வியாழன், 20 நவம்பர், 2014

முருங்கைகாய்.

http://s4.hubimg.com/u/3410135_f260.jpg

என்ன சத்துகள் இருக்கு: 


தினமும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் புரதம் 2.5 கிராம், கார்போஹைட்ரேட் 3.7 கிராம்,தண்ணீர் 86.9%, கலோரி 26,ஃபைபர் 4.8 கிராம்,கொழுப்பு 0.1 கிராம்,விட்டமின் ஏ 0.11 மிகி,வைட்டமின் பி (கோலைன்) 423 மி.கி,வைட்டமின் பி 1 (தயாமின்) 0.05 மி.கி, விட்டமின் பி2 (ரிபோப்லாவின்) 0.07 மி.கி,வைட்டமின் பி3 (நிகோடினிக் அமிலம்) 0.2 மிகி,கால்சியம் 30 மில்லி கிராம்,மெக்னீசியம் 24 மில்லி கிராம் கொண்டுள்ளது.

யாருக்கு நல்லது :


 குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை,வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

யாருக்கு நல்லதல்ல: 


முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்:


 நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும். முருங்கைகாயை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குணமாகும் மேலும் மூலம் தலைவலி, இரத்த நுகர்வு, சிறுநீர் நீர் சுத்திகரிப்பு, உடல், எரிவாயு பிரச்சினைகள் நீங்கும் உடலில் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் முருங்கைகாய் சாப்பிட்டு வந்தால் உயர் வெப்பநிலை குறையும். கர்ப்பிணி பெண்கள் முருங்கைகாய கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் பிரவசத்திற்கு முன்பும் பிரவசத்திற்கு பின்பும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முருங்கைகாய் நீக்குகிறது. பிரசவத்திற்கு பின்னர் முருங்கைகாய் சாப்பிடுவதன் மூலம் தாய்க்கு பால் அதிகரிக்கும். சளியைப் போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.