வியாழன், 5 ஜூன், 2014

சருமத்தை அழகாக்க வினிகரைப் பயன்படுத்துங்களேன்...

சருமத்தை அழகாக பராமரிப்பதற்கு நிறைய பொருட்கள் உள்ளன. அவற்றில் வினிகரும். வினிகர் சமைப்பதற்கு மட்டுமின்றி, அழகைப் பராமரிக்க உதவும் பொருட்களுள் ஒன்றாகவும் உள்ளது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும். எனவே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். இத்தகைய வினிகர் மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கக்கூடியது. எனவே இரசாயனப் பொருட்கள் கலந்த க்ரீம்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களை பின்பற்றுவதே மிகவும் சிறந்தது. இப்போது வினிகரை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

உடல் துர்நாற்றம் ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமானது நீங்கும்.

மென்மையான சருமம்
 ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் வினிகரை, முகம் கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ நீரில் கலந்து செய்தால், சருமம் நன்கு மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும்.

எண்ணெய் பசை 
சருமத்தினருக்கு சிறந்தது எண்ணெய் பசை சருமத்தினருக்கு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயானது இருக்கும். எனவே ஒரு கப் நீரில் பாதிக்கு பாதி வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கழுவி வந்தால், சருமத்திலிருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, முகம் அழகாக அளவான எண்ணெயோடு வறட்சியின்றி காணப்படும்

வேனிற்கட்டி 
அதிகப்படியான வெயிலால் சருமத்தில் ஏற்படும் வேனிற்கட்டியை போக்குவதில் வினிகர் உதவியாக உள்ளது. மேலும் வினிகர் சருமத்தில் பிஎச் தன்மையை சீராக தக்க வைத்து, சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்கிறது.

சரும எரிச்சல் மற்றும் அரிப்பு 
வெயிலால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல், கொசுக்கடி, பூச்சிக்கடியால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வெட்டுக் காயம் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது.

அழகான பாதத்திற்கு 
பாதத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை போக்குவதற்கு வினிகரை நீரில் கலந்து, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும்.

குதிகால் வெடிப்பு 
குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள், மெருகேற்ற உதவும் கல் கொண்டு, பாதங்களை தேய்த்து, பின் வினிகர் நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும். இதனால் பாத வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் போய்விடும்.

மென்மையான கைகள் 
கைகள் அழுக்கோடு, மென்மையிழந்து இருக்கிறதா? அப்படியெனில் கைகளில் உள்ள கிருமிகளை போக்குவதற்கு, வினிகர் கலந்த நீரில், கைகளை கழுவ வேண்டும். இதனால் கிருமிகள் நீங்குவது மட்டுமின்றி, கைகளும் மென்மையாகும்.

கரும்புள்ளிகள்
 3 ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலந்து, 2 மணிநேரம் ஊற வைத்து, இரவில் தூங்கும் முன் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து, காலையில் கழுவினால், கரும்புள்ளிகள் அறவே போய்விடும்.

முதுமை தோற்றம்
 முதுமை தோற்றத்தை வெளிப்படுத்தும் புள்ளிகளை போக்குவதற்கு, வெங்காயச் சாற்றில் சிறிது வினிகர் சேர்த்து கலந்து தடவி, ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்தால், அவற்றை முற்றிலும் போக்கிவிடுவதோடு, வராமல் தடுக்கலாம்.

சிறுநீரகத் தொற்று வியாதி

1.நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீரகத் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கு முக்கிய காரணம், நீரிழிவு வெள்ளை அணுக்களின் செயலை முடக்கிவிடுகிறது. அடுத்தது, நீரிழிவால் நரம்பு மண்டலம் பாதிப்பு அடைகிறது. இதனால் சிறுநீர்ப்பை சரிவர இயங்காது. சிறுநீர்த்தேக்கம் சிறுநீர்ப்பையில் ஏற்பட்டு கிருமிகள் உற்பத்தியாகக் காரணமாகிறது.
2. தொற்றுக் கிருமிகள் பெண்களைப் பெரும்பாலும் சுலபமாகப் பாதிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், பாலியல் உறுப்பின் போதிய சுத்தமின்மை. அடுத்தது, மாதவிடாய் நின்றபிறகு, ஹார்மோன்கள் மாற்றத்தால், பெண்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து தொற்றுநோய் வர வாய்ப்புள்ளது.
3. ஆண்களைப் பொறுத்தவரையில், இளம் வயதில் சிலபேருக்குத் தவறான உடலுறவால், வி.டி. கிருமிகள், எய்ட்ஸ் போன்றவை தொற்றிக் கொண்டு, சிறுநீரக அழற்சி, சிறுநீர்ப்பாதை அடைப்பு போன்றவை ஏற்படும். நடுவயதினருக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றால் தொற்றுக்கிருமிகள் தாக்கி, சிறுநீர்ப்பாதை அடைப்பு ஏற்படலாம். வயதானவர்களுக்கு புரோஸ்டேட் வீக்கம், இரத்தநாளத் தடிப்பு போன்றவற்றால் சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேக்கப்பட்டு தொற்றுக்கிருமிகள் ஏற்படலாம். வயதானவர்களுக்கு நாள்பட்ட நீரிழிவால் நரம்புகள் பாதிக்கப்பட்டு சிறுநீர்ப்பை சுருக்கிவிரியும் தன்மையை இழந்து சிறுநீர் தேக்கம் ஏற்பட்டு கிருமிகள் வளர ஏதுவாகிவிடுகிறது.
4. குழந்தைகளைப் பொறுத்தவரையில், ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் பிரியும் இடத்தில் தோல் அடைப்பு இருந்தாலும், சில குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பாதைக்கு வந்த சிறுநீர் மீண்டும் ஏதோ காரணத்தால், சிறுநீர்ப்பைக்கே திரும்பிச் செல்லும் காரணத்தால், சிறுநீர்ப்பையில் சிறுநீர்த்தேக்கம் ஏற்பட்டு, கிருமிகள் வளர ஏதுவாகி விடுகிறது. இதற்கு வெஸ்டிகோ யூர்டெரிக் ரிப்லக்ஸ் (Vestico Urteric Reflux) என்று பெயர்.
பெண் குழந்தைகள் சரியான முறையில் தன் பாலியல் உறுப்புகளைச் சுத்தம் செய்து வைத்திருக்காவிட்டால், நிச்சயம் தொற்றுக்கிருமிகள் சிறுநீரகத்தைத் தாக்கும். பெண் குழந்தைகளின் தாய் இதில் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பஸ்திரீகள் கவனமாக இருக்கவேண்டும்.
பொதுவாக, பாலியல் உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டு, சிறுநீரை தேவையில்லாமல் அடக்காமல் இருந்து, அதிகமாக நீரை அருந்திக்கொண்டு, நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, தகாத உடல்உறவு கொள்ளாமல் விழிப்புணர்வோடு இருந்தால், சிறுநீரகக் தொற்றுக்கிருமிகளிலிருந்தும் மற்றும் பல சிறுநீரகக் கோளாறுகளிலிருந்தும் தப்பிக்கலாம்.
சிறுநீரகத் தொற்று வியாதிகளின் அறிகுறிகள் என்னென்ன?
ஏற்கெனவே ஆங்காங்கெ குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் மீண்டும் வரிசையாக எழுதுகிறேன்.
உடலில் தேவையில்லாமல் அரிப்பு, இ. சிறுநீர் சிறிது வலியுடன் (முன்பாகவோ, பிற்பாடோ) வெளியேறும், இ. சிறுநீர் பிரிந்த பிறகும், சிறிது சிறிதாக சிறுநீர் வெளியேறும், (அதாவது முழுமையாக ஒரேயடியாக வெளியேறாது) அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல் இ. குளிர்காய்ச்சல் (கட்டுப்படுத்த முடியாத நடுக்கம், வெகு சீக்கிரம் உடல் உஷ்ணம் 104_106 டிகிரிக்கு ஏறுதல், மூச்சுத்திணறல் இவை 30லிருந்து 45 நிமிடம் வரை இருக்கும். பிறகு அடுத்தடுத்து வரலாம்) . வாந்தி . சிறுநீர் பிரியும்பொழுது எரிச்சல், குத்தல், சிலசமயம் சிறுநீருடன் இரத்தம் கலந்து செல்லுதல், துர்நாற்றம், பாலியல் உறுப்பில் ஆறாத புண், வீக்கம், . விலா, அடிவயிறு போன்ற இடங்களில் தாங்க முடியாத வலி, இ. இரத்த சிவப்பு அணுக்கள் (RBC) உற்பத்தியில், சிறுநீரகமும் பெரும்பங்கு வகிக்கிறது. ஆகவே, தொற்றுக்கிருமியால் செயல் இழந்த சிறுநீரகம் சிவப்பு அணுக்களைச் சரியாக உற்பத்தி செய்யத் துணைபுரிவதில்லை. ஆகவே, சிவப்பு அணுக்கள் குறைவாகி சோகை (Anemia) காணும். இது மேற்கொண்டு பல பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

வெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்


நமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்கலங்கள் தான் மெலனின் நிறப்பொருட்களை உருவாக்கும். நிறப்பொருட்கள்அதிகமாக இருந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் சிவப்பாகவும்தோன்றுவோம்.

ஆனால் சிலருக்கு குறிப்பிட்ட இடங்களில் உள்ள கலங்கள் ஏதோவொருகாரணத்தால் பாதிப்படைவதால், அவ்விடத்தில் இருக்கும் நிறப்பொருட்கள் குறைந்து வெண்புள்ளிகளை ஏற்ப டுத்துகிறது.இந்தக் குறைபாடு உடலின் எந்தப்பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம்.


வெண்புள்ளிகளில் இரண்டு வகைகள் உண்டு.
1.`விட்லிகோ'
2.`லூக்கோ டெர்மா'.


இதில் 'விட்லிகோ' எனப் படுவது உடல் முழுவதும் வேகமாகப் பரவக்கூடியது.பெரும்பாலும் உதடு, கைகள், கால்கள், தொப்புள், பிறப்புறுப்புகள், மார்புக் காம்பு,காது போன்ற இடங்களில் தோன்றி படிப்படியாக வளரத் தொடங்கும். இதில் ஒருசிலருக்கு உடல் முழுவதும் வேகமாகப் பரவி, வெள்ளைகாரர் போல்மாறிவிடுவதும் உண்டு.


`லூக்கோ டெர்மோ' எனப்படுவது உடலின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும்பாதிக்கும் வகையைச் சேர்ந்தது. உடலில் எங்கேனும் தீயால் சுட்ட புண்கள்இருந்தாலோ அல்லது இறப்பர் செருப்பை உற்பத்தி செய்யும் தொழிற்சலைகளில்பணிபுரிந்தாலோ இவ் வகையான வெண்புள்ளி வரும்.


இத்தகைய குறைபாடுகளுக்கு முக்கிய காரணம், உடலில் உள்ள நோய் எதிர்ப்புசக்தி குறைந்து, எதிர் வினையை ஏற்படுத்துவதால், நிறப்பொருள் அணுக்கள்தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன. இது ஒரு சிலருக்கு பரம்பரைகாரணமாகவும் ஏற்படலாம். தைரொய்ட் சுரப்பிகளின் சமச்சீரற்ற செயற்பாடுகள்,நீரிழிவு வியாதி, நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், ஊட்டச்சத்துக் குறைவு, கலங்களுக்குக் கிடைக்க வேண்டிய விட்டமின் குறைபாடுஆகியவைகளால் இவை உருவாகும்.


மேலும் ஒரு சிலருக்கு அமீபியாஸ், குடல் நோய்கள், குடற் பூச்சிகள், இரத்தச்சோகை, தைபொய்ட் காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றின்தாக்குதலாலும் இவை ஏற்படும். அத்துடன் நரம்பு மண்டலத்தின் தூண்டுதல்இயல்பு நிலைக்கு மாறாக குறையுடன் செயற்பட்டாலும் நிறப்பொருள் அணுக்கள்தம்முடைய பணியைச் சரிவரச் செய்யாது. இதனால் இந்தக் குறைபாடு எப்போதுவேண்டுமானாலும், எந்த வயதிலும் தோன்றும்.


உடலியக்கத்தைச் சீராகச் செயற்படவைப்பதுதான் இதற்கான சரியான சிகிச்சைமுறை . அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்ததால் வந்ததா? பரம்பரையின்காரணமாக ஏற்பட்டதா? வேறு சில நோய்களின் பின்விளை வினால்உருவானதா? என்பதை ஆராய்ந்தறிந்து, உடல் திறனுக்கு ஏற்பசிகிச்சையளிக்கவேண்டும். உடலின் இயக்கம் சீரடைந்தால், சருமத்தில் உள்ளமெலனோசைட் கலங்கள் பணியாற்றத் தொடங்கும். தோலின் மீது சூரிய ஒளிபட்டால் கூட நிறப்பொருட்கள் வேலை செய்யும். அதனால் சில மருத்துவமுறைகளில் சில வெளிப் பூச்சுகளை பூசிக்கொண்டு, சூரியனின் ஒளி உடலில்படுமாறு நில்லுங்கள் என்று பரிந்துரைப்பார்கள்.


பொதுவாக உதடுகளில் தோன்றும் வெண்புள்ளிகள் விரைவில் குணமடையும்.உடல் முழுவதுமாகத் தோன்றும் வெண்புள்ளிகளுக்கும், ஒரு சில இடங்களில்மட்டும் இருக்கும் வெண்புள்ளிகளுக்கும் சிகிச்சை பெற்றால்தான் குணமாகும்.அத்துடன் பொறுமையுடனும் சிகிச்சையை எடுத் துக்கொள்ளவேண்டும்.


உடலில் எங்கேனும் வெண்புள்ளிகள் தோன்றினால் விட்டமின் C சத்துஅதிகமாக இருக்கும் எலுமிச்சை , திராட்சை , ஒரேஞ்ச், ஊறுகாய், மீன், முட்டை,மாமிசம் ஆகிய வற்றைத் தவிர்த்துவிடவேண்டும். அத்துடன் பொதுவாகபுளிப்புச் சுவையையே தவிர்த்து விடவேண்டும். அதற்கு மாறாக கரட், பீட்ரூட்,முள்ளங்கி, பனை வெல்லம், பேரீச்சை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.


வெண் குஷ்டம் என்பது தொழுநோயின் அறிகுறியாகும். இதற்கும்,வெண்புள்ளிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தொழுநோய் ஒருவிதவைரஸ் கிருமிகளின் தாக்குதலால் உருவாகிறது. அதற்கான சிகிச்சை முறைமுற்றிலும் வேறுபட்டது.

புதன், 4 ஜூன், 2014

ஆப்பிளைவிட, கொய்யா உயர்ந்தது!


''அரிசி, பருப்பு, காய்கறி, பழம்... என்று எதை எடுத்தாலும்.... விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும்; பளபளப்பாக இருக்க வேண்டும்; அதில்தான் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்கிற நம்பிக்கை, இங்கே பலரிடமும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால், இதில் துளிகூட உண்மை இல்லை!
'என்ன விலை விற்றால் நமக்கென்ன?' என்று கவலையில்லாமல் வாங்கத் துணியும் வசதிமிக்கவர்களாக இருந்தாலும் சரி... பொருட்களின் விலைவாசி பரபரவென்று உயர்ந்துகொண்டே போவதைப் பார்த்து பதறுகிற நடுத்தர மற்றும் ஏழைகளாக இருந்தாலும் சரி... இந்த உண்மையைப் புரிந்துகொண்டால்... தேவையில்லாமல் பணம் வீணாவதைக் கட்டுப்படுத்த முடியும்'' என்று சொல்லி திரும்பிப் பார்க்க வைக்கும் சென்னை, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் மருத்துவ உணவியல் துறை  விரிவுரையாளர் குந்தலா ரவி, ஒவ்வொன்றாக பட்டியலிடுகிறார்... உங்களின் பாக்கெட்டையும், உடலையும் பலமாக்க!
''நாம் உட்கொள்ளும் உணவானது... தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருட்கள் (அசைவ உணவுகளையும் இந்த வகையிலேயே அடக்கலாம்) என ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து வகை உணவுப் பொருட்களிலும் வகைக்கு ஒன்று கட்டாயம் நம் உணவில் இருக்க வேண்டியது அவசியம். இதில் சரியான தேர்வையும், விலைவாசிக்குத் தகுந்த விகிதாச்சாரத்தையும் கடைப்பிடித்தால் போதும். இதைத்தான் உட்கொள்ளவேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லை.
தானியத்தில் தேர்வு: தானிய வகைகளைப் பொறுத்தவரை, 70 ரூபாய், 100 ரூபாய் விலையில் கிடைக்கும் அரிசிதான் பிரதானம் என்பதில்லை. அவற்றிலிருக்கும் அதே சத்துக்கள்தான், ரேஷன் கடையில் இலவசமாக தரப்படும் அரிசியிலும் இருக்கின்றன. 20 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசியிலும் இருக்கின்றன. அதேபோல அரிசிதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதைவிட குறைந்த விலையில் கிடைக்கும் மற்ற தானிய வகை உணவுப் பொருட்களையும் பயன்படுத்தலாம். அவற்றிலும் அதே சத்துக்கள்தான் உள்ளன. கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்ற மற்ற தானியங்களையும் உணவாகப் பழக்க வேண்டும்.

பருவகால காய்கறிகள்: குறிப்பிட்ட காய்கறிகளையே வாங்காமல், அந்த வகையில் உள்ள வேறுரக காய்களையும் தேர்வு செய்யலாம். உதாரணமாக, பீன்ஸ் வாங்க மார்க்கெட்டுக்கு செல்லும்போது அதன் விலை ஏகத்துக்கும் இருந்தால், அதே ரகத்தைச் சேர்ந்த அவரைக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றை வாங்கலாம். குறிப்பிட்ட பருவத்தில் அதிக வரத்துள்ளவையாகப் பார்த்து வாங்க வேண்டும்.
வெங்காயத்தைப் பொறுத்தவரையில் அதிகமானோர் சின்ன வெங்காயத்தைதான் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, சுவை மாறுபாடு மட்டுமே. கீரை வகைகளில் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போன்றவற்றின் விலை எப்போதுமே குறைவுதான். எல்லா வகை கீரைகளைப் போன்றே இதிலும் கால்சியம், அயர்ன் சத்துக்கள் பரவலாக இருக்கின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் இவற்றையும் உணவில் நிறைய சேர்த்து, அதிக பயன் பெறலாம்.
நம்மூர் பழங்கள்: ஆஸ்திரேலிய ஆப்பிள், அமெரிக்க ஆரஞ்சு, நியூசிலாந்து திராட்சை போன்றவற்றில்தான் சத்துகள் நிறைந்திருக்கின்றன என்கிற நினைப்பு பலரிடமும் இங்கே நிறைந்திருக்கிறது. இவற்றைவிட, நம்ஊரில் விளையும் வாழை, சப்போட்டா, கொய்யா, பப்பாளிப் பழங்களிலேயே அதிக சத்துகள் நிரம்பியுள்ளன. கிலோ 200 ரூபாய் வரை விற்கும் ஆப்பிளைவிட, 40 ரூபாய்க்கும் விற்கும் கொய்யா சிறந்தது. குறைந்த செலவில் அதிக ஆரோக்கியம் பெறலாம்.
பால் பொருட்கள்: பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை, அனைத்துமே அதிக விலைதான். காரணம், மற்ற உணவுப் பொருட்களைவிட, இவற்றில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்று மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கைதான். ஆனால், எல்லாவற்றையும் போல பாலும் ஓர் உணவுப் பொருள் அவ்வளவுதான். பாலை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு நிறைய பால் கொடுக்க வேண்டுமே என்பார்கள் சிலர். தாய்ப்பாலைத்தான் மூன்று வயதுவரை கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, மாட்டுப்பால் என்பது முக்கியமாக கொடுக்க வேண்டும் என்பதில்லை. வழக்கமாக நாம் உண்ணும் உணவுகளையே கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்தினால் போதும். இதனால், பணம் மிச்சமாவதோடு, அதிக சத்தும் கிடைக்கும்''

கொழுப்பை கரைக்கும் அக்ரூட்

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 




உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். 

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். 

உரிய உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 3 ஜூன், 2014

ஊட்டச்சத்து- புரதம்


புரதங்கள் அமினோ அமிலங்களினால் ஆனவை. இவை உயிர்வாழ்வினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல வேலைகளை செய்வதற்கு இன்றியமையாத பொருளாகும். பெரும்பாலும் உடலிலுள்ள புரத அளவில் பாதியளவு தசை வடிவில் அமைந்துள்ளன. புரதத்தின் தரமானது உணவில் அமைந்துள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பொறுத்து அமைகிறது.

புரதத்தின் செயல்பாடுகள்:

புரதமானது உடலில் ஏற்படக்கூடிய முக்கிய வேதியியல் மாற்றச் செயல்களுக்கு என்ஸைம் மற்றும் ஹார்மோன் வடிவிலும் தேவைப்படுகிறது. குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆதாரப்பொருட்களை புரதங்கள் தருகின்றது. வளர்ந்தவர்களில் தேய்மானம் மற்றும் சேதாரத்தினால் ஏற்படும் இழப்புகளை பராமரிக்க புரதங்கள் உதவியாயிருக்கின்றன.

கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் தாய்சேய் இருவரின் உடற்திசு வளர்ச்சிக்கும் மற்றும் பால் சுரப்பதற்கும் கூடுதலான புரதம் தேவைப்படுகிறது

உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு

இறைச்சியில் உள்ள புரதங்கள் மிகவும் உயர்ரக புரதங்களாகும். அவற்றிலிருந்து உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் சரியான விகிதாசாரத்தில் கிடைக்கிறது. சைவ உணவு பழக்கமுள்ளவர்களுக்கும் தானியங்கள் மற்றும் முந்திரிப்பருப்பு, நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளும்போது போதுமான புரதங்கள் கிடைக்கின்றது.

பால் மற்றும் முட்டையில் நல்ல தரமான புரதங்கள் உள்ளன. பயறு வகைகள், கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள், பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சி போன்றவை புரதம் அதிக அளவில் உள்ள சில பொருட்களாகும். தாவர உணவுகளில், சோயாபீன்ஸில் மிக அதிகளவு புரதம் கிடைக்கின்றது. இவை 40 சதம்வரை புரதங்களை கொண்டவை. 57 கிலோ உடல் எடை கொண்ட 16-18 வயதுடைய ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு 78 கிராம் ஆகும். அப்படியிருக்க 50 கிலோ எடைகொண்ட அதே வயதை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு நாளைக்கு 63 கிராம் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 65 கிராம் புரதம் தேவைப்படுகிறது. பால் கொடுக்கும் காலங்களில் (குழந்தை பிறந்த 6 மாத காலம்வரை) பெண்களுக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் புரதம் தேவைப்படும்.

உணவுப் பொருட்கள்:

சாப்பிடக்கூடிய பகுதியில் உள்ள புரதத்தின் அளவு (கிராம்/100 கிராம்/ )

சோயாபீன்ஸ் 43.2
கொண்டைக்கடலை, உளுந்து, பச்சை பயறு மற்றும் துவரை 22
நிலக்கடலை, முந்திரி மறறும் பாதாம் பருப்பு 23
மீன் 20
இறைச்சி 22
பசும்பால் 3.2
முட்டை (ஒரு முட்டையில்) 13.3

முந்திரிப் பருப்பு


CASHEW-NUTS

அதீத சுவையுடன் அதிக ஆற்றலும் தரக்கூடியது முந்திரி பருப்பு. சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களும், தாது உப்புகளும் கூட இதிலுள்ளன. முந்திரிப் பருப்பின் சத்துக்களை அறிவோம்…


முந்திரி, பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளை தாயகமாகக் கொண்டது. கொஞ்சம் பசுமையும், கொஞ்சம் வெப்பமும் கொண்ட பகுதிகளில் முந்திரி நன்கு விளையும். பழத்திற்கு வெளியே விதை இருப்பது முந்திரியின் வினோதமாகும். சிறுநீரக வடிவில் தடித்த உறையுடன் முந்திரிப் பருப்புகள் சூழப்பட்டிருக்கும்.

முந்திரிப்பருப்பு அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் முந்திரிப் பருப்பில் 553 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. எளிதில் ஜீரணமாகும் நார்ப் பொருட்கள் முந்திரிப்பருப்பில் உள்ளது. ஆரோக்கியத்திற்கு துணைபுரியும் துணை அமிலங்கள் பல உள்ளன.

இவை புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றலை வழங்க வல்லவை. இதயத்திற்கு நலம் பயக்கும் ஆலியிக் அமிலம், பால்மிடோலியிக் அமிலம் ஆகியவை முந்திரியில் உள்ளது. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான இவை, கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கவும், நல்ல கொழுப்புகளான எச்.டி.எல். கொழுப்புகளை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் உடையது.

மேலும் இதய பாதிப்புகளில் ஒன்றான கரோனரி தமனி பாதிப்பு மற்றும் முடக்குவாதம் ஆகியவற்றில் இருந்து தற்காப்பு தருவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தாது உப்புகளின் உறைவிடமாக முந்திரிப்பருப்பை சொல்லலாம். அந்த அளவிற்கு ஏராளமான தாது உப்புகள் இதில் உள்ளன.

மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. செலீனியம் தாது, நோய் எதிர்ப்பு சுரப்பிகள் சிறப்பாக செயல்பட துணைக்காரணியாக விளங்கும். துத்தநாகமும் பல நொதிகளின் வளர்ச்சி மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கு துணைக்காரணியாக செயல்படுகிறது.

மேலும் உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவற்றிலும் பங்கெடுக்கிறது. முந்திரிப் பருப்பில் அத்தியாவசிய வைட்டமின்கள் பல உள்ளன. வைட்டமின் பி-5, பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயாமின் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பைரிடாக்சின் (வைட்டமின் பி6) ரத்த சோகை மற்றும் சில வியாதிகளின் தன்மையை மட்டுப்படுத்தும். நியாசின், பெல்லாக்ரா வியாதி வராமல் காக்கும். புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றத்திலும் இந்த வைட்டமின்கள் பங்கெடுக்கிறது.

சிறிதளவு ஸி-சாந்தின் எனப்படும் நோய் எதிர்ப்பு நிறமியும் முந்திரிப் பருப்பில் உள்ளது. இவை பார்வைத்திறனில் துணை புரியும். சருமத்தை தாக்கும் புற ஊதாக்கதிர்களை வடிகட்டும் ஆற்றலும், செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. எனவே முந்திரி பருப்பை தினமும் உண்டு நீண்டு வாழ்வோமாக…!