத்து இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பலபேர் இன்றைக்கு ஆபரேஷன் இல்லாமல் பல சிக்கல்களை இந்த அக்குபஞ்சர் முறையில தங்களை குணப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

அதெப்படி மருந்து மாத்திரையிலும், ஆபரேஷன் பண்ணியும் குணமாகக்கூடிய வியாதி ஒரு சின்ன ஊசியினால குணமாகிவிடும் என்று, நாம் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். நியாயமான சந்தேகம்தான்! 

நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம்.


நம் உடம்பிலுள்ள எல்லா பாகங்களிலும், ஒவ்வொரு உறுப்புக்கான அக்குபஞ்சர் புள்ளிகள் உண்டு. அந்த அக்குபஞ்சர் புள்ளிகளிருக்கும் சரியான இடத்தில், ஊசிகுத்தப்படும்போது, அந்தந்த உறுப்புக்கான புள்ளிகள் ஸ்டிமுலேட் ஆகும். நம் உடம்பிற்குள் QI('ச்சீ' என்று படிக்கவும்) எனர்ஜி என்று ஒன்று உண்டு, அந்த எனர்ஜியை ஊசியின் ஸ்டீமுலேஷனால் செயல்படுத்தி குறிப்பிட்ட உறுப்பிற்கு செலுத்தி குணமடையச் செய்ய வைப்பதுதான் அக்குபஞ்சர் மருத்துவம்.


அக்குபஞ்சர் ஊசிகளின் அம்சங்கள்

எந்த ஒரு குண்டூசியையும் இந்த மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம் என்று யாரும் தயவு செய்து முயன்றுவிடவேண்டாம். அது மிகவும் ஆபத்து. அக்குபஞ்சருக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஊசிகளை மட்டுமே சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, அக்குபஞ்சர் ஊசி 0.5 இன்ச்சிலிருந்து 7 இன்ச்வரை கிடைக்கிறது.

இந்த ஊசிகளில் சிரெஞ்ஜ் போல் துளைகளிருக்காது. அதனால் இந்த ஊசிகளுக்குள் இரத்தம் தங்காது. எனவே, இரத்தத்தின்மூலம் பரவும் STD போன்ற வியாதிகள் இந்த ஊசிகளினால் பரவாது என்பது நல்ல விஷயம். இருந்தாலும், ஒருவருக்கு உபயோகிக்கப்படும் அக்குபஞ்சர் ஊசிகள் அடுத்தவருக்கு பெரும்பாலும் உபயோகிப்பதில்லை.
சீனா, இலங்கை போன்ற நாடுகளில் 7 இன்ச் அக்குபஞ்சர் ஊசிகளை ஆபரேஷன் செய்வதற்குமுன் மயக்கமருந்திற்கு பதிலாக மயக்கம் வரவழைக்க உபயோகிக்கிறார்கள். அதேபோல், பிரசவத்தின்போது, ஒரு இன்ச் அக்குபஞ்சர் ஊசிகளை உபயோகித்து, வலியில்லாமல் குழந்தைபிறக்க செய்கிறார்கள். இப்படி இதன் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.


அக்குபஞ்சர் ஊசிகள் காப்பர், வெள்ளி, தங்கம் என்று வெவ்வேறு உலோகங்களில் கிடைக்கிறது.

எத்தனை ஊசிகள் உடம்பில் குத்தப்படும்?
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதுபோல், நோய்க்கு தகுந்தபடி ஊசிகளின் எண்ணிக்கையை கூட்டியும் குறைத்தும் உபயோகிக்கப்படும். உதாரணத்திற்கு தலைவலி, உடல்வலிக்கு 4 ஊசிகள் போடப்படும். சாதாரண ஜூரத்தில் வாடும் ஒருவருக்கு 3 நாட்களுக்கு சுமார் 7 ஊசிகள் என்று போடலாம்.

நம் ஊரிலுள்ள பெண்களுக்கு, நமது முன்னோர்கள் அக்குபஞ்சர் மருத்துவமுறையை மறைமுகமாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா..?

ஆம், இதோ உதாரணம்...

1) ஒரு பெண் தனது காதுகளில் கம்மல் மாட்டுவதால், EARPINT இயக்கப்படுகிறது, இது கண்பார்வைக்கு நல்லது. மூக்கு-குத்தி அணிவதால், LI-20 Ying Xiangஎன்ற அக்கு பாய்ண்டுகள் இயக்கப்படுகிறது. இதனால் கன்னங்களில் சுருக்கம் விழாது, முகம் தெளிவாகத் இருக்கும். மேலும், பெண்களுக்கு உடம்பில் நளினங்கள் கொடுக்கும். ஹார்மோன்களை சீராகச் சுரக்கச் செய்யும்.
2) நெத்திச்சுட்டி அணியும்போது நடுமண்டையிலிருக்கும் DU-20 Baihui என்ற பாய்ண்டானது இயக்கப்படுகிறது, இது உடம்பிலுள்ள எல்லா பாகங்களுக்கும் நல்லது. இதை KING F ALL PINTS என்று சொல்வார்கள். நெற்றிக்கு கொஞ்சம் கீழே, இரண்டு புருவங்களுக்கு மத்தியிலிருக்குமிடத்தை ஸ்பெஷல் பாய்ண்ட் என்பார்க்ள். இங்கு ஸ்டிமுலேட் செய்வதால் ஞாபகசக்தி அதிகமாகும், சுருக்கங்கள் விழுவது குறையும்.. இங்கு நம்மூர் பெண்கள் கைவிரலால் அழுந்தத்தேய்த்து பொட்டு வைப்பதாலும் இந்த பாய்ண்ட் ஸ்டிமுலேட் ஆகும்.

3கொலுசு அணிவதால், K3 அல்லது TAIXI என்ற பாய்ண்ட் ஸ்டிமுலேட் ஆகி, கொலுசு அணிபவரின் கிட்னி நல்லமுறையில் இயங்க உறுதுணையளிக்கும் இப்படி நம் நாட்டு பெண்கள் சம்பிரதாயத்துக்காக அணியும் ஆபரணங்களும், செய்துக்கொள்ளும் அலங்காரங்களும் அவர்களது உடம்பை நல்ல முறையில் பராமரிக்க உதவுகிறது.

ஒருவருக்கு வாந்திவருவது போல் இருந்தால், அவர்களின் இடது அல்லது வலது கை மணிக்கட்டுக்கு கீழே 3 விரல்களால் பிடித்து மிதமாக அழுத்தம் கொடுக்க, வாந்தி வருவது நின்று போகும்.

அக்குபங்சர் சிகிச்சையில் சில எச்சரிக்கைக் குறிப்புகள் 

அக்குபங்சர் மருத்துவம் மிக எளிமையானது, பக்க விளைவில்லாதது, பாதுகாப்பானது தான், என்றாலும் உயிரோடு தொடர்புடைய ஒரு பணி என்பதால் நாம் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. இக்கண்ணோட்டத்தின் அடிப்படையிலே உலக சுகாதார நிறுவனம் அக்குபஞ்சர் பயிற்சியை பாதுகாப்பாக மேற்கொள்வது பற்றிய சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு
ஒவ்வொரு அக்குபங்சர் பயிற்சியாளரும் கீழ்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் அவசியம்.

பணிச்சூழலை தூய்மையாக வைத்திருத்தல்
கைகளை தூய்மையாக வைத்திருத்தல்

குத்தப்போகும் அக்கு புள்ளியை ஸ்பிரிட் கொண்டு தயார் படுத்துதல்.

உரிய வகையில் பாதுகாக்கப்பட்ட குறைபாடில்லாத ஊசி மற்றும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட ஊசி மற்றும் பஞ்சு ஆகிய கழிவுகளை கவனமாய் கையாள வேண்டும். 

கர்ப்பமுற்ற பெண்களுக்கு அக்குபங்சர் சிகிச்சையளித்தலை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.

மருந்து சார்ந்த முதலுதவி மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் அவசர நேரங்களில் அக்குபங்சர் சிகிச்சையளித்தல் பலனளிக்காது.

புற்று கட்டிகள் மற்றும் கேடு விளைவிக்கும் அழுகிய கட்டிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை தனித்து உதவாது. மேலும் அத்தகைய கட்டியுள்ள பகுதிகளில் உள்ள அக்கு புள்ளிகளில் ஊசி செருகுதலை தவிர்க்க வேண்டும்.

கடும் இரத்தப்போக்கு, இரத்தத் தேக்கம் உள்ள நோயாளிகள், இரத்த உறைவை உருவாக்கும் மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் மற்றும் இரத்த உறைவு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு ஊசி குத்துதலை தவிர்க்க வேண்டும்.

துருப்பிடிக்காத இரும்பு அல்லது வேறு வகையான உலோகங்கள் என எதில் தயாரிக்கப்பட்ட ஊசியினாலும் அதனை பயன்படுத்தும் முன் கவனமாக பரிசீலிக்க வேண்டும். வளைந்த ஊசி, கொக்கி போன்ற முனையுடைய ஊசி, முனை மழுங்கிய ஊசி, சேத மடைந்த ஊசி போன்றவை கேடு விளைவிப்பவை. அவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும்.

ஊசி ஏற்றுவதற்கு முன் நோயாளியை அவருக்கு வசதியானவாறு இருக்கச்செய்ய வேண்டும். சிகிச்சையளிக்கும் போது இருக்கும் நிலையை மாற்றிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

முதல் முறையாக அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளியை கிடை நிலையில் மென்மையாகவும், திறமையாகவும் கையாள வேண்டும். சில நேரங்களில் மயக்க உணர்வு ஏற்படலாம் என்பதை முன்னதாகவே தெரிவித்திட வேண்டும். ஊசி ஏற்றிய பின் ஏற்படும் மாற்றங்களை உற்று கவனித்து வர வேண்டும். நாடி பரிசோதனை அடிக்கடி செய்து வர வேண்டும்.

ஊசியேற்றும் போது மயக்கம், கிறுகிறுப்பு, அசௌகரியம். பலவீனம், பசி, வாந்தி, குமட்டல், படபடப்பு, குளிர், குளிர்ந்த வியர்வை போன்றவை ஏற்பட்டால் அவை எச்சரிக்கை குறிகளாகும்.

எச்சரிக்கை குறிகள் ஏற்பட்டால் உடனடியாக ஊசியை நீக்கி விட்டு கால் நீட்டி கிடைநிலையில் படுக்க வைக்க வேண்டும் சமநிலைக்கு சற்று தலையை தாழ்த்தி வைக்க வேண்டும். தேவைப்பட்டால் வெதுவெதுப்பான இனிப்பு பானங்கள் அருந்தச்செய்யலாம். அவசியமெனில் சூழலுக்கேற்ப CV6, P6, DU20ஆகிய புள்ளிகளை கையாளலாம்.

அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் அனைத்தும் நோயாளிகளிடமும் வலிப்பு வந்ததுண்டா என விசாரித்தறிய வேண்டும். ஊசி ஏற்றும் போது வலிப்பு ஏற்பட்டால் உடனடியாக வேறு மருத்துவ முறைக்கு மாற்றிட வேண்டும்.

திறமையான ஊசியேற்றலில் பெரும்பாலும் நோயாளிகள் வலியை உணர்வதில்லை. ஊசி யேற்றிய புள்ளியில் லேசான வலி, கூச்சம் மதமதப்பு கனத்த உணர்வு ஏற்பட்டால் ஆற்றல் தூண்டப்பட்டு நன்கு வினைபுரிகிறது என பொருள். ஊசியேற்றிய பின் கடு கடுக்கும் ஊசியை நீக்கிவிட்டு சரியான புள்ளியில் குத்த வேண்டும். ஊசியை நீக்கிய பின், புள்ளிகளில் லேசாக அழுத்துதல் அவசியம்.

அக்குபங்சர் என்பது ஊசியேற்றுதல் மட்டுமல்லஅக்குபங்சர் - எலக்ட்ரோ - அக்குபங்சர், லேசர் அக்குபங்சர், மாக்ஸிபஸன், கப்பிங், ஸ்கிராபிங் மற்றும் காந்த சிகிச்சை ஆகியவையும் அடங்கும். 

குழந்தைகளின் உச்சிகுழி, புற பிறப்பு உறுப்புகள், மார்பு காம்பு, தொப்புள் மற்றும் கண்மணிகளில் கண்டிப்பாக ஊசியேற்றக் கூடாது.

இந்த எச்சரிக்கை குறிப்புகளையும், அக்குபங்சர் நிபுணர்களின் அனுபவ ஆலோசனைகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் வெற்றிதான்.

NANRI ottrumai.COM