வியாழன், 1 மே, 2014

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாக்ஸில் லஞ்ச், வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொடுத்து அனுப்பலாமா?




பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாக்ஸில் லஞ்ச்வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொடுத்து அனுப்பலாமா?
குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீபிரதா முரளிதரன்
பிளாஸ்டிக்கில் பல வகைகள் உண்டு. தரமானவற்றைப் பயன்படுத்துகிறோமா என்பதே முக்கியம். பிளாஸ்டிக் டப்பாவின் அடியில் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றில் 1, 2, 5 குறியீடுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உணவுப்பொருட்கள் வைப்பதற்காக தயா ரிக்கப்பட்ட தரமான வகைகளே. அவற்றை தாராளமாக பயன்படுத்தலாம். இந்த ரக பிளாஸ்டிக் உருகாது… வண்ணம் கரையாது. மற்ற எண்கள் கொண்ட பிளாஸ்டிக்கில் காரீயம் கலந்திருப்பார்கள். இது மனித உடலுக்கு ஆபத்தானது. இவற்றில் பொருட்களை வைத்தால்அதில் உள்ள விஷம் உணவுப்பொருளில் ஏறி ஆபத்தை விளைவிக்கும். எண் குறியீடு இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை யும் வாங்கவே வாங்காதீர்கள்.
நன்றி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.