வியாழன், 26 ஜூன், 2014

OSCIOTHERAPHY


ஒசியொதெரபி பற்றி ஒரு பார்வை 
‘ஒசியோதெரபி’ என்றால் என்ன?                           
‘ஒசியோ’ என்பது ‘ஓசிலேட்’  / ‘ஆசிலேட்’ என்ற வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது. ‘ஆசிலேட்’ என்பது “அங்கும் இங்கும் ஒரு சீரான இடைவெளியுடன் அசைந்து கொண்டிருக்கும் ஒரு ‘அசைவு’ அல்லது ‘அலைவு’ இயக்கம் ஆகும். ‘தெரபி’ என்பது அறுவைசிகிச்சை அல்லாத உடல், மனம் சார்ந்த ஒரு சிகிச்சை முறையாகும். நமது உடல் அசைவுகளையும், அதனுள் ஓடும் திரவங்கள், ஆற்றல்களின் இயக்க ஒழுங்கை சீர்படுத்தி முறைபடுத்தும் ஒரு நோய் தீர்க்கும் முறையே ‘ஒசியோதெரபி’ ஆகும். இந்த முறை தனிமனிதனுக்குள் ஒரு தூய்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி; ஆற்றல் அளிக்கும்.

“தனிமனிதனுக்குள் தூண்டப்படும் மாற்றமே; உலகளாவிய பிரச்சனைகளின் தீர்வு!” என்பதே “வான்காந்தமனோவியல் விஞ்ஞான பயிற்சி மையத்தின்” தத்துவமாகும்.

‘ஒசியோதெரபி’ என்பது இயற்க்கையான, இயல்பான இயக்க ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு அனுபவ முறை பயிற்சியாகும். அது அதிர்வு அசைவுகள், சுவாசப் பயிற்சிகள், உடலை தளர்வாகவும், இறுக்கமாகவும் பழக்கும் அசைவுகள், தூண்டுதல் பயிற்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பயிற்சி முறையாகும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் வழிகளும் செயல்முறைவிளக்கமாக உள்ளது.

எதற்காக ‘ஒசியொதெரபி’
மனிதப் பண்புகளை உயர்த்த முயலும் எந்த ஒரு நிகழ்ச்சியும்; மனிதனுக்குள் ஒருங்கிணைத்த மூன்று முக்கிய அங்கங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.

உடல்சார்ந்த நோக்கு: நோய் நொடியில்லாத ஒரு உடல் என்பது அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் அனேக மக்கள் உடல்நலத்தின் முக்கியத்துவத்தை நோய்க்கு இரையான பின்னரே உணர்கிறார்கள். இந்த மனிதன் உடல் அளவிலாவது ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு “ஆரோக்கியமான உடல்” தேவை படுகிறது. இந்த உடல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், புலன் சார்ந்த இன்பங்களை அனுபவிப்பதற்கும் மட்டுமே உள்ளது என்று சொல்வது, இந்த மனித இனத்திற்கே இழைக்கப்பட்ட ஒரு கொடூரமான அவமரியாதையாகும். எண்ணற்ற நோய்நொடிகளால் மனிதஇனம் ஒடுக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் மிருகங்கள் மனிதர்களைவிட உயர்ந்தே இருக்கின்றன. மிருகங்கள் நோய்வாய்ப்படுவது மிகவும் குறைவான சந்தர்ப்பங்களில் தான். அவை மருந்தகங்களுக்கு செல்கின்றனவா?

மனித உடல் இயக்கத்தை பற்றி சுருக்கமாக ஒரு மேற்பார்வை காண்போம். ‘ஒசியோதெரபி’ பற்றி விளக்கமடைய மனித உடற்கூற்றை சற்று கவனிப்போம்:



அ) மூளை, நரம்பு மண்டலம்:
மூளைதான் நமது தலைமைக் கட்டுபாட்டு மையம். உடலின் அகத்திலும் புறத்திலும் இருந்து வரும் தகவல்களை மூளைக்கு தொடர்ச்சியாக கொண்டு சேர்க்கும் தூதுவனே நரம்பு மண்டலமாகும்.

ஆ) இரத்த நாடி மண்டலம்:
இதயத்தில் இருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும்; அங்கிருந்து இதயத்திற்கும் இரத்தத்தை கொண்டு செல்லும் வெளிமுக, உள்முக இரத்த நாளங்களை கொண்டதே இந்த இரத்த நாடி மண்டலம். இது சுவாசிப்பதற்கும், ஊட்டமளிக்கவும் உதவும். நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடலை பாதுகாக்கும்.


இ) சுவாச மண்டலம்:
நுரையீரலே பிராணவாயுவின் நுழைவாயில். பிராணவாயுவை இழந்த இரத்தம் கரியமில வாயுவை நுரையீரலின் நுண்குழாய்களில் வெளிசுவாசதிற்க்காக நிரப்பும். உள்சுவாசத்தில் இருந்து பிராணவாயு இரத்தத்தில் நிரம்பும். இந்த கரியமில , பிராண வாயுக்களின் பரிமாற்றம் நுரையீரலின் நுண்குழாய்களில் நடைபெறும்.

ஈ) நிண நீர்மண்டலம்:
நிண நீர்மண்டலம்; உடல் திசுக்களில் இருந்து திரவங்களையும், கழிவுகளையும் வெளியேற்றி இரத்த ஓட்டத்தில் சேர்த்துவிடும். இவ்வேலை நடக்காவிட்டால் உடல் திசுக்கள் நச்சுத்தன்மை அதிகரித்து வீக்கமடைந்துவிடும். நோய் பரவாமல் உடலை பாதுகாக்கவும் நிண நீர்மண்டலம் உதவும். நிண நீருக்கென்று தனியாக குழாய்கள் கிடையாது. நிண நீர் திரவத்தின் ஓட்டம்; ஆழ்ந்த சுவாசம், தசை அசைவு, உடல் அதிர்வுகளை சார்ந்துதான் இருக்கும்.


உ) நாளமில்லா சுரப்பிகள்:
நாளமில்லா சுரப்பிகள்; அதனுள் இருந்து சுரக்கும் பல்வேறுவகையான திரவங்களை இரத்தத்தில் நிரப்பிவிடும். இந்த திரவங்கள் உடல் வளர்ச்சியையும், இனப்பெருக்கத்தையும் சீராக்கும். ஒரு மனிதனின்  உணர்வு நிலைகள் நாளமில்லா சுரப்பிகளால் பாதிக்கப்படும்.

உடல் நோய் தீர்வுகளுக்கு ‘ஓசியோதெரபி’ எப்படி உதவுகிறது?
இந்த நவீன வாழ்க்கை முறை உடல்நிலை அழுத்தத்திற்கும், மன குழப்பங்களுக்கும் , உணர்வுகளின் ஏமாற்றத்திற்கும் நம்மை கொண்டு செல்கின்றன. இவை நமது உடல் இயக்கங்களுக்கு இடையூறு விளைவிக்கின்றன, நாளமில்லா சுரப்பிகள் சமநிலை இழக்கின்றன.
         கவலையினால் உண்டாகும் நோய்களுக்கு வழி வகுக்கின்றன. தாம் எப்படி வாழவேண்டுமோ அந்த இயல்பில் இருந்து வெகுவாக விலகி சுற்றித்திரிகிற மனிதர்களுக்கே உரித்தான; தனித்துவம் வாய்ந்த ஒரு நிலைதான் “நோய்” என்பது. நிரூபணம் செய்யப்பட்ட ‘ஓசியோதெரபியின்’ முறைகள்; இந்த ‘சமநிலையற்ற சீர்கேட்டை” வேரோடு அழித்து, செயல் இழக்கம் செய்து, நம்மை அதிலிருந்து விடுவித்துவிடும். இதனால் நமக்குள்ளேயே இருக்கும் நோய்தீர்க்கும் திறனை நாமே உணர்ந்துகொள்ள முடியும். நமக்குள்ளே இருக்கும் உயிர் சக்திகளை பாதுகாத்துக்கொள்ளவும், பலப்படுத்திக்கொள்ளவும் நமக்கு சக்தி கிடைக்கும். உயிரினங்களின் உயர்ந்த நிலையானது இந்த உடல்; ஆகையால் இந்த உடலியக்கத்தை நீடித்து நிலைக்கச் செய்ய தேவையான எல்லா அறிவும் இந்த உடலின் கட்டுமான அமைப்புக்குள்ளேயே பொதிந்து இருக்கின்றது. இந்த ‘ஒசியோதெரபி’ முறைகளை புரிந்துகொண்டு, பயிற்சிசெய்து அதன் பலன்களை நீங்களே உணரவேண்டியதுதான் உங்களது வேலை.

ஒசியோதெரபியின் பலன்கள்:
இந்த உடலினுள் இருக்கும் சுற்றோட்ட மண்டலத்தை இரண்டு வகையாக பார்க்கலாம். தெளிவாகவும், தூய்மையாகவும், துரிதமாகவும் நீரோட்டத்தின் இயல்பில் ஓடிகொண்டிருக்கும் நீரோடை ஒன்று; மற்றது மந்தமாக, அழுக்கும், சேறும் சேர்ந்து, தேங்கி ஓடிகொண்டிருக்கும் நீரோடை. இந்த மண்டலத்தை சரியான நிலையில் பராமரித்துக்கொள்ள  ஒரு பலமுள்ள ஓட்டம் தூண்டப்படவேண்டும். தவறினால் இது இறுக்கப்பட்டு, தேக்கமடைந்துவிடும். இந்த நிலை இதயம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.
உடற்பயிற்சியும், சுவாசப்பயிற்சியும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உடலின் பல பாகங்களுக்கு கொண்டு சேர்க்கும். உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வெளியேற்றும். இதன் இயல்பான பலன்கள் உயர்ந்த ஆற்றல் நிலையும், சிறந்த ஆரோக்கியமும் ஆகும். ஊட்டச்சத்து தயாரிக்கும் பணியும், கழிவுப்பொருள் நீக்கும் பணியும் ஒவ்வொரு தனி உயிரணுவில் இருந்து துவங்குகிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். உணவு பழக்க வழக்கங்களினாலும், உடற்பயிற்சி பற்றாக்குறையினாலும், சீரற்ற சுவாச முறையினாலும் நாம் நமது உடலின் நுண்குழாய்களில் அடைப்புகள் ஏற்படுத்தி விடக்கூடாது.

ஒசியோ உணவுமுறை:

உடல், மன, உணர்வுகளை சிறந்த நிலையில் பாதுகாப்பதில் நாம் உட்கொள்ளும்  உணவு முறை பெரும்பங்குவகிக்கிறது. அமெரிக்காவின் உணவு, மற்றும் மருந்து சார்ந்த அமைப்பு; பலகோடி ருபாய் முதலீடு செய்து  ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கும் உண்மை என்னவென்றால்; “இயற்கை உணவே மனிதனுக்கு சிறந்த உணவாகும்“ என்பதே. “இயற்கை உணவு” என்றால்; “இயற்கை” நமக்கு அந்த உணவை எந்த நிலையில் அளித்ததோ; அதே நிலையிலோ; அல்லது அந்த நிலை மிகவும் கெடாமல் இருக்கும் பதத்திலோ இருக்கும் உணவேயாகும். உனைவை சமைக்கும்பொழுது; அதனுள் இருக்கும் அமினோமிலமும்(முக்கிய புரதசத்து); மூலக்கூறுகளின் தொடர்பும் மாற்றம் அடைந்துவிடும் ; தானாகவே இருக்கும் இயல்பு குலைந்துவிடும். மிருகங்களுக்கு சமைத்த உணவை அளித்து நடத்தப்பட்ட பலதரப்பட்ட ஆய்வுகள் மிருகங்கள் நோய்வாய்படுவதையும்; அவற்றின் இனபெருக்க ஆற்றல் குறைவதையுமே நிரூபணம் செய்கின்றன.  இதன் தர்க்கவியல் முடிவு என்னவென்றால் நாம் பச்சை காய்கறிகள், பழங்கள் , கொட்டை வகைகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும். பழங்களுக்குள் உயிர் சக்தி இருப்பதனால்; அதனை முழுமையாக உட்கொள்ளவேண்டும். முக்கியமாக அதன் விதைகள் உயர்தரமான கனிமங்கள், உப்பு வகைகள் , சாம்பரம்(பொட்டாசியம்), உவர்மம்(சோடியம்) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.


நோயின் இன்னொரு மூல காரணம் அசைவ உணவு வகைகள் ஆகும்.
நாம் அசைவ உணவு உட்கொள்வதில் இருக்கும் ஆபத்தை கவனத்திற்கு கொண்டு வரும் நிலையின் துவக்கத்தில் உள்ளோம். அசைவ உணவை  நாம் அறவே தவிர்ப்பதற்கு பல கட்டாய காரனங்கள் உள்ளன.


அ) நம்மை போல் தாவர உண்ணிகளின் குடல்; நமது உடல்பகுதியின் (தலை பகுதி சேர்க்காத) அளவைபோன்று 8 முதல் 12   மடங்கு வரை நீளமாக இருக்கும். இந்த நீளம் செரிமானத்திற்கும், தாவரங்களில் உள்ள ஊட்டசத்தை சாறு பிழிந்து எடுக்கவும் உதவும். மாமிசஉன்னிகளின் குடலோ அதன் உடல்பகுதியின் அளவைபோன்று 3 மடங்கு  நீளமாக இருக்கும். இது அழுகும் சதையை அகற்றவும், கூறுகளாக பிரிக்கவும் உதவும்.

ஆ) நமது உமிழ்நீர் காரத்தன்மையானது, பலவகை நொதிகள்(enzymes) கொண்டது. இவை தாவர உணவில் இருக்கும் சிக்கலான கார்போஹைடரேட்டுகளை செரிமானம் செய்வதற்கு உதவும். ஆனால் மாமிச உன்னிகளின் உமிழ்நீர் அமிலதன்மையுடைது. இது மாமிச உணவு செரிமானத்திற்கு உதவும். மேலும் மாமிசஉன்னிகளுக்கு நம்மை விடவும் பத்து மடங்கு அளவு உவரமிலம்(hydrochloric acid) சுரக்கும். இது மாமிச உணவு துரிதமாக செரிமானம் செய்வதற்கு உதவும்.


இ) மாமிசஉன்னிகளுக்கு அதிக அளவிலான கொழுப்புசத்தை செரிமானம் செய்ய ஆற்றல் உள்ளது. நமது ஈரலுக்கு இந்த கொடூரமான பொருளை சிறிதளவே செரிமானம் செய்ய முடியும். 

ஈ) மிருகங்களிடம் யூரிக் அமிலத்தை(சிறுநீர் அமிலம்) உடைக்கும் நொதி(செரிமானதிற்கு உதவும் பொருள்வகை) உள்ளது. நம்மிடம் அவ்வகை நொதி கிடையாது.
உயிரினங்களின் உயர்ந்த நிலையானது இந்த உடல்; ஆகையால் இந்த உடலியக்கத்தை நீடித்து நிலைக்கச் செய்ய தேவையான எல்லா அறிவும் இந்த உடலின் கட்டுமான அமைப்புக்குள்ளேயே பொதிந்து இருக்கின்றது. நமக்குள் அபிரிமிதமாக கொட்டிக்கிடக்கும் வான்காந்த மனோவியல் சக்தியை நாம் தட்டிகொடுத்து நமது முழு திறனையும் வெளிக்கொணர நாம் கற்றுக்கொள்ளலாம். ஒழுங்கு செய்யபட்ட திருத்தமான ஒசியோதேரபியின் அசைவுகள் உடலில் அதிர்வுகளை ஏற்படுத்தும்

           . சக்திகளின் இயக்க ஒழுங்கை பிரித்தும், சீர்படுத்தியும்; நம் உடலின் முழுமைக்கும் ஒரு சமநிலையை உருவாக்கும். தனித்துவம் வாய்ந்த நமது உடற்பயிற்சிகளின் மூலம் , மனம், உணர்வு, உள்ளுணர்வு நிலைகளை இசைபட உணர்ந்து மிக உயர்ந்தநிலை செயல்பாட்டை உருவாக்க முடியும். பொருட்களுடனும், இயற்கையின் ஆற்றலுடனும் இசைபட வாழ்வதுதான் நமது பரிணாம வளர்ச்சிக்கு மிகமுக்கியமான ஒரு அங்கம்.

************************************************************************************
FUTURIZE GLOBAL COMMUNITY FOUNDATION என்ற ஆதாயம் எதிர்பாராத விஞ்ஞானம் சார்ந்த அமைப்பு இந்த பயிற்சியை வடிவமைத்து அளித்துள்ளது. அதன் கிளை நிறுவனங்கள் மலேசியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருக்கின்றன. மனித இயக்க அறிவியலை, அதை பற்றிய புரிதலை ஒரு ஒழுக்கமாக கொண்டுவரவும்; இதே குறிக்கோளுடன் பொறுப்பாக உழைக்ககூடிய மனித சமுதாயத்தை கொண்ட ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கவும் உழைத்துகொண்டுள்ளது. ஆய்விற்கும், கற்றுக்கொடுக்கவும், சேவை புரியவும் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் இது.  இந்த நிறுவனத்தின் நோக்கம் மனிதனின் முழுதிறனையும் புரிந்துகொள்ளவும்,உணர்ந்துகொள்ளவும் முடிகிற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதும்; உடல் மேலாண்மை அறிவியலை கற்றுகொண்டு; வாழ்வின் மதிப்பையும், தரத்தையும் பாராட்ட தெரிந்த ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதும் ஆகும்.
                                       *************
Article copyright by Master Sega,FUTURIZE GLOBAL COMMUNITY FOUNDATION.
Authorised only to be used by CENTRE FOR PSYCOSMIC SCIENCE KARUR for its program coordination. copyright(c) 2013

“It is the commonest of mistakes to assume that the limit of our power of perception is also the limit of all there is to perceive” – C.W. Leadbeater

 “நாம் புலன்களால் உணர இயன்ற அளவே; உணர்ந்துகொள்வதற்கும்  இருப்பதாக கருதுவது; பொது தவறே”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.