பருக்கள் ஏன் வருகின்றன?
சருமம் எண்ணெய் பசையுடன் இருப்பதற்கு காரணம், உடலில் சீபம் என்ற எண்ணெய் சுரப்பதுதான்.ஹார்மோன் பிரச்னையால் சிலருக்கு இந்த சீபம் மிக அதிகமாகச் சுரக்கும். இந்தச் சுரப்பிகளில் தடை ஏற்பட்டாலோ, சருமத்தில் சீபம் அதிகமாகச் சுரக்கும் போதோ, சிறு கட்டிகள் போல பருக்கள் உருவாகின்றன.
சமச்சீரற்ற ஹார்மோன்கள், அதிகமான எண்ணெய் உணவுகளை சாப்பிடுதல், அதிகளவில் மருந்துகளை உட்கொள்ளுதல்,மனப் பிரச்னைகள், சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இன்மை, பொடுகுத் தொல்லை, காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துதல் போன்ற காரணங்களும் பருக்களை ஏற்படுத்துகின்றன.
எந்த வயதில் வரும்?
13 வயது முதல் 30 வயது வரை பருக்கள் வரலாம். இந்த வயதைக் கடந்த பிறகும், சிலருக்குப் பருக்கள் வரலாம். பெண்களுக்கு, மாதவிலக்கு சமயங்களில் மட்டும் பருக்கள்வந்து மறையும். சினைப்பையில் நீர்க்கட்டிகள் (PCOD) இருந்தாலும் பருக்கள் வரும்.
பருக்கள் எப்படி பரவுகின்றன?
முகத்தில் மூக்கு ஓரங்கள், தாடை, நெற்றி, கன்னம் ஆகிய பகுதிகளில் கறுப்பாகவோ, வெள்ளையாகவோ வரலாம். இதை ப்ளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் என்போம். சருமத்தில் உள்ள பாக்டீரியா தொற்றால் குருத்தாகத் தோன்றி, சீழ் பிடித்த கட்டிகளாக மாறுகின்றன. சிலருக்குப் பருக்கள் வலிக்கும். பருக்களை பிதுக்கி சீழ் எடுப்பது, அடிக்கடி தொட்டுப் பார்ப்பது, கிள்ளுவது போன்ற செயல்களால் பருக்கள் அதிகமாகும். சரும மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
பருக்களைத் தடுப்பது எப்படி?
சருமம் எண்ணெய் பசையா, வறண்ட சருமமா, நார்மலா எனப் பார்த்து, அதற்கான ஃபேஸ் வாஷ்களை வாங்கி, ஒரு நாளுக்கு 23 முறை முகத்தைக் கழுவலாம்.
முகத்தைக் குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகத்துக்கு எனத் தனியாக ஒரு துண்டைப் பயன்படுத்த வேண்டும். கொழுப்பு, எண்ணெய் உணவுகளுக்கு ‘தடா’ போடுவதன் மூலமும் பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.
இயற்கை முறையில் பருக்களைப் போக்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.