வியாழன், 11 டிசம்பர், 2014

அக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப்புகள் (Acupuncture Treatment Tips for Women illness)



1. ஒழுங்கற்ற மாதவிடாய்:

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ச் சுற்றில் வழக்கத்திற்கு மாறாக மாற்றங்கள், அதாவது மாதவிடாய்ப் போக்கின் நிறம், அளவு, காலம், மற்றும் அதனுடன் இணைந்த குறிகள் இவற்றில் மாற்றங்கள் ஏற்படும் பொழுது ஒழுங்கற்ற மாதவிடாய் எனப்படுகிறது. பொதுவாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம்

1. முந்திய மாதவிடாய் சுற்று

2. தாமதித்த மாதவிடாய் சுற்று

3. முறையற்ற மாதவிடாய் சுற்று

என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். பொதுவாக மாதவிடாய் சுற்று என்பது 28 நாட்கள் (காலம் மற்றும் இடைவெளி சேர்த்து) என்று கணக்கிடப்படுகிறது. வழக்கமான மாதவிடாய் வெளிப்படும் நாளுக்கு ஏழு அல்லது எட்டு நாட்கள் முன்னதாக அல்லது மாதம் இருமுறை வெளிப்படும் போக்கு என்பது முந்திய மாதவிடாய் சுற்று என்றும், வழக்கமான மாதவிடாய் நாளுக்கு தாமதமாக எட்டு அல்லது ஒன்பது நாட்களுக்குப் பிறகோ அல்லது 40 முதல் 50 நாட்களில் (அல்லது அதற்கும் தாமதமாக) வெளிப்படும் மாதவிடாய்ப் போக்கு என்பது தாமதித்த மாதவிடாய் என்றும் அழைக்கப்படுகிறது.

வெளிப்புற நோய்க் காரணிகள், குளிர், வெப்பம், ஈரம் மற்றம் கவலைகள், ஒழுங்கற்ற முறையற்ற பாலியல் வாழ்க்கை, ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறுதல் போன்ற காரணங்களால் இரத்தம் மற்றும் சக்தி(Q1) இவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் சீர்குலைவு ஏற்படுகிறது. இந்த சீர்குலைவு கூடுதல் சக்தி ஓட்டப்பாதைகளான ‘சோங்’ (chong) மற்றும் இன விருத்தி சக்தி (Ren) ஓட்டப்பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பாதிப்புகள் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு காரணமாக அமைகின்றன.

காரணமும், நோயின் போக்கும்

A.முந்திய மாதவிடாய்

I.இரத்தத்தில் வெப்பத்தன்மை: அபரிதமான உள்உடல் வெப்பம் காரணமாக, அதாவது ‘யின்’ தன்மை குறைவதாலும் ’யாங்’ தன்மை அதிகமாவதாலும் முந்திய மாதவிடாய் ஏற்படுகிறது. காரசாரமான உணவுகள் சாப்பிடுவது, கருப்பையில் வேலை செய்யக்கூடிய, வெப்பத்தை உண்டாக்க கூடிய மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, தேக்க மடைந்த கல்லீரல் சக்தியிலிருந்து மாற்றப்பட்ட வெப்பம் இவைகளால் இனவிருத்தி மற்றும் ’சோங்’ சக்தி ஓட்டப் பாதைகளில் ஏற்படும் பாதிப்புகளே முந்திய மாதவிடாய் சுற்றிற்கு காரணமாகின்றன.

II. சக்திகுறைபாடு: அதிகப்படியான உழைப்பு,முறையற்ற சத்தியில்லாத உணவுகள் மண்ணீரல் பலவீனமடைவதற்கு காரணமாவதாலும், மத்திய வெப்பமண்டலப் பகுதியில் ஏற்படும் சக்தி குறைபாடு மாதவிடாய்ப் போக்கை கட்டுபடுத்த தவறுவதாலும் முந்திய மாதவிடாய்ச்சுற்று ஏற்படுகிறது. “அதிகப்படியான உள் உடல் வெப்பத்தை நாடி பிரதி பலிக்கவில்லையெனில், கல்லீரல் மற்றும் இருதயத்தின் சக்தி குறைபாடு காரணமாக இரத்தம் கட்டுபடுத்தத் தவறும் பட்சத்தில் முந்திய மாதவிடாய்ச்சுற்று ஏற்படுகிறது” என்று Dr.Zhang Jinggue குறிப்பிடுகிறார்.

B.தாமதமான மாதவிடாய் :

I. இரத்தக்குறைவு: நாள்பட்ட நோய்கள் மற்றும் ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தல் போன்ற காரணங்களால் நாள்பட்ட இரத்தப் போக்கு, பலவீனம்,ஏற்பட்டு இரத்தம் கெட்டுப் போய்விடுகிறது. ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்களும்,அதிகப்படியான உழைப்பும் மண்ணீரல் மற்றும் இரைப்பையை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக, இனவிருத்தி மற்றும் சோங்சக்தி ஓட்டப் பாதைகளில் இரத்தக் குறைவு ஏற்படுகிறது. முடிவு தாமதமான மாதவிடாய் சுற்று ஆகிறது.

II. இரத்தத்தில் குளிர்தன்மை: இது பெரும்பாலும், தொடர்ச்சியான ‘யாங்’ தன்மையில் குறைபாடு மற்றும் உடல் குளிர்ச்சி ஏற்படுவதால் ஏற்படுகிறது. அதிகப்படியான பக்குவப்படுத்தப்படாத உணவுகளை சாப்பிடுவதாலும் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதாலும், மழை மற்றும் குளிரில் அடிபடுவதாலும் தாமதமான மாதவிடாய்ச்சுற்று ஏற்படுகிறது. நோயை உண்டாக்க கூடிய குளிர்தன்மை இனவிருத்தி மற்றும் சோங் சக்தி ஓட்டப்பாதைகளை தாக்குவதால் சுலபமான இரத்த ஓட்டத்திற்கு தடையை உண்டு பண்ணுகிறது. இதன் காரணமாக தாமதமான மாதவிடாய்ச் சுற்று ஏற்படுகிறது.

III. தேக்கமடைந்த சக்தி : உணர்ச்சிகளின் அழுத்தத்தால் சக்தி(ண1) யின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுவதன் காரணமாக சக்திக் தேக்கம் நிகழ்கிறது. இந்த சக்தித் தேக்கம் இயல்பான இரத்த ஓட்டத்தை தடைசெய் வதன் காரணமாக இனப் பெருக்க மற்றும் சோங் சக்தி ஓட்டப் பாதைகளில் இயல் புக்கு மாறான செயல் பாடுகள் நடைபெறு கின்றன. இதனால் சரியான காலத்தில் இரத்தத் தொகுப்பு உருவமைக்கப்பட முடியாது போகிறது. அப்பொழுது தாமதமான மாதவிடாய்ச்சுற்று ஏற்படுகிறது.

C. முறையற்ற மாதவிடாய் (காலம் மற்றும் இடைவெளிகளில்) சுற்று

I. கல்லீரல் சக்தித் தேக்கம் : கடும் கோபத்தின் அழுத்தம் கல்லீரலை சேதப்படுத்தி சேமித்து வைக்கப்பட்ட இரத்தத் திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றது. இது இனப்பெருக்க மற்றும் சோங் சக்தி ஓட்டப்பாதைகளில் இரத்தத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது இதனால் முறையற்ற மாதவிடாய்சுற்று உண்டாகிறது.

II சிறுநீரகத்தில் குறைபாடு : பக்குவப்படாத வயதிற்கு முன் செய்யப்படும் திருமணம் (18வயதிற்கு முன்) முறையற்ற இஷ்டப்படியான பாலியல் வாழ்க்கை முறை ஒரே பிரசவத்தில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்தல் போன்ற காரணங்கள் சிறுநீரக பலத்தை குறைக்கின்றன. இந்தச் செயல்பாடுகள் சாரத்தையும் இரத்தத்தையும் உட்கொள்கின்றன. சிறுநீரகம் தன் செயல்பாடுகளான சாரத்தை சேமித்தல் மற்றும் இனப்பெருக்க, சோங் சக்தி ஓட்டப்பாதைகளை ஒழுங்குபடுத்தும் வேலையை செய்யத் தவறும் பொழுது முறையற்ற மாத விடாய்ச்சுற்று ஏற்படுகிறது.

குறிகளை வேறுபடுத்திப்பார்த்தல்

A. முந்திய மாதவிடாய்ச்சுற்று

I. இரத்தத்தில் வெப்பத்தன்மை

குறிகளின் முக்கியவெளிப்பாடுகள் : குறுகியகால மாதவிடாய் சுழற்சி, அடர்த்தியான, அடர்சிவப்பு நிற மாதவிடாய்ப் போக்கு, அதிக அளவு போக்கு அமைதியின்மை, நெஞ்சில் நிறைந்த உணர்வு,பழுப்பு நிற சிறு நீர், மஞ்சள் படிவத்துடன் சிவந்து காணப்படும் நாக்கு, வேகமான, பலமான நாடி

குறிகளைப் பகுத்தாய்தல் : அடர்த்தியான, அடர்சிவப்பு நிற, ஏராளமான போக்கு உள் உடல் வெப்பத் தைக் குறிக்கிறது. இந்த உள் உடல் வெப்பம் கல்லீரல் மற்றும் இருதயத்தின் ஆற்றலைக் குறைப்பதால் அமைதியின்மை மற்றும் நெஞ்சில் நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இந்த உடல் உள்வெப்பமானது இருதயத்திலிருந்து சிறுகுடலுக்கு இறக்கம் செய்யப்படும்பொழுது குறைவான அடர் மஞ்சள் நிற சிறுநீர் உற்பத்தியாகிறது. நாக்கில் மஞ்சள் படிவமும், துரிதமான நாடியும் உடல் உள்வெப்பத்தை குறிக்கிறது.

II.சக்தி குறைபாடு

குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள் : ஏராளமான, மெல்லிய நீர் போன்ற இளஞ்சிவப்பு நிற மாதவிடாய்ப் போக்கு, குறைவான சுழற்சிக்காலம், உடல் மற்றும் மனத்தளர்ச்சி படபடப்பு,குட்டைசுவாசம், அடிவயிற்றில் காலியாகவும், கனமாகவும் இருப்பது போன்ற உணர்வு (தன்னிச்சையாக மனதில் எழும்), மெல்லிய படிவத்துடன் காணப்படும் வெளுத்த நாக்கு பலவீனமான நாடி.

குறிகளைப் பகுத்தாய்தல் : மண்ணீரல் சக்தியானது மத்திய வெப்ப மண்டல ஆதிக்கம் செலுத்தி இரத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது., அங்கு இன விருத்தி மற்றும் சோங் சக்தி ஓட்டப் பாதைகளின் இடையூறுகள், ஏற்படுத்தினால், ஏராளமான, மெல்லிய, இளஞ்சிவப்பு நிறப்போக்கு குறைந்த கால மாதவிடாய் சுழற்சிக்கு அல்லது முந்திய மாதவிடாய் சுற்றுக்கு வழிவகுக்கிறது. உடல், மனதளர்ச்சி கட்டை சுவாசம் மற்றும் அடி வயிற்றில் காணப்படும் காலியான கனமான உணர்வு சக்தி குறைபாட்டின் அடையாளங்களாகவும் மற்றும் பலவீனமான நாடியும் (சக்தி குறைபாட்டின் அடையாளம்) காணப்படுகிறது.

B. தாமதமான மாதவிடாய்

I. இரத்தக்குறைவு : குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள்: குறைவான சுழற்சிக்காலத்தில்,குறைவான இளஞ்சிவப்புநிற மாதவிடாய்ப்போக்கு, அடிவயிற் றில் காலியான வலி நிறைந்த உணர்வு, உடல் இளைப்பு, மஞ்சள் நிற வெளிறிய உடல், பொலிவிழந்த தோல் (சருமம்), கிறுகிறுப்பு,தலைசுற்றல், மங்கலான பார்வை, படபடப்பு, தூக்கமின்மை மற்றும் மெல்லிய படிவத்துடன் கூடிய வெளிர்சிவப்பு நிற நாக்கு பலவீனமான நூல் போன்ற மெல்லிய நாடி

குறிகளைப் பகுத்தாய்தல் : நாள்பட்ட நோய்களில் அடிபட்டதால் அல்லது நாள்பட்ட இரத்தப்போக்கினால் பலவீன மான உடல் வாகு அமையப் பெற்றால், அவர்களுக்கு சரியான நேரத்தில் இரத்தம் உருவாக்கப்பட்டு, இரத்தத்தொகுப்பு உருவமைக்கப் பட முடியாத காரணத்தால் குறைவான, இளஞ்சிவப்பு நிற இரத்தப்போக்கு, குறைவான சுழற்சிக்காலத்தில் ஏற்படுகிறது. இரத்தம் கருப்பையை பராமரிக்கத்தவறும் பொழுது அப்பொழுது அடிவயிற்றில் வலி நிறைந்த,காலியான உணர்வு காணப்படுகிறது. சக்தி ஓட்டப்பாதைகள், இரத்த நாளங்கள், தசைகள் மற்றும் சருமம் இவைகளுக்கு சரியான போஷக்கு கிடைக்காத பொழுது, உடல் இளைப்பு, மஞ்சள் நிற வெளிறிய உடல், பொலிவிழந்த தோல் போன்ற குறிகள் தோன்றலாம். கல்லீரலுக்கும், இருதயத்திற் கும் இரத்தத்தால் ஊட்டமளிக்கத் தவறும் பட்சத்தில் கிறுகிறுப்பு, மங்கலான பார்வை படபடப்பு மற்றும் தூக்கமின்மை உண்டாகிறது. நாக்கிற்கு சரியான ஊட்டம் கிடைக்கப் பெறாத தால் இரத்த நாளங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனால் வெளிர்சிவப்பு நிற (டண்ய்ந் ஸ்ரீர்ப்ர்ன்ழ்ங்க்) நாக்கு மற்றும் பலவீனமான நூல் போன்ற மெல்லிய நாடி காணப்படுகிறது.

II. இரத்தத்தில் குளிர்ந்த தன்மை

குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள் : தாமதமான மாதவிடாய்ச்சுழற்சியில் கருநிற போக்கு,அடிவயிற்றில் கீழ் வலி வெப்பத்தால் சற்று மட்டுப்படும். ஆழமான, மெதுவான நாடி (குறிகளைப் பகுத்தாய்தல்

மாதவிடாய்க்காலங்களில் நோய்த்தன்மையான குளிரின் இரத்தஓட்டத்தின் வேகம் தடைபடுகிறது. இதனால் தாமதமான மாதவிடாய்ச் சுற்று, குறைவான மற்றும் கருநிறப்போக்கு காணப்படுகிறது. கருப்பையில் உள்ள குளிர்ச்சி (குளிர்தன்மை) இயல்பான சக்தி மற்றும் இரத்த ஓட்டத்தை தடைசெய்கிறது. மேலும் அங்கு வலி விட்டு விட்டு தோன்றுகிறது. (அடிவயிற்றில்). இயல்பிலேயே குளிரிச்சி தன்மையை உடைய ‘யின்’ ‘யாங்’ தன்மையை சேதப்படுத்துகிறது. மேலும் கை,கால்களில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது. நாக்கில் மெல்லிய வெண்மையான படிவமும்,ஆழமான மெதுவான நாடியும் குளிர்ச்சிதன்மையின் சம்பந்தப்பட்ட நோய்க் குறிகளின் அடையாளமாக காணப்படுகிறது.

III சக்தி தேக்கம் குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள்

கருஞ்சிவப்பு நிற போக்குடன் குறுகியகால மாதவிடாய் சழற்சி, அடிவயிற்றில் உப்பிசத்துடன் கூடிய வலி, மன அழுத்தம், அடைபட்ட நெஞ்சு (மூச்சு விட சிரமம்) எதிர்களித்தால் சற்று மட்டுப்படும், மார்பு சார்ந்த வயிற்றுப்பகுதியிலும் மார்பகப் பகுதிகளிலும் வீக்க உணர்வு, நாக்கில் மெல்லிய வெள்ளைநிறப் படிவம் மற்றும் வீணை தந்தி போன்ற விறைப்பான நாடி.

குறிகளைப் பகுத்தாய்தல் : தேக்கமடைந்த கல்லீரல் சக்தி தடைபட்ட இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது, மேலும் அடிவயிற்றில் உப்பிசத்துடன் கூடிய வலியுடன் குறைவான, தாமதமான மாதவிடாய் சுழற்சிக்கு வித்திடுகிறது. சக்தி (Q1) சுலபமாக பயணம் செய்யத் தவறும் பட்சத்தில் மன அழுத்தம், அடைபட்ட நெஞ்சு (மூச்சு விட சிரமமான) போன்ற குறிகள் காணப்படுகின்றன. கல்லீரல் சக்தி ஓட்டப்பாதை மார்பு, விலா எலும்புகளுக்கு அருகில் செல்வதால்

கல்லீரல் தேங்கிய சக்தி மார்பகம் மற்றும் மார்பு சார்ந்த வயிற்றுப்பகுதிகளில் ஒரு வித (வீக்கத்தை) உப்பிசத்தை உண்டாக்குகிறது. கல்லீரல் குறைபாடு மற்றும் கல்லீரல் சக்தி தேக்கத்தின் ஒரு குறிப்பிடப்படக்கூடிய அடையாளமாக வீணை தந்தி போன்ற விறைத்த நாடி காணப்படுகிறது.

C. முறையற்ற் மாதவிடாய் சுற்று

I. கல்லீரல் சக்தித் தேக்கம் குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள் : மாதவிடாய் சுழற்சி மற்றும் இரத்தப்போக்கின் அளவில் மாற்றம். அடர்த்தியான, பிசுபிசுவென்று ஒட்டக்கூடிய, நீலம் கலந்த சிவப்பு நிற மாதவிடாய்ப் போக்கு சிரமமான போக்கு, மார்பு சார்ந்த வயிற்றுப்பகுதியில் உப்பிசம்அடிவயிற்றுப்பகுதியில் உப்பிசத்துடன் வலி, மன அழுத்தம் அடிக்கடி பெருமூச்சு விடுதல், நாக்கில் மெல்லிய மென்மையான படிவம் மற்றும் வீணைதந்தி போன்ற விறைப்பான நாடி

குறிகளைப் பகுத்தாய்தல் : கடுங்கோபத்தின் அழுத்தத்தினால் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டு இயல்பற்ற சக்தி மற்றும் இரத்த ஓட்டத்திற்கு வழிகாட்டுகிறது. இச்செயல்பாடு இரத்தத் தொகுப்பில் இடையூறு ஏற்படுத்தி முடிவில் மாதவிடாய் சுழற்ச்சியிலும், இரத்தப் போக்கின் அளவிலும் மாற்றங்களை ஏற்படுத்து கிறது. கல்லீரல் சக்தியின் தேக்கம் தடைபட்ட இரத்த ஓட்டத்திற்குக் காரணமாகிறது. சிரமமான போக்கை உண்டாக்குகிறது. மார்பு சார்ந்த வயிற்றுப்பகுதியிலும் மார்பகப் பகுதிகளிலும் உப்பிசத்தையும், அடிவயிற்றுப் பகுதிகளில் உப்பிசத்துடன் கூடிய வலியையும் ஏற்படுத்துகிறது. அடிக்கடி பெருமூச்சு விடுவதால் தேக்கமடைந்த சக்தியை சற்று விடுவிக்கலாம். கல்லீரல் சக்தி தேக்கத்தின் ஒரு குறிப்பிடப்படும் படியான அடை யாளமாக தந்தி வீணை போன்ற விரைப்பான நாடி காணப்படுகிறது.

II. சிறுநீரக குறைபாடு குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள் : மாறுபட்ட மாதவிடாய்ச்சுற்றில்,குறைந்த அளவிலான, இளஞ்சிவப்பு நிற இரத்தப் போக்கு, கிறுகிறுப்பு, செவியிரைச்சல், அடிமுதுகு மற்றும் முழங்கால் மூட்டுக்களில் வலி, பலவீனம் காணப்படும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்,தளர்ந்த மலம், வெளுத்த மெல்லிய படிவத்துடன் கூடிய நாக்கு, ஆழமான பலவீமான நாடி ஆகிய குறிகள் காணப்படுகின்றன.

குறிகளைப் பகுத்தாய்தல் : சிறுநீரக சக்தியில் பற்றாக்குறை ஏற்படும் பொழுது, பாதிக்கப்பட்ட செயல்பாடுகளுடைய இனவிருத்தி மற்றும் சோங் சக்தி ஓட்டப்பாதைகள் மாதவிடாய்ப் போக்கில் ஒழுங்கற்ற நிலையை உண்டாக்குகிறது. மேலும் இரத்தத் தொகுப்பின் கட்டுமானத்தில் (உருவாக்கத்தில்) வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இச்செயல்பாடுகள் மாதவிடாய் சுற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பற்றாக்குறைவான சிறுநீரக சக்தி, சாரத்தையும் இரத்தத்தையும் படிப்படியாக குறைத்து விடுவதால் அது குறைவான, அடர்த்தியற்ற இளஞ்சிவப்பு நிற மாதப்போக்கிற்கு அடிகோல்கிறது. சிறுநீரகம் எலும்புகளில் செயல்பாட்டை காட்டுகிறது. மஜ்ஜையை உருவாக்குகிறது. சிறுநீரக சக்தி ஓட்டப்பாதை காதில் திறக்கிறது. மேலும் இடுப்பு வழியாக பயணக்கிறது. அதனால் சிறுநீரகத்தின் குறைபாடுடைய நிலை - மஜ்ஜை உற்பத்தியில் பின்னடைவை ஏற்படுத்துகிறது., செவித்திறனைக் குறைக்கிறது. மற்றும் செவியிரைச்சல் உண்டா கிறது. இடுப்புப் பகுதியில் ஊட்டசக்தி குறைவுபடுவதால் அடிமுதுகிலும் முழங்கால் மூட்டிலும் பலவீனம் மற்றும் புண் போன்ற வலியை உண்டாக்குகிறது. சிறுநீரைக் கட்டுப் படுத்த தவறுவதால் அடிக்கடி சிறுநீர் வெளிப்படுகிறது, மேலும் மலக்குடலிருந்து மலம் வெளித்தள்ளப் படுவதால் தளர்ந்த மலம் அடிக்கடி வெளிப்படு கிறது. வெளுத்த மெல்லிய படிவத்து டன் கூடிய நாக்கு மற்றும் பலவீனமான ஆழமான நாடி, சிறுநீரகத்தில் ‘யாங்’ தன்மை குறைபாட்டைக் காட்டுகிறது.

அக்குபஞ்சர் சிகிச்சை ஆங்கில மருத்துவத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது? (How are you different from the British Medical Acupuncture Treatment?)

ஒரு நோயாளிக்கு ஏற்படும் தொந்தரவு நோயின் அறிகுறியாகும். இந்த அறிகுறியையே நவீன மருத்துவம் நோயாக கருதி சிகிச்சை அளிக்கிறது. ஆனால் அக்குபஞ்சர் சிகிச்சை நோயின் மூல காரணத்தை கண்டறிந்த சீராக்குவதன் மூலம் நோயையும் - அதன் அறிகுறிகளையும் வேரோடு களைகிறது.

உதாரணத்திற்கு ஒருவருக்கு தலைவலி ஏற்படுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவம் முதலில் வலி நிவாரணிகளை கொடுத்துப் பார்க்கிறது. சரியாக போது தலையை ஸ்கேன் செய்து, பரிசோதித்து தலைவலி என்னும் அறிகுறியின் காரணத்தை தலையிலேயே தேடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் உண்மை நிலை என்ன? தலைவலி ஏற்படுவதற்கு தலை காரணம் அல்ல. மண்ணீரல் அல்லது இரைப்பை கோளாறுகளால் தலைவலி ஏற்படலாம். கல்லீரல், பித்தப்பை தொந்தரவுகளால் தலைவலி ஏற்படலாம். இதயம், இதயமேலுறையால் வெப்பம் சீரற்று கடத்தப்படும் போது தலைவலி ஏற்படலாம். சிறுநீரகம், சிறுநீர்ப்பையின் இயக்க குறைவால் தலைவலி ஏற்படலாம். நுரையீரலில் கழிவு தேங்கும் போது தலைவலி ஏற்படலாம். இன்னும் சொல்வதானால் தூக்கம் குறைவதாலும் மலம் கழிக்காவிட்டாலும், அதிகப்பசியின் போது உணவறிந்தாவிட்டாலும், பசிக்கு மீறிய உணவை உண்டாலும் தலைவலி ஏற்படலாம்.

மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தால் தோன்றுகின்ற தலைவலியை - தலையை பரிசோதப்பதன் மூலம் அறியவோ, நீக்கவோ முடியாது. உடலின் உள்ளுறுப்புக்களின் தேக்கம் கொள்கிற கழிவுகள், உடலின் வெளிப்புறத்தில் சில மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இந்த மாறுதல்கள் வெறும் அறிகுறிகளே. இதில் ஒன்றிரண்டு அறிகுறிகளை நீக்குவதன் மூலம் நோய் எக்காலத்திலும் குணமாகாது.

ஆங்கில மருத்துவம் நோய்க்கான காரணங்களை உடலிற்கு வெளியே தேடுகிறது. அக்குபங்சர் உடலிற்கு உள்ளேயே தேடி, தீர்வு காண்கிறது.

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை? (How much sugar in the diet?)

சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.
உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.
அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.
சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.
பானங்கள் (200 மி.லி அளவு):
* தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.
* நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..
* உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..
* கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.
* இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி.
* பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.
* மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.
எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.
உணவு வகைகள்
உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):
* கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.
* வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.
* பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.
* கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.
* அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..
* கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.
* உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.
* இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.
* எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
* 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம்.
* 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ் வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.
பழங்கள் (100 கிராம்)
* தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..
* வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி – 30 முதல் 40 மி.கி.
* கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு – 40 முதல் 60 மி.கி..
* மா, பலா, வாழை – 100 முதல் 150 மி.கி.
* பேரீச்சை, திராட்சை, சப்போட்டா – 150 முதல் 250 மி.கி.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது

வெள்ளி, 5 டிசம்பர், 2014

மலச்சிக்கல் – காரணங்களும் தீர்வுகளும்


மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.
மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.
செரிமானம் எப்படி ஏற்படுகிறது?
முதற்கட்டமான செரிமானம், நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும்போது ஆரம்பமாகிறது. பிறகு உணவு வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. உணவை நன்கு மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும்.
வயிற்றிலுள்ள உணவு, அங்குள்ள அமிலங்களுடன் நன்கு கடையப்பட்டு, சிறு குடலுக்குச் செல்கிறது. வயிற்றிலுள்ள அமிலத்தன்மை அதிகமாகும்போது, நமக்கு அசிடிடி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமானம் பாதிக்கப்படுகிறது.
சிறுகுடலுக்கு வந்த உணவு, அமிலத்தன்மையுடையது. கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் இவை காரத்தன்மையுடையன. இவற்றுடன் சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம்களுடன் கலந்து, உணவு அமிலத்தன்மை இழந்து, நடுநிலை ((நெரவசயட)) அடைகிறது. இங்கு உணவின் சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு சக்கைகள் பெருங்குடலுக்குள் தள்ளப்படுகின்றன.
பெருங்குடலில் இக்கழிவுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு மலமாக வெளியேறுகிறது.
மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்:
1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.
3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.
4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.
5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.
6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.
மலச்சிக்கலுக்கு அக்குபிரஷர் சிகிச்சை:
அக்குபிரஷர் முறைப்படி நம் உடலின் 12 முக்கியமான உறுப்புகளும் 12 மெரிடியன்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெரிடியன்களின் வழியே 24 மணி நேரமும் சக்தி பாய்கிறது. ஒவ்வொரு மெரிடியனிலும் 2 மணி நேரம் என 12 மெரிடியன்களில் 24 மணி நேரம் சக்தி பாய்கிறது.
பெருங்குடல் மெரிடியனில் சக்தி பாயும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும். அதனால், காலை 6 முதல் 7 மணிக்குள் நாம் மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது. 1 வாரம் சிறிது பொறுமையுடன் இந்த நேரத்தில் மலம் கழிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 2 அல்லது 3 டம்ளர் நீர் குடித்து வீட்டினுள்ளேயே சிறிது நேரம் நடக்க வேண்டும். பிறகு முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடும் பயிற்சி செய்ய வேண்டும். இதனால், அடிவயிறு அழுத்தப்பட்டு மலம் கீழுக்குத் தள்ளப்படுகிறது.
வாய்க்குக் கீழே முகவாயில் உள்ள புள்ளியிலும், தொப்புளுக்கு கீழே 2 விரல்கள் தள்ளி உள்ள புள்ளியிலும், பக்கவாட்டில் இருபுறங்களிலும் 3 விரல்கள் தள்ளி உள்ள புள்ளிகளிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். டாய்லெட்டில் உட்கார்ந்து கழுத்துப் பயிற்சி செய்தாலும் மலம் இறங்கி வரும். தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் பயிற்சி செய்யும்போது, மலம் கழிப்பது சுலபமாகிறது.
இரைப்பை மெரிடியனில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சக்தி பாய்கிறது. காலை 9 மணிக்கு நாம் முழு உணவு உண்போமேயானால் உணவு நன்கு செரிக்கப்பட்டு மலச்சிக்கல் தீரும். இப்போதுள்ள அவசர யுகத்தில் பலர் காலையில் காபி அல்லது கஞ்சி குடித்துவிட்டு பிறகு மெதுவாக மதியம் உணவு உண்கின்றனர். கேட்டால் ‘நேரம் இல்லை’ என்ற பதில் கிடைக்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள ஆள்காட்டி விரலின் கடைசிப் பகுதியில் உள்ள புள்ளி லிமி4 என்ற பெருங்குடல் மெரிடியனில் நான்காவது புள்ளியாகும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இப்புள்ளி உள்ளது. இடையிலுள்ள சதைப்பகுதியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசிப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்புள்ளியை தினமும் காலை 14 முறைகளும், மாலை 14 முறைகளும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இதனால் மலச்சிக்கல், அசிடிடி, வாயுத் தொல்லை முதலியவை தீருகின்றன. வராமல் தடுக்கப்படுகின்றன.
மலச்சிக்கலினால் உடல் மந்தம், வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், மூலம், பௌத்திரம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட கொலைடிஸ், சிறுகுடல் புற்றுநோய் இவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மலச்சிக்கலை நாம் அலட்சியம் செய்யாமல் அதற்குத் தீர்வு காண வேண்டும்.
நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.

வியாழன், 4 டிசம்பர், 2014

எளிய மருத்துவக் குறிப்புகள் (Simple Health Tips)


1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.
13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.
18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.
23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.
26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.
41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.
42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.
96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

திங்கள், 1 டிசம்பர், 2014

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்


தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
——————————————————————————–
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
——————————————————————————–
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
——————————————————————————–
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
——————————————————————————–
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
——————————————————————————–
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
——————————————————————————–
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
——————————————————————————–
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
——————————————————————————–
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
——————————————————————————–
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
——————————————————————————–
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
——————————————————————————–
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
——————————————————————————–
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
——————————————————————————–
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
——————————————————————————–
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
——————————————————————————–
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
——————————————————————————–
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
——————————————————————————–
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
——————————————————————————–
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
——————————————————————————–
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை (Ambassador to prevent cancer)


தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.
தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.
தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.
தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.
பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.
தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.
ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.
தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.
தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.
இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.