திலகமிடுதல் என்பது எமது கலாச்சாரத்துடன் கூடிய ஒரு அம்சமாகும். எனினும் இந்த திலமகிடுதலால் எமக்கு கிடைக்கும் நன்மைகளை அறியாமலும் நாம் கடமைக்காக திலகமிடும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அதன் முக்கியத்தும் உணர்ந்துதான் எமது கலாச்சார நிகழ்வுகளில் திலகமிட்டு விருந்தினர்களை வரவேற்பது முக்கியமாகின்றது. சந்தனம், குங்குமம், விபூதி முதலியனவற்றை நெற்றியில், புருவங்களுக்கு இடையே உள்ள பகுதியில் அணிவதனை திலகமிடுதல் என்கின்றோம். இப்பகுதி நினைவாற்றல், சிந்திக்கும் திறன் ஆகியவற்றின் மையமாக அமைவதால் யோக சாத்திரத்தில் இது ‘ஆக்ஞா சக்ரா’ என்று அழைக்கப்படுகிறது.
திலகத்தினை நெற்றியில் இடும்போது “இறைவன் என் நினைவில் நிறைந்திருப்பாராக. புனிதமான இந்த உணர்வு என் செயல்கள் அனைத்திலும் பரவி நிற்கட்டும். என் செயல்கள் நேர்மையானவையாக இருக்கட்டும்” என்று பிரார்த்திக்கப்படுகிறது. நம் உடல் முழுவதும் மின்காந்த அலைகளாக சக்தியை வெளிப்படுத்துகிறது. நெற்றியும், புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியும் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை. மனம் கவலையுறும் போது தலை உஷ்ணமடைந்து தலைவலி ஏற்படுகிறது.
நெற்றியில் அணியும் திலகம் நெற்றியை குளிர வைத்து உடல் உபாதையில் இருந்து பாதுகாக்கிறது. நெற்றியும் புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியின் மூலமாக நம்மை மற்றவர்கள் தன்வசப்படுத்தலை தடுக்கிறது. உடலின் சக்தி வீணாகாமல் தடுக்கப்படுகின்றது. சில பெண்கள் பிளாஸ்டிக்கினால் ஆன ஒட்டும் பொட்டுகளை பயன்படுத்துகிறார்கள். இவை திலகங்கள் போல பயன் தருபவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.