ஞாயிறு, 27 ஜூலை, 2014

நோய்க்குத் தடை போடும் நடைபயிற்சி




உடல் உறுதிக்கும், அழகான தோற்றத்திற்கும் நடைப் பயிற்சி மிகவும் நல்லது. நடைப் பயிற்சியால் இரத்த ஓட்டம் சீராக்கப்படுகிறது. தசைகள் வலுவடைகின்றன. நினைவாற்றல் அதிகரிக்கின்றது. முதுகுவலி, இடுப்பு வலி போன்றவை வெகுவாக குறைக்கின்றன. காரணம் முதுகெலும்பின் கீழ் தான் உடலின் ஆதார சக்தி உள்ளது.

நடைப்பயிற்சி செய்வதன் மூலம் பெரும்பாலான நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். நடைபயிற்சியானது சாதாரணமாக இல்லாமல் ஊக்கமுள்ளதாக இருக்க வேண்டும். எவ்வளவு தூரம் தினமும் நடக்கிறோம் என்பது முக்கியமில்லை.

ஒரு குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு குறைந்த நேரத்தில் ஊக்கமாக நடந்து செல்கிறோம் என்பது தான் முக்கியம். காலையில் தினம் 2 கிலோ மீட்டர் தூரம் நடப்பதன் மூலம் தேவையின்றி உடலில் சேரும் கொழுப்பு குறைகிறது.

உடல் இளைப்பதுடன் இளமையும், புதுமையும் பெறுகின்றது. உடல் பலம் ஆன்ம பலம் என்னும் இரண்டு பெரிய சக்திகள் கிடைக்கின்றன. உங்களை நீங்களே கண்டறிய உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.