வெள்ளி, 5 செப்டம்பர், 2014

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்

ஆதிகாலம் தொட்டே மனிதன் சாப்பிட்டு பழக்கப்பட்ட பழம் அத்தி. இது எல்லா பருவத்திலும் கிடைப்பது இல்லை. ஆனால் உலர் பழமாக எல்லா பருவத்திலும் கிடைக்கிறது. பழங்கால கிரேக்க இலக்கியத்தில் அத்திப்பழத்தை குழந்தைப் பேறுக்கும், காதலுக்கும் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக அத்திப்பழம் குழந்தைப்பேறுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
சத்துக்கள்  பலன்கள்: வெறும் மூன்று உலர் அத்தியில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நாள் தேவையில் 20 சதவிகிதம். அத்திப்பழம் ஒரு மிகச்சிறந்த மலமிளக்கியாகவும், செரிமானப் பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறது. இதில் கலோரியின் அளவு மிகமிகக் குறைவு. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த சிற்றுண்டியாக இது இருக்கிறது. இதில் துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் மக்னீசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்த உதவுகின்றன.

p95
உணவில் அதிக அளவில் உப்பு சேர்ப்பவர்களுக்கு நல்ல செய்தி. உடலில் சோடியம் அதிகரிக்கும்போது அது சோடியம்  பொட்டாசியம் சம நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். அப்படி அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் அத்திக்கு உண்டு. உயர் ரத்த அழுத்தப் பாதிப்பில் இருந்து  காக்கிறது.
ரத்த குழாய்களைப் பாதிக்கும் ஃப்ரீ ராடிக்கிள்ஸை வெளியேற்றும் திறன் உலர் அத்திக்கு உண்டு. இதனால் ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் காக்கப்படுவதால் இதய நோய்களுக்கான வாய்ப்பு குறைகிறது. மேலும் டிரைகிளசரைட் என்ற கொழுப்பு வகை குறையவும் இது உதவுகிறது.
டி.என்.ஏ பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதில் ஓரளவுக்கு கால்சியம் உள்ளதால், எலும்பின் அடர்த்தியைப் பாதுகாத்து உறுதிப்படுத்துகிறது.
தேவை: தினமும் 3 அத்திப்பழம்  சாப்பிடலாம். இதில், நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இருப்பினும் இதில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால்,  சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துக்கொள்வதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்ற பிறகே முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.