தசைநார் (லிகமென்ட்)
எலும்பு மூட்டுகளைப் பிணைத்திருக்கும் அமைப்புதான் ‘லிகமென்ட்’ எனப்படும் தசைநார். இது கொலாஜனால் ஆனது. நெகிழ்வுத்தன்மை கொண்டது. இது உடலில் உள்ள தசைகளுடன் இணைந்து, எலும்புகளை இணைத்துப் பிடிக்கும். தசைநார்கள் இல்லை எனில், எலும்புகள் இணைந்து இருக்காது. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வோர் எலும்புக்கும் ஏற்றவாறு தசைநார்கள் இருக்கின்றன. இடுப்புப் பகுதியில் இருக்கும் தசைநார் மிகவும் வலுவானது. கை விரல்களில் இருக்கும் தசைநார் மென்மையானது. இடுப்பு, கழுத்து, மூட்டு, கணுக்கால் என ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு வகையான தசைநார்கள் இருக்கின்றன.
தசைநார் கிழிவு
விளையாட்டு வீரர்கள், விபத்தில் சிக்குபவர்களுக்குத்தான் பெரும்பாலும் தசைநார்கள் கிழியும். சுளுக்கு ஏற்படும் சமயங்களில் தசைநார் கிழிந்துவிடும். நடக்கும்போது, ஓடும்போது, சைக்கிள் ஓட்டும்போது, உடற்பயிற்சி செய்யும்போது என எப்போது வேண்டுமானாலும் கவனக்குறைவு காரணமாக விபத்து நிகழலாம். மூட்டுப்பகுதியில் விபத்து ஏற்பட்டால், தசைநார் கிழிவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தசைநார் கிழிவதால் மட்டும் அல்ல, தசைநார் கொஞ்சம் அதிகமாக விரிந்தாலும் வலி ஏற்படும்.
தசைநார் கிழிவைக் கண்டுபிடிப்பது எப்படி?
தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை, பாதிக்கபட்ட இடத்தின் வெளிப்புறத்தில் சோதனை செய்தே கண்டுபிடித்துவிட முடியும். எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் தசைநார் பாதிப்பை அளவிடலாம். தசைநார் பாதிப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. கால் மூட்டுகளில், மூட்டுக்கு உள் பகுதியிலும் லிகமென்ட் இருக்கும். மூட்டுக்குள் லிகமென்ட் கிழிந்தால் மீண்டும் சரிசெய்வது சிரமமான காரியம். எனவே, மூட்டுகளில் வலி இருந்தால், உடனே அதனைக் கவனிப்பது நல்லது.
லிகமென்ட் பிரச்னை சரிசெய்யப்பட்ட பிறகு, மீண்டும் பாதிப்பு ஏற்படுமா?
லிகமென்ட் சிகிச்சை என்பது லிகமென்ட்டை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதுதான். சிகிச்சையில் கொஞ்சம் கவனக்குறைவு ஏற்பட்டாலும், லிகமென்ட் பழைய நிலைக்குத் திரும்பாமல் வலி இருக்கத்தான் செய்யும். எந்தச் செயலை செய்வதால் வலி ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அதைத் தவிர்க்கலாம். உதாரணமாக, கால்பந்து விளையாடும்போதோ, நடனம் ஆடிவிட்டு வந்த பிறகோ வலி வருகிறது எனில், அதைத் தவிர்ப்பது நலம்.
பாதுகாப்பு டிப்ஸ்
தசைநார் கிழிவு நிலைகள்
கிரேடு 1
தசைநார்கள் விரிந்து இருக்கும். பாதிப்பு உள்ள பகுதியில் டேப்பிங் போடப்படும். பிசியோ
தெரப்பி கொடுக்கப்படும்.
தெரப்பி கொடுக்கப்படும்.
கிரேடு 2
தசைநார்கள் 50 சதவிகிதம் வரை கிழிந்திருக்கும். டேப்பிங், பிசியோதெரப்பி மூலமே குணப்படுத்த முடியும். பாதிப்பைப் பொறுத்து, மாவுக்கட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
கிரேடு 3
தசைநார்கள் முழுமையாகக் கிழிந்துவிடும். மாவுக்கட்டு சிகிச்சை மட்டுமே ஒரே வழி. அதன் பின் பிசியோதெரப்பி கொடுக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.