புதன், 22 ஏப்ரல், 2015

இடுப்பு எலும்பு தேய்வுகளை தவிர்க்க விபரீதகரணி ஆசனம்




நோயற்
 வாழ்வே,குறைவற்ற செல்லம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த நோயற்ற வாழ்வைப் பெறுவதற்கு நாம் சற்றேனும் சிந்திப்பதில்லை. வியாதி வந்து குணமடைவதை விட வியாதி வராமலேயே தடுப்பது மிக நல்லது. ஆனால் நமக்கு வியாதி வராமல் தடுப்பதிலும் வந்தபின் அறவே களைவதிலும் நாம் ஒவ்வொருவரும் செய்வதற்கான யோகாசனம் ஒர் எளிமையான முறையாகும்.

ஆசனம் செய்முறை:-

தரையில் மல்லாந்து படுத்து நேராகக் கால்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு தொடைகளை மடக்கி நெருங்கியிருக்கும்படி செய்தல் வேண்டும்.
முழங்கால்களை மடக்கி,இருகைகளையும் இரு புறமும் இடுப்புக்குக் கீழ் விலாப்புறத்தில் தூக்கி பிடித்து சுவாசத்தை வெளிவிடாது உடல் பளுவை தூக்க புறங்கைகள், கழுத்து பிடரி ஆகியவற்றின் மீது சுமத்த வேண்டும்.
இது தரைக்கு செங்குத்தாக இருக்குமாறு நிறுத்தவும்
பின்பு சுவாசத்தை மெதுவாக வெளி விடவும்
பின்பு உடலை சாய்த்த நிலையில் வைத்துக் கொண்டு முதுகும், கால்களும் மேல் நோக்கி மடக்கி இருக்க வேண்டும்
கழுத்து நன்றாக விரிப்பில் இடைவெளியின்றிப் படிந்திருக்க வேண்டும்
மெதுவாக இரு கைகளும் விலாப் புறத்திலிருந்து அடி வயிற்று பகுதியிலுள்ள எலும்புகளைத் தொடும்படி கைவிரல்களை நீட்டி இரு கைகளின் கட்டை விரல்களால் லேசாக அழுத்தி பிடிக்கவும்.
பின்பு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பவும்.

ஆசனங்களின் பயன்கள்:-

மூளை மற்றும் அதனை சார்ந்த மண்டலத்தை சீராக இயங்கச் செய்கிறது
உணவு செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை தவிர்க்கிறது
இடுப்பு பகுதி தசைகளை வன்மையுடைய செய்து இடுப்பு எலும்பு தேய்வுகளை தவிர்க்கிறது
கூன் விழுந்த முதுகை நேராக்க பயன்படுகிறது
மாதாந்திர மாத விடாய் சீராக செயல்பட வைக்க உதவுகிறது
மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தவிர்க்கிறது
கல்லீரல்,கணையம்,சிறுநீரகம் போன்ற உறுப்புகளை சீராக்கி நன்னிலையில் இயங்கச் செய்கிறது
இரு கால்களையும் வலிவுடையதாக்கிறது.

உடலை வலுவாக்கும் மூங்கில் நெல் (Bamboo Rice)




மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை

தானாகவே உதிர்கின்றன. பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த நெல்லினை வேக வைத்து உண்பதால் அவர்களின் உடல் வலிமையாக உள்ளது. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும்.


மூங்கில் பூ பூத்தால் அந்த வருடம் துரதிஷ்டம் அல்லது அந்தவருடம் வெள்ளாமை சரியாக இருக்கது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது.

உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை. அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடி பெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும் வரை அங்கேயே குடும்பத்தைப் பெருக்கும்.

மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பல மடங்காக பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்குத்தான் படையெடுக்கும். அப்போது கண்டிப்பாக அந்த வருட விவசாயம் வழக்கத்தை விட அதிக சேதாரத்தைத்தான் சந்திக்கும். இதுதான் மூங்கில்பூத்தால் ஆகாது என்ற வழக்கு.

மருத்துவ டிப்ஸ், நான்தான் இருமல் பேசுகிறேன்.


நான்தான் இருமல் பேசுகிறேன். என்னைப் பற்றி சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கேளுங்கள்.

என்னை தமிழில் இருமல் என்றும் ஆங்கிலத்தில் காஃப் (COUGH) என்றும், வடமொழியில் காசம் என்றும், மலையாளத்தில் சொமா என்றும் அழைத்து வருகின்றனர்.

காசம் என்றால் தொண்டையிலிருந்து மணி ஓசைபோல வாய் வழியாக ஒரு வித சப்தம் போன்று வெளிவருவதால் எனக்கு காசம் எனப் பெயர் கொடுத்துள்ளார்கள்.

நான் உங்களைத் தொந்தரவு செய்வதற்கான காரணங்கள், ஒவ்வாத உணவுப் பதார்த்தங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவதாலும், அசுத்தமான புகை மற்றும் தூசுகளை நீங்கள் சுவாசிப்பதாலும், மிகவும் வறட்சியான உணவுகளைச் சாப்பிடுவதாலும், சிறுநீர், மலம், தும்மல் போன்ற இயற்கையான வேகங்களை கட்டுப்படுத்துவதாலும்தான் நான் உங்களை தொந்தரவு செய்கிறேன்.

நான் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு முன் சில அறிகுறிகளை உங்கள் உடம்பில் ஏற்படுத்துவேன். அவற்றைச் சொல்கிறேன் கேளுங்கள்.

உங்கள் தொண்டையில் முள் குத்துவது போன்று ஒருவித எண்ணம் தோன்றும், தொண்டையில் அரிப்பு, உணவை விழுங்க முடியாமை போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிப்பேன்.

சிலர் இருமுவதற்கு வெட்கப்பட்டு, கட்டுப்படுத்த முயல்வார்கள். அப்படி முயன்றால் எனக்குக் கோபம் ஏற்பட்டு, எனது வேகத்தை அதிகப்படுத்தி விடுவேன். அதுமட்டுமல்லாமல் மூச்சிறைப்பு, ருசியின்மை, இருதய நோய், விக்கல் போன்ற நோய்களை ஏற்படுத்தி விடுவேன். ஐ£க்கிரதை!

எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஐந்து நபர்கள். அதாவது நான் உங்களை ஐந்து வகையில் தொந்தரவுபடுத்துவேன். அவை, வாதத்தினாலும், பித்தத்தினாலும், கபத்தினாலும், அடிபடுவதாலும் மற்றும் உடல் இளைப்பாலும் நான் உங்கள் உடம்பில் தோன்றி துன்புறுத்துவேன். சரி, என் குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களைப் பற்றி விரிவாகக் கூறுகிறேன். கேளுங்கள்.

1. வாத இருமல்

நான் உங்களை வாதம் அதிகமாவதால் தொந்தரவுபடுத்துவேன். நெஞ்சு வலி, வயிற்றுவலி, தலைவலி, வறண்ட இருமல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவேன்.

2. பித்த இருமல்

நெஞ்சு எரிச்சல், காய்ச்சல், வாயில் கசப்புச் சுவை, தண்ணீர்த் தாகம் போன்ற அறிகுறிகளை பித்தம் அதிகமாவதால் ஏற்படுத்துவேன்.

3. இருமல்

கனமான கோழை, உடல்பருமன், ருசியின்மை போன்ற அறிகுறிகளை கபம் அதிகமாவதால் ஏற்படுத்துவேன்.

4. க்ஷதக்க்ஷினம்

அடிபடுவதால் நான் இருமலை உற்பத்தி செய்வேன். எனது அறிகுறிகள் கோழையுடன் இரத்தம் கலந்து வெளிவரும். நெஞ்சில் ஊசி வைத்துக் குத்துவது போன்ற வலியை ஏற்படுத்துவேன். மூச்சுத் திணறல், காய்ச்சல், இருமும்போது பறவையின் குரல் போன்ற சப்தம்.

5. க்ஷய இருமல்

உடல் இளைப்பால் இவ்வகை இருமலை ஏற்படுத்துவேன். (சரிவர சாப்பிடாமல் இருப்பது, அளவுக்கு அதிகமான உடலுறவு ஆகிய காரணங்களால் உடல் இளைப்பு ஏற்படுகிறது.) சலம் போன்று இரத்தம் கலந்த கோழை, உடல் இளைப்பு, உடல் எரிச்சல், உடல் எங்கும் வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவேன்.

இதில் நான் கூறியுள்ள முதல் மூன்று நபர்களையும் நீங்கள் எளிதில் போக்கிவிடலாம். கடைசியில் உள்ள இரண்டு நபர்கள் மிகவும் பொல்லாதவர்கள். அவர்களை நீங்கள் எளிதில் அழிக்க முடியாது.

இதில் வயதானவர்களுக்கு வரும் இருமல், இருமலுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.

என்னை நீங்கள் எதிர்க்க மருந்துகள் சாப்பிடாமல் அலட்சியப்படுத்தினால் மூச்சுத் திணறல். உடல் இளைப்பு, வாந்தி, குரல் அடைப்பு போன்ற அறிகுறிகளையும், எலும்புருக்கி நோய் என்னும் காசநோய் கூட ஏற்பட வாய்ப்புண்டு. என் குடும்பத்தினருடைய எதிரிகளைக் கூறுகிறேன் கேளுங்கள்.

= கண்டங்கத்திரி என்ற மூலிகைதான் என் குடும்பத்தின் முதல் எதிரி.

= கண்டங்கத்திரியை கஷாயம் வைத்து திப்பிலிப் பொடியை சேர்த்துச் சாப்பிட்டால் நாங்கள் அழிந்து போய்விடுவோம்.

= பத்து மிளகையும், ஒரு கடுக்காயையும் பொடி செய்து சுடு தண்ணீருடன் இரவில் சாப்பிட்டால் எங்களை நீங்கள் எளிதில் துரத்தி விடலாம். அல்லது மிளகை மட்டும் பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டீர்கள் என்றாலே போதும்.

= திப்பிலி பொடியில் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்களைத் தொந்தரவு படுத்தும் இருமலாகிய நாங்கள் போய்விடுவோம். அதுமட்டுமில்லாமல் இந்த பிரயோகம் மற்றும் சில நோய்களையும் குணப்படுத்தும். அதையும் சொல்கிறேன் கேளுங்கள், மூச்சுத் திணறல், தொண்டை நோய், விக்கல், மண்ணீரல் நோய் போன்றவைகளை குணமாக்கும். இது குழந்தைகளுக்கு மிக நல்லது. ஆனால் தாய்மார்களே குழந்தைகளுக்குப் பயன்படுத்தும்போது, மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவில் கொடுக்க வேண்டும்.

= திப்பிலி பொடியும், இந்துப்பும் சேர்த்து சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டாலும் எங்கள் தொந்தரவு நீங்கும்.

= சிலருக்கு ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதால் ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற உபத்திரவங்கள் ஏற்படும். இதில் எங்களுடைய பங்கும் உண்டு. இதற்கு நீங்கள் மஞ்சளை அரைத்து அரிசி கழுவிய தண்ணீருடன் கலந்து சாப்பிட்டாலே போதும், இடம் விட்டு இடம் பெயர்வதால் ஏற்படும் தொந்தரவுகளுடன், நாங்களும் போய் விடுவோம்.

= ஆடாதொடைச் சாற்றுடன், திரிகடுகுப்பொடி, தேன் இவைகளைக் கலந்து சாப்பிட்டால் எல்லாவித இருமலும் குணமாகும்.

= மோர், சர்க்கரை, திப்பிலிப்பொடி இவைகளை ஒன்றாகக் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

= இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டீர்களானால் இருமலாகிய நான் அழிந்து போவதோடு மட்டுமல்லாமல் காய்ச்சல், ஜலதோஷம், மூச்சுத் திணறல் போன்ற என் நண்பர்களும் அழிந்து போவார்கள்.

= துளசி என்கிற செடி எங்களுக்கு மிக முக்கியமான எதிரி. இந்தச் செடியை இடித்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் போதும் நாங்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடுவோம்.

= இன்னும் எங்களுக்குச் சில, பல எதிரிகள் எல்லாம் இருக்கிறார்கள். சிலர் எங்கள் எதிரிகளைத் தயாரித்து விற்பனையே செய்கிறார்கள். உதாரணத்திற்கு, வியாக்ரியாதி கஷாயம், தசமூலக்கடுத்ரயம் கஷாயம், வாஸாரிஷ்டம். தாளீசபத்ராதி சூர்ணம், சிதோபலாதி சூர்ணம், கண்டங்கத்திரி லேகியம் போன்ற மருந்துகள் ஆயுர்வேத, சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் நீங்கள் இவற்றை யெல்லாம் ஒரு ஆயுர் வேத மருத்துவர் அல்லது சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். அப்போது தான் நாங்கள் அழிவோம்.

= முடிவாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் உங்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. நீங்கள் வாழ்க்கை நெறிமுறைகளைத் தவறாக பின்பற்றுவதனால்தான் இருமலாகிய நானும் மற்றும் என்னைப் போன்ற நண்பர்களும் உங்களைத் துன்புறுத்துகிறோம். அதனால் வாழ்க்கையில் உணவுப் பழக்கவழக்கங்கள் முதலான நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி வந்தால் நான் மட்டுமின்றி எந்தவித நோயும் அணுகாது வாழலாம்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பித்தநீர்


பித்தநீர் பழுப்புடன் பச்சை நிறமுடையது. இது கல்லீரலிருந்து தோன்றும் காரப்பொருளாகும். பித்தப்பையில் சேகரிக்கப்பட்டுப் பித்தநாளத்தின் வழியே முன் சிறுகுடலை அடையும். பித்த நீரில் நீர், கோழைப் பொருள், உப்புகள், கொலஸ்ட்ரால், பித்த நிறமிகள், பித்த நீர் உப்புகள் போன்றவையுள்ளன. பித்த நீர் உப்புகள் பெரிய கொழுப்புப் பொருட்களைச் சிறிய கொழுப்புத் திவலைகளாக மாற்றுகின்றன.


பித்த நிறமிகள் தான் மலத்திற்கு நிறத்தை தருகின்றன. மலத்தின் நிறம் மாறினாலே உடலில் நோயின் தாக்கம் இருக்கும்.

பித்த உப்பு, கொழுப்பு சத்துக்களை செரித்ததும், செரித்த உணவுச் சத்தை உறிஞ்சி உறுப்புகளுக்கு கொடுப் பதற்கும் உதவுகிறது.

பித்த உப்பானது கொழுப்பில் கரையும் வைட்ட மின்களான ஓ மற்றும் கால்சியம் செரித்தலுக்கும் உதவுகிறது. பெருங்குடலைத் தூண்டி சிரமம் இல்லாமல் மலம் வெளியேறவும், ஒரு முறை சுரந்த பித்த நீர் தன் வேலையைச் செய்து முடித்தவுடன் மீண்டும் பித்த நீர் சுரக்க கல்லீரல் செல்களைத் தூண்டுவதும் பித்த உறுப்புகள்தான்.

உணவில் உள்ள மாவுச் சத்துக்கள், புரதச் சத்துக்கள் மற்றும் கொழுப்புச் சத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு பித்த நீர் உதவுகிறது. உண்ட உணவானது நேரடியாக அதே நிலையில் சிறுகுடலுக்கு சென்று பித்த நீரால் செரிக்கப்பட்டு சத்தாக மாற்றி திசுக்களுக்கு சென்றடைவதற்குள் அவை பல மாறுதல்களைப் பெற்று இறுதியாக குடலுறுஞ்சிகளால் உறிஞ்சப்படுகிறது.

மலச்சிக்கல் பிரச்சனை? விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள்



பவனமுக்தாசனம் (Pawanmuktasana)
பவனமுக்தாசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்து,க் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த ஆசனத்தின் போது மூச்சை சீராக விட வேண்டும். இந்த ஆசனம் செய்து வருவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, சீரற்ற மாதவிடாய் சுழற்சி நீக்கி, இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.


ஹலாசனம் (Halasana)

இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் மேலே தூக்கி, கைகளால் உடலைப் பிடித்துக் கொண்டு, பின் மெதுவாக கால்களை தலைக்கு பின்புறம் உள்ள தரையை தொட வேண்டும். பின் கைகளை மெதுவாக தரையில் நீட்ட வேண்டும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்க வேண்டும். இதேப்போன்று 3 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் செரிமானம், பசி, இரத்த ஓட்டம் மற்றும் மன நிலை போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், உடனே நிவாரணம் கிடைக்கும்.



திரிகோணாசனம் (Trikonasana)
முதலில் நேராக நின்று கொண்டு, வலது காலை சற்று பக்கவாட்டில் தள்ளி வைத்து, பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டி, வலது கையால் வலது காலைத் தொட்டுக் கொண்டு, இடது கை மேல் நோக்கி நீட்டியிருக்க வேண்டும். இதேப்போன்று மற்றொரு காலிலும் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை என ஆறு முறை செய்ய வேண்டும்.



பாலாசனம் (Balasana) 

பாலாசனம் என்பது தரையில் உட்கார்ந்து கொண்டு, கால்களை பின்புறம் மடக்கி, கால்களின் மேல் அமர்ந்து, கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு, நெற்றி தரையை தொடும் படி குனிய வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் மலச்சிக்கல் மட்டுமின்றி, மன அழுத்தம், சோர்வு, நீங்கி, இடுப்பு, தொடை போன்றவை வலிமையடையும். முக்கியமாக இதனை தொடர்ந்து செய்து வந்தால், முதுகு வலி இருந்தாலும் குணமாகிவிடும்.


சாவாசனம் (Savasana) 

ஆசனங்களிலேயே மிகவும் சிம்பிளானது என்றால் அது சாவாசனம் தான். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு, கைகளை உடலை ஒட்டியோ அல்லது பக்கவாட்டிலோ வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் 15-20 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மலச்சிக்கல் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் குணமாகும்.

இன்சுலின்


மனித உடலின் ஆரோக்கியத்திற்கு இன்சுனின் சுரப்பு அவசியமாகும். குறைந்த அளவு இன்சுலின் சுரப்பு உடலின் கொழுப்பை அதிகரித்து உடலை குண்டாக்கிவிடும். எனவே இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் மருத்துவர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளனர்.


சரியான உறக்கம் தேவை:

உடலுக்கும் தரும் ஓய்வுக்கும், ஹார்மோன் சுரப்பதற்கும் தொடர்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 24 மணிநேரத்தில் 7 மணி நேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்கவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதுவே உடலில் சரியான அளவில் இன்சுலின் சுரக்கச் செய்யும். உறக்கம் குறைபாடு ஏற்பட்டால் மன உளைச்சல் உள்ளிட்ட ஏற்பட்டு இன்சுலின் சுரப்பில் பாதிப்பில் ஏற்படும். நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு இதுவே காரணமாகிறது. 

பரிசோதனை கட்டாயம்: 

நமது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன்மூலம்தான் அதற்கேற்ப உணவை எடுத்துக்கொள்ள முடியும். இன்சுலின் அளவு சரியாக சுரப்பதற்கு உணவுமுறையும் அவசியம். இதன் மூலம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுப்படும்.

திட்டமிடுவது அவசியம்:

உணவு திட்டமிடல் அவசியம். தினசரி மூன்றுவேளை உணவு அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும். புரதம், மாவுப்பொருட்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். ஒருவேளை உணவு தவறினாலும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைத்து மயக்க நிலையை ஏற்படுத்திவிடும். எனவே சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்வது அவசியம். 

இனிப்பு மிகுந்த உணவுகள்:

உண்ணும் உணவில் குறைந்த குளுக்கோஸ் உள்ள உணவுகளை கண்டறிந்து உண்ணவேண்டும். காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் போன்றவை குறைந்த குளுக்கோஸ் அளவுள்ள உணவுகளாகும். அது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். டைப் 2 நீரிழிவு ஏற்படுவதை தடுக்கும். 

நார்ச்சத்து உணவுகள்:

மாவுச்சத்துள்ள உணவுகளை உண்பது உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சிரமம் உண்டாகும். எனவே நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது உணவு ஜீரணத்தன்மை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். மேலும் உடலில் கொழுப்பு அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தும். இது இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்தும். 

உடற்பயிற்சி அவசியம் :

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். குறைந்த ரத்த அழுத்தம், இதயநோய் போன்றவற்றை தடுக்கும். எடையை கட்டுக்குள் வைத்து இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தும். தொடர்ந்து யோகா செய்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கும்.

சனி, 11 ஏப்ரல், 2015

இரத்தத்தில் உப்பு குறைய



நெருஞ்சில், சீரகம், சோம்பு, சிறுபீளை வேர் ஆகியவை சம அளவு எடுத்து காய வைத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை இரண்டு கிராம் எடுத்து காலை, இரவு என இரண்டு வேளை சுடு தண்ணீர் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் அதிகமாக உள்ள உப்புச் சத்து குறையும்.