உலக சுகாதார தினம் என்பது ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் தலைமை அலுவலகமாக கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பு (WHO) ஆதரவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளின் பொதுசுகாதாரத்திற்காக ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் கொண்டது. கி.பி. 1948 ஆம் நடந்த உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் கி.பி.1950 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 7 ம் நாள் உலக சுகாதார தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் ஏதேனும் அவசியமான கருப்பொருளை மையமாக கொண்டு உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்டுகிறது. இந்த ஆண்டில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும்விதமாக நோய்ககாவிகளான கொசுக்கள், ஈக்கள், பேன், தெள்ளுப்பூச்சிகள் போன்றவற்றால் ஏற்படும் தொற்றுநோய்களை குறிக்கும்படியான "சிறிய கடி பெரிய அச்சுறுத்தல்" என்பது இவ்வாண்டின் மையக்கருத்து.
கொசுக்கள், ஈக்கள்,பேன்கள், தெள்ளுப்பூச்சிகள் போன்றவை தொற்றுநோய்கள் பரப்புவதில் முக்கியபங்கு வகிக்கின்றன. இவற்றில் மிக முக்கியமானதாக கொசு ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு நோய்பரப்புவதில் உலகின் கொடுமையான உயிரிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. உலக அளவில் மக்கள் அறிந்து வைத்திருக்கும் கொசு வகைகளின் எண்ணிக்கை 3000 ஐ தாண்டியுள்ளது. இதில் 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை மட்டுமே உணவாக உறிஞ்சுபவை. ஆண் கொசு தாவரங்களின் சாறை மட்டும் உணவாக உண்பவை. பெண்கொசுக்களே இரத்தத்தை உறிஞ்சுபவை. கொசுவின் பரிணாம வளர்ச்சி அற்புத நிகழ்வு. ஒரு கொசு முட்டையிலிருந்து முழுவளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு 5 நாட்கள் மட்டுமே தேவைப்படுகிறது. கொசு பரப்பும் மலேரியா காய்ச்சலால் உயிர் இழக்கும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை. இது பரப்பிடும் முக்கிய நோய்களாக மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல், கடுமையான தொற்றுநோய்கள் ஆகும். இவற்றை முற்றிலுமாக அழிப்பது என்பது இன்றுவரை வளர்ந்த, வளரும் நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்துவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.