வியாழன், 17 ஜூலை, 2014

உங்கள் இரத்த, சிறுநீர் பரிசோதனைகளை புரிந்து கொள்வது எப்படி?



சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சை உள்ளவர்களுக்கும் டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களு க்கும்உங்கள் மருத்துவர் உங்களுக் கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக சந் தேகப்பட்டாலோ அல்லது சிறுநீரக பாதிப்பு உள்ளதா இல்லையா? என்ப தை தெரிந்து கொள்ளவோ (உதாரண மாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் அரத்த அழுத்தம் உள்ளவர்கள்) முதலில் எளிய அடிப்படை பரிசோதனைகளை செய்யச்சொல்லக் கூடும். இவையாவன:- இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் என்ற கழிவுப்புக்களின் அளவு, முழு சிறு நீர்ப் பரிசோதனை ஆகியன. இதில் சிறுநீரக பாதிப்பு உள்ளதாக தெரிந் தால் அவர் உங்களை சிறுநீரக மருத்துவரை காண பரிந்துரைக்க லாம்.

அவ்வாறு செல்லும்போது அவர் கள் சிறுநீரக பாதிப்பின் தன்மை யை பொறுத்து மேலும் பல பரி சோதனைகள் செய்யச் சொல்வார்.

இந்த கையேட்டின் வெவ்வேறு விதமான இரத்தப் பரிசோதனைக ள் என்னென்ன உங்களுக்கு செய்யப்படுகின்றன? அதன் அடிப்படை என்ன? எதற்காக செய்யப்படு கின்றன, அப்பரிசோதனைகளின் முடிவுகளில் மாற்றங்கள் இருந்தால் அதன் அர்த்தம் என்ன? இயற்கையாக இருக்க வேண்டிய இரத்த அளவுகள் என்னென்ன? என்பனவற்றைப் பற்றி ஓரளவிற்கு தெளிவாக சொல்லப்பட் டுள்ளது. ஆனால் முடிவில் உங்கள் சிறுநீரக மருத்துவர்தான் உங்கள் உடல் நிலையை அனுசரித்து உங்க ளுக்கான பரிசோதனைகளை முடிவு செய்வார். இந்த கையேடு உங்களுக்கான ஒரு வழிகாட்டி மட்டு மே. ஆரம்பத்தில் இந்த பரிசோதனைகளின் பெயர்கள், அவைக ளின் அளவுகள், ஆகியவற்றை புரிந்து கொண்டு ஞாபகம் வைத்து ஆராய்ந்து அவற்றின் முடிவுகளையும் அதன் விளைவுகளையும் நீங்க ளாக புரிந்து கொள்ள சிறிது கடினமாக இருக்கலாம். ஆனால் இதனை செய்வது உங்க ளின் உடல் நலம் பற்றிய விஷயம் என்பதால் கண்டிப் பாக முயற்சி செய்து பார்க்க வேண்டும். மேலும் போகப் போக இதையே திரும்ப திரும்ப செய்யும்போது இவைகளை புரிந்து கொள்வதும் எளிதாகி விடுகின்றது.

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பொது வாக செய்யப்படும் சில பரிசோதனைகள். ( குறிப்பு :-இந்த அட்ட வணை எல்லா பரிசோதனைகளும் அடங்கியது அல்ல. உங்களு டைய சிறுநீரக பாதிப்புக்கு உகந்த பரி சோதனைகளை முடிவு செய்ய சிறந்த நபர் உங்கள் சிறுநீரக மருத்துவர் தான்).

1. இரத்த அணுக்களின் (பலவித) எண்ணிக்கை (Complete Hemogram)

2. இரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவு. (Hemoglobin)

3. இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை மற்றும் தன்மை பற்றிய பரிசோதனைகள். (Red Cell Indices)

4. உங்கள் உடலில் உள்ள இரும்புச் சத்தின் அளவை அறிய உதவும் குழுமப் பரிசோதனைகள் (Body Iron Indices Panel).(இரத்தத்தில் பெர்ரிடின் அளவு, ட்ரான்ஸ்பெரின் என்ற புரதத்தில் உள்ள இரும்பு சத்தின் அளவு போன்றவை).

5. கால்சியம், பாஸ்பரஸ் (Calcium. Phosphorus).

6. யூரியா, கிரியேட்டினின், யூரிக் அமிலம் ஆகிய கழிவு உப்புகளி ன் அளவு. (சில சமயம் யூரியா BUN என்ற அலகுகளால் சில பரிசோதனைச் சாலை களில் அளக்கப்படும்) (Urea, Creatinine, Uric Acid etc)

7. சோடியம், பொட்டாசியம், க்ளோரைடு, பை-கார்போனேட் என்ற இரசாயனங்களி ன் அளவுகள். (Sodium, Potassium, Chloride, Bicarbonate etc)

8. அல்புமின் என்ற புரதத்தின் அளவு (Serum Albumin)

9. பல்வேறு வகை கொழுப்பு சத்துகளின் இரத்த அளவு. (Lipid Profile)

10. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு (Blood Sugar)

11. இரத்தத்தில் ஹீமோக்ளோபின் A1-C யின் அளவு (சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு) (Hb- A1-C)

12. பாராதைராய்ட் ஹார்மோனின் அளவு (Paratharmone levels)

13. முழு சிறுநீர்ப் பரிசோதனை (Complete Urinalysis)

சிறுநீரில் புரத ஒழுக்கு (Urine Protein)

சிறுநீரில் சர்க்கரை (Urine Sugar)

சிறுநீரில் இரத்த அணுக்கள், கிரு மிகள், கற்களின் துகள்கள் இவற் றை நுண் உருப் பெருக்கியின் மூலம் பரிசோதனை. (Urine Microscopy for Red cells, White cells, Crystals)

சிறுநீரின் அடர்த்தி (Specific Gravity)

சிறுநீரில் கிருமி வளர்ப்பு பரிசோதனை (Urine Culture)

14. 24 மணிநேர சிறுநீh எடுத்த அதில் முழு புரத ஒழுக்கு பரிசோ தனை (24 Hours Urine Protein) கால்சியம். ஆக்சலேட், யூரிக் அமிலம் போன்ற கல் உண்டாக்கும் இரசாயனங் களின் மொத்த அளவு பரிசோதனை (கல் உள்ளவர்களுக்கு மட்டும்)

15. சிறுநீரகத்தின் செயல்திறன் அளவு பரிசோதனை – கிரியேட்டின் க்ளியரன் ஸ் (Creatinine Clearence)

இதில் 24 மணி நேரம் சிறுநீர் சேமிக்கப்பட்டு அதனோடு இரத்தத்தி லும் கிரியேட்டின் அளவு எடுக்கப்பட்டு சிறப்பு பரிசோதனைகள் மூலம் உங்கள் சிறுநீரகங்கள் எத்தனை சதவிகிதம் வேலை செய்கின்றன என்பதை கண்ட றியலாம். சில பெரு நகரங்க ளில் இதை யே எளிதில் ரேடி யோ ஐசடோப் ஸ்கான் (Ratio isotope scan) என்ற ஒரு சிறப்பு ஸ்கான் மூலம் 24 மணி நேரம் சிறுநீரை சேகரிக்காமல் செய்யலாம்.

மேற்கூறிய பல்வேறு பரிசோதனைகளில் இரத்தத்திலும், சிறு நீரிலும் உள்ள இராசாயனங்களின் சாதாரண அளவு எவ்வளவு இருக்க வேண்டுமென்பது தனியே ஒரு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கு இந்த அளவுகளில் ஏற்படும் மாறுபாடுகள் என்ன? அதன் முக்கியம் என்ன என்பதை பற்றி அடுத்துள்ள பகுதியில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த இரத்த சிறுநீர்ப் பரிசோதனைகள் அல்லாமல் நோயின் தன்மையின் அடிப்படையில் எக்ஸ்ரே (X-ray) ஸ்கா ன் (Ultrasound Scan) ஆஞ்ஜியோகிராம் (Angiogram) எனப்படும் இரத்தக் குழாய் பரிசோதனைகள் சிறப்பு தன் திசு எதிர்ப்பு சத்துக்கள் பரிசோதனைகள் (Autoantibodies) சிறுநீரக சதைத் துணுக்கும் பரிசோதனை (Kidney Biopsy) ஆகிய ன தேவையுள்ளவர்களுக்கு செய்யப்ப டும்.

படித்தவர்களுக்கே இந்த அட்டவணை யைப் பார்த்ததால் மலைப்பு உண்டாக லாம். நம் நாட்டில் அதிகமாக உள்ள படிக்காத பாமர மக்களை பற்றிச் சொல்லவே வேண்டாம். சிலர் எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரிய வேண்டா ம். சிலர் எனக்கு இதனை செய்து பார்த் து அலசி ஆராய்ந்து எனக்குள்ள நோயைக் கண்டு பிடித்து அதற்கு தகுந்த மருத்துவம் பார்க்க வேண்டியது மருத்துவரின் வேலை என்ற கண்ணோ ட்டம் உள்ளவர்களும் உண்டு. அதுவும் உங்களுக் கு உள்ள ஒருவழிதான்.

ஆனால் அதைவிட நீங்கள் உங்கள் ஆரோ க்யத்தை உங்கள் கையில் எடுத்துக் கொ ண்டு உங்களுக்கு உள்ள நோயின் பாதிப்பு, அதற்குள்ள வைத்திய முறைகள் ஆகிய வற்றை அறிந்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து சரி யான சிகிச்சைப் பெற்றுக் கொள்வது மட்டுமின்றி உங்கள் சிகிச் சைக்கான உங்கள் பங்கை சிறப்பாகச் செய்ய இது நன்கு உதவும்.

நன்றி – தமிழ்கிட்னி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.