வெள்ளி, 11 ஜூலை, 2014

புகை உடல் நலத்துக்குப் பகை

புகை உடல் நலத்துக்குப் பகை என்பது நமக்கு நன்கு தெரியும். ஆனாலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைதவிடாமல் பிடித்துக் கொண்டு இதயத்தைப்பாழ்படுத்துகிறோம். புகைப்பிடித்தல், உடலில் உள்ள பலவகையான உறுப்புகளுக்குக் கேடு விளைவிப்பதோடு இதயத்தையும், இதயம்
தொடர்புடைய ரத்தக் குழாய்களையும் கடுமையாகச் சிதைத்துவிடுகின்றன.
புகைக்கும்போது வெளிவரும் புகையில் பலவகையான நச்சுப் பொருள்கள் இருந்தாலும், இதயத்துககு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று
முக்கியப் பொருள்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். நார், நிக்கோடின், கார்பன் மோனாக்ஸைடு ஆகியவையே அந்த மூன்று பொருள்கள்.
சிகரெட்டை புகைக்கும்போது சுமார் இரண்டு மில்லி கிராம் அளவுள்ள நிக்கோடின் நம் உடலுக்குள் செல்கிறது. புகையிலையில் அடங்கியுள்ள
நிக்கோடின் ரத்த அழுத்தத்தை மிகைப்படுத்துவதோடு அல்லாமல் இதயத் துடிப்பின் அளவையும் அதிகமாக்குகிறது. இதன் விளைவாக இதயத்
தசைகளின் உயிர்வெளி (ளிஙீசீநிணிழி) தேவையானது மிகவும் அதிகரிக்கிறது. மேலும் உடலின் புறப்பகுதிகளில் உள்ள ரத்தக் குழாய்களையும்
நிக்கோடின் குறுக்கிவிடுகிறது. இதனால் அங்கு செல்லும் ரத்தத்தின் அளவும் குறைந்து விடுகிறது. நிக்கோடினால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் இருக்க சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்ஸைடாலும் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சிகரெட் புகையில் சாதாரணமாக சுமார் 2 முதல் 4 சதவீத அளவில் கார்பன் மோனாக்ஸைடு (Car Monoxide) என்ற வாயு உள்ளது. கார்பன
மோனாக்ஸைடு வாயுவானது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களுடன் (Haemoglobin) இணைந்து கார்பாக்ஸி ஹீமோ குளோபின் (Carboxy Hameoglobin) என்று மாறுகிறது. சாதாரணமாக ஒரு மனிதனின் ரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோகுளோபின் ஒன்று முதல் இரண்டு சதவீதம் என்ற அளவில்தான் இருக்க
வேண்டும். ஆனால் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களின் ரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோ குளோபின் அளவு 6 சதவீதத்துக்கு மேல் அதிகமாகிவிடும்.
ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன் மோனாக்ஸைடின் அளவு அதிகமாகும்போது இதயத் தசைகள் இயங்குவதற்குத்
தேவையான ரத்தத்தின் அளவானது அதிகரிப்பதால் இதயத் தமனி 20 மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.
ஏற்கெனவே பலவகையான தவறான உணவுப் பழக்க வழக்கங்களின் காரணமாக இதயத் தமனிகள் தடித்து நெகிழும் தன்மையை
இழந்துவிடுகின்றன. இந்த நிலையில் 20 மடங்கு அதிகமான ரத்தத்தைப் பெற இதயத் தமனிகள் அதிகமாக உழைக்கும்போது அவை
மட்டுமல்லாது இதயமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
புகைப் பிடித்தல் போலவே அது அருந்தும் பழக்கமும் இதய நலனுக்கு எதிராகச் செயல்படும். வில்லன்தான், எதில் ஹைட்ராக்ஸைடின் மற்றொரு பெயர்தான் ஆல்கஹால். விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், ஒயின், பீர் என பலவகைகளில் ஆல்கஹால்
பருகப்படுகிறது. ஒவ்வொரு வகையிலும் ஆல்கஹாலின் அளவு மாறுபடும்.
ஒரு மனிதன் மது அருந்திய சில நிமிடங்களில் அதில் உள்ள ஆல்கஹால், இரைப்பை மற்றும் சிறுகுடல் வழியாக அவனுடைய ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
ரத்தத்தில் ஆல்கஹால் கலந்த பிறகு அங்கிருந்து உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதோடு முளையைச் சுற்றியுள்ள
நீரிலும், சிறுநீரிலும் கலக்கிறது. நுரையீரலில் இருந்து வெளியேறும் காற்றோடு கலந்து சுவாசத்திலும் மது வாடையை ஏற்படுத்துகிறது.
இறுதியாக ஆல்கஹாலை கல்லீரல் சிதைவு அடையச் செய்கிறது.
மது அருந்துபவர்களுக்கு அதிகமாக வியர்ப்பதையும், முகம் சிவந்து காணப்படுவதையும் கவனித்திருப்பீர்கள். நமது உடலில் உள்ள
புறப்பகுதிகளில் தோலுக்கு அடியில் பல வகையான ரத்தக் குழாய்கள் உள்ளன. மது அருந்தும்போது தோலுக்கு அடியில் உள்ள பல்வேறு ரத்தக்
குழாய்கள் விரிவடைகின்றன. இதனால்தான் வியர்வை ஏற்படுவதோடு முகமும் சிவந்து போகிறது. மதுவை உற்சாக பானம் என்று சொல்வதுகூட ஒருவகையில் உண்மைதான். ஒரு கிராம் மது 7.1 கலோரி அளவுள்ள ஆற்றலை உடலுக்கு
அளிக்கிறது. சக்தியையும், போதையையும் தருகிறதே என தொடர்ச்சியாக மது அருந்தும்போதுதான் அது இதயத்துக்குப் பெரும் ஆபத்தாக
முடிகிறது.
மது குடிப்பதால் அதிகமாகப் பாதிக்கக்கூடிய உறுப்புகளில் முதன்மையானது இதயம். மது இதயத் தசைகளில் உள்ள செல்களைத் தாக்கி
நாளடைவில் அவற்றை முழுமையாகச் சிதைத்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாக மது குடிப்பதால் இதயத் தசைகள் வலுவிழந்து காலப்போக்கில்
மாரடைப்பு ஏற்படுவதற்கான வாசலையும் திறந்துவிடுகிறது.
நீண்டநாள்களாக தொடர்ந்து மது குடிப்பதால் இதயத் தசை நோய் (Cardio Myopathy) என்ற பாதிப்பு இதயத்துக்கு ஏற்படுகிறது. இந்த நோயின்
காரணமாக இதயத் தசைகள் Myocardium) சுருங்கி, இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பல பகுதிகளுக்குச் செலுத்தும் தன்மையை
இழந்துவிடுகின்றன. இதனால் உடலின் பல பகுதிகளுக்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் அவை பாதிக்கப்பட நேர்கிறது.
அடிக்கடி மது குடிப்பவர்களுக்கு இதயத் துடிப்பும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறது. இதயத்தின் துடிப்பு, ஒரே சீராக இல்லாமல் ஒழுங்கற்று
துடிக்கத் தொடங்கும். இதனால் இதயத் துடிப்பின் எண்ணிக்கையும் வழக்கமான அளவைவிட அதிகரிக்கிறது. இத்தகைய நிலையை இதய மிகு
துடிப்பு நிலை (Tachy cardia) என்கிறார்கள். இதைத் தொடர்ந்து சீராக இயங்க வேண்டிய இதயம், சில சமயங்களில் இதய உதறலாகவும் மாறக்கூடும்.
இதயச் செயலின்மை என்பது உடலில் உள்ள பல்வேறு திசக்களுக்குத் தேவையான ரத்தத்தை இதயத்தால் அனுப்ப இயலாத நிலை (Congestive
Heart Failure). ஏற்கனவே இதயச் செயலின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக மது குடித்தால் அவர்களது பிரச்சனை இன்னும்
தீவிரமாகிவிடும். எனவே இதயத்தின் நலனைக் காக்க வேண்டும் என்றால் புகையையும், மதுவையும் கண்டிப்பாகத் தவிர்த்துவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.