வியாழன், 1 மே, 2014

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்


உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் பெறுவது ஓட்ஸ் ஆகும் . இந்த ஓட்ஸ்சில் பொதுவாக நார்சத்து அதிகம், ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதுடன் , சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல் நோய்களுக்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது.

ஓட்ஸில் 'பீட்டா-குளூ கான்' எனும் ஒருவகை சிறப்பு நார்ச் சத்து அடங்கி உள்ளது. இந்த நார் சத்து நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது மேலும் நல்ல கொழுப்பின்_அளவு மாறாமல் அப்படியே இருப்பது தான் இதன் சிறப்பு அம்சம் .

இருதயநோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் உலகம் முழுவதும் இருக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழுதானிய உணவு இந்த ஓட்ஸ் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.