புதன், 11 ஜூன், 2014

வலிப்பு

வலிப்பு என்பது ஒரு நரம்பு தொடர்பான நோயாகும், அது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. வலிப்பு சீஸர் டிஸ் ஆர்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் பொதுவாக ஒருவருக்கு எந்தவித மருத்துவ காரணமும் இல்லாமல் இரண்டு முறை ஏற்படும்பொழுது கண்டறியப்படுகிறது.
வலிப்பால் ஏற்படும் பிடிப்பு, மூளையில் ஏற்பட்ட காயம் அல்லது குடும்பப் போக்கு காரணமாக, ஆனால் பெரும்பாலும் இதற்கான காரணம் எதுவும் தெரியாது. ‘‘வலிப்பு’’ என்ற வார்த்தை ஒருவரின் பிடிப்புக்கு காரணம் என்ன, அது என்ன வகையானது, அல்லது எந்த அளவு தீவிரமானது என்பதைக் காட்டாது.
யாருக்கு வலிப்பு வருகிறது?
வலிப்பு யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். 0.5%லிருந்து 2% வரையான மக்களுக்கு அவர்களது ஆயுள் காலத்தில் வலிப்பு ஏற்படலாம். இந்தியாவில் 1 கோடிப் பேருக்கு வலிப்பு உள்ளது. இதற்கு பொருள் 1000 பேரில் ஒருவருக்கு என்பதாகும்.
வலிப்பு என்ன செய்கிறது?
மூளையில் மின்னோட்டத்தை ஆரம்பிக்கும் காரணிகளுக்கும் அதனை கட்டுப்படுத்தும் காரணிகளுக்கும் இடையே ஒரு சிறப்பான சமநிலை உள்ளது, மேலும் மின்னோட்ட செயல்பாட்டின் பரவலை வரையறுக்கும் அமைப்புகளும் உள்ளன. வலிப்பின்போது, இந்த வரையறைகள் செயலிழந்து அசாதாரணமான மின்வெளியேற்றம் ஏற்படலாம். ஒருவருக்கு இரண்டுமுறை இந்த பிடிப்பு ஏற்படும்போது அது வலிப்பு என்று அழைக்கப்படுகிறது.
வலிப்பு ஏற்பட பல வெளிப்படையான காரணங்கள் உள்ளன. அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
* காய்ச்சல்
* பிறவிக் குறைபாடுகள் (டெலிவரியில் கஷ்டம்)
* மூளைக் குறைபாடுகள்/ மூளைக்கட்டி
* நோய்த் தொற்று (மெனின்ஜிட்டிஸ்)
* தலையில் காயம் (விழுதல்/விபத்து)
* வேகமாக மின்னும் லைட்கள்/ கலர்கள் (டிவியில்)
* சுடுநீரில் தலைக்கு குளிப்பது
* மருந்துகளின் விளைவுகள்
* அளவுக்கதிகமாக மது அருந்துதல்
* தூக்கமின்மை
* பட்டினி
* உணர்வுக்கோளாறு
* மாதவிலக்கு காலம்
நம்பிக்கையும் உண்மையும்
நம்பிக்கை: வலிப்பு சாதாரணமானது அல்ல.
உண்மை: இநதியாவில் வலிப்பு 1000ல் 10 பேருக்கு உள்ளது.
நம்பிக்கை: வலிப்பு ஒரு தொற்றுநோய்.
உண்மை: வலிப்பு நோயை ஒருவர் மற்றொருவரைத் தொடுவதாலோ, காற்றிலோ, உணவிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது மற்ற வழிகளிலோ பரவாது.
நம்பிக்கை: வலிப்பு நோய் ஏற்படுபவரை கீழே அமுக்கிப் பிடிக்க வேணடும்.
உண்மை: வலிப்பு நோய் வந்தவரை கட்டுப்படுத்தக்கூடாது. அதனால் காயம் ஏற்படலாம். கடினமான அல்லது கூர்மையான பொருட்களை வழியிலிருந்து அகற்றிவிட வேண்டும், அவரது தலைக்குக் கீழே மென்மையான பொருளை வைக்க வேண்டும்.
நம்பிக்கை: வலிப்பு நோயால் அவதிப்படுபவர் வலிப்பு நோயோடு பிறந்திருக்க வேண்டும்.
உண்மை: பெரும்பாலும் வலிப்பு நோய் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்டாலும், யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்நோய் வரலாம்.
நம்பிக்கை: வலிப்பு நோய் என்பது அறிவுக்குறைவின் அடையாளம்.
உண்மை: வலிப்பு என்பது ஒரு உடலில் ஏற்படும் நோய், மனநோயோ அல்லது ஊனமோ கிடையாது. அறிவில் சிறந்த பல புகழ்பெற்ற பிரமுகர்களுக்கு வலிப்பு நோய் வந்திருப்பதை உதாரணமாக கூறலாம்.
நம்பிக்கை: இந்த நோயாளிகள் மீது கடவுள் இருக்கிறார். அவர்களை வழிபடவேண்டும்.
உண்மை: வலிப்பு ஏற்படும்போது அவர்கள் கட்டுப்படுத்த முடியாத முறையில் நடந்துகொள்கின்றனர். ஆனால் இது தெய்வீக சக்தியின் வெளிப்பாடு இல்லை. அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், அவர்களை மற்றவர்களைப் போலவே நடத்தவேண்டும்.
நம்பிக்கை: வலிப்பு நோய் உள்ளவர்கள் குடும்பத்தில் இருப்பது குடும்பத்திற்கு களங்கம், எனவே இந்த உண்மையை மறைத்துவிடவேண்டும்.
உண்மை: துரதிஷ்டவசமாக, வலிப்பு நோய் உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் மீதான களங்கம் இன்னும் நிலவுவது தொடர்கிறது. கல்வி அறிவின் மூலமாக இந்த களங்கத்தைப் போக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சையின்போது மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
செய்ய வேண்டியவை:
உங்களது வலிப்பு பற்றிய முழுவிவரங்கள் உங்களது டாக்டருக்குத் தெரிவிக்கவும்.
நீங்கள் பிறந்தபோது ஏற்பட்ட காயம், தலையில் ஏற்பட்ட காயம், நரம்புமண்டலத்தில் ஏற்பட்ட தொற்றுநோய், வலிப்பு நோய் பற்றிய உங்களது குடும்பத்தின் மருத்துவ வரலாறு பற்றிய விவரங்களை வழங்கவும்.
வலிப்பு நோய் உள்ள ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வகையான வலிப்புகள் ஏற்படலாம்.
வலிப்பு நோயை சிறப்பாகக் கட்டுப்படுத்த அதனை முன்னதாகக் கண்டறிதல் மற்றும் அதற்கான மருத்துவ ஆலோசனை ஆகியவை மிக முக்கியமானவை ஆகும். உங்களது மருத்துவர் அறிவுறுத்துவது போல தினமும் மருந்தை எடுத்துக்கொள்ளவும்.
வீட்டில் மருந்தை இருப்பு வைக்கவும், மேலும் மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துகளின் பெயர்கள் மற்றும் அளவை எடுத்துக்கொள்ள பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களது நோய் நன்றாக கட்டுப்படுத்தப்பட்டால் அதே கம்பெனியின் மருந்தை எடுத்து வரவும். அதே மருந்தை மற்ற கம்பெனிகளும் தயாரித்து மார்க்கெட்டில் விற்பனைக்கு விட்டிருக்கலாம்.
உங்களுக்கு வலிப்பு ஏற்படும் கால இடைவெளி மற்றும் மற்ற கருத்துக்களைப் பற்றி ஒரு டயரியில் எழுதவும்.
உங்களது டயரியுடன் மற்றும் நீங்கள் கேள்வி எதுவும் கேட்க விரும்பினால் தினமும் உங்களது மருத்துவரை சந்தியுங்கள்.
குறைந்தது 3 ஆண்டு கால இடைவெளியாவது வலிப்பு ஏற்படாமல் இருக்க மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களது மருத்துவரின் ஆலோசனையுடன் நீங்கள் டி.வி. பார்க்கலாம், விளையாட்டுப் போட்டிகளில் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடலாம்.
செய்யக்கூடாதவை:
உங்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் அல்லது மருந்தை சகிக்க முடியாத தன்மை ஆகியவை குறித்து உங்களது மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
ஒரு நரம்பு மண்டல அவசர நிலையாக வலிப்பை திடீரென அதிகரிக்கலாம் என்பதால் உடனடியாக மருந்தை நிறுத்த வேண்டாம்.
நீங்கள் உங்கள் விருப்பப்படி மருந்து கம்பெனியை மாற்ற வேண்டாம்.
உங்களது டாக்டரின் ஒப்புதல் இன்றி உங்கள் மருந்து அளவை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ மற்றும் அடிக்கடி எடுத்துக்கொள்ளுவதோ கூடாது.
நீங்கள் வேறு நோய்வாய்ப்பட்டாலோ, கர்ப்பமாக இருந்தாலோ அல்லது இதர காரணங்களுக்காக மருந்தை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ வேண்டாம். கட்டுப்படுத்த முடியாத வலிப்பிற்கான காரணங்கள்தான் இவை.
பிரகாசமான வெளிச்சம் அல்லது அதிக சத்தத்தைத் தவிர்க்கவும்.
சமூகப் பிரச்னை:
வேலைவாய்ப்பு
செய்யவேண்டியவை
வலிப்பு ஏற்பட்டால் உங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலான வேலையைத் தேர்ந்தெடுங்கள்.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் உங்களது கல்வி மற்றும் திறமையை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.
தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
செய்யக்கூடாதவை:
கீழ்க்கண்டவை தொடர்பான வேலைகளை செய்ய வேண்டாம்:
டிரைவர் அல்லது விமானத்தின் பைலட்.
நீச்சல் அடித்தல்.
ஏறுதல் அல்லது உயரத்தில் பணிபுரிதல் கனரக இயந்திரங்கள் அல்லது எலக்ட்ரிக் கருவிகளுடன் வேலை செய்தல்.
திருமணம் மற்றும் குழந்தை
செய்யவேண்டியவை:
திருமண வாழ்க்கையை திறம்பட நடத்த முடியும் என்றால் மட்டுமே திருமணம் செய்யுங்கள்.
கர்ப்பமாகுதலை திட்டமிடுங்கள். கர்ப்பமாகுதலுக்கு முன்னதாக எடுக்க வேண்டிய மருந்துகள் பற்றி உங்களது மருத்துவருடன் ஆலோசனை செய்யுங்கள்.
பாலூட்டுவதைப் பற்றி உங்களது மருத்துவருடன் ஆலோசனை செய்துவிட்டு வழக்கம்போல் பால் கொடுக்கலாம்.
செய்யக்கூடாதவை:
திருமணம் உங்களது வலிப்பு நோயை குணப்படுத்தும் என்ற கருத்தோடு திருமணம் செய்யாதீர்கள்.
உங்களது வாழ்க்கைத் துணைவர் மற்றும் அவரது உறவினர்களிடம் உங்களது நோயைப் பற்றி கூறாமல் மறைக்காதீர்கள்.
உங்களது கர்ப்ப காலம் முழுவதும் வழக்கமாக மருந்து எடுக்க வேண்டும்.
வலிப்பு நோயோடு வாழுதல்:
ஒவ்வொருவரும் தங்களது வலிப்பு நோய் பற்றி அதன் வகை மற்றும் எவ்வளவு கால இடைவெளியில் ஏற்படுகிறது மற்றும் வலிப்பு வருவதைப் பற்றி கூறக்கூடிய தன்மை பற்றி வித்தியாசமாகக் கூறுகின்றனர். பெரும்பாலான கேஸ்களில் மருந்துவலிப்பு தோன்றுவதை நிறுத்த முடியும் அல்லது குறைந்த பட்சம் ஆச்சரியப்படத்தக்க வகையில் அதனைக் குறைக்கும். உங்களது வாழ்க்கை முறையில் மாற்றம் செய்ய விரும்பும் வாய்ப்புகளை பல காரணிகள் பாதிக்கும்.
கல்வி:
குழந்தைகள் நான்கு வயதிலிருந்து கல்வி கற்கும் உரிமை கொண்டவர்கள். பெரும்பாலான வலிப்புள்ள குழந்தைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கின்றனர். ஏனெனில், வலிப்பு என்பது தனிநபரது நிலையாகும். அது ஒருவரது கல்வி மற்றும் கற்கும் திறமையை பாதிப்பதில் ஆளுக்கு ஆள் வேறுபடலாம்.
தேர்வு நிலையில் மதிப்பிடும்போது வலிப்பு நோய் இருப்பது ஒருவரது திறமையை மதிப்பிடுவதை பாதிக்காது. இருந்தபோதிலும், மனக்கவலை ஏற்படும்போது அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வலிப்பு ஏற்படலாம் என்று கருதுபவர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். அதுபோன்ற நேரங்களில் தேர்வு குறித்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆலோசிப்பது உதவியாக இருக்கும்.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு
பரபரப்பாக பணிபுரியும்போது அவர்களுக்கு வலிப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. சில வேலைகள் மற்ற வேலைகளை விட ஆபத்து மிகுந்ததாக உள்ளன. உங்களது விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகள் குறித்து சுதந்திரமாக ஆராய்ந்து பாருங்கள். தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளால் பெரும்பாலான ஆபத்துக்களை குறைத்துவிடலாம்.
எனக்கு வலிப்பு வரும்போது நான் என்ன செய்ய வேண்டும்?
வலிப்பை நிறுத்த முயற்சிக்க வேண்டாம்.
வலிப்பு ஏற்படும்போது வாயில் எதையும் திணிக்க வேண்டாம்.
போதுமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
வாந்தி எடுப்பதை விழுங்கிவிடாமல் இருக்க நீங்கள் இருக்கும் பக்கத்தை மாற்றிக்கொள்ளவும்.
முடிந்தவரை விரைவில் மருத்துவரைப் பார்க்கவும்.
முன்னேற்றம்:
வலிப்பு கோளாறு (வலிப்பு) என்பது தொடர்ச்சியான, பொதுவாக வாழ்க்கை காலம் முழுவதும் நீடிக்கக் கூடிய ஒன்றாகும். சில கேஸ்களில், மருந்தின் தேவை குறையலாம் அல்லது போகப் போக நிறுத்திவிடலாம். வலிப்பு ஏற்படாத 3 4 ஆண்டு கால இடைவெளி மருந்து வலிப்பை குறைக்கிறதா அல்லது நிறுத்திவிடுகிறதா என்பதற்கான சாத்தியக்கூறுகளைக் காட்டும். பொதுவான பிரச்னைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளக்கூடிய ஆதரவுக் குழுக்களில் சேருவது இந்த நோயின் கவலையைக் குறைக்க உதவும். எல்லா குழுக்களும் ஒரே வேலையை செய்வதில்லை. இது போன்ற குழுக்கள் கூட அதில் சேர்ந்துள்ள உறுப்பினர்களைப் பொருத்து வித்தியாசமான முடிவுகளைப் பெறலாம். ஆனால், எல்லா குழுக்களிலும் உறுப்பினர்கள் பின்வருவனவற்றை உணர்ந்துள்ளனர்: ஊக்குவித்தல், ஏற்றுக்கொள்ளுதல், ஆறுதல் மற்றும் அதிகாரம் பெறுதல்.
அதிகாரமளித்தல் ‘அறிவே சக்தி’
ஒரு ஆதரவுக் குழுவில், உங்களது வலிப்பை கட்டுப்படுத்த, வலிப்புக்கான குறைந்த விலையுள்ள மருந்துகளை வாங்குவது, வேலைவாய்ப்பைப் பெறுவது, ஏறக்குறைய எல்லாவற்றையும், உங்களது குழு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதில் உள்ள மற்ற உறுப்பினர்களைப் பொறுத்து நீங்கள் அறிவைப் பெறலாம். நீங்கள் உங்களது வலிப்பு பற்றி கொஞ்சம் அதிகமாக அறிந்து கொண்டாலும் நீங்கள் அதைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்கூற உதவும்.
ஒப்புக்கொள்ளுதல்: நீங்கள் சரியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு நரம்பியல் கோளாறு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். அது சாதாரணமானது. நீங்கள் மட்டும் தனியாக இந்த நிலையில் இல்லை. நிறையப் பேர் உங்களைப் போன்ற நிலையில் உள்ளனர். அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். வலிப்பு நோய் உள்ளவர்களை சந்திப்பது மற்றும் நீங்கள் அவர்களோடு (பெரும்பாலும் அவர்களில், குறைந்தபட்சம்) இருப்பது, நீங்களும் மற்றவர்கள் சேர்ந்து பழக விரும்பும் மனிதராக இருக்கிறீர் என்பதை உங்களுக்கு கற்றுத் தருகிறது. மற்ற விஷயங்களை அறிந்துள்ள மற்றும் வேலைகளைச் செய்யக்கூடிய ஒருவர் அறிந்துகொள்ள ஒரு நல்ல மனிதர் என்பது போல நீங்கள் நீங்களாகவே இருப்பது மிக அதிகமான நேரமாகும்.
ஆறுதல்கொள்ளுதல்: நீங்கள் தனியாக இல்லை.
உங்களுக்கு ஆதரவளிக்கவும் உதவி செய்யவும் மற்றும் கவனித்துக்கொள்ளவும் உங்களைச் சுற்றியும் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களது உதவியைப் பெறுங்கள். உங்கள் குடும்பத்தினரைத் தவிர இண்டியன் எபிலிப்ஸி அசோசியேஷனைச் சேர்ந்த பல குழுக்கள் உள்ளன. அவர்களுடன் நீங்களும் சேர்ந்துகொள்ளலாம். இந்த வழிகாட்டியில் மையங்களின் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
ஊக்கமளித்தல்: நீங்களும் கூட வெற்றி பெறலாம்.
நல்ல குடும்பம் மற்றும் நல்ல வேலை, நல்ல கல்வி போன்றவற்றில் சிறந்து விளங்கும் வலிப்பு நோயுள்ளவர்கள் பற்றிய கதைகளைப் படியுங்கள். அது போன்றவர்களை நேரில் சந்திப்பதும் நல்லது. வலிப்பு நோயால் பாதிப்படையாமல் தங்களது வாழ்க்கையை மாற்றி வரும் நபர்களையும் சந்திக்கலாம். அவர்கள் தங்களது வெற்றி குறித்து கூறும்போது நீங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துங்கள், மற்றும் உங்களது வெற்றியைப் பாராட்ட அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். வலிப்பு காரணமாக துன்பப்பட்ட வீரர்கள், ஆட்சியாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வெற்றிக்கதைகள் ஏராளமாக உள்ளன. அந்தப் பட்டியலில் சீஸர் (ரோமானிய அரசியல் வல்லுநர்), ஜான்டி ரோட்ஸ் (கிரிக்கெட் விளையாட்டு வீரர்) மற்றும் பலர் இதில் இடம் பெறுகின்றனர். இதிலிருந்து வலிப்பு ஒருவருடைய புத்திசாலித்தனத்தையோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையையோ பாதிக்காது என்பது உறுதியாக நிரூபணமாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.