ரேக்கி என்று சொன்னவுடன் கல்லூரி கலாட்டாக்கள் (Ragging) உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. இல்லை ராக்கி கட்டும் உன்னதமான சகோதர உறவைக் காட்டும் ஹோலிப்பண்டிகை நினைவுக்கு வந்தாலும் அதற்கும் நான் பொறுப்பு அல்ல. இது வேறு..... இப்பொழுது பரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து இருப்பர். ரேக்கி என்றால் என்னங்க? இது ஜப்பானியர்களின் புராதன மருத்துவக் கலை. இந்த மகா பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உரைந்து இருக்கிறோம்.. (REI) என்றால் பிரபஞ்சம் என்று பொருள். (KI) என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் தரும். ப்ரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் குறிக்கும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உடல்களும் ஐம்பூதங்களால். ஆனவை.
நிலம் – உடல்
நீர் – இரத்தம்
காற்று – உயிர் சுவாசம் (பிராணவாயு)
நெருப்பு – சூடு (உடலின் மிதமான வெப்பம்)
ஆகாயம் – விந்து
இதனையே,
“அண்ட்த்தில் உள்ளதே பிண்டம்
பிண்ட்த்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே”
என்று சட்டமுனி உரைக்கக்காணலாம். ப்ரபஞ்சத்தில் உள்ள
உயிர்கள் நலமாக இருக்க தேவையான சக்தியை அளித்திருக்கிறான் கடவுள். கடவுளின் கருணையால் பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிற பிரபஞ்ச சக்தியை,உடலை அச்சக்தியை ஈர்க்கும் கருவியாக்கி, உடலின் மூலம் ஈர்த்து அதனை யாருக்கு எந்த அளவு தேவைப்படுகிறதோ அந்த அளவு பயன்படுத்துவது ரேக்கி என்றமருத்துவக் கலை. முறையான மருத்துவர் (Master) மூலமே சிகிச்சையும், பயிற்சியும் பெறுதல் மிக மிக அவசியம். இக்கலை ஐந்து நிலைகளாக பகுக்கப்படுகிறது.
அவை முறையே,
1. தூய்மைப்படுத்துதல் – (RINSING AND REFINING)2. சக்தியூட்டல் - (ENERGIZING0)3. தடை காப்பளித்து நலப்படுத்துதல் (நோய் எதிர்க்கும் சக்தி –IMMUNIZING)4. இணைத்தல் - (KINTTING – UNITING)5. கவசமளித்தல் - (INSULATING
தூய்மைப்படுத்துதல்
R – Rinse or clean - தூய்மைப் படுத்துதல் –
ரேக்கி மாஸ்டர், தான் ரேக்கி கலையைப் பயன் படுத்தும் முன்பு தன் உடல், மனம் ஆகிய இரு கருவிகளையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நோயாளியும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வது ஆகும்.
சக்தியூட்டுதல்
E – Energize or Activate - சக்தியூட்டுதல் - உலகில் உள்ள ஒவ்வொரு தனிமத்துள்ளும்(Element) மகத்தான பல சக்திகள் அமைந்துள்ளன. இந்த சக்திகளுக்கெல்லாம் ஆதார சக்திதான் ப்ரபஞ்சப் ப்ரணவ உயிர்ச்சக்தி. இந்தச் சக்தி இல்லையேல் உயிர்கள் இயங்க முடியாது. அப்படிப்பட்ட உயிர்ச்சக்தியைப் ப்ரபஞ்சத்தில் இருந்து பெற்று, அதை மற்றவர்கள் மீது செலுத்தும் அருட்பணியே சக்தியூட்டல் என்பதாம்.
தடைக்காப்பளித்து நலப்படுத்துதல்
I – Immunize or Stabilize - தடைக்காப்பளித்து நலப்படுத்துதல் – ப்ரபஞ்சத்தில் இருந்தே சக்தியை எடுத்து நோய்
எதிப்பாற்றலைப் பெருக்குதலாம்.
இணைத்தல்
K – Knit or Unite- இணைத்தல் – எதிர்ப்பாற்றலை உருவாக்கிய
பின் நோயைக் கண்டறிந்து நோயையும் அதற்குத் தேவையான ப்ரபஞ்ச சக்தியையும் இணைத்தல்.
கவசமளித்தல்
I – Insulate or protect - கவசமளித்தல் – பிணியின் தீவிரத்தைக்
குறைத்தல் அதாவது நோயைக் குணப்படுத்துதல் (Healing).
இவை ஒவ்வொன்றுக்கும் குறியீடுகள் உள்ளன. அவற்றை வரைந்து அதற்கான உச்சரிக்கும் சொற்களும் உள்ளன. இந்தக் குறியீடுகளும் மந்திரச் சொற்களும் சுமார் 147 உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.