இப்படி ஆழ்மனதை வெற்றி என்னும் புள்ளியில் ஒருநிலைப்படுத்தி குவிக்க தன்னம்பிக்கை மிக மிக அவசியம்... தன்னம்பிக்கை என்பது மனம்-உடல் இரண்டும் சம்பந்தப்பட்டது... நம் ஆழ்மனத்தை கவலைகள் சூழ்ந்தால் நம்மால் வெற்றியை சுவைக்க முடியாது.. அதுபோல... கவலைகள் சூழும் பட்சத்தில் நம் மீதே நமக்கு சந்தேகம் வந்து விடும்.. இந்த சந்தேகம் முடிவில் நம்மை தோல்வியில் கொண்டு போய் நிறுத்தும்...
தெரிந்தோ தெரியாமலோ கவலையான சூழ்நிலையில் நமது கையை கன்னங்களில், மோவாயில், மேல் உதட்டில் வைத்துக்கொள்வோம்.... ஆனால் அதில்தான் இருக்கிறது ஒரு அற்புதமான அக்குபிரஷர் புள்ளி... நமது மேல் கவலையை போக்கும் ஒரு அற்புதமான இடம் உதட்டிற்கும் மூக்கிற்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கிறது.
ஆம்.. கவலையான தருணங்களில், உங்களது தன்னம்பிக்கை குலையும் நேரங்களில் சுண்டு விரலின் நுனியால் உதட்டிற்கும் மூக்கிற்கும் இடையே இருக்கும் அந்த புள்ளியில் (படத்தில் குறிபிட்டுள்ள இடம்) மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்...மூன்று நிமிடங்கள் அழுத்தம் கொடுத்துக்கொண்டே மூச்சை ஆழமாக இழுத்து விட வேண்டும். இதை ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். இப்படி செய்வதனால் அலைபாய்ந்த மனம் ஒரு நிலைப்படும்... பரிதியை கண்ட பனி போல... கவலைகள் கரைந்து காணாமல் போகும்... தன்னம்பிக்கை பெருகினால் அச்சம் விலகி, மனதில் ஒரு அமைதி ஏற்படுவதை உணர முடியும். கவலை மற்றும் பயத்தை போக்கி, உடலை தன்னை தானே சரி செய்துக் கொள்ளச் செய்து, எண்ணங்களை நடுநிலையாக்கும் புள்ளி இது. நாம் விரும்புவதை அடைய உடலிற்கும், மனதிற்கும் சக்தியை உடனடியாக கொடுக்கும் புள்ளியாக கருதப்படுகிறது.
அதே நேரம் வேறு யாரேனும் திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு நிற்போம்..அப்படியான சூழ்நிலையில் மயக்கமடைந்தவரின் மேலுதட்டு பள்ளத்தில் படத்தில் காட்டியபடி சுட்டு விரலால் தொடர்ந்து அழுத்தம் கொடுங்கள்... சில வினாடிகளில் மயக்கமடைந்து விழுந்தவர் எழுந்து அமர்வார்..
மேலுதட்டில் இருக்கும் இந்த புள்ளியானது மூக்கின் வழியாக மேலேறி நமது உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் தலையில் இருக்கும் சகஸ்காரம் என்ற முதன்மையான சக்கரத்தின் தொட்டு, முதுகு தண்டுவடம் வழியாக மூலாதாரச் சக்கரத்தை இணைக்கிறது...
இந்த பாதைதான் நமது உடலின் சக்தி ஓட்டப்பாதைகளில் ஆளுமைப்பாதை (Governing Vessel) ஆகும்... இந்த பாதையே நமது உடலை கட்டுப்படுத்தவும் இயக்கவும் செய்கிறது...
படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளியை அழுத்தி மூச்சை ஆழமாக இழுத்து விடும்போது இந்த சக்தியோட்டப்பாதை தூண்டப்பட்டு நமது உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கிறது... இப்போது சொல்லுங்கள்.. அது சாதாரண புள்ளியா?..சக்திச்சுரங்கமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.