வியாழன், 31 ஜூலை, 2014

தொப்பை குறைய தினமும் தேவை எளிய உடற்பயிற்சி

cdd0fede-75f8-4ae4-8a73-172a17fdf48e_S_secvpf.gif

Description:

இப்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்னவென்றால் அது தான் தொப்பை. ஆண்களை தொடர்ந்து பெண்களும் தொப்பையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாதது தான்.
கீழே சொல்லப்பட்டுள்ள இந்த எளிய பயிற்சியை தினமும் தொடர்ந்து 20 நிமிடங்கள் செய்து வந்தால் தொப்பை கரைந்து கொடி இடையை பெற முடியும். மேலும் இந்த பயிற்சியை தொடந்து 3 மாதங்கள் செய்ய வேண்டும். ஒரு மாதம் செய்ய ஆரம்பித்தவுடனேயே நல்ல பலன் தெரிவதை காணலாம்.
இந்த பயிற்சி செய்ய விரிப்பில் நேராக படுத்து கால்களை முழங்கால் வரை மடக்கி மேலே (படத்தில் உள்ளபடி) தூக்கவும். கைகளை உங்கள் உடலோடு சேர்த்து நீட்டி தரையில் பதியும் படி வைக்கவும். பின்னர் இயல்பான சுவாசத்தில் மெதுவாக கைகள் தரையில் ஊன்றியபடி, முழங்கால்களை மடக்கிய நிலையில் உடலை மேல் நோக்கி எவ்வளவு தூரம் தூக்க முடியுமோ அது வரை தூக்கவும்.


இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி சற்று கடினமாக இருக்கும். ஆனால் விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறையும், பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 25 முறையும் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

Enjoy this page? Like us on Facebook!)