வெள்ளி, 2 அக்டோபர், 2015

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் பயன்தரும் நோக்கோல்

nokol

வெள்ளை கலந்த பச்சை நிறத்தில் உருண்டையாக இருக்கும். . இதில் உயிர்சத்து, விட்டமின்கள் மற்றும் தாது உப்பு என்பன  அதிகளவில் காணப்படுகின்றன. இந்த நோக்கோலைப் பயன்படுத்தி  சூப் செய்யவும், மரக்கறி பிரியாணி செய்யவும் பெருமளவு  பயன்படுத்துவர். நோக்கோல் சற்று கடினமான காயாகும். எனவே நன்கு வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். . நோக்கோலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். 

முற்றிய நோக்கோலை வாங்குவதை விட பிஞ்சு நோக்கோலை வாங்குவதே சிறந்தது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் நோக்கோலைச் சாப்பிட்டு வரலாம்.    


இதில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. நோக்கோல் ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும். குழந்தை பெற்ற பெண்கள் இந்த பிஞ்சு நோக்கோலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது. ஜீரண சக்தியை ஏற்படுத்தும், நரம்புகளை வலுப்படுத்தும், குடல் நாளங்களை உறுதிப்படுத்தும். எலும்புகளை உறுதியாக்கும். 

நோக்கோலில்உள்ள சத்துக்கள் :

100கி நோக்கோலில் 75% விட்டமின் சி உள்ளது. 6.2கி கார்போஹைட்ரேட் , 1.7கி புரதம் , 4.3கிநார்ச்சத்து ,2.6கிசர்க்கரை , 0.1கி கொழுப்பு  போன்ற  சத்துக்களும், விட்டமின் இ, விட்டமின் பி கோம்பளக்ஸ் போன்ற உயிர்ச்சத்துக்களும் கல்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், மாங்கனீஸ் போன்ற கனிம சத்துக்களும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.