வெள்ளி, 2 அக்டோபர், 2015

பஸ்சிம உத்தான ஆசனம்

பொருள்:
பஸ்சிமம் – மேற்கு; இங்கு முதுகுப் பகுதி எனப்பொருள். உத்தானம் – நீட்டுவது.
உடலின் மத்திய பகுதி நன்கு இழுக்கப்படுவதால், இந்த பெயர்.

செய்முறை:

தரையில் அமர்ந்து கால்களை நேராக நீட்ட வேண்டும்
கைகளை காதோடு சேர்த்து மேலே தூக்க வேண்டும்
மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முன்புறம் குனிந்து, கால் கட்டை விரலை தொட வேண்டும். அப்போது நெற்றி, முழங்காலில் பட வேண்டும்.
இரண்டு முழங்கைகளும் தரையில் பட வேண்டும்; கால்களை தூக்க கூடாது.
சிரமமான ஆசனமாக இருந்தாலும், செய்யச் செய்ய சுலபமாகும்.
பலன்கள்:
1. ஜீரண உறுப்புகளை பலப்படுத்தி, அவற்றை சீராக இயங்க வைக்கிறது
2. மலச்சிக்கல் நீங்கும்
3. மாதவிடாய் பிரச்னை சரியாகும்
4. இன்சுலின் சரியாக சுரந்து, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
5. உடல் எடை குறையும்

குறிப்பு:
 முதுகு வலியுள்ளோர், யோகாசன நிபுணர்களின் ஆலோசனையோடு செய்வது நல்லது.

உப்பின் அளவு

உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடை யே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளுக்கு, ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.
"எலக்ட்ரோலைட் பேலன்ஸ்’ எனப்படுகிற, நமது உடலின் நீர் சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது முக்கியம். நாம் உண்ணும் உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சிக்கொண்டு, கழிவுகளை வெளியேற்றும் வேலையை திசுக்கள் செய்கின்றன.
அந்தத் திசுக்களின் இயக்கத்தை சரியாகப் பராமரிக்க, பொட்டாசியம் மற்றும் சோடியம் என்கிற இரு உப்புகளுமே தேவை. இந்த இரண்டின் அளவும் சரியாக இல்லாவிட்டால், பிரச்னைகளை சந்திக்கத் தயாராகிறது உடல்.
உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும். உடல் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும். தொடர்ந்து அதிக உப்புள்ள உணவையே உட்கொள்கிறவர்களுக்கு, அதன் விளைவாக, சிறுநீரகக் கோளாறுகளும் வரலாம். உப்பு குறைவதால், குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை வரும். தசைகள் பலமிழக்கும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.
சாதாரண நபர்களுக்கு, ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிராம். இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு 2 முதல் 5 கிராம் மட்டுமே அனுமதி. சோடியமும், பொட்டாசியமும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன.
உப்புக் கழிவானது, சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியே வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் ஒரு நாளுக்கு, 10 முதல் 15 கிராம் வரை உப்பு வெளியேறினால், அது நார்மல். அதைவிட அதிகமானாலோ, குறைந்தாலோ பிரச்னையின் அறிகுறி.
சாதாரண பழுப்பு நிற உப்பே ஆரோக்கியமானது. சமையலுக்கும், கூடிய வரை கல் உப்பை யே பயன்படுத்தவும்.

புதன், 23 செப்டம்பர், 2015

மூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை

எல்லா வகை மாம்பழத்திலும் ஒரு கொட்டை இருக்கும். இந்த மாங் கொட்டையின் உள்ளே உள்ள பருப்பு சிறந்த ஒரு மருந்துப்பொருள். மாம்பழம் தின்றபின் கிடைக்கக்கூடிய மிகுதிக் கொட்டைகளை எல்லாம் வெயிலில் போட்டு நன்றாகக் காயவிட வேண்டும்.எல்லாக் கொட்டைகளும் நன்றாகக் காய்ந்தபின் அவைகளை உடைத்து உள்ளே இருக்கும் பருப்புகளைக் கவனித்து சொத்தை, பூச்சி இல்லாதவைகளாக எடுத்து, அந்தப் பருப்பின் மேலுள்ள நீல நிறமான தோலையும் நீக்கிவிட்டு, சுத்தமா மாம்பருப்பை மட்டும் எடுத்து அதைப் பாக்கு அளவு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொண்டு, ஒரு இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய்விட்டு, நெய் காய்ந்தபின் அதில் அந்தப் பருப்பைப் போட்டு வறுக்க வேண்டும். பருப்பு பொன்னிறமாகச் சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும்.

பிறகு அதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவிடவேண்டும். நன்றாக ஆறியபின் அம்மியிலோ மிக்ஸியிலோ போட்டு, அதைப் பட்டுப் போல தூள் செய்து எடுத்து, அதை ஒரு வாயகன்ற சுத்தமான பாட்டிலில் போட்டு நன்றாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.



இநத்ப் பாட்டிலின் மேல் ‘மாங்கொட்டை சூரணம்’ என்று எழுதி ஒட்டிவிடவேண்டும். இது முற்கால பெரியவர்கள் கையாண்ட ஒரு முறை. நல்ல பலன் தரக்கூடியது.

இது உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய கைகண்ட மருந்து. வீட்டில் ஏதாவது உஷ்ண சம்பந்தமான பதார்த்தங்களைச் செய்து சாப்பிட்டு விட்டால், அன்றைய சாப்பாட்டுடன் ஒரு டீ ஸ்பூன் அளவு இந்த மாங்கொட்டைச் சூரணத்தையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டால், உஷ்ண பதார்த்தம் ஒன்றும் செய்யாது. அதாவது கோழி, பப்பாளிப்பழம், பலாப்பழம், மாம்பழம் இன்னும் பலவிதமான உஷ்ண பதார்த்தங்களைச் சாப்பிட்ட அன்று மட்டும் இதைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு அதாவது மூன்று வயதிற்கு மேல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு அரைத் தேக்கரண்டி அளவு கொடுத்தால் போதுமானது.

மூல வியாதியால் கஷ்டப்படுகிறவர்கள் இந்த மாங்கொட்டை சூரணத்தை ஐந்து நாள் காலை மாலை பாலில் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலக்கடுப்பு, இரத்தம் விழுதல், ஆசனக் கடுப்பு குணமாகும்.

ஐந்து நாள் விட்டு மறுபடி ஐந்து நாள் தொடர்ந்து மூலம் குணமாகும் வரை சாப்பிடலாம்.

இந்த மருந்தை சாப்பிடும்பொழுது அதிக காரம், அதிகப் புளி இவற்றை நீக்கிவிட்டு சாப்பிடவும். அத்துடன் அரைக் கீரை, முளைக்கீரை, பருப்புக் கீரை இவைகளில் ஒன்றைத் தாராளமாக சாப்பிட்டு வந்தால் மூலநோய் பூரணமாகக் குணமாகும்.

பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க...



தேவையற்ற ரோமம் போக குப்பைமேனி, வேப்பிலை, விரலிமஞ்சள் மூன்றையும் அரைத்து தேவையற்ற ரோமத்தின் மீது பூச உதிர்ந்து விடும். பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். 

இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல் பவுடர்-.

 பயத்தம் பருப்பு அரை கிலோ,
 சம்பங்கி விதை 50 கிராம், 
செண்பகப்பூ 50 கிராம், 
பொன் ஆவாரம் பூ 50 கிராம், 
கோரைக்கிழங்கு 100 கிராம். 

இவற்றை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், குளிக்கும் போது இந்தப் பவுடரை குழைத்துப் பூசுங்கள். மெழுகு போல் சருமம் மிளிரும். என் வயது 21. நான் நல்ல நிறமாக இருப்பேன். என் முகத்தில் உதடுகளுக்கு மேல் ரோம வளர்ச்சி அதிகமிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். மஞ்சள் உபயோகித்தும் பலனில்லை. 

வேறு என்ன தீர்வு? 
மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஹார்மோன் கோளாறுகள் இருந்தாலும் இப்படி ரோம வளர்ச்சி இருக்கும். ஒரு வெற்றிலை, ஐந்து மிளகு, மூன்று பற்கள் பூண்டு சேர்த்து வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரவும். இது உங்கள் மாத விலக்கு சுழற்சியைம் சரியாக்கும். ரோம வளர்ச்சியையும் குறைக்கும். சிலருக்குத் திருமணத்துக்கு முன்பு வரை இருக்கிற ரோம வளர்ச்சி, திருமணத்துக்குப் பிறகு உடலில் நிகழ்கிற ஹார் மோன் மாறுதல்களால் குறையும். உங்களுக்கும் அப்படி நடக்கலாம். பயத்தம் பருப்பு மற்றும் கஸ்தூரி மஞ்சளை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சாதாரண மஞ்சள் மாதிரி இல்லாமல் மரத் துண்டு மாதிரி இருக்கும்) அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் காய விட்டுக் கழுவவும். வாரம் மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். மீதி நாட்களில் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். கூடவே திரெடிங் செய்து வரலாம். இவையெல்லாம் ரோம வளர்ச்சியைப் படிப் படியாகக் கட்டுப்படுத்தும். கவலை வேண்டாம்.

புதன், 9 செப்டம்பர், 2015

சவ்வு தேய்மானம், விலகல் என்றால் என்ன?




சவ்வு மிட்டாய் அறிந்த நமக்கு சவ்வுக்கு விளக்கம் அதிகம் தேவையில்லை. உங்களில் சிலர் இந்த வார்த்தைகளை கடந்து அல்லது நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ ஏற்பட்டதாக அறிந்து இருப்பீர்கள். இந்த சவ்வு போன்ற பகுதியை ஆங்கிலத்தில் Ligament என்று அழைப்பர். இது போன்ற வார்த்தைகளை சொல்லி வலியின் உச்சத்தில் இருக்கும் ஒருவரை மீண்டும் புரியாத ஒரு வார்த்தையைச் சொல்லி துன்பப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் மருத்துவர் பொதுவாகக் கூறும் ஒரு விளக்கம் சவ்வு விலகல் அல்லது தேய்மானம்.
மருத்துவர் உங்களுக்கு எல்லாவற்றையும் விளக்க ஆரம்பித்தால் சிலர் இவர் ரொம்ப பயமுறுத்துகிறார் என்று ஆளை மாற்றி விடுவார்கள். இதனால் அனைத்து மருத்துவர்களும் தரும் பொதுவான விளக்கம் சவ்வு விலகல், சவ்வு தேய்மானம். உண்மையில் இந்த சவ்வுத் தேய்மானம் போன்றவற்றிற்கு நிறைய மாறுபாடுகள் உள்ளன.
உடம்பில் நமக்குப் பொதுவாக தெரிந்த உள் உறுப்புக்கள் சில, தெரியாதவை பல, இந்தத் தெரியாத பலவற்றில் ஒன்று தான் இந்த சவ்வு. சவ்வு என்பதற்கு உங்கள் அனைவருக்கும் விளக்கம் தெரிந்து இருக்கும். இழுத்து விடும்போது மீண்டும் தன்னிலைக்கு அதாவது ஆரம்ப நிலைக்கு மீண்டும் வந்தடையும் எதையும் சவ்வு எனலாம். இதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் Rubber Band மாதிரியான ஒரு பகுதி.
இது உடம்பில் உள்ள அனைத்து மூட்டு பகுதிகளிலும் அமைந்துள்ளது. இது மூட்டுகள் வலுவாக எந்த தடையும் இல்லாமல் இயங்குவதற்கு உதவுகிறது. அதேபோல், இதன் முக்கிய வேலைகள் மூட்டுகளின் உள் கட்டமைப்பைத் தாங்கி பிடித்துக் கொள்கிறது. இதை ஆங்கிலத்தில் intra articular stability என்பார்கள். முன் கூறியது போல இது ரப்பர் போன்றது என்பதால் இரண்டு எலும்புகள் அதாவது மூட்டு இயங்கும் போது முன் பின் செல்லும் எலும்புகளை வழி நடத்துகிறது. இதை ஆங்கிலத்தில் Dynamic Stability என்பார்கள்.
பொதுவாக இந்த சவ்வு நார்க்கற்றைகளால் ஆன பகுதி. இதன் இயக்கம் மிக முக்கியமான் ஒன்றாகும். குறிப்பாக, மூட்டுகள் சரியாக இயங்குவதற்கு இன்றியமையாதது. ஒருவர் தன் மூட்டுகளை அதிகமாக இயக்கும் போது இந்த சவ்வு போன்ற பகுதிகள் தனது பழைய நிலைக்கு திரும்பும் பண்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகின்றன. ஒரு சவ்வு இந்தப் பண்பை இழக்கும் போது வலிகளைத் தர ஆரம்பிக்கிறது. இது பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கும், வயதானவர்களுக்கும் மற்றும் போதிய உடற்பயற்சி இல்லாமல் விளையாடும் யாருக்கு வேண்டுமாலும் சவ்வு விலகுதல் அல்லது கிழிந்து போகுதல் ஏற்படலாம்.
மிக அதிக நேரம் இயங்கும் போதோ அல்லது விளையாடும் போதோ ரப்பர் போன்ற இந்த சவ்வு கடுமையான இயக்கங்களை சந்திக்கும் போது, சில நேரங்களில், உள்ளே உள்ள சில நார்கற்றைகள் கிழிந்தோ அல்லது காயம் ஏற்பட்டோ வலிகளை ஏற்படுத்தும். இதனை ஆங்கிலத்தில் Sprain என்பார்கள். மருத்துவர்கள் நமக்கு விளக்கும் போது இதனை சவ்வு விலகல் என்று பொதுவான வார்த்தையை கூறி புரியவைக்கலாம்.

முகமுடக்கு வாதம்


அறிமுகம்

மண்டையோட்டு ஏழாம் நரம்பின் (முக நரம்பு) செயல் இழப்பால் முகத்தின் ஒரு பகுதி தசைகள் பலவீனம் அடைவதால் முகமுடக்கு வாதம் உண்டாகிறது. நபருக்கு நபர் அறிகுறிகள் மாற்றம் அடைகின்றன. இதன் வகைகளாவன:

பகுதி முகமுடக்கு வாதம்: இது இலேசான தசை பலவீனம்

முழு முகமுடக்கு வாதம்: ஒட்டு மொத்தமாக அசைவு இருக்காது (ஆனால் இது மிக அபூர்வம்).
நோயறிகுறிகள்
பாதிக்கப்பட்ட கண்ணில் உறுத்தல் (உலர்தல், அதிக கண்ணீர் போன்று)
முகத்தின் பாதிக்கப்பட்ட பக்கத்தில் காதின் கீழ் வலி
முகத்தின் பாதிக்கப்பட்ட பக்கத்தில் வாயில் இருந்து எச்சில் வடிதல்
வாய் உலர்தல்
உண்ண, குடிக்க சிரமம்
பேச்சுக் கோளாறு
முகத்தின் ஒரு பகுதியில் பலவீனம் அல்லது வாதம் உண்டாவதால் கண்களை மூடுவதில் சிரமம்; வாய் கோணுதல்
சுவை உணர்வில் மாற்றம் அல்லது குறைபாடு
பாதிக்கப்பட்ட காதில் ஒலி உணர்வு கூடுதல்
தாடையைச் சுற்றி வலி
தலைவலி
தலைச்சுற்றல்
காரணங்கள்
வைரஸ்
முக நரம்பு அழற்சிக்கு அக்கி வைரசே பொதுவான காரணம்
குளிர் புண்களை உண்டாக்கும் அக்கி வைரஸ் 1 அல்லது பிறப்புறுப்பு புண்களை உண்டாக்கும் அக்கி வைரஸ் 2
சின்னம்மையையும் குளிர்நடுக்கத்தையும் உண்டாக்கும் வேரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ்

முக நரம்பு

மூளையில் இருந்து முகத்துக்குச் செல்லும் முக நரம்பு (VII), மேல் நாடிக்கு அருகில் உள்ள எலும்பின் ஓர் ஒடுங்கிய இடைவெளி வழியாக கடந்து செல்கிறது. முக நரம்பு நெருக்கப்பட்டாலோ அல்லது வீங்கிவிட்டாலோ முகத்தில் உள்ள தசைகளுக்கு மூளை அனுப்பும் சைகைகளில் தடங்கல் ஏற்படும்.
இந்த இடையூறினால் நரம்பணுக்களுக்குச் செல்லும் இரத்தமும் உயிர்வளியும் குறைவு படும். இதனால் முகத்தில் பலவீனமும் வாதமும் உண்டாகும்
நோய்கண்டறிதல்

முகமுடக்கு வாதத்தைக் கண்டறிய தனிப்பட்ட சோதனைகள் எதுவும் இல்லை. அறிகுறிகளைக் கொண்டு மருத்துவர் நோயைத் தீர்மானிக்கிறார்.

காந்த அதிர்வு பிம்பம் (எம்.ஆர்.ஐ): இதன் மூலம் முகநரம்புக்கு அழுத்தம் கொடுக்கும் காரணி அறியப்படுகிறது. இதில் வானொலி அலைகளும் வலிமையான காந்தப்புலமும் பயன்படுத்தப்பட்டு உடலின் உட்பகுதியின் விவரங்கள் அடங்கிய பிம்பம் உருவாக்கப்படுகிறது.

கணினி வரைவி

தொற்று, கட்டி போன்ற அறிகுறிகளின் பிற காரணங்களை அறிய இது பயன்படுத்தப் படுகிறது. முக எலும்பு முறிவுகளை உறுதிப்படுத்தவும் இது எடுக்கப்படுகிறது.

மின்னலை வரைவி

(இ.எம்.ஜி) தோலின் வழியாக ஒரு மிகவும் மெல்லிய மின்வாய் ஊசி தசைக்குள் செலுத்தப்படுகிறது. அலைக்காட்டியின் மூலமாகத் தசை மற்றும் நரம்புகளின் மின்செயற்பாடு அளக்கப்படுகிறது. இதன் மூலம் நரம்புகளின் சிதைவின் அளவைக் கணக்கிட முடியும்.
நோய் மேலாண்மை

வலி நிவாரணிகள்

பாரசெட்டமால் மற்றும் ஊக்கமருந்துகள் அல்லாத எதிர் அழற்சி மருந்துகளான இபுபுரூபன் போன்றவை சிறந்த வலி நிவாரணிகள் ஆகும்.

வெப்ப மற்றும் குளிர் மருத்துவம்

வெந்நீர்க் குளியல் அல்லது வெந்நீர்க் குடுவைகளை பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்கலாம். ஐஸ் பை அல்லது உறைந்த காய்கறிப் பைகளை வலியுள்ள இடத்தில் வைப்பதும் பலனளிக்கும்.

மன ஓய்வு

நோயைப் பற்றி கவலைப்படுவதால் ஏற்படும் தசை இறுக்கம் நிலைமையை மோசமாக்கலாம். மன ஓய்வாக இருப்பது வலியைக் கட்டுப்படுத்த உதவும்.

மருந்து

ப்ரெட்நிசோலோன் (Prednisolone) போன்ற கோர்ட்டிகோஸ்டிராய்டுகள் அழற்சியை குறைக்க உதவும். விரைவில் நோய்மீண்டெழவும் துணை புரியும்.

உடற்பயிற்சி மருத்துவம்

முகப் பயிற்சியால் தசைகளை வலுப்படுத்தி அவற்றிற்கிடையே ஒத்திசைவையும் அசைவெல்லையையும் மேம்படுத்துவது எவ்வாறு என்று உடற்பயிற்சியாளர் கற்றுக்கொடுப்பார்.

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க



காலநிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அவை ஒத்துக் கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உட லில்நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர் ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.
வைட்டமின் ஏ, சி, இ
வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட் டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய்எதிர்ப்பு தன்மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன.

கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கிய ம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.
ப்ரோபயாட்டிக்
தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொரு ட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதி ர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபி ன் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட்டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.
எலுமிச்சை சாறு
எலுமிச்சைசாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உத வுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையு ம் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உட லுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களு க்கு சாதகமான, வெப்ப நிலையை பராமரி க்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.
துத்தநாகம்
இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்புதன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக் குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போ க வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றா க்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.
மூலிகைகள்
உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிக ரிக்கும் மூலிகை களை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உட லில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரி யாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.



இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலி ன் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. இய ற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில், சாதாரணமாக வளர்க்கப் படும் பசுவின் பாலைவிட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் இ சத்தும், 75 சதவீத ம் அதி களவு பீட்டா-கரோட்டினும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. மேலும், இவற்றில், சிறந்த நோய் எதிர்ப்பு திறனான “சியா சான்தைன்’ மற்றும் “லூட்டீன்’ ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக மாக உள்ளன. இதே போன்று, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றாலு ம், உடலின் நோய் எதிர்ப்புதிறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன.