வெள்ளி, 8 மே, 2015

மரபியல் (ஜெனிடிக்ஸ்)

ஜெனிடிக்ஸ் என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து தோன்றியதாகும். மரபியலானது உயிரியலின் ஒரு பிரிவாகும். மரபியல் என்பது உயிர்வாழ்
உயிரினங்களின் மரபணுக்கள் இடையிலான வேறுபாடுகள் பற்றி படிக்கும் அறிவியல் துறையாகும்.
மரபணு (ஜீன்) என்பது மரபுப் பண்புகளின் அடிப்படை அலகாகும். மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரையிலான மரபணுக்கள் உள்ளன. இந்த மரபணுக்கள் தான் மரபுரீதியான குணங்களை சந்ததிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. தோலின் நிறம், கண்களின் நிறம், தோற்றம், எண்ண ஓட்டம் போன்ற பரம்பரை குணங்கள் பெற்றோர்கள் மூலமாக சந்ததிக்கு கடத்தப்படுகின்றன. ஆரம்பகாலத்தில் மரபுப்பண்புகள் தொடர்பாக முன்னோர்கள் பெற்றிருந்த அறிவை விவசாயத்திற்கும், கால்நடைகள் வளர்ப்பிற்கும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் கிரகோர் மெண்டல் என்பவர் மரபியலின் அடிப்படை அம்சங்கள், உயிரினங்களின் இயல்புகள் உள்ளிட்டவற்றின் அலகுகளை கண்டறிந்தார். அவற்றிற்கு ஜீன்கள் என பெயரிட்டார். இத்துறையின் வளர்ச்சி தற்போது அதிகளவு உள்ளது. இத்துறை சார்ந்த படிப்புகளில் குரோமோசோம்களின் அமைப்பு, தாவரங்கள் மற்றும்
விலங்குகளின் தோற்றம் உள்ளிட்டவற்றை ஆராயலாம். மேலும் ஆய்வு நிறுவனங்கள், எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு
மரபியல் உதவியுடன் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. விலங்குகளில் செல்வர்க்கம் (குளோனிங்) தொடர்பான ஆய்வுகள் இத்துறையில் நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.