ஞாயிறு, 18 ஜனவரி, 2015

காது குடையலாமா?





காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி. காது வலியின் தாக்கத்தால் முகம்சோர்ந்திருந்தது. தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்பமுயன்றபோது, “தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி” என்றாள்.



“என்ன நடந்தது” என விசாரித்தேன். “வழமையாக காது கடிக்கிறது. திடீரென இப்படியாயிற்று”என்றாள்.”காது கடித்தால் என்ன செய்வீர்கள்?” விசாரித்தேன். “நெருப்புக்குச்சி, சட்டைப் பின்,இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை” என்றான் கூட வந்தமகன்.காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமிதொற்றிவிட்டது.

இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான். நீந்தியபிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணிஇயர்பட்ஸ் வைத்துத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது. காதுக்குள் குடுமி இருந்தால்குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும். அது தற்காலிகமானது.உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை. காதுக்குடுமி நீரில் ஊறிப்பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது உலர அடைப்பு எடுபட்டுவிடும்.இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாகநகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம்செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்குகாதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச்செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்றுகாதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை. காது குப்பைக் கூடையோ,சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல. காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப்பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது. அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் குளிக்கும்போது தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும். இவ்வாறு இரண்டு மூன்றுதடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம்.


காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுக்கும். ஆயினும் காதிலிருந்து சீழ்அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது. இப்படிச் சுத்தம்செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்.

வெள்ளி, 16 ஜனவரி, 2015

பிம்பிள் – சிம்பிள் தீர்வு

பருக்கள் ஏன் வருகின்றன?
சருமம் எண்ணெய் பசையுடன் இருப்பதற்கு காரணம், உடலில் சீபம் என்ற எண்ணெய் சுரப்பதுதான்.ஹார்மோன் பிரச்னையால் சிலருக்கு இந்த சீபம் மிக அதிகமாகச் சுரக்கும். இந்தச் சுரப்பிகளில் தடை ஏற்பட்டாலோ, சருமத்தில் சீபம் அதிகமாகச் சுரக்கும் போதோ, சிறு கட்டிகள் போல பருக்கள் உருவாகின்றன.
சமச்சீரற்ற ஹார்மோன்கள், அதிகமான எண்ணெய் உணவுகளை சாப்பிடுதல், அதிகளவில் மருந்துகளை உட்கொள்ளுதல்,மனப் பிரச்னைகள், சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இன்மை, பொடுகுத் தொல்லை, காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துதல் போன்ற காரணங்களும் பருக்களை ஏற்படுத்துகின்றன.
எந்த வயதில் வரும்?
13 வயது முதல் 30 வயது வரை பருக்கள் வரலாம். இந்த வயதைக் கடந்த பிறகும், சிலருக்குப் பருக்கள் வரலாம். பெண்களுக்கு, மாதவிலக்கு சமயங்களில் மட்டும் பருக்கள்வந்து மறையும். சினைப்பையில் நீர்க்கட்டிகள் (PCOD) இருந்தாலும் பருக்கள் வரும்.
பருக்கள் எப்படி பரவுகின்றன?
முகத்தில் மூக்கு ஓரங்கள், தாடை, நெற்றி, கன்னம் ஆகிய பகுதிகளில் கறுப்பாகவோ, வெள்ளையாகவோ வரலாம். இதை ப்ளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் என்போம்.  சருமத்தில் உள்ள பாக்டீரியா தொற்றால் குருத்தாகத் தோன்றி, சீழ் பிடித்த கட்டிகளாக மாறுகின்றன. சிலருக்குப் பருக்கள் வலிக்கும்.  பருக்களை பிதுக்கி சீழ் எடுப்பது, அடிக்கடி தொட்டுப் பார்ப்பது, கிள்ளுவது போன்ற செயல்களால் பருக்கள் அதிகமாகும். சரும மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
பருக்களைத் தடுப்பது எப்படி?
சருமம் எண்ணெய் பசையா, வறண்ட சருமமா, நார்மலா எனப் பார்த்து, அதற்கான ஃபேஸ் வாஷ்களை வாங்கி, ஒரு நாளுக்கு  23 முறை முகத்தைக் கழுவலாம். 
முகத்தைக் குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகத்துக்கு எனத் தனியாக ஒரு துண்டைப் பயன்படுத்த வேண்டும். கொழுப்பு, எண்ணெய் உணவுகளுக்கு ‘தடா’ போடுவதன் மூலமும் பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.
இயற்கை முறையில் பருக்களைப் போக்கலாம்!
  கொதிக்கும் நீரில் கொழுந்து வேப்பிலையைப் போட்டு ஆவிபிடிக்க வேண்டும். பிறகு, துண்டால் முகத்தை ஒற்றிஎடுத்து, குளிர்ந்த நீரால் கழுவலாம்.  
  புதினா, துளசி, வேப்பிலை, தலா நான்கு இலைகளை எடுத்து, இதனுடன் சிறிது மரிக்கொழுந்து சேர்த்து, சாறாக அரைத்து, கடலை மாவுடன் கலந்துகொள்ளவும். முகம், மூக்கு ஒரங்களில் இந்தச் சாறைப் பூசி, 10 நிமிடங்கள் கழித்து, இளஞ்சூடான நீரில் கழுவலாம்.
  எங்கு பருக்கள் மிகுதியாக இருக்கிறதோ, அந்த இடத்தில், அரைத்த பூண்டு விழுதைப் பூசி,    15  நிமிடங்களுக்குப் பின் கழுவலாம்.  முகம் முழுவதும் தடவக் கூடாது.
  லவங்கம்  2, மிளகு  2, முல்தானிமட்டி  அரை டீஸ்பூன் எடுத்து பேஸ்ட்டாக்கி, பருக்களின் மேல் தடவலாம்.
  ரோஜா இதழ்களை தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து, ஆறவைக்கவும். இந்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, அடிக்கடி எடுத்து முகம் கழுவலாம். பருக்கள் வராது. முகத்திலும் பொலிவு கூடும். 
  கொட்டைகள் நீக்கப்பட்ட தக்காளிச் சாறு  2 ஸ்பூன், ஜாதிக்காய்த் தூள், மாசிக்காய்த் தூள்  தலா 1 டீஸ்பூன், சந்தனத்தூள்  2 சிட்டிகை இவற்றை கலந்து முகத்தில் பூசிவர, பருக்கள் மறையும்.
  பயத்த மாவு  ஒரு டீஸ்பூன், எலுமிச்சை இலை  2, வேப்பிலை  1, கஸ்தூரி மஞ்சள்  அரை டீஸ்பூன் ஆகியவற்றை  அரைத்து, பன்னீருடன் கலந்து முகத்தில் பூசலாம்.
  வெள்ளரிச் சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை சமஅளவில் எடுத்து, அதில் பார்லி பவுடர், முல்தானிமட்டி தலா 2 ஸ்பூன் கலந்து, மிக்ஸியில் அரைத்து, பருக்கள் வந்த இடங்களில் அடர்த்தியாகப் பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம். பருக்கள் மறையும்.  வராமலும், பரவாமலும் தடுக்கப்படும்.

ABC ஜூஸ்


ஆப்பிள் (Apple) பீட்ரூட் (Beetroot) காரட் (Carrot) மூன்றையும் ஜூஸாக எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. உலக அளவில் சத்தான ஜூஸாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இது.
தேவையானவை: 1 ஆப்பிள், 1/2 பீட்ரூட், 1 கேரட்
செய்முறை: ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றையும் பொடியாக வெட்டி, மிக்ஸியில் அடித்து ஜூஸாக்கவும். தேவைப்படுவோர், சிறிது புதினா இலைகளைச் சேர்க்கலாம். இனிப்பு தேவைப்பட்டால், கொஞ்சம் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்க்கலாம்.
பலன்கள்:
  காலை உணவோடு இந்த ஜூஸ் எடுத்துக்கொண்டால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.
  நீண்ட நேரம் கணினி முன் வேலை பார்ப்பதால் ஏற்படும் கண் வறட்சி, கண் சிவத்தல் பிரச்னைகளை சரிசெய்யும்.
  ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீரற்ற ஹார்மோன்களால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
  கல்லீரலை சுத்தப்படுத்தி, ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
  கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. செரிமானத்துக்கு உதவி புரியும். வயிற்றுப் புண் வராமல் பாதுகாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.
  கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் இளைக்க நினைப்போருக்கு, இந்த ஜூஸ் சிறந்த தேர்வு.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

பெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!


முன்பெல்லாம் பெண்களுக்கெல்லாம் மாரடைப்பு எனும் நெஞ்சு வலி வருவது அரிதாகத் தான் இருந்தது.
மேலும் ஆண்களுக்கு மட்டும் தான் நெஞ்சு வலி வரும் என்றும் கூறப்பட்டு வந்தது.
ஆனால், இந்தக் காலத்தில் ஆண்களைப் போலவே பெரும்பாலான பெண்களுக்கும் நெஞ்சு வலி வருவது சாதாரணமாகிவிட்டது.
நெஞ்சு வலிதான் பெண்களைக் கொல்லும் முதல் எதிரி என்றும் கூறப்படுகிறது.
2012 இல் ரோஸி ஓ’டன்னல் என்ற பெண்ணுக்கு, மற்ற பெண்களுக்கு வருவதைப் போல “ஹாலிவுட் நெஞ்சு வலி” வரவில்லை.
மாறாக, அவர் மார்பு மற்றும் கைகளில் வலி ஆகியவற்றுடன் வயிற்றுப்போக்கு மற்றும் தோல் ஈரமாவது ஆகியவற்றால் அவதிப்பட்டார்.
இங்கு அப்படி பெண்களுக்கு மாரடைப்பு வந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில விசித்திரமான அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.
மூச்சு விடுவதில் சிரமம்
நெஞ்சு வலியால் அவதிப்படும் பெண்களில் 42% பேர் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாம்.
இது எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று வரும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு இந்த அறிகுறி அதிகம் என்று கூறப்படுகிறது.
மேல் உடம்பு வலி
பொதுவாகவே நெஞ்சு வலி வரும் போது உடம்பின் மேல் பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது. கழுத்து, பல், தாடை, முதுகு, கைகள் (குறிப்பாக இடது கை) மற்றும் தோள்பட்டை ஆகியவற்றில் வலி ஏற்படும்.
நரம்புகள் மூலம் இவற்றுக்கு இதயத்துடன் இணைப்பு இருப்பதால், நெஞ்சு வலி வரும் போது இந்த பாகங்களிலும் வலி ஏற்படுகிறது.
வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி
இந்த அறிகுறிகள் ஆண்களை விட பெண்களுக்குத் தான் 2 மடங்கு அதிகம். நெஞ்சு வலி வரும் போது, இதயத்துக்குக் கீழ்ப்பகுதியில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன.
களைப்பு, தூக்கம்
நெஞ்சு வலி ஏற்படும் பெண்களில் பாதிப் பேருக்கு மேல் களைப்பு ஏற்படுகிறது. 515 பெண்களைப் பரிசோதித்ததில், அவர்களில் 70.7 சதவீதத்தினர் களைப்பால் அவதிப்பட்டனர். அதே போல், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குத் தூக்கத்தில் பிரச்சனைகள் வந்தன.
ஃப்ளூ காய்ச்சல்
நெஞ்சு வலி ஏற்படும் பெண்களுக்கு ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் ஏற்படும். இதனால் அவர்களுக்குக் களைப்பும் வரும்.
குளிர் வியர்வை
பெண்களுக்கு மெனோபாஸ் வராத நேரத்தில் குளிர் வியர்வை ஏற்பட்டால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அது நெஞ்சு வலியின் அறிகுறியாக இருக்கலாம். எனவே அப்போது உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவது அவசியம்.
மார்பில் அழுத்தம், வலி
நெஞ்சு வலிக்கு இவை பெரிய அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இவை கண்டிப்பாக ஏற்படும். இவை புதிதாக ஏற்பட்டால், நெஞ்சு வலி நிச்சயம் தான் என்று கூறலாம்.
லேசான தலை வலி, கிறுகிறுப்பு
பெண்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலிக்கு இவையும் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இதயத்துக்குப் போகும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் போது இவை ஏற்படும். ஒரு ஆய்வில், நெஞ்சு வலி வந்த பெண்களில் 39% பேருக்கு இந்த அறிகுறிகள் இருந்தன. சிலருக்கு வலிப்பும் ஏற்பட்டதாம்.
தாடை வலி
நெஞ்சு வலி ஏற்படும் பெண்களுக்கு கூடவே தாடை வலியும் தொற்றிக் கொள்ளுமாம். இதயத்திலிருந்து செல்லும் சில நரம்புகளுடன் தாடைக்குத் தொடர்பு இருப்பதால் இது ஏற்படும். தாடை வலி தொடர்ந்து இருந்தால், அது பல்வலி தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் இவ்வலி விட்டுவிட்டு வந்தால், நெஞ்சு வலி இருக்கக்கூடும்.
எரிச்சல்
நெஞ்சு எரிச்சல், கனமாக இருத்தல், அழுத்தமாக இருத்தல், இறுக்கமாக இருத்தல், பிழிவது போல இருத்தல் ஆகியவையும் நெஞ்சு வலிக்கான அறிகுறிகள் தான். இவை திடீரென்று வராது; தீவிரமாகவும் இருக்காது. சில வாரங்களுக்கு இருக்கும்; சில வாரங்களுக்கு இருக்காது. இந்த அறிகுறிகளுடன் கூடவே வயிற்றுப் போக்கும் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசிப்பது  நலம்.

கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ??

http://www.bestsupplements.com/wp-content/uploads/2011/08/cholesterol15.gif
நாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது.

வாய்க்கொழுப்பு அதிகமானால் செல்போனில் நாள் முழுவதும் அரட்டை கச்சேரி செய்யத் தோன்றும். உடல் கொழுப்பு அதிகமானால் யாரையாவது அடிக்கத் தோன்றும்.

ஆனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டால் இதயநோய்கள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 1200 கலோரி உணவு போதும். இந்த அளவுடைய உணவை தினமும் உண்டால் நம இரத்தத்தில் கொழுப்பு சேராது.

காலையில் காபியோ அல்லது தேனீரோ அருந்தலாம். ஆனால் அதில் ஆடை நீக்கிய பாலும், சர்க்கரையும் குறைவாக இருக்கவேண்டும்.

நினத்தபோதெல்லாம் காபி அல்ல தேநீரை அருந்துவது, நண்பர்களுக்கு கம்பெனி தருவதாக நொண்டிச்சாக்குச் சொல்லிச் சொல்லி அடிக்கடி தேநீர் குடிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

‘வேறு வழியில்லாமல் குடித்து விட்டேன் இப்போ நெஞ்செரிச்சல் ஆரம்பித்து விட்டது’ என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம். கொழுப்பக் குறைப்பது என்பது மற்றவர்களின் ஆரோக்கியத்திற்காக அல்ல என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் குடும்ப நன்மைக்காகவும்தான்.

சாப்பிடத்தெரிந்து கொள்ளுங்கள்

என்னங்க இது கூடவா தெரியாது? ரொம்பத்தான் ... என்று சிலர் முணுமுணுப்பது காதில் கேட்கிறது. காலை டிபனுக்கு எல்லாவற்றயும் வளைத்துக்கட்ட வேண்டாம். மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை போதும். போதுமா என்கிறீர்களா? போதும்தான். உழைப்புக்கு ஏற்ற ஊதியம்தான் கிடக்கும் என்பதைப்போல உழைப்பிற்கு ஏற்ற உணவுதான் உண்ணவேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

தோசைக்கு எண்ணெய் விடாமல் இருப்பது நல்லது. சட்னிக்கு தேங்காய் வேண்டாம். காரம், புளி, உப்பு இவை குறைவாக வைத்துச் செய்த ஏதாவது ஒரு சட்னியைத் தொட்டுக் கொள்ளுங்கள். தோசைக்கு சொத சொதவென்று எண்ணெய் விட்டுக் கொண்டும் மிளகாய்ப்பொடியை ஏராளமாக எண்ணெய் விட்டு குழைத்துக் கொண்டும் இதுவரையில் சாப்பிட்டவர்களுக்கு நான் மேலே குறிப்பிட்டபடி சாப்பிடப் பிடிக்காது.

உண்மைதான் ஆனாலும் என்ன செய்வது? நீங்கள் இதுவரையில் உங்கள் விருப்பப்படி சாப்பிட்டுவிட்டீர்கள். அது போதும். இனிமேல் உங்கள் ஆரோக்கியத்திற்காக நாக்கை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். காலை டிபனோடு ஒரு டம்பளர் தண்ணீரில் பாதி மூடி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, சிறிது உப்பு சேர்த்து ஜூஸாக குடியுங்கள்.

எனக்கு டிபன் சாப்பிட்டால் சூடாக ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் திருப்தி என்ற கதையெல்லாம் வேண்டாம். காலை ஒன்பது மணிக்குள் டிபனை முடித்துக் கொண்டு சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுங்கள்.

பகல் உணவை வெந்த காய்கறிகள், கீரை, ஒரு சப்பாத்தி, இவற்றோடு குறைவான அளவு சாதத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். ஒரு கப் சாம்பார், ஒரு கப் ரசம், இரண்டு கப் காய்கறிகள், ஒரு கப் மோர் இவற்றோடு ஒரு கப் சாதம் என்று சாப்பிடுவ மிகவும் நல்லது.

இவ்வாறு சாப்பிட்டால் எளிதாக செரிமானம் ஆகும். மூன்று மணிநேரத்திற்கு பசி இல்லாமலும் இருக்கும். நன்றாகக் கடைந்த மோர் ஒரு தம்ளர் குடியுங்கள். இதற்குப் பிறகு எதுவும் வேண்டாம். மாலை டிபன் வேண்டும் என்றால் காய்கறிகள பச்சையாக நறுக்கி அவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு பிரட் துண்டுகளச் சாப்பிடுங்கள். அவசியமானால் பால் குறைவான தேநீர் அல்ல காபி அருந்தலாம். சர்க்கரையை குறைவாக உபயோகிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே அவசியம்தான்.

இரவு நேரத்தில் நெய் விடாத சப்பாத்தி, முளைகட்டிய கடலையில் மிளகும் உப்பும் தூவி செய்த டிஷ் செய் சாப்பிடுங்கள். இது வேண்டாம் என்றால் கோதுமை ரவையுடன் பாசிப்பயறு கலந்து மிளகுத்தூள் சேர்த்து பொங்கலாக்கிச் சாப்பிடுங்கள். இது என்ன ஏக கெடுபிடியாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இவ்வாறு திட்டமிட்டுச் சாப்பிட்டால் உடம்பில் அதிக எடை சேராது. கொழுப்பும் ஏறாது. இதயநோய்களுக்கு டாடா சொல்லிவிட்டு ஆனந்தமாக வாழலாம்.

கொழுப்பு என்ன செய்யும்?

இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகிவிட்டால் இரத்தக்குழாய்களின் உட்புறச் சுவர்களில் கொழுப்பு படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. எனவே இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத்தசைகள் ஓவர்டைம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இதயம் பலம் குறைந்து நோய்களுக்கு ஆளாகிறது.

இரத்தத்தில் கலந்த கொழுப்பு இரத்தக்குழாய்களில் அங்கங்கே சிறுசிறு கட்டிகளாகத் தேங்கிவிடும். இதனால் இதயம் மற்றும் மூளக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும் அல்லது முழுவமாக தடைபட்டுவிடும். அதுபோன்ற நேரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த அடைப்புகள் பெரிய அளவில் இருக்கும்போது திடீர் இறப்பும் நேரிடுவதுண்டு.

கொலஸ்டிரால் மற்றும் உடல் எடையக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமாக இதன் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். புகை பிடிப்பவராக இருந்தால் அந்தப் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒருகை பார்ப்பது என்று இறங்கி கண்டபடி சாப்பிட்டு விட்டால் இதய நோய்களுக்கு ஆளாகிவிடுவது உறுதி.

இதய அறுவ சிகிச்சை என்று போய்விட்டால் வலியும், வேதனையும், பணச்செலவும், உயிர்ப்பயமும் ஒருபக்கம் இருக்க, உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் வேளைக்கு வேளை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படும். வாழ்க்கையே வெறுதுத்ப்போய்விடும். இவைகளை மனதில் கொண்டு ருசிக்கு மட்டுமே சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.

இளசுகளுக்கான எச்சரிக்கை

நம நாட்டில் நாகரிக மோகத்தின் தாக்கத்தினால் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது இளம் வயதினரிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக எடை கூடுவதோடு, இரத்தத்தில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும் அபாயம் உண்டு. மேலும் தற்போது கணிப்பொறியின் சந்நிதியிலேயே காலத்தக் கழிப்பதை ஆண்களும் பெண்களும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

உடல் உழைப்பே இல்லாத நிலையில் இந்த உணவு வகைகள் உடல் எடையக் கூட்டுவதற்கும், ஊளைச்சதை போடுவதற்கும் அடிப்படையாக அமைகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உணவு வகைகள் இவர்கள கொலஸ்டிராலின் அளவை கணிசமான அளவிற்கு உயர்த்தி இதயநோய் தாக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவை இன்றைய இளசுகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். கணிப்பொறி வேலையப் பற்றியும், கைநிறையப் பெறும் வருமானத்தைப் பற்றியுமே கவலைப்படும் இவர்கள், தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். மிதமிஞ்சிய இத்தனை உணவினால் எதிர்காலம் இவர்களுக்கு இருண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எனவே ஃபேஷனுக்கு அடிமையாகி மோசம் போகாமல் இளைய தலைமுறயினர் தவறான உணவு முறையைத் தவிர்ப்பது நல்லது.

ஃபாஸ்ட் ஃபுட்டுக்குப் பதிலாக இவர்கள் பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தினமும் திராட்சைச் சாறு குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது பல் சொத்தயைத் தடுக்கிறது. மேலும் இது நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி. எல்லின் அளவை ஏழு சதவீதம் வரையில் உயர்த்துகிறது. ஆகவே தினமும் திராட்சையை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

மேலும் இரத்த சோகைஉள்ள பெண்கள் தினமும் 500 கிராம் அளவிற்கு திராட்சப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரங்களில் அவர்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். எனவே ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்திற்கு விடைகொடுத்து பழங்களை உண்ணும் பழைய வழக்கத்திற்குத் திரும்புவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

அப்புறமென்ன கொழுப்புக்கு குட்பைதானே! 
NANDRI TO: KUMUDAM HEALTH

வியாழன், 8 ஜனவரி, 2015

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை



காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெ
ய்த்துளி பாம்புபோல ளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

வியாழன், 1 ஜனவரி, 2015

அரிப்பு ஏற்பட்டால் ஆராயுங்கள்…!


பெரும்பாலானவர்கள் `அரிப்பு’ என்பது ஒருவிதமான நோய் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரிப்பு என்பது நோயல்ல என்னும் உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளில் தோன்றும் பலவகையான நோய்களின் வெளிப்பாடே அரிப்பு. உதாரணமாக, எந்த இடத்தில் உங்களுக்கு அரிப்பு ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் ஏதோ நோய் தோன்ற போகிறது எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது நோய் வருவதற்கு முன்பே அதை அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.
பெரும்பான்மையான பெண்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குவது பிறபுறுப்பில் ஏற்படும் அரிப்பு. சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக வெள்ளைபடும். அது பிறபுறுப்பில் உள்ள உதட்டு பகுதியில் படிவதால், அந்த வெள்ளையிலுள்ள நுண்ணுயிரிகள் உதடுகளைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. சில வகையான பூஞ்சைக் காளான்கள் அதிகமாக பெருகி வளரும்போது தாங்க முடியாத அரிப்பை உண்டாக்குகின்றன.
கருவுற்ற காலங்களில் கர்பபை வாசல், பிறப்புறுபு போன்ற வற்றில் அளவுக்கு அதிகமான சுரப்பிகள் சுரக்கின்றன. இவை புறபகுதியில் ஏற்படும்போது அரிப்பு ஏற்படுகிறது. வயதாகும்போது பெண்களின் பிறபுறுப்பில் சிதைவு மாற்றம் நிகழ்வதாலும் அரிப்பு உண்டாகும். மஞ்சள் காமாலை, ரத்தசோகை, வைட்டமின் சத்துக் குறைபாட்டினால் உடலின் பிற பகுதிகளில் மட்டுமின்றி, பிறபுறுப்பிலும் அரிப்பு ஏற்படுவதுண்டு.
குண்டாக இருக்கும் பெண்களின் வயிறு, தொண்டை போன்ற இடங்களில் உள்ள மடிப்புகளில் அழுக்குகள் தேங்குகின்றன. இவற்றில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அடைந்து அரிப்பு ஏற்படுகிறது. உடல் அழுத்தம் காரணமாக பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கசிவதாலும் பிறபுறுப்பில் அரிப்பு உண்டாகும். இவ்வாறு இருக்கும்போது சில பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தாங்களாகவே பலவகையான மருந்துகள், களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். இது தவறு.
அரிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும்.