வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள்!!!

sarumathil tangiyulla azhukkukalaib bokka uthavum sila
அழுக்குகளானது சருமத்தில் சேர்ந்து கொண்டே தான் இருக்கும். அதிலும் சுருக்கங்கள் விழும் பகுதியில் தான் அழுக்குகள் அதிகம் சேரும். அதில் குறிப்பாக கழுத்து, மூட்டுகள், அக்குள் மற்றும் பல கண்ணுக்கு தெரியாத பகுதிகளில் அதிகம் சேரும். அழுக்குகள் சரியாக போகாமல் இருந்தால், அவ்விடங்கள் கருமையாக மாற ஆரம்பிக்கும். இப்படி இந்த இடங்களில் சேரும் அழுக்குகள் குளித்தால் போகாது. மாறாக வாரம் ஒரு முறை ஸ்கரப்பிங், கிளின்சிங் போன்ற முறையை தவறாமல் செய்து வந்தால், அழுக்குகளை போக்கலாம். அதற்கு கடைகளில் பல பொருட்கள் விற்கப்படுகின்றன. இருப்பினும் அப்படி பணத்தை செலவழித்து அவற்றை பயன்படுத்தி, அதனால் சில சமயங்களில் சருமத்தில் பிரச்சனைகளை சந்திப்பதை விட, இயற்கை முறை என்னவென்று தெரிந்து கொண்டு,
அவற்றைப் பின்பற்றினால், அழுக்குகளை எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் போக்கலாம். இங்கு சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!! ஆயில் மசாஜ் வாரம் ஒருமுறை வெதுவெதுப்பான எண்ணெயால் உடல் முழுவதும் நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் சுடுநீரில் குளித்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் நீங்குவதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பாடி லோசன் அழுக்கு உள்ள பகுதியை நீரால் நனைத்து, பின் அவ்விடத்தில் பாடி லோசனை எடுத்து தடவி, மசாஜ் செய்ய வேண்டும். பின் நகங்களைக் கொண்டு சருமத்தில் உள்ள அழுக்குகளை எடுக்கலாம். இதனால் அழுக்குகள் முற்றிலும் வந்துவிடும். ஈரமான துணி ஈரமான துணியை நீரில் நனைத்து பிழிந்து, பின் அதனைக் கொண்டு உடலைத் மென்மையாக துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் அழுக்குகள் தங்காமல் இருக்கும். எலுமிச்சை ஸ்கரப் எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் தன்மை கொண்ட பொருள். ஆகவே ஒரு எலுமிச்சை துண்டை, உப்பில் பிரட்டி, பின் அழுக்கு நிறைந்த இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்தால், அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும். சுடுநீர் குளியல் தினமும் சுடுநீரில் குளித்து வந்தால், அழுக்குகள் தங்காது. அதிலும் அப்படி குளிக்கும் போது நன்கு ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து குளிக்க வேண்டும். ஓட்ஸ் ஓட்ஸ் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடல் அழகைப் பராமரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. அதுவும் சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க ஓட்ஸ் உதவி புரிகிறது. அதற்கு ஓட்ஸை பால் அல்லது தயிரில் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சர்க்கரை இதுவும் மற்றொரு சிறப்பான வழி. அதற்கு ஈரமான சருமத்தை சர்க்கரை கொண்டு ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

Enjoy this page? Like us on Facebook!)