வெள்ளி, 14 மார்ச், 2014

வெந்தய கீரை

கீரைகளில் மிகவும் சிறப்பான கீரை வெந்தய கீரையாகும். இந்த கீரை மிகவும் குளிர்ச்சி தன்மையுடைய கீரையாகும். வெந்தய கீரை வயிறு சம்ந்தமான நோய்களுக்கு மிகவும் சிறந்தது. உதாரணமாக வயிற்றுபொருமல் மற்றும் வயிறு மந்தம் போன்ற நோய்களுக்கு சிறந்தது.

வெந்தயத்தை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் இதுவே வெந்தய கீரையின் விதையாகும். இந்த கீரை கிடைக்காத பட்சத்தில் இந்த விதையை பயன்படுத்தி உங்கள் வீட்டு தொட்டிகளிலேயே வெந்தய கீரையை வளர்க்கலாம். இது வளர்ந்த ஒரு வாரத்தில் பயன்படுத்த முடியும். இதை பராமரித்து வளர்க்க பெரிதாக ஒன்றும் தேவையில்லை.

வெந்தய கீரை சிறந்த மலம் இளக்கியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது. இந்த கீரையில நார் சத்து, இரும்புச் சத்து,கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. வெந்தய கீரை தோல் நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது. இது இரத்தத்தை பெருக்கி உடலை வலிமையாக்கும்.

உலர்ந்த திராட்சை பத்து , சீரகம் அரை தேக்கரண்டி எடுத்து இதனுடன் வெந்தய கீரையை சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் குணமாகாத இரும்பலும் குணமாகும்.
இரத்தத்தை தூய்மையாக்க சிறிது வாழைப்பூ மற்றும் மிளகு சேர்த்து காஷ யமாக சாப்பிட்டால் இரத்ததம் தூய்மையடையும்.
வாயு கோளாறுக்கு சிறிது ஓமம் எடுத்து வெந்தய கீரையுடன் சாப்பிட்டால் வாயு கோளாறு நிவர்த்தியாகும்.
வெந்தயக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

100 கிராம் வெந்தய கீரையில் உள்ள சத்துக்கள்
கலோரி திறன் 49
வைட்டமின்சி 52 மி.கி.
இரும்பு 16 மி.கி.
காலசியம் 400 மி.கி.
பாஸ்பரஸ் 50 மி.கி.
தாதுப்பொருள் 1.5%
நார்ச்சத்து 1.1%
மாவுச்த்து 6.0%
நீர்சத்து 86%
புரதம் 4.5%
கொழுப்பு 0.9%
                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.