ஹெர்னியா என்றால் என்ன?
ஹெர்னியா என்பது வயிற்றின் தசை நார்கள் பழுது அடையும் நிலையில் அல்லது பிறவியிலேயே தசை ஓட்டையுடன் இருப்பதால் அல்லது முன் செய்த அறுவை சிகிச்சை தசைநார் தையல்கள் விலகுவதால், உள்ளிருக்கும் குடல் தோலின் அடியில் தசையை தாண்டி வெளி வருகிறது. இதைதான் ஹெர்னியா என்கிறோம்.
இந்நோய்க்கு மேலும் தூண்டுதலாக இருப்பவை தொடர் இருமல், தும்மல், மலச்சிக்கல், சிறுநீர் அடைப்பு வியாதிகள். உடல் பருமன், பல குழந்தைகள் பெறுதல். திடீரென அதிகமான எடையை தூக்குதல் வயிற்றில் ஏற்படும் அடி போன்றவை.
ஹெர்னியா எங்கெல்லாம் வரும்?
சாதாரணமாக கீழ்க்கண்டவை வரலாம்.
- Ventral Hernia - வயிற்றின் முன் பகுதில் வருவது.
- Umblical Hernia - தொப்புள் கொடியில் வருவது.
- Inguinal Hernia - அடியுறுப்பில் விறையை நோக்கியோ அல்லது பெண் உறுப்பை நோக்கியோ வருவது.
- Femoral Hernia - தொடையில் உள்பகுதியில் வருவது.
- Incisional Hernia. - முன் செய்த அறுவை சிகிச்சை தழும்பை சார்ந்து வருவது.
ஹெர்னியாவில் ஏற்படும் முக்கியமான ஆபத்துக்கள் என்னென்ன?
IRREDUCIBLE FORM - வெளியே வந்த குடல் மீண்டும் வயிற்றுக்குள் திரும்பாது.
OBSTRUCTED FORM - வெளியே வந்த குடல் அடைத்துக்கொள்வது.
STRANGULATED FORM - வெளியே வந்த குடல் அழுகிப் போவது.
இவை அனைத்துமே ஆபத்தானவைகள்
ஹெர்னியா எந்த வயதினருக்கு வரும்?
பிறந்த குழந்தையிலிருந்து எந்த வயதினருக்கும் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் வரும்.
ஹெர்னியா என்று சந்தேகம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
முதலில் அறுவை சிகிச்சை நிபுணரை அணுகவும். குடல் இறக்கத்திற்க்கு அறுவை சிகிச்சை மட்டுமே குணம் அளிக்க முடியும்.
தற்போது பல அறுவை சிகிச்சை முறைகள் வந்துள்ளன. எனவே பயம் இன்றி நோயை குணப்படுத்துங்கள்.
Tension Repair
தசையை சீராக்குவது மட்டுமே. பல ஆண்டுகளாக செய்யப்படுவது. இதில் கிழிந்த தசை ஒன்று சேர்க்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு வேண்டுமானால் நன்கு செயல்படலாம். ஆனால் பெரியவர்களுக்கு வேதனை தரலாம். 4 - 6 வாரம் ஓய்வு தேவைப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.