செவ்வாய், 22 ஏப்ரல், 2014

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

தூக்கம்… மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்படையே இதுதான். மஞ்சணையில் படுத்தும் தூக்கம் வராமல் தவிப்போரும் உண்டு, கட்டாந்தரையில் படுத்த மாத்திரத்தில் உறங்கிப் போவோரும் உண்டு.
ஆக, தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. ஒருவன் நன்றாக தூங்கினால், இன்னொருவன் தூக்கம் இன்றி தவிக்கிறான்.
நீங்களும் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா? உங்கள் உணவு முறையில் சிறிய மாற்றம் செய்தாலே போதும், அப்புறம்… நீங்கள் நினைத்த நேரத்தில் தூங்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள். இவர்கள் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்காக பரிந்துரை செய்த உணவுகள் பீன்ஸ், பசலைக்கீரை, தயிர் மற்றும் இறால்.
பசலைக்கீரையைப் பொறுத்தவரையில் அதில் இரும்பு சத்து அதிகம். அளவில் தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் பசலைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.
பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6, பி12 உள்ளிட்ட `பி’ வைட்டமின்களும், போலிக் அமிலமும் அதிகமாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை அமைதியாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க செய்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு `பி’ வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஏற்கனவே ஆய்வு செய்து நிரூபித்தும் இருக்கிறார்கள்.
கொழுப்பு குறைந்த அளவில் உள்ள தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உண்டு. இந்த சத்துக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும். அதோடு, மன அழுத்தம், உடல் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மீன்களில் பலவகை உண்டு என்றாலும் இறால் மீனுக்கு தனி இடம் உண்டு. சிறந்த ருசி மிக்க கடல் உணவான இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு நம் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனை பெற்றிருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.

கத்திரி வெயிலை சமாளிக்க…

கோடை காலம் தவிர்க்க முடியாதது; ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும்.
கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், ஆயாசமும், கூடவே தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது.
இளநீர், மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். அவ்வாறு இருப்பவர்கள், அவற்றுடன் சிறிது மிளகுத் தூளை சேர்த்துக் கொண்டால் போதும். எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், ஜூசாக எடுத்துக் கொள்வதை விட, சுவைத்து சாப்பிட்டால், அதன் பலன் இரட்டிப்பாகும்.
கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். எலுமிச்சைப் பழமும், தேனும் அல்லது சர்க்கரை, உப்பும் கலந்து அருந்தினால் தாகம் அடங்கும். நுங்கு சாப்பிடலாம். சுத்தமான மோரில் உப்பு போட்டு, அதிக அளவு அருந்தலாம்.
கோடையில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, மோருடன் கீழாநெல்லியை அரைத்து, கலந்து, காலை வேளையில், வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
இதேபோல், மூலநோய் உள்ளவர்களும் கோடை காலத்தில் மிகவும் சிரமப்படுவர். இவர்கள் மாங்காயில் உள்ள பருப்பை அரைத்து, மோரில் கலந்து சாப்பிடலாம். அத்திப்பழம் நிறைய சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.
முள்ளங்கி, காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, வெள்ளைப் பூசணி, சவ்சவ், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்காய்களை சாலடாக மிளகுத் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
கோடை காலங்களில் கனரக ஆலைகளில், வாகனங்களில் பணிபுரிவோருக்கு உடல் அதிக உஷ்ணம் அடைந்து, அநேக பிரச்னைகள் ஏற்படும். இதற்கு சீரகம், வெந்தயம் இரண்டையும் சேர்த்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, மோரில் கலந்து சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியடையும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் வழக்கத்தை விட, கூடுதலாக பிரச்னைகள் ஏற்படும். அவர்கள் தண்ணீரில் சீரகம், மல்லித்தூள் இரண்டையும் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய பிறகு குடிக்கலாம்.
காலையில் கம்பு, சோளம், ராகி கூழ் அல்லது கோதுமை, பார்லி ஆகிய கஞ்சி வகைகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் புளிப்பில்லாத ராகி, கம்பு, கூழ் வகைகளை அருந்தலாம். கோடையில் தோல் நோய்கள், அரிப்பு, நமைச்சல், படை, சொறி, சிரங்கு போன்றவை அதிகமாக ஏற்படும். அச்சமயத்தில், குளிக்கும் போது, கடலை மாவு, பயத்தம் மாவு, முடிந்தால் சந்தனம், வெட்டிவேர் இவற்றைக் கலந்து பொடித்து, உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஈரமான ஆடைகளை அணியக் கூடாது. உடல் ஈரத்துடனும், ஆடைகள் அணியக் கூடாது. கோடை காலத்தில் பருத்தி ஆடைகளே சிறந்தது.
காலை, மாலை இரண்டு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து தலை குளிக்க வேண்டும்..
ஒருநாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, மறுநாள் காலை தலைக்கு பூசி குளித்து வந்தால், குளிர்ச்சியாக இருக்கும்.

மூச்சு

- மூச்சு வாங்குது.
- மூச்சு திணறுது.
- மூச்சுவிட கஷ்டமா இருக்கு.
- மூச்சு நின்னுடுச்சு.
இப்படி மூச்சு, மூச்சு என்று அடிக்கடி எல்லோரும் சொல்வதை, நீங்களும் கேட்டிருப்பீர்கள். மூக்கு வழியாக காற்றை உள்ளிழுத்து, வெளியே விடுவதைத்தான் `மூச்சு’ என்று சொல்லிப் பழகிவிட்டோம். இதையே `சுவாசித்தல்’ என்றும் நாம் சொல்வதுண்டு.
நம்மை அறியாமலே, இயற்கையாக, தன்னிச்சையாக, சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை.
சுவாசித்தல், நுரையீரல் என்கிற உறுப்பு மூலமாகத்தான் நடைபெறுகிறது. நுரையீரல் நமது உடலில் மார்பின் இரண்டு பக்கமும் நிறைந்திருக்கிறது. நமது மார்பிலுள்ள இரண்டு நுரையீரல்களிலும், கண்ணுக்குத் தெரியாத அளவில் மிகமிகச் சிறிய பலூன் போன்ற காற்றுப்பைகள் சுமார் முப்பது கோடி எண்ணிக்கையில் இருக்கின்றன. வெளியிலிருந்து உள்ளே இழுக்கப்படும் காற்று, இந்த முப்பது கோடி காற்றுப் பைகளுக்குள்ளும் சென்றுதான், மாற்றமாகி, மறுபடியும் வெளியே வருகிறது.
உலகமெங்கும் பரவியிருக்கும் காற்றைத்தான், நாம் பிறந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். காற்று, கண்ணுக்குத் தெரியாதது. ஆனால் எங்கும் நிறைந்து இருப்பது. செடி, கொடிகள் அசையும்போது நாம் காற்று அடிக்கிறது என்று சொல்கிறோம். காற்றை நம்மால் உணர மட்டும் தான் முடியும்.
காற்றை நாம் சுவாசிப்பதனால்தான் உயிர் வாழ்கிறோம். சுவாசித்தல் நின்று விட்டால், உயிரும் நின்று விட்டதாக அர்த்தம். `தூங்கையிலே வாங்குகிற மூச்சு, சொல்லாமல் நின்னாலும் போச்சு’ “ராத்திரி படுத்து, காலையில் எழுந்தால்தான் உயிர் நிச்சயம்” என்று சுவாசித்தலைப் பற்றி கிராமத்திலுள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு.
காற்றில் கலந்திருக்கும் `பிராணவாயு’ என்ற `ஆக்ஸிஜன்’ வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத காற்றில், ஆக்ஸிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாகக் கலந்துள்ளன. அதாவது, காற்றில் சுமார் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவும், 21 சதவீதம் ஆக்ஸிஜன் வாயுவும் இருக்கின்றன. மீதமுள்ள ஒரு சதவீதத்தில் 0.93 சதவீதம் ஆர்கான், 0.039 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நியான், ஹீலியம், மீதேன், கிரிப்டான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ஓஸோன், அயோடின், அம்மோனியா போன்ற சுமார் பதினாறு விதமான வாயுக்கள் கலந்திருக்கின்றன.
காற்றில் 21 சதவீதம் இருக்கும் ஆக்ஸிஜன் வாயுதான், நம்மை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த 21 சதவீத ஆக்ஸிஜன் வாயு, 1 சதவீதம் குறைந்தால் கூட, உடலில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் ஐந்து சதவீதம் குறைந்தால் எல்லோர் உயிருக்கும் ஆபத்துதான்.
இந்த 21 சதவீத ஆக்ஸிஜனே உலகிலுள்ள அனைவரும் உயிர்வாழ போதுமானது. இதைக் கெடுக்காமல், இது இன்னும் குறையாமல் பார்த்துக் கொண்டால் சரிதான். காற்றின் அழுத்தமும், காற்றின் அடர்த்தியும் உயரம் போகப் போக குறைந்துகொண்டே போகும். சுமார் பத்தாயிரம் மீட்டருக்கு மேலே போகும்போது, காற்றில் உள்ள வாயுக்களின் சதவீதம் மாறும்.
நீருக்குள் காற்று இருக்கிறது, நீருக்குள்ளேயே வாழும் உயிரினங்கள் அனைத்துமே, தனக்குள்ள `கில்ஸ்` என்று சொல்லக்கூடிய விசேஷ நுரையீரலைப் பயன்படுத்தி, தண்ணீரிலுள்ள காற்றிலிருந்து, ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை மட்டும் பிரித்தெடுத்து சுவாசிக்கின்றன.
விண்வெளியில் ஆக்ஸிஜன் வாயு கிடையாது. ஆகவே விண்வெளி வீரர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை உடன் எடுத்துச் சொல்கிறார்கள். வானத்தில் `ஓஸோன் திரை’ என்று சொல்லக்கூடிய இடம் வரைக்கும் தான் ஆக்ஸிஜன் வாயு உண்டு. அதற்கு மேல் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு காற்று இருக்கும். ஆனால் ஆக்ஸிஜன் வாயு இருக்காது.
பூமிக்கடியில் அதிக ஆழத்திலுள்ள சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு, `வென்டிலேடிஸ் ஷாப்ட்’ என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ராட்சத குழாய், பூமியிலிருந்து சுரங்கத்திற்குள் நுழைக்கப்பட்டு, தரையிலுள்ள இயற்கைக்காற்று உள்ளே அனுப்பப்படுகிறது. இதன் மூலம்தான் சுரங்கத் தொழிலாளர்கள் சுவாசிக்கிறார்கள்.
தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களுக்கு, நுரையீரலில் காற்று இருப்பதற்குப் பதிலாக தண்ணீர் நிரம்பி விடுகிறது. இதனால்தான் இறக்கிறார்கள்.
`சூரிய ஒளிச்சேர்க்கை’ அதாவது `போட்டோ சிந்தெஸிஸ்’ (Photo Synthesis) என்று சொல்லக்கூடிய செயல்முறையில், தாவரங்கள் அனைத்தும், சூரிய ஒளிசக்தியை பயன்படுத்தி, ஆக்ஸிஜன் வாயுவை உண்டாக்குகிறது. இந்த ஆக்ஸிஜனை உயிரினங்கள் எடுத்துக் கொள்கின்றன. உயிரினங்கள் தான் உண்ணும் உணவை எரித்து, அதன் மூலம் கிடைக்கும் சக்தியை உடலுக்கு கொடுக்க, ஆக்ஸிஜன் வாயு மிகவும் உபயோகப்படுகிறது.
மனிதன் ஆக்ஸிஜன் வாயுவை சுவாசித்து, (அதாவது உள்ளே இழுத்து) கார்பன் டை ஆக்சைடு என்கிற வாயுவை வெளியே விடுகிறான். இதற்கு நேர்மாறாக, எல்லா செடி, கொடிகளும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளே இழுத்து, ஆக்ஸிஜன் வாயுவை வெளியே விடுகிறது. சூரிய வெளிச்சம் இருந்தால்தான் இப்படி நடக்கும். சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் அதாவது இரவில், மனிதனைப் போல தாவரங்களும் ஆக்ஸிஜன் வாயுவை உள்ளே இழுத்து, கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியே விடுகிறது.
ஆக்ஸிஜன் வாயு நமக்கு தேவை. கார்பன் டை ஆக்ஸைடு வாயு நமக்குத் தேவையில்லை. பகலில் ஆக்ஸிஜன் மரத்தடியில் கிடைக்கும். அதனால் பகலில் மரத்தடியில் படுக்கலாம். இரவில் ஆக்ஸிஜன் மரத்தடியில் கிடையாது. கார்பன் டை ஆக்ஸைடு தான் கிடைக்கும். இரவில் மரத்தடியில் படுக்கக்கூடாது என்று சொல்வதன் காரணம் இதுதான்.
என் நண்பர் ஒருவர் வாக்கிங் போகும்போதும், சும்மா இருக்கும்போதும், வழியிலிருக்கும் செடி, கொடிகளின் அருகில் போய் இலைகளுக்கு பக்கத்தில் மூக்கைக் கொண்டு போய், நன்றாக மூச்சை உள்ளே இழுத்துவிட்டு வருவார். “என்ன சார் இது, வழியெல்லாம் செடி, கொடிகளை மோப்பம் பிடித்துக்கொண்டே வருகிறீர்கள்” என்றேன்.
“எல்லாச் செடி கொடிகளும் பகலில் ஆக்ஸிஜனை வெளியே விடும். இவைகளிலிருந்து வெளியே வரும் இந்த சுத்தமான ஆக்ஸிஜன் நமக்குத் தேவை. அதனால்தான் இலைகளின் கிட்டே போய் அந்த சுத்தமான ஆக்ஸிஜனை, கலப்படமில்லாத ஆக்ஸிஜனை உள்ளே இழுத்து, உடம்பை தெம்பாக்கிக் கொள்கிறேன் டாக்டர்” என்றார் அந்த நண்பர். அவர் செய்வது சரிதான்.
அதிக மக்கள் கூட்டத்தில் நாம் இருக்கும்போது, ஆக்ஸிஜன் நமக்கு கிடைப்பது குறைந்து விடுகிறது. அதாவது பத்து பேர் இருக்க வேண்டிய இடத்தில் நூறு பேர் இருந்தால் நமக்கு ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும். அதே நேரத்தில், எல்லோரும் சுவாசித்து விட்டு, காற்றை வெளியே விடும்போது அந்த இடத்தில் கார்பன் டை ஆக்ஸைடு வாயு அதிகமாகி விடுகிறது. கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று சொல்வது இதனால் தான்.

திங்கள், 21 ஏப்ரல், 2014

அக்குபஞ்சர் புள்ளிகள்

அக்குபஞ்சர் புள்ளிகள்



பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக இயங்கவில்லை என்றால் உடலில் பல நோய்கள் தோன்றுகின்றன.பஞ்சபூதங்களான நெருப்பு, நிலம், காற்று, நீர் மரம் என ஐந்து மூலகங்களும் நம உடலில் எப்படி பரவி இருக்கின்றன என்று பார்ப்போம் .

சீன அக்குபஞ்சர் தாவோவின் இயக்கத்தின்படி கரு -உரு தத்துவம் (கரு/-உட்புறம், உரு-வெளிப்புறம்) என்று அழைக்கப்படுகிறது.
சீனா கோட்பாட்டின் படி 12 பாதைகள் 15 இணைப்பு பாதைகள் 8 சிறப்பு பாதைகள் இவற்றின் மீது தான் அக்குபஞ்சர் புள்ளிகள் அமைந்துள்ளன.

நம் உடலில் முக்கியமான 12 உள்ளுறுப்புகள் உள்ளன, அவை முறையே பஞ்சபூத சக்தியோடு எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்க்கலாம்.

மூலகங்கள் (five Elements)------- தொடர்புடைய உள்ளுறுப்புகள்
1. நெருப்பு (fire) - இருதயம், சிறுகுடல் , இருதய உறை, மூவெப்ப மண்டலம்,
2.நிலம் (Earth) - மண்ணீரல் , வயிறு
3. காற்று (Metal/air) - நுரையீரல், பெருங்குடல்
4. நீர் ( Water) - சிறுநீரகம், சிறுநீர்ப்பை
5. மரம் ( wood ) - கல்லீரல், பித்தப்பை

12 முக்கிய உறுப்புகளில் தேவைக்கு குறைவாகவோ , அதிகமாகவோ சக்தி பெறப்பட்டால் உடலில் தோன்றும் நோயின் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.


இருதயம் ( Heart) 

படபடப்பு, கைகால்களில் தளர்ச்சி, சூடான உள்ளங்கைகள் , மூக்கில் வீக்கம், தூக்கமின்மை, அதிக வியர்வை, சிவந்த தோற்றம்.

சிறுகுடல் ( Small Intestine)

தலைவலி, கால்களில் ரத்தஓட்ட குறைவு, வயிறு பெருத்தல், மலச்சிக்கல், அஜீரணம், காதில் இரைச்சல், எப்போதும் குளிர்வது போன்று இருத்தல்.
இதயஉறை (Pericardium)
படபடப்பு, குளிர்ந்த வியர்வை மிக்க கைகள், ஞாபகமறதி, உயரமாக இருப்பவற்றை பார்த்து பயம், அடிக்கடி கனவு காணுதல், தூக்கமின்மை, இதயவலி.

மூவெப்பமண்டலம் (Triple warmer)

காதில் இரைச்சல், காது மந்தம், மயக்கம், செரிமானமின்மை, மூச்சு கோளாறு, சிறுநீர் தொல்லைகள், எப்போதும் முன் எச்சரிகையாக செயல்படுவது போன்று எண்ணம்.

மண்ணீரல் (Spleen)

வயிற்றுப்போக்கு, மாதவிடாய் குறைபாடுகள், நீர்க்கோவை, அதிக எடை, இனிப்பின் மீது ஆர்வம், பாதங்களில் குளிர்ச்சி, அஜீரண கோளாறு,தொடர்ந்து மயக்க உணர்வு.

இரைப்பை (Stomach)

வாயில் கெட்ட நீர் ஊறுதல், உதடுகளின் வறட்சி, மார்பக அழற்சி, உணவின்மீது அதிக நாட்டம் (அ) உணவு உண்ண இயலாமை, கைகால் வீக்கம், அடிவயறு உப்பசம், மஞ்சளான தோற்றம்,

நுரையீரல் (Lungs)

தோள்பட்டைவலி, மூச்சுவாங்குதல், சளி, இருமல், கைகால் சில்லிடுதல், தோலில் வறட்சி, சக்தியின்மை, நடுக்கம், அசதி, சூடான உள்ளங்கைகள்.

பெருங்குடல் (Large Intestine)

தோள்பட்டை சரிவு, மலசிக்கல், வயிற்றுப்போக்கு, நமைச்சல், தலைவலி, பல்வலி, தொண்டைபுண், சீதளம், அடிக்கடி சளி பிடித்தல்.

சிறுநீரகங்கள் (Kidney)

மூச்சுத்தொல்லைகள், தொண்டைவீக்கம், மூட்டுவலிகள், பாலியல் தொல்லைகள், அசதி, களைப்பு, தளர்ச்சி, மனக்கவலை, இரவில் வியர்த்தல்.

சிறுநீர்ப்பை (Urinary Bladder)

தலைவலி, கழுத்து விரைப்பு, முதுகுவலி, நடுக்கம், கவலை, ஆவல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், கொட்டாவி, கை நடுக்கம்,

கல்லீரல் (Lever)

பசியின்மை, எரிச்சல், கோபம், கண்புரை, கால்கள் வீக்கம், கெட்ட நாற்றத்துடன் சிறுநீர் போதல், வயிறு உப்பசம், கல்லீரல் அமைந்துள்ள வலது வயிறு பாகத்தில் வலி.

பித்தப்பை (Gall Bladder)

தலைவலி, கோபம், ஒவ்வாமை (அலர்ஜி ), கண்குறைபாடுகள், உணவு ஏற்காமை, வயிற்றுபோக்கு (அ ) மலச்சிக்கல், லேசாக அடிபட்டால் கூட சிவந்து போதல்.

அருமையான வீட்டு வைத்தியம்

அருமையான வீட்டு வைத்தியம் - காயங்கள், வீக்கம். எலும்பு வலி

கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்கு அருமையான வீடு வைத்தியம்:  

காயங்கள், தோல் பூஞ்சை, தோல் அழுகல், வீக்கம். எலும்பு வலி 
  
நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் மூன்றையும் நன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு காய்ச்சவும்.

 இந்த மருந்தை மேலே கூறிய அனைத்து தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.   

நம் உடலை இயக்கும் ஆறு பூதங்களை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்



நம் உடலை இயக்கும் ஆறு பூதங்களை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம் 
நமது உடலை பஞ்ச பூதங்களே இயக்குகிறது என்று நாம் அனைவரும் அறிவோம். ஆறாவதாக ஒன்று இருப்பதை பற்றி வெகு சிலரே அறிவர்.

மண், காற்று, ஆகாயம், நெருப்பு, நீர் ( ஐந்து )
விண் காந்த துகள்கள் - ஆறு. தாவரங்கள் மட்டுமே இந்த விண் காந்த துகள்களை  உட்கொண்டு, அதன் மூலம் நம்மை வாழ வைக்கிறது. 
 நம் பழக்க வழக்கத்தினாலும், உணவு முறையாலும் இந்த  ஐந்து பூதங்களை சீரழித்து [ சீ- என்றால் உயிர், உயிரை அழித்துக் கொள்கிறோம்]

அதிகம் உண்பது, முறையற்ற உண்பது, முறையற்ற பழக்கங்கள். இதனால் பஞ்ச பூதங்கள் கழிவுகளாக வெளியேறிவிடுகிறது. இதன் மூலமும் ஒருவர் நோய் வாய்படுவர்.

காற்று சக்தி  - வேர்வையாக 
மண் சக்தி  - மலமாக 
நீர் சக்தி - சிறு நீராக 
ஆகாய சக்தி  -  கண்களில் பீளையாக
அக்னி சக்தி  - கபமாக - சளியாக 
விண் அணுக்கள் - வாயுவாக  வெளியேறுகிறது.  
              இறைவன் நிர்மலமானவன். மலம் அற்றவன். தாவரங்களும் மலமற்ற ஒரு அறிய உயிரினமே. தாவரத்தை மட்டுமே உண்பவன் எளிதில் இறைவனாகலாம்.
"கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா 
 உயிரும் கைதூக்கி தொழும். - திருவள்ளுவர்"

(smoke) புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட




புகை பிடிக்கும் பழக்கத்திலிரிந்து விடுபட 
நாற்பது நாட்களுக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் புதினா சாறு 30 மில்லி தொடர்ந்து குடித்து வர எளிதில் புகை பிடிக்கும்  பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
உங்களின் நுரையீரலையும், இருதயத்தையும் காப்பீர். சுற்றுபுறத்தை தூய்மையாக வைப்போம்