ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பெண்களே! முகத்தில் முடி வளர்ச்சியா? கவலை வேண்டாம்!




முடி வளர்ச்சி என்பது இரண்டு வகைப்படும்.
 1. பிறப்பு முடி 2. பருவ முடி. ஆண், பெண் பருவ மாற்றங்களின் அறிகுறிகளாக பருவ முடிகள் முளைக்கிறது. பருவ வளர்ச்சியின் தவிர்க்க முடியாத இயற்கையான ஒரு பகுதியாக இது அமைகிறது. ஆண்களுக்கு பருவ முடி ஏறு முக்கோண அமைப்பில் மேல்நோக்கியும் பெண்களுக்கு இறங்கு முக்கோண அமைப்பில் கீழ் நோக்கியும் வளர்ந்து படர்கிறது. இந்த ஏறு முக்கோணமும் இறங்கு முக்கோணமும் எதிரும் புதிருமான ஒன்றுக்கொன்று பொருந்துகிற அமைப்பாக இயற்கை வடிவமைத்துள்ளது.

பெண்களின் பிரச்சனையும் வேதனையும்:அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் பருவ முடி வளர்ச்சி ஏற்படும்போது பெண்கள் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் தேவையற்ற இடங்களில் அளவுக்கு அதிகமான ரோம வளர்ச்சி ஏற்படுவது பெண்களுக்கு தீராத பிரச்சனையாகி விடுகிறது. ஆண்களைப் போலவே சில பெண்களுக்கு முகத்தில் மீசை, தாடி முடிகள் அடர்த்தியாக வளர்ந்து விடுகின்றன. சில பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வதோடு கை கால்களிலும் அதிக ரோமங்கள் காணப்படுவதுண்டு. இவை பெண்மையை, பெண்மையின் நளினத்தை தட்டிப் பறித்து விட்டதாகக் கருதி பெண்கள் வேதனைப்படுகின்றனர்.

இம் முடிகளை எப்படியாவது அகற்றினால்தான் நிம்மதி என்று அழகு நிலையங்களுக்குச் சென்றோ அல்லது தோல் நிபுணரிடம் சென்றோ பல்வேறு முயற்சியில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக இவ்விடங்களில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதுமில்லை. சில பெண்களுக்கு இம்மாதிரியான சிகிச்சைகள் தோற்று... தேவைப்படாத முடிகள் அகற்றப்படுவதற்குப் பதில் ரோமக் காடாகப் பெருகிப் போவதும் நேரிடுகிறது.
காரணங்கள் என்ன?முளைக்கக் கூடாத இடங்களில் பெண்களுக்கு முடி முளைப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பாரம்பரிய (ஜீன்ஸ்) காரணங்களால் இப்படி வளர வாய்ப்புள்ளது. பாட்டிக் கும், அம்மாவிற்கும் முகத்தில் முடிகள் வளர்ந்திருந்தால் மகளுக்கும் பருவ காலத்தில் முகத்தில் முடிவளர்ச்சி தொடரும். ஆணிண் ஹார்மோன் பெண்ணுக்குள் அதிகரிக்கும்போது குரல், நடை, பழக்கம், முடி வளர்ச்சி, பாலியல் வளர்ச்சி போன்ற அனைத்திலும் இதன் பாதிப்பு இருக்கும். சிறிது ஆண்மைச் சாயல் ஏற்படக்கூடும்.
அதிகளவு மாதவிடாய் போக்கு ஏற்படும்போது அதனைத் தடுக்கவும் மார்பகங்களில் கட்டியோ ;, கழலையோ உருவாகி அறுவைச் சிகிச்சை செய்யும்போது வீர்யம் பெருக்கவும், ஆண் ஹார்மோனை பெண்ணுடலில் செலுத்துதல் வழக்கம். இதனால் தேவைப்படாத இடங்களில் ரோம வளர்ச்சி ஏற்படும்.

முகத்திலும், கைகால்களிலும், உடம்பிலும் தேவையின்றி பெண்களிடம் முடிகள் வளரும் தன்மையை ஆண் ஹார்மோன்கள் பெண் உடலில் செலுத்தப்படுகிறது. இதனால் தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி ஏற்பட்டு விடுகிறது.
இதற்கு ஆணின் ஹார்மோன் பெண்களிடம் அதிகரிப்பதே காரணம் என்ற போதிலும் அத்தகைய, அனைத்துப் பெண்களுக்கும் ஆண்களின் சுபாவம் ஏற்பட்டு விடுவதில்லை. அவர்களின் செக்ஸ் பழக்கங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் கர்ப்பம், பிரசவம், குழந்தை வளர்ப்பு எல்லாம் மற்ற பெண்களைப் போலவேதான் அமைகின்றன. இவர்களில் சிலரது பழக்கம், குரல், நடத்தை போன்றவற்றிலும் சிறிது ஆண்மைச் சாயல் இருக்கக்கூடும். இருப்பினும் இவர்கள் பெண்மையின் பிரதான இயல்புகள் எதையும் இழப்பது இல்லை.



ஒழுங்கற்ற மாதவிடாய் போக்கினால் பாதிக்கப்படும் பெரும்பாலான இளம் பெண்களுக்கு பெண்மை பிணியியல் நிபுணர்கள் அதிக அளவு ஹார்மோன் மருந்து, மாத்திரைகளை அளிப்பதாலும், தோலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகள் அடிக்கடியும் அதிக அளவிலும் உபயோகிப்பதாலும் (முடி என்பது தோலின் ஒரு பகுதிதானே!) பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளும், தடுப்பு மருந்துகளும், (வாக்சினேஷன்) வளர்சிதை மாற்றத்தில் தொந்தரவுகளை ஏற்படுத்துவதன் காரணமாகவும் தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி ஏற்படுகிறது.
ஆண் ஹார்மோன் என்பது என்ன?ஆண்ட்ரோஜன் என்பது ஆண் ஹார்மோன் ஆகும். ஆணின் விதைகளிலும் அட்ரினல் புறணியிலும் பெண்ணின் சினைப்பையிலும் சுரக்கக்கூடிய இயக்குநீர் இது. இரண்டாம் நிலைப் பாலியல் பண்புகளை குறிப்பாக குரல் தடித்தலையும், உடல் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கக் கூடியது.
சினைப்பையில் அல்லது அட்ரீனலில் ஏதேனும் கோளாறுகள் அல்லது மாற்றங்கள் ஏற்பட்டால் ஆண்ட்ரோஜன் அதிகச் சுரப்பு நிகழும். அதிக ஆண்ட்ரோஜன் சுரப்பு ஏற்படுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
1. சினைப்பையில் உருவாகும் நீர்மக் கட்டிகள். இக்கட்டிகளால் ஓழுங்கற்ற மாதப்போக்கு, மலட்டுத் தன்மை, முடி வளர்ச்சி ஏற்படுகிறது. இத்தகைய நீர்மக் கட்டிகள் தோன்ற பரம்பரைத் தன்மை, தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் கோளாறும்,நீரிழிவும் காரணங்களாக உள்ளன.



2.அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் தோன்றினால் கூட ஆண்ட்ரோஜன் அதிகரிக்கும்.
3.வலிப்பு, மனநோய், கர்ப்பத்தடை போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் சில ஆங்கில மருந்துகளாலும் ஆண்ட்ரோஜன் அதிகரிக்கும்.
4.சிலரது உடலில் அதிக அளவு இன்சுலின் சுரப்பதுண்டு (இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ்). இரத்த சர்க்கரையளவு இயல்பான நிலையில் இருந்தாலும், பரிசோதனை செய்து பார்த்தால் இன்சுலின் சுரப்பு அதிகம் காணப்படும். அதிக இன்சுலின் அதிக ஆண்ட்ரோஜனை சுரக்கச் செய்யும். மிகக் குறிப்பாக சினைப்பைகளில் தோன்றக்கூடிய நீர்மக் கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம்) தான் அதிகளவு ஆண் ஹார்மோன் சுரப்பதற்கான பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. அதிக ஆண்ட்ரோஜன்தான் 70 முதல் 80 சதவீதப் பெண்களுக்குரிய ஹிர்சுசிசம் பிரச்சனைக்குக் காரணமாகும்.
தேவையற்ற முடி வளர்ச்சியை அகற்றுவது எப்படி?
தேவையற்ற முடிகளை நீக்க பெண்கள் 4 வித வழிமுறைகளை நாடுகின்றனர்.
1.சாதாரண சவரம் செய்தல்: மீண்டும் முளைத்தால் மீண்டும் மழித்தல்.
2.ப்ளீச்சிங் செய்தல்:இதன் மூலம் முடிகளைப் பார்வைக்குத் தெரியாமல் செய்தல்- இரசாயனப் பொருட்களை உபயோகித்து முடிகளை மெல்லிய நிறமாக்குதல்.
3.எலக்ட்ரோலைசிஸ்: மின் சக்தியைக் கொண்டு ஒவ்வோரு முடியின் வேரினையும் (ஹேர் பாலிக்குள்) அழித்தல்- இதன் மூலம் முடி மீண்டும் வளராமல் தடுத்தல். இது எண்ணற்ற முறை சிகிச்சை செய்ய வேண்டும். மிகவும் செலவு செய்ய வேண்டிய சிகிச்சையாகும்.
4.லேசர் முறை: லேசர் பயன்படுத்தி தனித் தனியாக முடிகளை அழித்தல்- இதற்கும் பலமுறை சிகிச்சைக்கு செல்ல வேண்டும், மிக அதிக பணச் செலவும் ஏற்படும்.



இந்தியாவைப் பொருத்தவரை ஹிர்சுசிசம் பாதிப்பு உள்ள பெண்கள் சுமார் 10 சதவீதம் பேர் உள்ளனர். அமெரிக்காவில் 22 சதவீதம் பெண்கள் உள்ளனர். மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளை இந்தியப் பெண்களில் பெரும்பாலோர் நாடுவதில்லை. மிகக் குறைவான பெண்களே (மிக வசதி படைத்த பெண்களே) செயற்கைச் சிகிச்சை முறைகளை நாடுகின்றனர். மற்றவர்கள் முகச் சவரம் மூலம் அல்லது பிடுங்குதல் (பிளக்கிங்) மூலமே அகற்ற முயற்சிக்கின்றனர். இவர்கள் எல்லோருக்குமே இப்பிரச்சனை கவலையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்துகிறது.
ஆங்கில மருத்துவத் தோல் நிபுணர்களால் பெண்களின் இப்பிரச்சினையை தீர்க்க இயலாது. அக்குப்பங்சர் மருத்துவம் இப்பிரச்சனைக்கு எளிய இனிய தீர்வளிக்கிறது. 
ரோமங்களைப் பறிப்பதும், பொசுக்குவதும் சிறந்த முறைகள் இல்லை. இதனால் சிக்கல்களும், ஆபத்தும், எதிர்விளைவுகளும் மனச் சஞ்சலங்களும்தான் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.