அம்புலன்ஸ் வண்டி பற்றி கேள்விப் படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அதனைக் காணாதவர்கள் கூட அதன் ‘சைரன்ஸ்’ ஒலியைக் கேட்டதுமே இன்னதுதான் என்று உணர்ந்துகொள்ளும் அள வுக்கு பிரபலமானது.
அம்புலன்ஸ் வண்டியின் ஆரம்பம் பற்றி நாம் ஆராய வேண்டுமானால், மாவீரன் நெப்போலியன் காலம் வரை நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அதாவது, 1792ம் ஆண்டில் தான் அம்புலன்ஸ் உருவாவதற்கான கால்கோள் இடப்பட்டது என்று கூறலாம்.
நெப்போலியன் என்ற பெயரைக் கேட்டாலேயே நடுங்காதவர்கள் இல்லை. அத்தகைய ஒரு வீரனுக்கு இளகும் நெஞ்சு கொண்ட பிரதம டாக்டராக விள ங்கியவர்தான் பாரன் லார்ரே என்பவர். 1792ம் ஆண்டு காலப்பகுதியிலே நிகழ்ந்து கொண்டிருந்த யுத்தத்தின் போது போர்க்களத்திலே காயப்படும் வீரர்களை அங்கிருந்து சிகிச்சைக்காக எடுத்துச் செல்லும் முறையைக் கண்டு அவர் மனம் மிக வருந்தினார். கவலையோடு கவனித்துக்கொண்டிருந்தார். இரத்தம் சிந்தச் சிந்த திறந்த வண்டியொன்றில் காயப் பட்டவர்களைத் தூக்கிப்போட்டு அப் படியும் இப்படியுமாக ஆடி ஆடி கரடு முர டான பாதையில் வண்டி செல்லும். காயமடைந்த வீரர்களின் நிலை மேலும் மோசமானது. அவர் களின் வேதனைக் கூக்குரலும் அவரது உள்ளத்தை வாட்டியது. இதனைத் தவிர்க்க ஒரு வழிகாண வேண் டும். என டாக்டர் பாரன்னின் உள்ளம் தவித்தது. அவரது மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.
அங்கிருந்த வண்டிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத் தார். அதில் விசேட ‘ஸ்பிரிங்’ ஒன்றைப் பொரு த்தினார். அதில் காயமடைந்த வீரர்கள் கிடத்தப் பட்டால் எந்த வித வேதனையும் இன்றி சுக மாகப் பயணம் செய்ய முடிந்தது. அத்தோடு அத ற்கு மேலாக தடுப்பு ஒன்றினையும் அமைத்தார். இதன் மூலம் வெய்யில், மழை தூசி என்பவற்றின் பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாத்தார்.
நெஞ்சுரம் மிகுந்த நெப்போலியனின் வைத்தியரான நெகிழும் நெஞ்சு கொண்ட பாரன் லார்ரே கண்டு பிடித்த சொகுசு வண்டி பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. அரச தலைவர்களின் உயர் இராணுவ அதிகாரிகளின் பாராட்டுதல்களுக்கும் இவர் பாத்திரமானார். போர்க்களத்திலே நவீன வண்டிகள் பெரும் சேவையாற்றி வந்தன. பிரெஞ்சு போர்முனையிலே காயம் அடையும் வீரர்களை எடுத்துச் செல்வதற்கான விசேட பிரிவொன்றும் ஏற்படுத்தப்பட்டது. இப்பிரிவு நவீன கண்டுபிடிப்பான 12 அம்புலன்ஸ் வண்டிகளைக் கொண்ட தனிப்பிரிவாக இயங்கிவந்தது.
அம்புலன்ஸ் வண்டிகளின் சேவைக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்காமல் இதனை மேலும் வளர்ச்சிபெறச் செய்வதில் ஆர்வம் காட்டப்பட்டது. பல்வேறு பரிமாணங்கள் கண்டு பல்வேறு வகைகளில் அம்புலன்ஸ்களின் சேவை பயன்படுத்தப்பட்டது. 1976ம் ஆண்டில் புதிதாக இது பற்றி ஒரு ஞானோதயம் ஏற்பட்டது. அதன் பிரதிபலன் தான் இன்று நாடு நகரம் மட்டுமின்றி பட்டிதொட்டி எங்கும் பரந்து காணப்படும் அம்புலன்ஸ் சேவையாகும்.
காயம் பட்ட போர்வீரர்களுக்கு மட்டுமின்றி மிகவும் சாதாரணமான குடிமகனுக்கும் கூட இதன் சேவையைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற அடிப்படையில் எழுந்த சிந்தனையே இதற்கு வழி வகுத்தது. முதன் முதலாக இந்தச் சேவை பிரெஞ்சு நாட்டின் கென்ட் எனும் பிரதேசத்தில் மர்கேட் எனுமிடத்தில் ஆரம்பமானது. மூன்று சக்கரங்களைக் கொண்டதாகவும் கைகளால் இழுத்துச் செல்லும் வகையிலுமே இது வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1883ம் ஆண்டு தான் நான்கு டயர் சக்கரங்களைக் கொண்டு குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் வகையில் அம்புலன்ஸ் பரிணாமம் பெற்றது.
பாரிஸ் நகரில் 1895ம் ஆண்டில் விசேட இயந்திரம் பொருத்தப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் அறிமுகமாகின. எனினும் அவையும் முதன் முதலில் பிரெஞ்சு இராணுவ சேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இதன்பின்பு 1900ம் ஆண்டில்தான் பொது மக்களின் பயன்பாட்டுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் தமது சேவைகளை ஆரம்பித்தன. இன்று நடைமுறையில் உள்ளவாறு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கிடையே நோயாளர்களை துரித கதியில் எடுத்துச் சென்று உயிர் காக்கும் பணியில் அவை அரும்பங்காற்றி வருகின்றன.
இன்றைய அம்புலன்ஸ் வண்டிகள் நவீன பல கருவிகளையும், முதலுதவி உபகரணங்களையும் உள்ளடக்கியதோட மட்டுமன்றி வைத்தியர்களின் சிகிச்சை வழங்கப்பட்ட வண்ணமே செல்லும் வகையில் அமைந்துள்ளன.
அம்புலன்ஸ் வண்டிகள் வீதியில் செல்லும் போது ஒரு தனி உணர்வு ஏற்படுவதுண்டு. அதன் அவசர ஒலி கேட்டதுமே பாதையில் செல்லும் சகல வாகனங்களும் தன் வேகத்தைத் தளர்த்தி அம்புலன்ஸ் வண்டிக்கு வழிவிடுவது உலகெங்கும் பாதைப் பண்பாகத் திகழ்ந்து வருகிறது. அம்பு லன்ஸ் எனும் வண்டி உருவாகி 218 ஆண்டுகள் ஆகின்றன. எனினும் பொதுமக்களின் பயன்பாட்டுக் காக அது தன் பணியை ஆரம்பித்து 110 வருங்களே ஆகின்றன. இதுவரை காலமும் இந்த வாகனம் வழங்கி வந்துள்ள சே¨வையால் காப்பாற்றப்பட்ட உயிர்கள் கோடானு கோடி. இனியும் இதன் சேவை மனித சமூகத்துக்கு என்றும் தேவை.
எமது நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிய துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளின் போது இந்த சேவையின் அவசியம் மிகவும் உணரப்பட்டிருந்தது.
வெண்ணிற வட்டத்தின் நடுவிலே செந்நிற சிலுவையை சின்னமாகக் கொண்ட அம்புலன்ஸின் முன் புறத்தில் திணிகிஸிழிதினிவிரி என்ற ஆங்கில வாசகம் எதிர்த் திசையில் எழுதப்பட்டிருப்பதை நாம் அவதானித்திருப்போம். ஏன். அப்படி என்று சிந்திக்கிaர்களா? முன்னால் செல்லும் வாகனத்தின் பக்கக் கண்ணாடியில் அம்புலன்ஸ் என்ற அந்த ஆங்கில வார்த்தை நேர்த்திசையில் தென்படுவதற்காகத்தான் அது.
அவ்வாறு தென்படும் பட்சத்தில் தனக்குப் பின்னால் வருவது அம்புலன்ஸ் என்பதை உணர்ந்து, அதற்கு வழி விட முன்னால் செல்லும் வாகன சாரதிக்கு இது வசதியாக இருக்கும். இரவு நேரத்தில் அம்புலன்ஸ் வண்டிகள் கடமையிலீடுபட்டிருக்கும் வேளைகளில் அதன் ‘சைரன்’ ஒலி ஒலிக்கப்படுவதில்லை. இதற்குப் பதிலாக அதில் அமைந்துள்ள சுழலும் வர்ண மின் விளக்குகள் பளிச்சிடுகின்றன.
இருபத்து நான்கு மணிநேரம் அயராது உயிர் காக்கும் இந்த சாதனத்தின் பயன் அளப்பரியதுதான். இருந்த போதிலும் இதிலே சயனித்தவாறு ஒலி, ஒளி சைகைகளின் நடுவே பயணம் செய்யும் துரதிர்ஷ்டம் எவருக்குமே ஏற்பட வேண்டாம் என்று பிரார்த்திப்போமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.