புதன், 9 செப்டம்பர், 2015

முகமுடக்கு வாதம்


அறிமுகம்

மண்டையோட்டு ஏழாம் நரம்பின் (முக நரம்பு) செயல் இழப்பால் முகத்தின் ஒரு பகுதி தசைகள் பலவீனம் அடைவதால் முகமுடக்கு வாதம் உண்டாகிறது. நபருக்கு நபர் அறிகுறிகள் மாற்றம் அடைகின்றன. இதன் வகைகளாவன:

பகுதி முகமுடக்கு வாதம்: இது இலேசான தசை பலவீனம்

முழு முகமுடக்கு வாதம்: ஒட்டு மொத்தமாக அசைவு இருக்காது (ஆனால் இது மிக அபூர்வம்).
நோயறிகுறிகள்
பாதிக்கப்பட்ட கண்ணில் உறுத்தல் (உலர்தல், அதிக கண்ணீர் போன்று)
முகத்தின் பாதிக்கப்பட்ட பக்கத்தில் காதின் கீழ் வலி
முகத்தின் பாதிக்கப்பட்ட பக்கத்தில் வாயில் இருந்து எச்சில் வடிதல்
வாய் உலர்தல்
உண்ண, குடிக்க சிரமம்
பேச்சுக் கோளாறு
முகத்தின் ஒரு பகுதியில் பலவீனம் அல்லது வாதம் உண்டாவதால் கண்களை மூடுவதில் சிரமம்; வாய் கோணுதல்
சுவை உணர்வில் மாற்றம் அல்லது குறைபாடு
பாதிக்கப்பட்ட காதில் ஒலி உணர்வு கூடுதல்
தாடையைச் சுற்றி வலி
தலைவலி
தலைச்சுற்றல்
காரணங்கள்
வைரஸ்
முக நரம்பு அழற்சிக்கு அக்கி வைரசே பொதுவான காரணம்
குளிர் புண்களை உண்டாக்கும் அக்கி வைரஸ் 1 அல்லது பிறப்புறுப்பு புண்களை உண்டாக்கும் அக்கி வைரஸ் 2
சின்னம்மையையும் குளிர்நடுக்கத்தையும் உண்டாக்கும் வேரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ்

முக நரம்பு

மூளையில் இருந்து முகத்துக்குச் செல்லும் முக நரம்பு (VII), மேல் நாடிக்கு அருகில் உள்ள எலும்பின் ஓர் ஒடுங்கிய இடைவெளி வழியாக கடந்து செல்கிறது. முக நரம்பு நெருக்கப்பட்டாலோ அல்லது வீங்கிவிட்டாலோ முகத்தில் உள்ள தசைகளுக்கு மூளை அனுப்பும் சைகைகளில் தடங்கல் ஏற்படும்.
இந்த இடையூறினால் நரம்பணுக்களுக்குச் செல்லும் இரத்தமும் உயிர்வளியும் குறைவு படும். இதனால் முகத்தில் பலவீனமும் வாதமும் உண்டாகும்
நோய்கண்டறிதல்

முகமுடக்கு வாதத்தைக் கண்டறிய தனிப்பட்ட சோதனைகள் எதுவும் இல்லை. அறிகுறிகளைக் கொண்டு மருத்துவர் நோயைத் தீர்மானிக்கிறார்.

காந்த அதிர்வு பிம்பம் (எம்.ஆர்.ஐ): இதன் மூலம் முகநரம்புக்கு அழுத்தம் கொடுக்கும் காரணி அறியப்படுகிறது. இதில் வானொலி அலைகளும் வலிமையான காந்தப்புலமும் பயன்படுத்தப்பட்டு உடலின் உட்பகுதியின் விவரங்கள் அடங்கிய பிம்பம் உருவாக்கப்படுகிறது.

கணினி வரைவி

தொற்று, கட்டி போன்ற அறிகுறிகளின் பிற காரணங்களை அறிய இது பயன்படுத்தப் படுகிறது. முக எலும்பு முறிவுகளை உறுதிப்படுத்தவும் இது எடுக்கப்படுகிறது.

மின்னலை வரைவி

(இ.எம்.ஜி) தோலின் வழியாக ஒரு மிகவும் மெல்லிய மின்வாய் ஊசி தசைக்குள் செலுத்தப்படுகிறது. அலைக்காட்டியின் மூலமாகத் தசை மற்றும் நரம்புகளின் மின்செயற்பாடு அளக்கப்படுகிறது. இதன் மூலம் நரம்புகளின் சிதைவின் அளவைக் கணக்கிட முடியும்.
நோய் மேலாண்மை

வலி நிவாரணிகள்

பாரசெட்டமால் மற்றும் ஊக்கமருந்துகள் அல்லாத எதிர் அழற்சி மருந்துகளான இபுபுரூபன் போன்றவை சிறந்த வலி நிவாரணிகள் ஆகும்.

வெப்ப மற்றும் குளிர் மருத்துவம்

வெந்நீர்க் குளியல் அல்லது வெந்நீர்க் குடுவைகளை பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்கலாம். ஐஸ் பை அல்லது உறைந்த காய்கறிப் பைகளை வலியுள்ள இடத்தில் வைப்பதும் பலனளிக்கும்.

மன ஓய்வு

நோயைப் பற்றி கவலைப்படுவதால் ஏற்படும் தசை இறுக்கம் நிலைமையை மோசமாக்கலாம். மன ஓய்வாக இருப்பது வலியைக் கட்டுப்படுத்த உதவும்.

மருந்து

ப்ரெட்நிசோலோன் (Prednisolone) போன்ற கோர்ட்டிகோஸ்டிராய்டுகள் அழற்சியை குறைக்க உதவும். விரைவில் நோய்மீண்டெழவும் துணை புரியும்.

உடற்பயிற்சி மருத்துவம்

முகப் பயிற்சியால் தசைகளை வலுப்படுத்தி அவற்றிற்கிடையே ஒத்திசைவையும் அசைவெல்லையையும் மேம்படுத்துவது எவ்வாறு என்று உடற்பயிற்சியாளர் கற்றுக்கொடுப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.