சனி, 7 ஜூன், 2014

அடிக்கடி பாராசிட்டமால் சாப்பிடுறீங்களா? இதப்படிங்க!


காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாராசிட்டமால். அரசு மருத்துவமனைக்கு சென்றால் போதும் பாக்கெட் பாக்கெட்டாக கொடுப்பது பாராசிட்டமலைதான். இந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடனடி உயிரிழப்பு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

மனிதர்களின் உயிரிழப்பு குறித்து எடின்பர்க் நகர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி திடீர் உயிரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகள் உட்கொள்ளும் பாராசிட்டமல் அளவில் ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது. ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் அதனால் திடீரென இறந்தும் போய்விடுகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.