பீர்க்கங்காய், நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பீர்க்கங்காய் முற்ற முற்றத்தான் நல்லது. பீர்க்கங்காய் முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டொனிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. பீர்க்கங்காயில்; கல்சியம், பொஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாப்பொருள், விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி என அனைத்து வகையான விட்டமின்களும் தாதுப்புக்களும் போதிய அளவில் உள்ளன.
இதனால்தான் சத்துணவு நிரம்பிய காய்கறியாக விளங்குகிறது. பீர்க்கங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் நல்ல மருந்தாக விளங்குகிறது. பீர்க்கங்காயில் சில குறிப்பிடும் படியான பெப்டைட்ஸ் என்னும் வேதிப் பொருட்கள் உள்ளன. இவை இன்சுலின் அல்கலாய்ட்ஸ் சோரன்டின் என்பனவாகும். இந்த வேதிப் பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் சிறுநீரில் உள்ள சர்க் கரை அளவையும் குறைக்க உதவுகின்றன.
பீர்க்கங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும் மருந்தாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி மூல நோய்க்கும் ஓர் முக்கிய மருந்தாக விளங்குகிறது.இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர் இரத்த விருத்தி ஏற்படும். கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.