வியாழன், 22 ஜனவரி, 2015

மூளை வளர்ச்சி குன்றிய தன்மை: அக்குபஞ்சர் உதவும்


ந்தக் காலத்தில் வாழ்ந்த மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கையைவிட இந்தக் காலகட்டத்தில் வாழும் குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

88 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டுடன் பிறக்கிறது. வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள், பரபரப்பான வேலைகள், அழுத்தம் நிறைந்த சிந்தனைகள், தரமற்ற, சத்துக் குறைந்த பெருந்தீனி உணவுகள், நேரங்கெட்ட வேளையில் சாப்பிடுவது, உறங்குவது ஆகியவையே இதற்குக் காரணம்.
இவற்றுடன்கூட கருவுற்ற காலத்தில் எடுக்க வேண்டிய ஓய்வு, கிடைக்க வேண்டிய அரவணைப்பு, மன நிம்மதி ஆகியவை இந்தக் கால கர்ப்பிணிகளுக்குக் கிடைக்கிறதா என்றால், அது ஒரு கேள்விக்குறிதான்.
இந்தக் கால இளைஞர்களின் வேலைப்பளு, ஆண் பெண் ஒன்றாக படிப்பதால், வேலைபார்ப்பதால் குறைந்த பால் கவர்ச்சி, எல்லாவற்றையும் பற்றிய அதீத அறிவு- இவையெல்லாம் சேர்ந்து அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலத்தில் உருவாகும் கரு இவ்வித குறைபாடுகளுடன் வருவது இயற்கையே. குறைபாடுகளில் பல வகைகள் உண்டு.
1. மதியிறுக்கம் (மூளைச் செயல் திறன் குறைபாடு); 
2. மூளைத் தசை இயக்க பாதிப்பு;
3. பிறவிக் குறைபாடுகள் எனப் பல வகைகள் உள்ளன.
வளர்ந்த நாடான அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3 லட்சம் குழந்தைகள் இந்த வகை குறைபாடுகளில் உள்ளனர்.
அக்குபஞ்சர் முறையில்...: இந்த மருத்துவ முறையில் பிரச்னையை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்பு உண்டு. ஏனெனில் பிரச்னைக்கான காரணம், அக்குபஞ்சர் முறையில் முழுமையாகச் சொல்லப்பட்டுள்ளது. சிறுநீரகம், இதயம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஓடுபாதைகளில் ஏற்படும் குறைபாடுகள்தான் இதற்குக் காரணம் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
தினமும் 20 நிமிஷங்கள் 2 முறை என 90 நாள்கள் அக்குபஞ்சர் மருத்துவம் செய்தால் 25 முதல் 30 சதவீத குணம் தெரியும். பின்பு மாதத்தில் 15 நாள்கள் மருத்துவம் என 3-6 மாதங்கள் செய்தால் முழுமையாகக் குணப்படுத்திவிடலாம். மூளைச் செயல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் சாதாரண பள்ளிகளில் சென்று படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.