சனி, 3 மே, 2014

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவம்  தரும் விளக்கம் இங்கே:

நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

வியாழன், 1 மே, 2014

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாக்ஸில் லஞ்ச், வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொடுத்து அனுப்பலாமா?




பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாக்ஸில் லஞ்ச்வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொடுத்து அனுப்பலாமா?
குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீபிரதா முரளிதரன்
பிளாஸ்டிக்கில் பல வகைகள் உண்டு. தரமானவற்றைப் பயன்படுத்துகிறோமா என்பதே முக்கியம். பிளாஸ்டிக் டப்பாவின் அடியில் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றில் 1, 2, 5 குறியீடுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உணவுப்பொருட்கள் வைப்பதற்காக தயா ரிக்கப்பட்ட தரமான வகைகளே. அவற்றை தாராளமாக பயன்படுத்தலாம். இந்த ரக பிளாஸ்டிக் உருகாது… வண்ணம் கரையாது. மற்ற எண்கள் கொண்ட பிளாஸ்டிக்கில் காரீயம் கலந்திருப்பார்கள். இது மனித உடலுக்கு ஆபத்தானது. இவற்றில் பொருட்களை வைத்தால்அதில் உள்ள விஷம் உணவுப்பொருளில் ஏறி ஆபத்தை விளைவிக்கும். எண் குறியீடு இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை யும் வாங்கவே வாங்காதீர்கள்.
நன்றி!!!

Auricular Acupuncture for Drug and Alcohol Withdrawl


The Journal of Psychiatric and Mental Health Nursingconducted a study to track patients' response to auricular (ear) acupuncture during abstinence from alcohol and illicit drugs.   Following the NADA (National Acupuncture Detoxification Association) protocol, patients reported feeling a sense of peacefulness and well-being that contributed to their ability to refrain from using.

With more than 75 acupoints,  the ear represents a microcosm of the entire body.  All meridians and organ systems can be accessed via auricular acupuncture alone.  When patients seek acupuncture support for smoking or drinking cessation, addiction relief is addressed as well as underlying imbalances that may perpetuate the condition.  Body points are included along with the points found in the ear.  The needles are typically retained for 20 minutes and small seeds are subsequently taped onto the acupoints after the needles have been removed.  Ear seeds allow patients to self stimulate via acupressure in the days between treatments.  With clear intention and the restorative help of acupuncture, patients can be very successful in their goal to quit using and regain health.

காளான் (Masrum)



காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும்.இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர்ஆனால்இந்தியா முதற்கொண்டு பலநாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.


இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும்சில விஷமற்றதாகவும் வளரும்.விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும்அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளதுஇதனை தமிழ்நாட்டில் பலஇடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும்,மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்காளான் வகைகள் இந்தியாவில் 8 வகையானகாளான்கள் உள்ளனஇவற்றுள் மொக்குக்காளான்சிப்பிக்காளான்வைக்கோல் காளான் என்ற மூன்றுவகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறதுகாளான் மருத்துவ பயன்கள் காளான் இரத்தத்தில்கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்புஅடைப்பைத் தடுக்கிறதுகாளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin)என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசøரைடு பாஸ்போலிட் போன்றவற்றைவெகுவாகக் குறைக்கிறதுஇதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்த வித பாதிப்பும்இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறதுஇதனால் இரத்தம்சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறதுஇதயத்தை பாதுகாப்பதில்காளானின் பங்கு அதிகம்பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில்பொட்டாசியத்தின் அளவு குறையும்வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம்உட்புறமுள்ளபொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம்அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறதுஇதனால்இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறதுஇத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்துதேவைஅவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்ததுஅந்த வகையில்பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து447 மி.கிஉள்ளதுசோடியம் 9 மி.கி உள்ளதுஎனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான்உள்ளதுமேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதுதாமிரச்சத்து இரத்தநாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்தநிவாரணியாகும்மலட்டுத்தன்மைபெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக்குணப்படுத்துகிறது.



தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்குஉண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாககாளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில்கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35சதவீதம் புரதச்சத்து உள்ளதுமேலும் உடல்வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள்உள்ளதால்குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்தஊட்டசத்தாக அமைகிறதுஎளிதில் சீரணமாகும்தன்மைகொண்டதுமலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மைகொண்டதுகடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல்இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்திவந்தால் விரைவில் உடல் தேறும்காளானைமுட்டைகோஸ்பச்சைப் பட்டாணியுடன் சேர்த்துசமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண்,ஆசனப்புண் குணமாகும்காளான் தாய்ப்பாலைவற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.


பொதுவாக காளான்கள் காய்கறியாகவே கருதப்படுகிறது.இது உண்பதற்கு ஏற்ற உணவுகாளான்களில்பல்லாயிரக்கணக்கான வகைகளும் நிறங்களும் உள்ளன.உணவிற்கு உகந்தவை வெள்ளை நிற காளான்கள்மட்டுமேபளுப்பு நிறமோ அல்லது கறும் புள்ளிகளோகொண்டவை வயதில் முதிர்ந்த இனப்பெருக்கத்தில்ஈடுப்பட்டுள்ள காளான்கள் என்பதனை குறிக்கும்.காளான்களில் அதிக புரதம் காணப்படுகின்றதுஉலகம்முழுவதும் சுமார் 200 வகையான உண்பதற்கு உகந்தகாளான்கள் உள்ளனபெரும்பாலும் அனைத்துநாடுகளிலும் இதனை உணவாக பயன்படுத்துகின்றனர்.இதற்குக் காரணம் அவற்றில் அடங்கியுள்ள சுவை,மணம் மற்றும் ஊட்டச்சத்துக்களே ஆகும்இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றனஇதில் உள்ளபொட்டாசியம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு எந்த முன் அறிகுறியும் காட்டாமல், அவர்களை பெரிய அளவில் பாதித்து விடுகிறது .

உயர் இரத்த அழுத்ததிற்கு வெளிப்படை அறி குறிகளை
கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாலும் , கொஞ்ச கொஞ்சமாக எல்லா முக்கிய உறுப்புகளையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக்கொலையாளி (Silent Killer) என அழைத்தால் அது_மிகையாகாது.

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?


நாம் 35 To 40 வயதை கடக்கும்போது நமது உடலில் இருக்கும் சிறிய சுத்த இரத்தகுழாய்கள் (Arterides) விரிவடையும் தன்மையை இழந்து விடுகிறது . மேலும் நமதுதவறான உணவு பழக்க வழக்கங்களினால் இரத்த குழாய்களின் உட்புறம் தீங்கு செய்யும் கொழுப்பு படிந்து தடிப்பு உருவாகி உள்ளவு சுருங்குகிறது. எனவே இரத்த ஓட்டத்தின் சீரானவேகம் குறைந்து இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இந்தநிலையை தான் நாம் "உயர் இரத்த அழுத்தம்" என அழைக்கிறோம் .

பொதுவாக "இரத்த கொதிப்பு" ஒரு நோயல்ல. இருப்பினும் இது பல நோயிகளுக்கு காரணமாக அமைகிறது , ஆரம்பத்திலேயே இதனைகண்டுபிடித்து தடுக்கவில்லை எனில் மெதுவாக நமது_உடலின் பல்வேறு முக்கிய உறுப்புமண்டலங்களை பாதித்துவிடும்.  
TREATMENT AVAILABLE IN ACUPUNCTURE.

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!

ஆந்திராவில் ஸ்டிரைக்: வெளிநாட்டுக்கு ஏற்றுமதியால் வெங்காயம் விலை இரு மடங்கு உயர்வு



வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன. ஒனியன் என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.. இது யூனியோ என்ற லத்தீன் மொழிச் சொல்லாகும்.. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகின்றது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் (பெல்லாரி வெங்காயம்) இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.




ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா… ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும்.

கூடவே… நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.

மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்யும் போது ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை வாடை போவதற்க்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா நல்ல பலன் கிடைக்கும்.

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா… காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்!

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்


உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் பெறுவது ஓட்ஸ் ஆகும் . இந்த ஓட்ஸ்சில் பொதுவாக நார்சத்து அதிகம், ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதுடன் , சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல் நோய்களுக்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது.

ஓட்ஸில் 'பீட்டா-குளூ கான்' எனும் ஒருவகை சிறப்பு நார்ச் சத்து அடங்கி உள்ளது. இந்த நார் சத்து நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது மேலும் நல்ல கொழுப்பின்_அளவு மாறாமல் அப்படியே இருப்பது தான் இதன் சிறப்பு அம்சம் .

இருதயநோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் உலகம் முழுவதும் இருக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழுதானிய உணவு இந்த ஓட்ஸ் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை .