ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது)
ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.
உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.
இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வயதிற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.
அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது (mile stone) தாவழப் தொடங்குதல் .
இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறுகிறது.
- அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழுதல், நடத்தல், ஊடுதல்)(GROSS MOTOR)
- சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், )(SOCIAL)
- நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை(FINE MOTOR)
- பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி(SPEECH AND HEARING )
இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப் படிமுறைகளை பார்ப்போம்.
- தலைய நேராக வைத்திருத்தல் (head control ) ------- 4 மாதம்
- குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்) ------- 3 - 6 மாதம்
- துணையாக நாம் பிடித்துக் கொள்ளும்போது இருத்தல் -------5 மாதம்
- எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் ------- 6மாதம்
- தவழுதல் -------- 8மாதம்
- எழுந்து நிற்றல் -------- 9மாதம்
- பிடித்துக் கொண்டு நடத்தல் ---------10மாதம்
- துணையின்றி நடத்தல் ---------12மாதம்
- ஓடுதல் -------- 15மாதம்
- ஒரு பந்தை உதைத்தல் -------- 24மாதம்
- மூன்று சக்கரங்களைக் கொண்ட வண்டியை மிதித்தல் --------36மாதம
மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..
அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்
- தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
- குப்புறப் படுத்திருக்கும் போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
- அசையும் பொருள் அல்லது நபர்களை தொடர்ச்சியாக பார்த்தல்
உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்பந்தமானவை
- ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல்
- நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்தல்
- நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்
ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்
அசைவு சம்பந்தமானவை
- இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல்
- தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை எட்டிப் பிடித்தல்
- சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
- விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்றுதல்
- தானாக எழுந்து இருத்தல் உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்
உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்தமானவை
- சாப்படைக் கொடு போகும் போது வாயைத் திறத்தல்
- மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித்தல்
- நெருக்கமானவர்களின் முகங்களை அறிந்து கொள்ளுதல்
- தொந்ததரவுக்கு உள்ளாகும் போது அழுதல்
- கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்
ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்
அசைவு சம்பந்தப்பட்டது
- சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
- சிறிய உணவுத்துண்டுகளை தானாகவே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடுதல்
- துணையின்றி சில அடிகள் நடத்தல்
உணர்ச்சி சம்பந்த பட்டவை
- மற்றவர்கள் செய்யும் செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல்
- இசையை கேட்டு சிறிய உடல் அசைவுகளைக் காண்பித்தல்
- தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்
பேச்சு
- அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்குதல்
- வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்
- மற்றவர்களோடு பேச முயற்சித்தல்
- வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல்
- பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைகளை உணர்ந்து கொள்ளுதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.